Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 15

பாகம் – 15

அடுத்த நாள் ஆரவ் அதிகாலையிலேயே விழித்து விட்டான், அனுமதியின்றி அவள் நினைவு வந்து அலைக்கழிக்க அதற்குமேல் அவனால் தூங்க முடியவில்லை. ‘அங்கிளுக்கு போன் பண்ணலாமா? வேண்டாமா?…’ என்று கேட்ட மனதிடம் அவனின் ஆறாம் அறிவு, ‘வேண்டாம் ஆரவ், இந்நேரம் நீ போன் பண்ணா கண்டிப்பா அவரு திட்டுவாரு’ என்றது. பின்னே, இப்போது மணி அதிகாலை நான்கு முப்பது தானே ஆகிறது. நிமிடங்கள் நகரமாட்டேன் என அடம்பிடிக்க, ஆரவ் மனம் பார்பியையே சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘இன்னேரம் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? உறங்குவாளா? இல்லை பகல் முழுவதும் உறங்கிய அசதியில் இப்போது விழித்திருப்பாளா?’ என்று தனக்குதானே கணக்கு போட்டு பார்த்து கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு, ‘இது சரியா வராது… நாமளே ஹாஸ்பிடல் போய் பாத்திடுவோம்’ என்று எழுந்து தயாராக தொடங்கினான். பக்காவாக ஷேவ் செய்து, பார்மல் டிரஸில் டிப்டாப்பாக நான்கு ஐம்பதுக்கெல்லாம் ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டான்.

 

ஷர்மா அங்கிள், “ஏன்டா இப்டி உசுற வாங்குற?”

 

ஈஈஈ….. என்று இளித்தபடி வழக்கமான அவனுடைய இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டான்.

 

“நிதிஷ் எங்கடா?”

 

“அவன் தூங்கிட்டு இருப்பான்ல அங்கிள். அதான் அவன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு….” என்று இழுக்க,

 

“எங்கள டிஸ்டர்ப் பண்ண வந்தயாக்கும்” என முடித்து வைத்தார் ஷர்மா அங்கிள்.

 

“சே… சே… டிஸ்டர்ப் பண்றதுக்கு இல்ல, நீங்க நைட் புல்லா தூங்கலைல, அதான் உங்களுக்கு உதவி பண்ணலாமேன்னு சீக்கிரமா வந்தேன்.”

 

“நம்பிட்டேன் டா… சரி. அவ கொஞ்ச நேரத்தில் முழிச்சிடுவா, தண்ணி கேட்டா கொஞ்சம் கொஞ்சமா குடு. டாக்டர் ஆறரை மணிக்கு வந்து அடுத்த இன்ஜெக்ஸன் போடுவார். அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க, நான் போயிட்டு நிதிஷ்ஷ வர சொல்றேன்” என்று அவர் சென்றுவிட்டார்.

 

ஆரவ் நேற்று விட்ட வேலையை இன்று மீண்டும் செய்ய தொடங்கினான். அது அவளருகினில் அமர்ந்து கொண்டு தன் விரலால் அவள் கூந்தலை கோதுவது, கை பிடித்து மென்மையாக அவள் விரல்களை வருடுவது, மாசில்லா அவளின் முகத்தை பார்த்து கொண்டே இருப்பது. நேற்றை விட இன்று அவள் கொஞ்சம் இளைத்து விட்டது போல் தோன்றியது ஆரவ்விற்கு. எல்லாம் என்னால தான்… இப்படியே பலவித யோசனைகளுடன் அரைமணி நேரம் போனது. அவள் மெதுவாக அசைந்தாள். அவன் சற்று விலகி அமர்ந்தான். அவள் இமை திறந்தவுடன் ஆரவ் அருகில் வந்து , “ஏதாவது வேணுமா” என்றான்.

 

“ம்.. தண்ணி” என்றதும் கொஞ்சம் கொடுத்தான்.

 

“வேற எதும் வேணுமா?”

 

“தூக்கம் வரல. கை ரொம்ப பெய்னா இருக்கு” என்றாள்.

 

மணி ஐந்தரையை தாண்டி கொண்டிருக்க இன்னும் ஒருமணி நேரம் இப்படியே சமாளிக்க வேண்டிய நிர்பந்தம். ஆரவ் “டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார். அதுவரைக்கும் நீ வேடிக்கை பாக்குறியா?” என்று சன்ரைஸ் பார்க்க தோதாக விண்டோ ஸ்கிரீன்களை விலக்கி, டீவியில் மெல்லிசை பாடல்களை ஓடவிட்டான். அவள் அதில் லயித்து கிடக்க, அவன் அவளில் லயித்து கிடந்தான்.

 

சரியாக நேரம் ஆறரை ஆகையில் டாக்டரும், நிதிஷ்ஷும் வந்து சேர்ந்தனர். பார்பி மீண்டும் மருந்துகளின் உதவியால் வலி மறந்து உறங்கிபோனாள். காலை எட்டு மணிக்கு மேல் ப்ரஸ் மீட்டிற்கு சொல்லி இருந்ததால், ஆரவ்வும் நிதிஷ்ம் தங்களது ப்ளானை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

 

ஆரவ், “இன்னிக்கி ப்ரஸ் மீட்ல நான் ஓப்பனா உண்மைய சொல்ல போறேன். ‘மனிஷ்-ங்கிற தொழிலதிபர் தன்னோட கம்பெனி லாஸ் ஆனதுனால கோபத்துல என்னை கடத்தி கொல்ல ட்ரை பண்ணினான், எவிடென்ஸ் எல்லாமே என்கிட்ட இருக்கு. பட் அவனுக்கு அரசியல் சப்போர்ட் நிறைய இருக்குறதால போலீஸ் அவன அரெஸ்ட் பண்ண மாட்டிக்கிறாங்க’னு சொல்லிடுவேன். நான் இப்டி சொன்னதும் பார்மாலிட்டிக்கு அவன உடனே அரெஸ்ட் பண்ணிடுவாங்க, அவனும் கொஞ்ச நாள்லயே ஈசியா வெளியில வந்திடுவான். பட் அவன் உள்ள இருக்குற இந்த டைம்ல அவனோட ஸ்ட்ரென்ந்த் எல்லாம் நாம வீக் ஆக்கனும், ஸேம் டைம் நம்ம ஸ்ட்ரென்ந்தை கூட்டிக்கனும். இந்த வேலைய வெளிய தெரியாம நீங்கதான் செய்யனும். ”

 

நிதிஷ், “ஷ்யூர் சார், பக்காவா முடிச்சிடுறேன். பட் மனிஷ் இப்ப என்ன ப்ளான் பண்ணிருக்கான்னு தெரியலயே”

 

ரிசப்ஷனிலிருந்து போன் வந்தது, “சார் உங்க பேஷன்ட் பார்பியோட பேரன்ட்ஸ் வந்து இருக்காங்க, மேல அனுப்பவா”

 

ஆரவ், “ம். சிக்ஸ்த் ப்ளோருக்கு அனுப்புங்க” என்றான்.

 

சில நிமிடங்களில் ஆரவ் ஆறாம் தளத்தின் லிப்டின் அருகே தயாராக இருந்தான். அவர்கள் வந்தவுடன் புன்னகை ததும்ப, “வாங்க, ஐ ஏம் ஆரவ். உங்களுக்காகதான் காத்துகிட்டு இருந்தேன்” என்றான் பவ்யமாக.

 

அவளின் அம்மா அழுது வடிந்து கொண்டிருக்க, அப்பாவோ, “எங்கிருக்கா என் பொண்ணு? எப்டி இருக்கா?” என்று ஆர்ப்பரித்தார்.

 

ஆரவ், “பதட்ட படாதீங்க, அவளுக்கு ஒண்ணுமில்ல, இங்கதான் பாதுகாப்பா இருக்குறா… ஆமா, அவளுக்கு நீங்க மட்டும் தான் சொந்தமா? தாத்தா பாட்டி, பிரதர் ஸிஸ்டர்னு யாரும் இல்லயா”

 

அப்பா, “அப்டி எல்லாம் யாரும் இல்லீங்க, எங்களுக்கு அவ ஒரே பொண்ணு…” என்றார்.

 

ஆரவ்விற்கு ஏதோ சரி இல்லை என புரிய, அவர்கள் அறியா வண்ணம் நிதிஷ்க்கு ஜாடை காட்டி விட்டு சென்றான். அவர்கள் இருவரையும் ஒரு அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து, அவன் காபி டீ கொடுத்து உபசரிக்க அப்பா, “அவ வர்றதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்றார்.

 

“கொஞ்ச நேரத்தில வந்திடுவா”

 

திடீரென மதமதவென பதினைந்து காவலர்கள் உள்ளே புகுந்து அவர்களை மடக்கி பிடித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் தங்களை அனுப்பியது மனிஷ்ஷின் ஆட்கள் என்று ஒத்து கொண்டதும், போலீஸ் அவர்களை அரெஸ்ட் செய்து அழைத்து சென்றனர்.

 

ஆனால் ஆரவ் இதோடு முடியும் என்று நம்பிக்கை வரவில்லை, அவனுக்கு தெரிந்து மனிஷ் இந்த அளவிற்கு மோசமான ப்ளானை எல்லாம் போட மாட்டான். இது ஒருவேளை கண்கட்டு வித்தை இல்லையேல் தன்னை ஆழம் பார்க்க நடந்த ஒத்திகை.

 

பார்பிக்கு காவலாய் நிதிஷ்ஷை நிறுத்தி விட்டு ப்ரஸ் மீட்டுக்கு சென்ற ஆரவ், அவர்களின் ப்ளானை நினைத்தபடியே நிறைவேற்றி விட்டான். அந்த நிமிடம் முதலே மனிஷ்ஷை கைது செய்ய சொல்லி அவனது ரசிகர்கள் கூட்டமும், கிரிக்கெட் போர்டும் காவல்துறைக்கு நெருக்கடி தர தொடங்கியது. ஆரவ் ப்ரஸ் மீட் முடிந்து திரும்பி வரும் போது நேரம் மதியம் பனிரெண்டு மணி. பார்பி இப்போது மயக்கம் தெளிந்து நன்றாக விழித்திருந்தாள். அவர்கள் இருவருக்கும் பேசிக்கொள்ள சிறிது தனிமை கொடுத்து மற்றவர்கள் அறையிலிருந்து வெளியேறினர்.

 

ஆரவ் அவளருகில் அமர்ந்து, “இன்னும் பெயின் இருக்குதா?” என்றான் காதல் கசியும் கண்களோடு.

 

“இல்லீங்க, முன்னவிட பெயின் இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கு. எனக்காக நீங்க இவ்ளோ பண்றீங்க, பட் சாரி… நீங்க யாருன்னு எனக்கு தெரியல. நான் உங்களுக்கு என்ன உறவு” என்றாள் அந்த பேதை. அவனோ பதில் சொல்லாமல் தின்ன தின்ன திகட்டாத அவளின் கருவண்டு கண்களையே பார்த்து கொண்டிருந்தான்.

 

அந்த மோன நிலையை கலைப்பதெற்கென்றே, திடீரென அறைக்கதவினை ‘டமால்…’ என்ற சத்தத்துடன் திறந்து கொண்டு, நான்கு போலீஸுடன் உள்ளே நுழைந்தார் போலீஸ் கமிஷனர். “ஆரவ் சார், நான் இந்த பொண்ண அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன், இவ மேல ஒரு திருட்டு கேஸ், ஒரு கொல கேஸ் இருக்கு. விசாரணைக்கு உடனே எங்க கூட அனுப்புங்க” என்றார்.

 

ஆரவ் பொறுமையாக, “என்ன திருடுனா? எப்போ கொலை செஞ்சா? எவிடென்ஸ் இருக்கா?”

 

“ஒரு நகை கடைல ரெண்டு நாள் முன்னாடி நகையை திருடிட்டு, கடை வாட்ச்மேன கொல பண்ணிருக்கிறா. அதுக்கு இன்னொரு வாட்ச்மேன்தான் சாட்சி”

 

“வெரி ஸாரி கமிஷனர் சார். இந்த பொண்ணு பத்து நாளா அதாவது என்னை கடத்தினதுல இருந்து என்கூடதான் இருக்கா. அவர் பாத்தது இவள மாதிரியே இருக்குற வேற பொண்ணா இருக்கும்.”

 

“பொய் சொல்லாதீங்க நீங்க பத்து நாளா டேங்கர்ல தனியாதான இருந்தீங்க, மூணு நாள் முன்னாடி தான இவளை பாத்தீங்க.”

 

“அது உண்மையா பொய்யானு எனக்கும் என்னை கடத்தினவனுக்கும் மட்டும் தான தெரியும். ஏதோ கடத்தலுக்கு ப்ளானே நீங்கதான் போட்டு குடுத்த மாதிரி டேங்கர் லாரி, பத்து நாள் ட்ராவல், மூணு நாள் முன்னாடி இவள பாத்ததுனு புள்ளி விவரத்தோட பேசுறீங்க. ”

 

“அது… வந்து… சரி சந்தேகத்தின் பேரில அந்த பொண்ண அரெஸ்ட் பண்றேன். அனுப்புங்க விசாரிக்கனும்.”

 

“அகெயின் சாரி சார், ஷீ இஸ் மைனர். பதினேழு வயசுதான் ஆகுது. அரெஸ்ட் பண்றதுக்கு முதல்ல கார்டியன் சைன் வேணும், பேஷன்ட்டோட பெர்சனல் டாக்டர் ஷர்மாவோட பர்மிஷன் வேணும்.”

 

“கார்டியனா யாரு?”

 

“நான்தான்….”

 

“நீங்க எப்போல இருந்து இந்த பொண்ணுக்கு கார்டியனா ஆனீங்க?”

 

“நேத்துல இருந்து எல்லா ரிப்போர்டுலயும் நான் தான் கார்டியனா சைன் பண்ணிருக்கேன். பாக்குறீங்களா? ஆமா இந்த பேஸிக்ஸ் கூட தெரியாம வந்ததிலிருந்து அரெஸ்ட் பண்றதுலயே இருக்கீங்க. உண்மையிலே நீங்க கமிஷனர்தானா?”

 

“சார்… ஐடிய காட்டட்டுமா?”

 

“இல்ல சாதாரண திருட்டு கேசுக்கு, ஏதோ இன்டர்நேஷனல் ஸ்மக்லர்ஸ புடிக்கிற மாதிரி நீங்களே ஸ்ட்ரெயிட்டா வந்திருக்கீங்களே அதான் கேட்டேன்.”

 

“அது… வந்து… உங்க உயிர காப்பாத்துன பொண்ணுன்னுதான்…” என்று திணர,

 

ஆரவ், “உங்கள அனுப்பினவன் கிட்ட நான் சொன்னதா ஒரு விஷயத்தை சொல்லிடுங்க. நான் அவ நிழலகூட யாரையும் தொட விடமாட்டேன்”

 

வந்தவேகத்தில் அனைவரும் சென்றுவிட, நிதிஷ், “சார் சட்டத்தை பத்தி இவ்ளோ விஷயம் தெரியுமா உங்களுக்கு?”

 

“கமிஷனரே ஒத்துகிட்டு ஓடி போயிட்டான். நீ எதுக்குடா தோண்டி துருவுற?”

 

“ஸோ இதுதான் அந்த மனிஷ்ஷோட ப்ளானா? இனிமே நாம எந்த டென்ஷனும் இல்லாம இருக்கலாம்.”

 

“இல்ல நிதிஷ், இந்த மாதிரி சாதாரண ப்ளான்லாம் அவன் போட மாட்டான். இதுல வேற ஏதோ விஷயம் இருக்கு,   இதுக்கப்புறம் பார்பி இங்க இருக்குறது ஸேப் இல்ல. நாம சீக்கிரமா இங்க இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டு மும்பை போயிடலாம், ஏற்பாடு பண்ணு நிதிஷ்”

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: