Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25

உனக்கென நான் 25

அதிகாலை எழுந்து கொண்ட சேவல்கள் அரிசியின் துயிலை தொந்தரவு செய்யவே “காலங்காத்தல கூவி எழுப்பிவிடுறீங்களா இருங்க இன்னைக்கு உங்கள்.” என மறதிற்குள்ளே அறிக்கை விடுத்துவிட்டு தன்மீது கிடந்த போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள். அதிகாலையில் உறக்கம் வராமல் எழுந்து கொண்ட சந்துருவோ தன் மீதிருந்த போர்வையை குளிரில் படுத்திருந்த அரிசிக்கு போர்த்திவிட்டு பார்வதியின் பின்னாலயே நடந்து கொண்டிருந்தான். கோலமிடுதல்  பாத்திரங்கள் அடுக்குதல் என உதவிகள் செய்தவண்ணம் இருந்தான்.

“ஏய் இன்னுமாடி தூங்குற பாரு சந்துரு சீக்கிரமா எழுந்துட்டான் அவன் புள்ள நீயும் இருக்கியே” என திட்டிகொண்டிருக்க அதை காதிலேயே வாங்கிகொள்ளாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“பூஸ்ட் வேணுமானா எந்திருச்சு வா இல்லைனா இன்னைக்கு உனக்கு பூஸ்ட் கிடையாது” என பார்வதி கூறவே ஏழாம் அறிவு செயல்பட்டு எழுந்து கொண்டாள். பின் ஒரு வீட்டின் முன்னால் இருந்த வேப்பமரத்தில் ஏறினாள். அவள் கீழே விழுந்துவிடுவாளோ என்ற பயத்துடன் சந்துரு அவளையே பார்த்துகொண்டிருந்தான். அவனின் இதயதுடிப்பும் அதிகமாக இருந்தது.

“ஆமா ஏன் மேல ஏறிருக்க” என சந்துரு கேட்க “பல்லு விளக்கவேணாமா பல்லுவிளக்காம அம்மா பூஸ்ட் தராது” என முகத்தை சுருக்கினாள். “அப்போ வா அதான் மாமா பல்பொடி வாங்கிதந்தாங்கள்ள அதில விளக்கலாம்” என ஓடி சென்று அந்த தகரடப்பாவை எடுத்து வந்தான். “ச்சீ எனக்கு இது வேணாம் இது மனுசனோட எலும்புல இருந்து செய்வாங்கலாம்” என கண்கள் விரிய கூறிகொண்டிருந்தாள். அது போஸ் ரசாயனம் பற்றி விளக்க முயன்றபோது அரிசியிடம் தெரியாமல் கூறிய வார்த்தை.

“ஐய்யோ நான் தினமும் இதுலதான் வெளக்குறேன்” என சந்துரு கூற “இனிமே இதுல விளக்கு ” என அவனுக்கும் சேர்த்து ஒரு குச்சியை ஒடித்துவந்தாள். அதற்கு காரணம் இரூந்தது.

பின்ன சந்துருக்கு சூடான பூஸ்ட் கிடைத்துவிடும் பல்துலக்கி தாமதமாக வரும் அரிசிக்கு சூடு இல்லாமல் போய்விடும் அல்லவா. அதனால் தான் சந்துருவை இரண்டாம் முறையாக பற்களுடன் சண்டையிட செய்தாள் அந்த ராஜதந்திரி.

பார்வதி சந்துருவுக்காக பூஸ்டை ஒரு டம்ளரில் கொண்டுவரவே “நீ தான் பல் வெளக்குனியே” என பார்வதி கேட்டார். “அரிசி விலக்குதுல அதான் நானும்” என முடித்தான். திட்டம் நிறைவேறியது. “சரி சீக்கிரம் வாங்க சூடு பன்னிதாரேன்” என கிளம்பினார் பார்வதி.

அவசரமாக அரிசியோ அரைகுறையாக துலக்கிவிட்டு ஓடவே “சந்துரு வரட்டும் இருடி” என்பது தாயின் உத்தரவு ‘என்னடா இது வம்பா போச்சு’ என நினைத்துகொண்ட அரிசி வெளியே சென்று சந்துருவை பார்க்க அவன் இப்போதுதான் மென்று கொண்டிருந்தான். “நீ வெலக்குனது போதும்” என அவன் வாயிலிருந்த குச்சியை பிடுங்கி வீசிவிட்டு தயாரானாள்.

பார்லிஜியும் சமமாக பிரிக்கபடவே சந்துருவுக்கு ஒப்பந்தம் நினைவு வந்தது. “எனக்கு வேணாம்” என அரிசிக்கு விட்டுகொடுத்துவிட்டான். எதையும் ஆழமாக ரசித்து உண்ணும் அரிசி நீண்டநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ஏய் இன்னுமாடி குடிச்சுகிட்டு இருக்க சீக்கிரம் குடிச்சிட்டு பரண்மேல இருக்குற அண்டாவை இறக்குடி” என தாய் கூறவே முதலை விழுங்குவதை போல விழுங்கிவிட்டு பரணை நோக்கி சென்றாள்.

“இதுக்கு அது கீழயே இருந்திருக்குமே நீதான மேல வைக்க சொன்ன இப்போ மறுபடியும் இறக்க சொல்ற” என அலுத்து கெண்டு அந்த ஜன்னல் கம்பிகளை தாவி பிடித்தாள். “சந்துரு தள்ளி நில்லுடா” என கூறிவிட்டு அப்படியே ஜன்னல் கம்பியில் ஒரு காலும் மதில் சுவற்றில் ஒருகாலும் வைத்து உடலை திருப்பினாள். பின் சுவற்றின் மீது ஏறியிருந்தாள். சந்துருவின் மனதில் இவள் கிழே விழுந்துவிடுவாளோ என்ற பயம் மட்டுமே இருந்தது. “அரிசி பாத்து ஏறு” என கீழே இருந்து ரிங் மாஸ்டர்போல உத்தரவு அளிக்க “நீ பேசாம இருடா எனக்கு தெரியும்” என மேலே அடுக்கபட்டிருந்த மரபலகைகளில் காலை வைக்க அது உடைவதுபோல சத்தம் ஏற்படுத்தியுது.

பாத்திரங்கள் குவிந்து கிடந்த அந்த அந்தரகுடோனில் புகுந்து நடுவில் நின்றாள். அப்போது பார்வதி அங்கு வந்து நின்று கொண்டு “அன்னைக்கு போட்டோம்ல பித்தளை அண்டா அதை எடு” என கூறினார்.

மேலே எதையோ தடவிய அரிசி சட்டென ஒரு எலியை வாலை பிடித்து தூக்கினாள். “இங்க பாருமா ஒரு எலி குடும்பமே இருக்கு” என அதை கீழே தூக்கி போட அது சந்துருவின் பக்கம் வந்து விழுந்து ஓடியது சந்துரு பயந்துபோய் தன் அத்தையை கட்டிகொண்டான்.

“ஏய் என்னடி சேட்டைபன்னிகிட்டு இருக்க” என பார்வதி திட்ட “இங்கபாருமா” என ஒரு பெரிய இரும்பு கரண்டியை எடுத்து ஒரு பாத்திரத்தில் அடிக்க அது பலத்தமணியோசை எழுப்பியது. அதில் பயந்த சுண்டெலிகள் தெரித்து ஓடின. சில அன்பரசியின் மீதும் ஏறி ஓடின. அவளோ யாரோ கிச்சமூட்டுவதை போல சிரித்துகொண்டிருந்தாள்.

“இப்போ நீ சொன்ன வேலைய செய்யபோறியா இல்லையா” என பார்வதி ஆத்திரமானார். அதற்குள் அரிசி ஒரு பானையை இறக்கினாள். “ஏய் இது சில்வர் அண்டாடி மேல பித்தளை இருக்கும்பாரு”

ஒரு வழியாக தேடுதல் பணி முடிவடைந்து பித்தளை அண்டாவை இறக்கினாள். “அம்மா இங்க அந்த ரிமோட் கார் இருக்கு கீழ இறக்கவா?!” என அரிசி கூற “நீ ஒன்னும் இறக்கவேணாம் மரியாதையா இறங்கு” என முடித்தவுடன். “சந்துரு இது உனக்கு வேணுமா” என அந்த காரை தூக்கி காட்டினாள். அதை பார்த்தவன் “எங்க வீட்டாலயும் இது இருக்கு” என கூற காரணம் காவேரி தன் மகனுக்கு பொம்மை வாங்கும்போது அன்பரசிக்கும் சேர்த்து வாங்கினாள் என்பதால்தான்.

“இப்போ நீ இறங்களைனா பாரு” என பார்வதி கூற மேலே இருந்து தொப்பென குதித்தாள். அதில் அவளது சட்டையின் கை ஆணியில் மாட்டிகொள்ள சட்டை கிழிந்தது. “கிழுச்சுட்டியா சேட்டைடி உனக்கு என்னமோ பன்னு நீயாச்சு உன் அப்பாவாச்சு” என பார்வதி அண்டாவை எடுத்துகொண்டு நகர்ந்தார்.

கீழே விழுந்தவள் எழாமல் அமர்ந்திருக்க மேலே ஒரு எலி வேலையைகாட்டியது. அரிசியின் தலையில் ஒரு அட்டை விழவே அதை தொடர்ந்து சில சிறிய மரதுண்டுகளும் விழுந்தன. அவள் பழைய நீராவி எந்திரத்தில் கரி அள்ளிபோடுபவள் போல காட்சியளித்தாள். அதை பார்த்த சந்துரு சிரிக்கவே. “ஏன்டா சிரிக்குற” என கேட்க “இல்லை சும்மாதான்” என அமைதியானான்.

அத்துடன் சந்துருவின் கண்கள் அந்த மரதுண்டுகளை நோக்கி சென்றன. அதை பார்த்த அரிசியும் “ஐ செஸ் வா விளையாடலாம்” என அந்த போர்வீரர்களை கையில் அள்ளினாள்.

பின் வீட்டின் நடுவில் அந்த அட்டை விரிக்கபட்டு காயாகளை அடுக்கினாள் அரிசி. “டேய் சந்துரு வெளியே போய் ரெண்டு ஜல்லிகல் எடுத்துட்டுவா கருப்பு யானை இல்லபாரு” என அரிசி கூறவே ஓடிசென்று எடுத்து வந்தான். பாவம் அவனுக்கு கருப்புதான் ஒதுக்கபட்டது. கேட்டால் நான் வெள்ளையா இருக்கேன் நீ கொஞ்சம் கருப்பா இருக்க என சமாளித்து விட்டாள். உண்மையான காரணம் நொன்டி யானைகளை வைத்து எப்படி விளையாடுவது என்பதுதான்.

அப்போது கவனித்தான் சந்தரு “அரிசி அங்க பாரு ராணிய தப்பா வச்சுருக்க ” என போர்டில் வரையபட்டிருந்த படத்தை பார்த்து கூறினான். “நான் வச்சதுதானாடா கரெக்ட்” என தன் பக்கம் தவறே இல்லை என வாயாலயே சாதித்தாள். சந்துரு டைரியில் இதை மிகமுக்கிய தருணமாக எழுதியிருக்கவே. அவன் அன்று விளையாடும்போது காய்களை தவறாக வைத்துவிட்டுஎனக்கு இப்புடிதான சொல்லி கொடுத்தாங்க” என கிண்டல் செய்தது நினைவுக்கு வரவே டைரியை வாசிக்கும் அரிசி (அன்பரசிக்கு) புன்னகை மலர்ந்தது. ஆம் அவனது குரு அரிசிதான்.

இறுதியில் காய்கள் தவறாக அடுக்கிய நிலையிலேயே சந்துருவுக்கு பாடம் நடத்தப்பட்டது.

“இங்க பாரு இது ராஜா இது ராணி அப்புறம் இது குதிரை இது யானை முன்னாடி நிக்குறது சுவர் சரியா” என கூற சந்துருவும் ஆர்வமாக கவனித்துகொண்டிருந்தான்.

“இந்த குதிரை இருக்குல இது நேரா போகும்” என குதிரைக்கு யானை பலம் கொடுக்கப்பட்டது.

“அப்புறம் கருப்புராணி ஒரு கட்டம்தான் நகரும் ஆனா வெள்ளைராணி எத்தனை கட்டம்வேனா நகரும்” என தன் அணிக்கு வலிமை சேர்த்தாள்.

ஒரு வழியாக தன் சொந்த விதிமுறைகளால் சந்துருவுக்கு பாடம் கற்றுகொடுத்து ஆட்டம் ஆரம்பித்தது. அப்போது மலை அங்கு நுழையவே “ஏய் சந்துரு ராணி தப்பா வச்சுருக்கடா” என திருத்த அரிசி அவளை முறைத்து பார்த்தாள்.

“ஏய் மலை நீ சும்மா இருடி விளையாடும்போது பேசக்கூடாது” என தன்குட்டு வெளிப்படாமல் மறைத்தாள். “சந்துரு இவ உன்னை ஏமாத்துறா” என மலை கூறவே சந்துரு திருதிருவென விழித்தான். அவனது அழகிய கண்கள் நினைவுக்கு வரவே டைரியில் கண்ணீர் சிந்தியது.

‘உன்னை ஏமாத்த கூடாதுனு தான் சந்துரு நான் சாகபோனேன் நீ ஏன் என்ன மறுபடியும் தேடி வந்த’ என கண்கள் வலியை விழியில் காட்டின.

அதைபார்த்த பிரியா “அம்ம” என கூறிவிட்டு அன்பரிசியின் கண்ணத்தில் கைகளை வைத்தாள். அந்த டைரியில் கடைசிபக்கத்தில் ஒரு வரி இருந்தது. “வாழ்கைனா என்னனு எனக்கு புரியவச்சதே நீதான் அன்பு; அது என்னனா!” என மேலும் தொடரும்போது.

“அன்பு அப்பாவோடா பைக்சாவிய எடுத்துட்டு வா” என பார்வதி அழைக்க கண்ணீரை துடைத்துகொண்டு பிரியாவையும் தூக்கிகொண்டு வெளியே சென்றாள்.

சாவியை கொடுத்துவிட்டு மீண்டும் நுழையும்போது அன்பரசியின் கைபேசி அவளை அழைத்தது. “நான் கால் பன்றேன் உன்கூட கொஞ்சம் பேசணும்” என சந்துரு கூறியது நினைவுக்கு வரவே மூளையோ வேண்டாம் என்று தடுத்தது ஆனால் அன்பரசியின் மனதில் ஒளிந்திருந்த அரிசி குதித்தோடி சந்துருவை அனைக்க சொன்னாள்.

ஆர்வமாக சென்று ஃபோனை பார்த்தால் வெறும் மூன்று இலக்க எண் மட்டுமே இருந்தது.

“ஹலோ யாரு”

“நான் யாருங்கிறது இருக்கட்டும் நீ அன்பரசிதான?!”

“ம்ம்”

“உன் புருசன் சந்துரு ஐ ம் ரைட்?!”

“…” அமைதியாக இருந்தாள்.

“ஓ சாரி இன்னும் கல்யாணம் ஆகலைல மறந்துட்டேன்”

“யாருடா நீ” அரிசியாய் மாறினாள் அன்பரசி.

“யாருடா இல்லமா யாருடி குரல் மாத்திபேசுறதால அப்புடி கேடகுதா இப்போ பாரு” என பெண்ணின் குரல் சற்றுமுன் கேட்ட நியாபகம் இருந்தது.

“எதுக்குடி போன் பன்ன என் நம்பர் எப்புடி உனக்கு தெரியும்”

“இதையேதான் சந்துருவும் கேட்டான்”

“ஏய் என்ன திமிராடி உனக்கு ஃபோன் பன்னிட்டு ஓவரா பேசுற”

“ஹா ஹா ஹா. நான் கொஞ்சம் ஓவராதான் பேசிட்டேனோ சரி விடு விசயத்தை சொல்லிடுறேன். உனக்கும் சந்துருவுக்கும் கல்யாணம் நடந்த அடுத்த நாள் நீ வெள்ளை புடவையோடதான் இருக்கனும் ஹா ஹா” என இனைப்பு துண்டிக்கப்பட்டது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 1கடவுள் அமைத்த மேடை – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி. இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம்.

ராணி மங்கம்மாள் – 4ராணி மங்கம்மாள் – 4

4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும்  டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.   “நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்”