Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 16

பாகம் – 16

மழை வரும் அறிகுறியுடன் மேக மூட்டத்தோடு மாலை பொழுது ரம்மியமாக வெளியே விரிந்து கிடக்க, அறைக்குள்ளே டிவியில் ‘அந்திமழை பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது….’ என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்தது. டிவி பார்த்து கொண்டிருந்த பார்பி காலையில் இருந்ததைவிட இப்போது ஓரளவிற்கு நன்றாக தேறி இருந்தாள்.

 

ஆரவ் தனக்கு டீ எடுத்து வருவதை கண்டதும், எழ முயற்சித்தவளின் இரண்டு கைகளும் ஊன்றி எழ முடியாத அளவிற்கு அதிகமாகவே வலித்தது. ஒரு கையில் ஆபரேஷன் செய்திருந்ததால், டிரிப்ஸ் ஏற்றுவது இன்ஜெக்ஸன் போடுவது அனைத்திற்கும் வலது கையையே உபயோகிக்க வேண்டியதாயிற்று. காலையும் மதியமும் வலது கையை ஊன்றி எழுந்தவளால் இப்போது சுத்தமாக முடியவில்லை. வலது கை சற்று வீங்கி விட்டிருந்ததால், பெட்டில் இருந்து மெல்ல எழ முயன்றவள் வலி தாங்க முடியாமல் மீண்டும் பெட்டிலேயே விழுந்து விட்டாள்.

 

ஆரவ் ஓடிவந்து, “ஏய், என்ன ஆச்சு பார்பி? முடியலனா கூப்பிட வேண்டியதுதான.”

 

“எழுந்திருக்கும் போது வலது கை திடீர்னு ரொம்ப வலிச்சிடுச்சி, அதான் ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்.”

 

அவளருகில் அமர்ந்து முழங்கை வரை நீண்டிருந்த ஆடையை சற்றே நகற்றி பார்த்தவனுக்கு லேசான வீக்கம் தெரிய, “ஒண்ணுமில்ல பார்பி, லேசான வீக்கம்தான். டாக்டர் வந்ததும் இத காமிச்சு ஏதாவது ஆயின்மென்ட் போட சொல்லுவோம், சீக்கிரமே சரி ஆகிடும். இப்போ நான் உன்ன தூக்கி உக்கார வைக்கிறேன், எழுந்து கொஞ்சம் டீ குடி”

 

“இல்ல… வேண்டாம்… நர்ஸ் யாரையாச்சு……..” இதற்குள் அவன் வலது கை அவளிடையை பற்றி படர இடது கையை தலைக்கு அடியில் நுழைத்துவிட்டான்.

 

“இதுக்கெல்லாமா நர்ஸ்ஸ கூப்பிடுவாங்க, ஏன் நான் செய்ய கூடாதா?” என அவளை மெதுவாக தூக்கினான். தன் விரல்களின் தீண்டலால் அவள் நெளிவதை அவனால் தெளிவாக உணரமுடிந்தது.

 

அவனது பெர்ப்யூம் வாசம் அவளுக்கு மூச்சு முட்டும்படி அவளருகில் நெருங்கியவன், இருவருக்கும் இடையில் விரல் விடுமளவே இடைவெளி விட்டு நின்றிருந்தான். அவள் தன் நினைவுகளைதான் இழந்தாளே தவிர உணர்வுகளை இழக்கவில்லையே. சட்டென்று இத்தனை அருகில் வந்து ஒரு ஆண், பிறர் கை படாத தன் இடையினை தொட்டு தூக்கியதை அவள் பெண்ணுணர்வு ‘இது தவறென்று’ கூறிற்று. ஆனால் மனமோ, ‘தனக்கான அத்தனையும் அவன்தான் பார்த்து பார்த்து செய்கிறான், அவனையே எதிர்த்து பேச நினைப்பது கூடாது’ என உத்தரவிட்டது. அந்த அறைக்குள்ளிருந்த மற்ற இருவரும் கண்டும் காணமல் தத்தமது வேலைகளையே பார்த்து கொண்டிருக்க, வேறு வழியின்றி பார்பியும் அமைதியானாள்.

 

ஷர்மா அங்கிள் நாளை அதிகாலையே மும்பை கிளம்புவதனால், பார்பியின் அனைத்து ரிப்போர்ட்களையும் சரிபார்த்து கொண்டிருந்தார். நிதிஷ் இந்தியாவின் மிகப்பெரிய பண முதலைகளின் கம்பெனி சம்பந்தமான பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே மனிஷ்ஷை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் பட்டியலை தயாரித்து முடித்துவிட்டான். அடுத்ததாக விளம்பர கம்பெனி பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த வேலையை இன்றே முடித்தால்தான் நாளை அடுத்த அடி நகர முடியும் என்று கர்ம சிரத்தையுடன் வேலை பார்த்து கொண்டிருந்தான். அவர்களை ஒருமுறை பார்த்து விட்டு ஆரவ் பக்கம் திரும்பினாள். ஆரவ் பார்பியை வேடிக்கை பார்ப்பதையே முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்க, அச்சத்தில் சட்டென்று விழி தாழ்த்தி தலையை கவிழ்த்தி கொண்டாள்.

 

ஷர்மா, “ஓகே ஆரவ் நான் இப்போ ரூம்க்கு கிளம்புறேன், நீங்க எல்லாரும் எப்ப வர்ரீங்க?”

 

“நாளைக்கு பார்பிக்கு கட்டு பிரிச்சுட்டு நாங்க மூணுபேரும் நைட் ப்ளைட்ல வர்ரோம் அங்கிள். நான் வர்றதுக்கு முன்னாடியே நீங்க மும்பையில எல்லாம் ரெடி பண்ணி வைங்க “.

 

“ம்… ஓகே, நான் கிளம்புறேன் மா… பாத்து வந்து சேருங்க” என இருவரிடமும் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பினார். நிதிஷ்ஷும் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, நாளை காலையில் திரும்பி வருகிறேன் என அவருடனே கிளம்பி விட்டான்.

 

பார்பியின் மனதோ, ‘ஐயயோ என்ன எல்லாரும் போறாங்க? இனிமே இவன் கூட தனியா நான் நைட் புல்லா இருக்கனுமா…’ என நினைத்து பதறி சிதறினாள். அவனுக்குமே இந்த இனிமையான தனிமையின் காரணமாய் மனதிற்குள் ஒரு சிறிய குறுகுறுப்பு தொன்றியிருந்தது.

 

அனைவரையும் அனுப்பிவிட்டு விருவிரவென ஆரவ் அவளருகில் வந்து கொண்டிருந்தான். அவள் சரியாய் இருந்த ஆடைகளை மீண்டும் சரி செய்து, தன் பயத்தை மறைக்க தலையை குனிந்து கொண்டாள். அவளின் அச்சத்தையும் தயக்கத்தையும், அவளது கண்களே ஆரவ்விடம் காட்டிகொடுத்திட, “உனக்காக ஸ்பெஷல் பர்மிஷன்  வாங்கி இன்னிக்கி இங்க  தங்குறதுக்கு  ஏற்பாடு  செஞ்சிருக்கேன் நான், நீ என்னடான்னா  இந்த முழி முழிக்கிறியே… உனக்கு என்ன பாத்தா அவ்ளோ பயம்மா இருக்கா பார்பி?” என்றான்.

 

“இல்ல… அது… வந்து… நான்….” வார்த்தைகள் வராமல் தகராறு செய்தது.

 

“பரவாயில்ல, ஏதாவது கேக்கனும்னு நினச்சா கேளு, தப்பா நினைக்க மாட்டேன்”

 

“ஏன் நீங்க இப்டீ என்னை விழுந்து விழுந்து கவனிக்கிறீங்க? ஏன் டாக்டர், போலீஸ் எல்லாரும் உங்கள பாத்து பயப்படுறாங்க? என்னோட பேமிலி ஏன் இன்னும் வரல?”

 

ஆரவ் வசதியாக அவளருகில் வந்து சாய்ந்து அமர்ந்து கொண்டு தன்னை பற்றியும், அவளை பார்த்த நொடியிலிருந்து இப்போது வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் (சென்சாரின் கீழ் சிலதை மறைத்து) சொல்லி முடித்தான்.

 

முழுதாய் கேட்டு முடித்த பார்பி சற்று இலகுவாகிட, “எல்லாம் ஓகே. என்னோட பேர கடைசி வரைக்கும் தெரியலுனு சொல்றீங்களே… அது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு” என்றாள்.

 

ஆரவ் சிரிப்பும் அழுகையும் கலந்த முக பாவத்தில், “வேணாம்… வலிக்குது… அழுதிருவேன்….” என்றதும் அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் மீதிருந்த தயக்கமும் அச்சமும் விடைபெற நல்ல நண்பனாக ஆரவ்வை நினைக்க தொடங்கினாள். இருவரும் இரவு நெடுநேரம் வரை பேசி சிரித்து ஓய்ந்து போய் உறங்கி போனார்கள்.

 

அடுத்த நாள் காலை நிதிஷ் வந்தபோது இருவரும் மனம் விட்டு பேசும் அளவிற்கு மாறி இருந்தனர். மூன்று டாக்டர்கள் வந்து பார்பி கையிலிருந்த பழைய கட்டுகளை நீக்கி சுத்தம் செய்து புதியகட்டுகளை போட்டனர். “தலைல இனிமே கட்டு போட தேவையில்லை சார். கைக்கு மட்டும் இன்னும் அஞ்சு நாளைக்கு கட்டு போடனும், அதுக்கப்புறம் மருந்து மட்டும் போட்டுக்கோங்க போதும். இனிமே எப்போ வேணும்னாலும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். எதுக்கும் கடைசியா ஒரு இன்ஜெக்ஷன் போட்டுடுறோம், நீங்க இந்த பார்மாலிட்டீஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணிடுங்க” என்ற டாக்டர் பார்பிக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டார்.

 

ஆரவ், “சைன் பண்ணிட்டேன், தேங்க்யூ டாக்டர். இன்னிக்கி நைட் பத்து மணிக்கு மேல பார்பிய டிஸ்சார்ஜ் பண்ணிக்கிறோம்.”

 

அதன்பின் அன்றைய நாள் வேகமாக ஓடியது. ஆரவ்வும் நிதிஷ்ம் அடிக்கடி வேலை சம்பந்தமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க அவளோ அவர்களை தொல்லை செய்யாமல் டீவியில் மூழ்கி போனாள். டிஸ்சார்ஜ்க்கு பின் அணிந்து கொள்வதற்காக நிதிஷ் வாங்கி கொண்டு வந்திருந்த உடையின் அளவு அவளுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. ‘பரவாயில்லை இருக்கட்டும், இதுவாச்சும் கிடைச்சதே’ என்று குறையை நிறையாக நினைத்து அணிந்து கொண்டாள். இரவு நேரமானதும் மூவரும் ஹாஸ்பிடலில் இருந்து ஹோட்டலுக்கு காரில் கிளம்பினர்.

 

ஹோட்டல் வந்ததும் நிதிஷை பார்பிக்கென ஒரு தனி ரூம் புக் செய்ய அனுப்பிவிட்டு ஹோட்டலுக்கு அருகிலேயே இருக்கும் நவ நாகரீக பொட்டிக் ஒன்றுக்கு அவளை அதே காரில் அழைத்து சென்றான். ஹைகிளாஸ் ஆடையகம் என்பதாலும், இரவு வெகு நேரமாகி விட்டது என்பதாலும் ஆட்களின்றி வெறிச்சோடி கிடந்தது அந்த கடை.

 

“பார்பி, இப்போதைக்கு இங்க கொஞ்சம் டிரஸ் எடுத்துக்கோ. மும்பை போயிட்டு உனக்கு கொஞ்சம் உடம்பு நல்லா ஆனதும், நிறைய வாங்கலாம்”

 

அவள் தன்னிச்சையாக சுடிதார் பக்கம் செல்ல, அவளை அழைத்து “ஸ்லீவ்லெஸ் வெஸ்டர்ன் டிரஸ் பாரு பார்பி, அதுதான் உனக்கு இப்போ போட்டுக்க கம்பர்டபிளா இருக்கும்” என்றான்.

 

அத்தனையும் ஐயாயிரம், ஆறாயிரம் என்றிருக்க, என்ன செய்வதென்று தெரியாத பேதை, இருப்பதிலேயே விலை குறைவாக தேடி தேடி எடுத்து கொண்டிருந்தாள். அது தெரிந்ததுமே அவன் அவளை பிடித்து இழுத்து ஒரு ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு தானே தேர்ந்தெடுக்க தொடங்கினான். தூரத்தில் இருந்து அவளுக்கு நேராக டிரஸ்ஸை நீட்டி பார்த்து சரியாக அளவு ஆடைகளை தேர்ந்தெடுத்தான்.

 

அட்டகாசமாக ஐந்தாறு டிரஸை எடுத்து கொண்டு வந்தவன், “உனக்கு வேற எதாவது பிடிச்சு இருந்தா அதையும் சேர்த்து எடுத்துக்கோ…” என்றான்.

 

“இல்ல இதுவே போதும்”

 

“வேற எதும் வாங்கனும்னா வாங்கிட்டு வா, நான் வெளியில கவுன்ட்டர் பக்கத்துல வெயிட் பண்றேன்”

 

“இல்ல… அவ்ளோதான்.”

 

இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என தலையை சொறிந்தவன், “சரி, நீ இங்கயே நில்லு…” என்றுவிட்டு ஒரு ஸேல்ஸ் கேர்ளை அழைத்து அவள் காதில் ஏதோ ரகசியமாக சொல்லிவிட்டு சென்றான்.

 

பார்பி அருகில் வந்த ஸேல்ஸ் கேர்ள், “மேம், என் கூட வாங்க. இன்னர்ஸ் காட்டுறேன்” என்றாள். அவள் மனம், ‘அடச்சீ…. இதபோய் மறந்து தொலச்சுட்டேனே… அதான் தூரமா போய் நிக்கிறானா… ரொம்ப நல்லவன் ஆரவ்’ என்று பாராட்டு பத்திரம் வாசிக்க தொடங்கிற்று.

 

ஆரவ் போனில் எதையோ நோண்டி கொண்டிருக்க, அவனின் பின்னால் வந்து நின்றவள் “ம்… முடிஞ்சது போலாம் ஆரவ்” என்றாள். எல்லாம் சேர்த்து நாற்பதாயிரத்திற்கு மேல் பில் வந்திருந்தது. அவள் ‘ஆத்தாடி…’ என்று வாயை பிளக்காத குறையாய் பில்லையே பார்க்க, அவனோ ஈசியா ஒரு கார்டை நீட்டி அலட்டி கொள்ளாமல் பே பண்ணி விட்டு வந்தான். அனைத்தையும் அள்ளி கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

 

பார்க்கும் இடமெல்லாம் பணத்தின் செழிப்பை பறை சாற்றியது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். கமகமக்கும் ஒருவித லெமன் ஸ்மெல் காற்று முழுவதும் கலந்திருந்தது. அவளுக்கு சில நிமிடங்கள் வரைக்கும் அங்கே வேடிக்கையே பெரிதாய் இருந்தது. அவர்களுக்காக லாபியிலேயே காத்திருந்த நிதிஷ் ஆரவ்விடம் வந்து ஒரு கருப்பு நிற கார்டை தந்தான். பின் ஆரவ்வும் பார்பியும் மட்டும் லிப்ட்டை நோக்கி சென்றனர்.

 

“நாம எந்த ப்ளோர்?” என்றாள்

 

“தேர்டு ப்ளோர்” என்றவன் லிப்ட் வந்ததும், உள்ளே சென்று ஓர் இடத்தில் கார்டை ஒற்றி எடுத்தான். லிப்ட் தானாகவே மூடிக்கொண்டு சரியாய் மூன்றாவது தளத்தில் வந்து நின்றது.

 

பார்பி, “பார்ரா சூப்பர் டெக்னாலஜி”

 

அவன் மீண்டும் அதே கார்டை வைத்து ரூமையும் ஒப்பன் செய்ததை கண்ட அவள், “மறுபடியும் பார்ரா” என்றாள் குறும்பாய்.

 

கார்டை ஹோல்டரில் போட்டதும் அந்த அறை உயிர்த்தெழுந்திட, “இதுதான் உன்னோட ரூம் கீ பார்பி. இந்த ஹோல்டருக்குள்ள கீ இருந்தாதான் ரூம்க்கு பவர் சப்ளை ஆகும். எனக்கு ஆபோசிட் ரூம், சீக்கிரம் ஃப்ரஸாயிட்டு வா. நானும் ஒரு ஃபிப்ட்டீன் மினிட்ஸ்ல ரெடியாகி வர்றேன், சாப்பிட போலாம்” என்றுவிட்டு வெளியேறினான்.

 

பார்பி ஆசையாசையாக அறை முழுவதும் சுற்றி பார்த்தாள். காலை வழுக்கும் தரை, படுத்துகொள்ள தோன்றும் கார்பெட், அமர்ந்த உடனே அவளை உள்ளிழுத்து கொள்ளும் மெத்தை, பாத்ரூம் முழுவதும் கண்ணாடி சுவர் தடுப்புகள் என அந்த அறையே பளிங்காய் மின்னியது.

 

அவன் தன் அறைக்குள் நுழைந்து போனை சார்ஜில் போட்டு ஒரு மூன்று நிமிடங்கள் இருக்கும். அவன் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தான், அவள்தான்….

 

“பெல் அடிக்காம கதவை ஏன் தட்டுற பார்பி?”

 

“ஒரு ஹெல்ப், உள்ள வாங்க” என்று தன் அறைக்கு அழைப்பு விடுத்து சென்றாள். அவன் உள்ளே வந்ததும் நேராக அவள் பாத்ரூமிற்குள் சென்றுவிட்டாள். ‘அங்க என்ன ஹெல்ப்பு….?’ என்ற யோசனையோடு பாத்ரூம் உள்ளே வந்தான்.

 

“எனக்கு இந்த பாத்ரூமை யூஸ் பண்ண தெரியல” என்றாள் தலை குனிந்து.

 

‘அடச்சே…இவ்ளோதானா…’ என்று ஏமாந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், “இது ஹாட் வாட்டர்க்கு, இது கூல் வாட்டர்க்கு, இத மேல தூக்கிவிட்டா ஷவர் ஆன் ஆகும், இத திருப்பினா ஹேண்ட் ஷவர். இது பாடி லொஷன், இது பாடி ஸ்கிரப்பர், இது ஷாம்ப்பு, இது ப்ளஷ் பண்ற பட்டன், இந்த கபோர்டுக்குள்ள ஹேர் ட்ரையர் இருக்கு….. “என்று மூச்சுவிடாமல் கிளாஸ் எடுத்து முடித்தவன், “வேற எதாவது சொல்லணுமா?” என்றான்.

 

“ம்…..”

 

“என்ன?”

 

“கொஞ்சம் வெளியில இருக்கீங்களா. அவசரம்” என சங்கடமாய் நெளிந்தாள்.

 

இத்தனை நேரம் மெயின்டெயின் பண்ண கெத்தெல்லாம் வீணாய் போக, “ஸ்ஸ்… ஸாரி. லூஸுடா ஆரவ் நீ….” என தன்னைத்தானே தலையில் தட்டி சிரித்து கொண்டே, நான்குகால் பாய்ச்சலில் வெளியே ஓடினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: