Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 18

பாகம் – 18

ஆரவ் குழந்தையை வீட்டிற்குள் தூக்கி கொண்டு வந்தான். பார்பி மனது குழப்பத்தில் தறிகெட்டு ஓடியது, ‘இது இவனோட குழந்தையா? இருக்காது… இவனுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலயே. இவன் தங்கச்சியா இருக்குமோ? ஆனா ரொம்ப சின்ன குழந்தையா இருக்கே… ஒரு வேளை தத்தெடுத்து வளர்த்துகிட்டு இருப்பானோ? ம்.. அப்படித்தான் இருக்கும்’ என்று தனக்கு தானே முடிவு செய்து கொண்டாள். ஆரவ்விற்கு அவள் குழம்பிய குளமாய் இருக்கிறாளென அவள் கண்களிலேயே தெரிந்து விட்டது. நான்கடி நடந்திருப்பான், பார்பி பொறுமையை காற்றில் பறக்க விட்டு அவனிடம் மெதுவாக, “இது யாரோட குழந்தை ஆரவ்” என்றாள்.

 

அவள் தவிப்பு ஆரவ்விற்கு ‘எனக்கு இது இன்னும் வேண்டும்…’ என்ற ஆசை தர, வேண்டுமென்றே பதில் சொல்லாமல், அவளை நோக்கி ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு மாடி படியை நோக்கி நடந்து சென்றான். பார்பி அவனுக்கு வால் மாதிரி பின்னாடியே கேள்விகளுடன் வந்து கொண்டிருக்க, ‘வா…. வா….. இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் என்னையே சுத்தி சுத்தி வா…’ என சுற்றலில் விட்டான். ஆரவ் மனதிற்குள் அவளின் அருகாமை அத்தனை சந்தோஷமாய் இருந்தது. குழம்பி தவிப்பவளை பார்க்க பாவமாய் இருந்தாலும், ‘இப்பவே சொல்ல கூடாது’ என அவன் மனம் அவனிடமே முரண்டு பண்ணியது. மாடியில் அவளுக்கென ஒதுக்கிய அறைக்கு சென்று குழந்தையை அவளது படுக்கையில் கிடத்தினான்.

 

அதன்பின் பொறுமையாக திரும்பி பார்பியிடம் , “நீ என்ன கேட்ட பார்பி?” என்றான் நிதானமாக.

 

“இது யார் பாப்பா? உங்களுக்கு தெரிஞ்சவங்க பாப்பாவா, இல்ல உங்க பாப்பாவா? இந்த குழந்தையோட பேர் என்ன?” என கேள்விகளை அடுக்கியவளை, போதுமென கை சைகையால் நிறுத்தவும் அமைதியானாள்.

 

“ஒரு குழந்தையை நான் கையில தூக்கிட்டு வந்தா அது என்னோட குழந்தையாத்தான் இருக்கனுமா? இவ என் தங்கச்சி பிரியங்காவோட முதல் குழந்தை, பேரு அஸ்விகா. என் தங்கச்சிக்கு நேத்து நைட் இரண்டாவது குழந்தை பொறந்திடுச்சு. இந்த மாசம் லாஸ்ட்லதான் டெலிவரி டேட் குடுத்து இருந்தாங்க, பட் நேத்தே வலி வந்திடுச்சாம். அதத்தான் காலைல வேலைக்காரன் வந்து என்கிட்ட சொன்னான். அவ இன்னும் ஹாஸ்பிடல்ல மயக்கத்திலதான் இருக்கா. நீ நேத்து நைட் சரியாவே தூங்கலைல, அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு உன்ன வீட்டுலயே விட்டுட்டு போனேன். இவளும் நேத்து நைட் புல்லா தூங்காம ஹாஸ்பிடல்ல சேட்டை பண்ணிகிட்டே இருந்திருக்கா. இந்த சேட்டக்காரி, மார்னிங்ல தான் தூங்கவே ஆரம்பிச்சாளாம். நாம மூணு பேரும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, ஈவ்னிங் போய் பிரியங்காவையும் குழந்தையும் பாக்கலாம். வேற எதாவது நீ என்கிட்ட கேக்கணுமா?”

 

“ம்…” என தாவாங்கட்டையில் விரல் வைத்து யோசித்தவள், “உங்க தங்கச்சிக்கி இப்போ என்ன குழந்தை பிறந்திருக்கு?” என்றாள்.

 

ஆரவ் சிரிக்கும் கண்களோடு, “ஆண் குழந்தை” என்றான்.

 

“ஹாஸ்பிடல்ல அவங்களுக்கு ஹெல்ப்புக்கு யாராவது கூட இருக்காங்களா? இல்ல நான் போகவா?” என்றாள் தான் இருக்கும் உடல் நிலை மறந்து.

 

குறும்பு நிறைந்திருந்த கண்களில் இப்போது காதல் குடியேறிக்கொள்ள, “தேவையில்லடா… என் தங்கச்சியோட ஹஸ்பெண்ட், அத்தை மாமா, அவ அம்மா எல்லாரும் அங்க துணைக்கி இருக்காங்க. அவ டிஸ்சார்ஜ்க்கு இன்னும் நாலு நாள் ஆகும்னு நினைக்கிறேன், அதுவரைக்கும் நீயும் அஸ்விகாவும் இங்கேயே சேர்ந்து இருங்க, ஓகே. நான் கொஞ்சம் ப்ரஷ் ஆகிட்டு வர்ரேன்” என்றபடி இடதுபுறம் இருந்த தன் அறைக்குள் புகுந்து கொண்டான். பார்பியும் சந்தோஷமாக அஸ்விகா அருகில் அமர்ந்து கொண்டாள். ஆரவ் தானும் பார்பியும் வீட்டில் தனியாய் இருப்பதை விட, குழந்தையுடன் மூவராய் இருப்பது ரொம்பவே நல்லது என்றே குழந்தையையும் உடன் அழைத்து வந்திருந்தான். தன்னைவிட குழந்தையுடன் அவள் நன்றாக இழைந்து பழகுவாள் என்று கணித்தது சரியாக வேலை செய்தது. கொஞ்ச நேரத்தில் குளித்துமுடித்து கேஷூவல் ட்ரஸ் அணிந்தபடி வந்தவன் அவள் அறை வாசலில் நின்று கொண்டு, அவளை தன்னருகே அழைத்தான்.

 

“பார்பி இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கு செக்கப் பண்ணி மருந்து போட்டுவிட ஷர்மா அங்கிள் வந்திடுவாரு. அதுக்குள்ள நாம போய் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுரலாம் வா.”

 

“ஆரவ் குழந்தை தனியா இருக்குமே. பயந்து அழுதிடுச்சுனா…”

 

“இது அவளோட ரூம்தான். இந்த வீட்டுக்கு வந்தா இங்கதான் இருப்பா, பயப்பட மாட்டா நீ வா”

 

மனதே இல்லாமல் அவனுடன் இறங்கி வந்தவள் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் தன் அறைக்கு ஓடிவந்து விட்டாள். ‘நல்ல வேள பாப்பா இன்னும் தூங்குறா’ என திருப்தியுற்றவள் அதன்பின் அஸ்விகா அருகிலேயே இருந்தாள். சில நிமிடங்கள் கழித்து டாக்டர் ஷர்மா வந்தார். அவர் பார்பியின் கையை ஒருமுறை பார்த்துவிட்டு, தலையில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுவிட்டார்.

 

ஆரவ் கீழே இருக்கும் தனது ஆபீஸ் ரூம் பக்கம் போனதை அவரின் மூலம் அறிந்து கொண்ட பார்பி மெல்லிய குரலில் அவரிடம், “எனக்கு உங்கிட்ட பெர்சனலா ஒண்ணு கேக்கணும் டாக்டர், கேக்கலாமா….”

 

“எனக்கு பிள்ளையே கிடையாது. உன்ன பாத்ததிலிருந்து உன்ன என் மகளாவே நினைக்கிறேன்மா. என்ன உன் அப்பாவா நினைச்சு தயங்காம என்ன வேணும்னாலும் கேளு”

 

“ஆரவ்க்கு எல்லாருமே இருக்கீங்கல்ல, அப்புறமும் ஏன் எப்ப பாத்தாலும், எனக்கு யாரும் இல்லனே சொல்லிகிட்டு இருக்காரு?”

 

“அது எல்லாம் அவன் ஏழு வயசில நடந்து முடிஞ்ச சம்பவம். ஆரவ்க்கு இந்த விஷயத்தை பத்தி யாராவது பேசினா சுத்தமா பிடிக்காது. உன்னோட நல்லதுக்காக சொல்றேன், அவன்கிட்ட இதபத்தி நீயா எதுவும் கேக்காத. அவனா என்னிக்கு சொல்றானோ அன்னிக்கி ஏன்னு உனக்கே புரியும். இப்போ நான் கிளம்புறேன்மா, உடம்புக்கு முடியலனா எப்பனாலும் கூப்பிடு, உடனே வந்திடுவேன்.”

 

‘நான் இவருகிட்ட கேக்காமலே இருந்திருக்கலாமோ!’ என்கிற அளவிற்கு அவர் நன்றாக குழப்பிவிட்டு சென்றார்.

 

நெடுநேரம் கழித்து எழுந்த அஸ்விகா பாப்பா புதியவளான பார்பியை சற்று மிரட்சியுடனே பார்த்தாள். பார்பிக்கும் அது புரியவே பார்பி அங்கிருந்த ஒரு பொம்மையை எடுத்து குழந்தைக்கு காட்டி அழைத்தாள். என்ன நினைத்ததோ அவளிடம் உடனே வந்துவிட்டது.

 

“என் பேர் பார்பி, உங்க பேர் என்ன?”

 

“என்னோட பேரு அஸ்விகா. எனக்கு பார்பினா ரொம்ப பிடிக்கும், என்கிட்ட பார்பி கேர்ள் டிரஸ்ஸே இருக்கு தெரியுமா?” என்றது மழலையில்.

சில நிமிடங்களிலேயே சிறிய குழந்தையும் வளர்ந்த குழந்தையும் தோழிகளாகி போனார்கள்.

 

விளையாடி கொண்டே மெதுவாக இருவரும் கீழே இறங்கி வருகையில், கீழே ஹாலில் ஆரவ்வும் நிதிஷ்ம் ஏதோ முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருந்தனர். இவர்களை கண்டதும் ஆரவ் எழுந்து வந்து, “ரெண்டு பேரும் முதல்ல ஏதாவது சாப்பிடுங்க. நான் கொஞ்சம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து உங்கள பாக்குறேன்” என்றபடி ஆபீஸ் ரூமுக்குள் சென்று விட்டான்.

 

இதற்குள் செப் டைனிங் டேபிளில் அஸ்விகாவுக்கு பிடித்த உணவுகளை கொண்டு வந்து வைத்திட, இருவரும் டைனிங் ரூமிற்கு சென்று சாப்பிட தொடங்கினர். அடம்பிடித்த குழந்தைக்கு விளையாட்டு காட்டி கதை சொல்லி பார்பி பாதிக்கும் மேல் ஊட்டி விட்டாள்.

 

“இதுதான் லாஸ்ட் ஆ வாம்…. கிட்ட வாங்க, என்கிட்ட வாங்க அஸ்விகா குட்டி”

 

“யார் நீ…” அவள் பின்னால் இருந்து வந்த கரகரப்பான பெண்குரல் கேட்டு பார்பி திரும்பினாள். ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு அம்மா, பட்டு சேலை ஆபரணங்களில் பகட்டு காட்டியபடி வந்து நிற்க, பார்பியின் கால்கள் பயத்தில் தானாக எழுந்து நின்றன.

 

“கேக்குறேன்ல… யாரு நீ?”

 

“பா…. பார்பி” அவளுக்கு வாயில் வார்த்தை வரவில்லை.

 

“அவன் வான்னு சொன்னா நீ கூடவே வந்திடுவியா. தெருவுல போறதெல்லாம் எதுக்கு என் வீட்டுல கொண்டுவந்து வச்சிருக்கான்”

 

சவுக்கடி போல வந்து விழுந்த வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் கண்களில் கண்ணீர் முட்ட தலையை கவிழ்ந்து கொண்டாள்.

 

“இது என்னோட வீடு” அவருக்கும் பின்னாலிருந்து, அழுத்தம் திருத்தமாக வந்தது ஆரவ்வின் உறுமும் குரல்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: