Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 21

உனக்கென நான் 21

கூரிய முனையுடைய கத்திகளோ அன்பரசியின் ரத்தநாளங்களை குறிவைத்து நின்றன. அவள் வாழ்ந்த தருணங்களை தனக்குள் அசையிட்டுகொண்டிருந்தாள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. எச்சிலை விழுங்கினாள். கைகள் கத்தியை ஏந்தி பிடித்து முன் செலுத்தின. தற்கொலை செய்துகொள்ளும் தைரியம் ஒரு வினாடிதான் இருக்கும் என்பார்கள் அந்த தருனம் இதுதான்.

“ஏய் அன்பு என்னடி பன்ற” என முதுகில் ஒரு பலமான அடி படவே கண்ணீருடன் திரும்பி பார்த்தாள். அவளது தோழி மலர்தான். அவளை கட்டிகொண்டு அழுதாள். மலருக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நினாறாள். மலரின் கையிலிருந்த பிரியா அன்பரசியின் முகத்தை தொட்டது. அவளது கண்ணீரை துடைக்க நினைத்திருக்கும் போலும். அதற்குள் அன்பரசிக்கும் பிரியாவிற்கும் ஓர் பந்தம் ஏற்படடிருந்தது. அந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் அன்பயரசியின் சோகங்கள் காணமல் போனது. சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

குழந்தையை அவள் மடியில் வைத்த மலர் “இங்க பாரு அன்பு உனக்கு சந்துருவ பிடிக்கலையா சொல்லு” என கேட்டாள் தன் தோழியின் கண்ணில் இருந்த நீரை துடைத்துகொண்டே.

“அது இல்ல கடந்தகாலத்த என்னால மறக்கமுடியலடி அதான் என்னால யாரும் கஷ்டபடவேணாம்னுதான் இந்த முடிவ எடுத்தேன்” என அழுதாள்.

“ஏய் லூசாடி நீ. நீ செத்துட்டா எல்லாம் சரி ஆகிடுமா. உங்க அப்பாதான் பொண்ணுக்கு பிடிக்காத கல்யானத்த ஏற்பாடு பன்னி பொண்ண கொண்ணுட்டாருனு சொல்லமாட்டாங்க. சரி அதை விடு சந்துருவோட நிலைமையை யோசிச்சு பாத்தியா அவன் உன்னை குலசாமியா நினைச்சுகிட்டு இருக்கான் டி” என மலர் கூறவே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அன்பு.

“என்னடி பாக்குற அவனுக்கு நான் கால் பன்னிருந்தேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா” என மலர் தொடரும்போதே மேஜையில் இருந்த அந்த டைரி சிக்கியது.

“இந்த டைரி எப்புடிடி உன்கிட்ட வந்துச்சு?!” என மலர் கேட்க “அவர்தான் கொடுத்துட்டு போனாரு” என அன்பரசி சந்துருவின் மீது மரியாதையாக இருந்தாள்.

“அடி பைத்தியகாரி இத மொதல்ல திறந்துபாரு.” என கிளம்பினாள் பிரியாவை அங்கேயே விட்டுவிட்டு. பிரியாவையே பார்த்துக்கொண்டிருந்த அன்பரசியை பார்த்து “என்னடி பாக்குற பிரியா உன்கிட்டயே இருக்கட்டும் அப்போதான் நீ இந்த முடிவெல்லாம் எடுக்கமாட்ட. அப்புறம் இன்னொரு விசயம் நான் கொஞ்சம் செல்ஃபிஸ்தான் என் பிரண்டு வாழ்கை நல்லா இருக்கனும்னு நினைக்குறேன் அவ்வளவுதான்” என சென்றாள்.

அன்பயசியோ என்ன செய்வது என்று தெரியாமல் சுவரை வெறித்துகொண்டிருக்க பிரியாவோ தவழ்ந்து வந்து அன்பரசியின் மடியில் ஏறி விளையாடினாள். தன் அம்மா என்று நினைத்திருப்பாள் போலும். சிறுவயதில் பெரியவர்களே குழம்பியபோது சிறுகுழந்தை என்ன செய்யும்.

கவலைகள் அனைத்தும் தீயிலிட்ட சருகாய் மாறிப்போனது அன்பயசியின் மனதில் அந்த தீ பிரியாதான். அவளை மடியில் இருத்திகொண்டு டைரியை திறந்தாள். சந்துருவின் மனதையும் திறந்தாள் என்பதே உண்மை.

முதல் பக்கத்தில் சிறுவயதில் சிறிய இரட்டை ஜடையுடன் ஒரு அரைகை சட்டை ஒரு நீலபாவடை அணிந்த அரிசியின் புகைபடம். அதை பார்த்ததும் இது நான்தானா என்ற குழப்பம் அன்பரசிக்கு. அவளது மூளையில் சில திரவங்கள் தங்கள் வேலைபாட்டை தொடர்ந்திருந்தன.

தன் மென் கரங்களால் அடுத்த பக்கத்தை வருடினாள். அதில், நான் சந்துரு சுருக்கமா சொல்லனும்னா ஓலைபட்டாசு என் பெயர். ஆமா எனக்கும் அது இப்போ பிடிச்சிருக்கு‌.

நான் எதாவது நோட்டுகள் எழுதும்போது முதல் இரண்டு பக்கத்தை விடுவதுண்டு. அது என் தாயை பார்த்துதான் கற்றுகொண்டேன். இது சிறுவயது பழக்கம். அதுவும் நல்லதுக்குதான் இல்லையென்றால் பல வருடத்திற்கு பிறகு இந்த டைரியை முன்னுரை இல்லாமல் எழுதியிருக்கமுடியுமா.

ஆம் இது என் அன்னைக்காக நான் எழுதியிருக்குற டைரி தான்.  எனக்கு மொத்தம் மூன்று அம்மா. உடனே எங்க அப்பா பக்கம் திரும்ப வேணாம். முதல் அம்மா என்னை பெற்றவள் காவேரி. நான் அவங்களை ரொம்ப மிஸ் பன்றேன். மூனாவது என் அத்தை பார்வதி. இரண்டாவது யாருனு தெரியனுமா உள்ளே பாருங்க என முடிந்திருக்கவே உள்ளே திறந்தாள்.

உள்ளே மழலை மொழியில் பதிந்திருந்தது.

எதாவது நடந்துச்சுனா எங்க அம்மா எழுதிவைக்க சொல்லிருக்காங்க இப்போ நான் எழுதுறேன் நீ வந்து படிம்மா என இரண்டு நீர்துளிகளின் தடம் இருந்தது.

நானு அரிசி மலை மூனுபேரும் குளத்துக்கு போனோம்மா அப்போ நான் உள்ள விழுந்துட்டேன். எனக்குத்தான் நீச்ச தெரியாதே நீதான் அடுத்தமாசம் சொல்லிதாரேன்னு சொன்ன அடுத்த மாசம் வந்திருச்சு மீண்டும் இரண்டு துளிகள் இருந்தன.

ஆமா பெரிய ஆலமரம் அரிசிதான் வேகமா ஓடி வந்து குதிச்சா மலையும் பின்னாடியே ஓடி வந்தாளா ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க ஏன்னு தெரியலை. நான் அரிசிதான் வின்னர்னு சொன்னேன். அப்போ மலை என்ன தண்ணீல இழுத்துபோட்டுடா. என்று வாசித்தவுடன் அன்பரசியின் மனதில் ஒழிந்திருந்த அரிசி சிறிது எட்டிபார்த்தாள். இந்த முறை தலையில் வலிகள் இல்லை மாறாக ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி இருந்தது. தன் சிறுவயது புகைப்படங்களை புரட்டிபார்க்கும் குமாரிகள் போல. அந்த நாளும் நினைவுக்கு வந்தது.

“ஏய் மலை ஓலை பட்டாசு எங்கடி” என அரிசி கேட்க “அவ வீட்டுல இட்லி தின்னுகிட்டு இருப்பாடி” என மலை சிரித்தாள்.

“பழைய ஓலைபட்டாசு இல்லடி புது ஓல பட்டாசு!” என விளக்க “தெரியலடி இங்கதான் உட்கார்ந்திருந்தான் வீட்டுக்கு போயிட்டான் போல” என சமாளித்தாள். அப்போது தண்ணீரில் இருந்து குமிழ்கள் வரவே “யேய் அவன் தண்ணீல விழுந்துடான்டி” என சிறுத்தையை விட வேகமாக ஓடினாள் அரிசி அந்த ஆலமர கிளையிலிருந்து தாவினாள்.

காற்றை கிழித்து பறக்கும் இயந்திரபறவைபோல நீரை கிழித்து முன்னேறினாள். என்றும் அவள் இவ்வளவு ஆழத்தை அடைந்ததில்லை. இறுதியாக சந்துருவை தொட்டாள். அவனது முடியை பிடித்துகொண்டு மேல இழுத்தவந்தாள். ஆனால் தண்ணீரிலிருந்து கரைக்கு அவனை தூக்கமுடியவில்லை.

“ஏய் மலை தூக்குடி” என கூறவே அவளும் கால்களை பிடிக்க ஒருவழியாக மேலே ஏற்றினர். “என்னடி ஆச்சு” என பதறினாள் மலை.

“போச்சுடி எங்க அம்மா என்னை கொண்ணுடும்” என அன்பரசி பயந்தாள். “படத்துல காட்டுற மாதிரி வயித்த அமுக்குடி” என மலை கூற இருவரும் முயற்ச்சி செய்து நீரை வெளியேற்றினர். அதிகநேரம் நீரில் இல்லாததால் சற்று மயக்கம் தெளிந்து எழுந்தான் சந்துரு.

“நீ எதுக்குடா தண்ணீல எறங்குன” என அரிசி கோபமடைந்தாள். “வழுக்கிடுச்சு ” என மலையை காப்பாற்றினான். “நீச்சல் தெரியாத உனக்கு?!” என கேட்கவே “எங்க அம்மா சொலலிதாரேன்னு சொன்னாங்க” என சந்துரு அழுதான்.

“அவங்க சொல்லிதரலையா” என கேட்டாள். “அவங்கள கார் அடிச்சிடுச்சு” என மீண்டும் அழுதான். சிறுவயதிலும் அன்பரசிக்கு தாய்மை என்பது இயல்பிலேயே இருந்தது. “சரி நான்வேனா சொல்லி தரவா” என அரிசி கூறினாள்.

சந்துருவின் மனதில் தன் தாயை சிறுகுழந்தையென பார்த்தான். அதே கண்டிப்பு பாசம் கோபம் அன்பு எல்லாம் இவளிடம் இருந்தது. “ம்ம் ” என தலையாட்டினான்.

“சரி சொல்லிதாரேன் ஆனா நீ என் பார்லீஜியை கேட்கக்கூடாது சரியா ” என முதலாளி மகனுக்கே தொழில் கற்று கொடுத்தாள். சந்துரு வை  பொறுத்தவரை தன் அன்னை அருகில் இருந்தாள் மட்டுமே போதும் அவனும் சம்மதித்தான்.

“சரி வா இங்கிட்டு ஆழமா இருக்கும். நாம அந்த படிகட்டுகிட்ட போகலாம்” என மூவரும் இடம்பெயர்ந்தனர். கடைசியாக போஸ் தன் மகளுக்கு நீச்சல் பழகிகொடுக்கும்போது இங்கு வந்தவள் இப்போது இவளே ஆசானாக வருகிறாள்.

“சட்டைய கழட்டுடா” என உத்தரவிட்டாள். அவனும் கழட்டவே இரண்டு தோழிகளும் நீரில் பாய்ந்தனர். உள்ளே இருந்துகொண்டு “தாவுடா ஆழம் எல்லாம் இல்லை” என கூற அவள் வார்த்தையை ஏற்று குதித்தான்.

சற்று ஆழம்தான் ஆனாலும் கழுத்து வரை என்பதால் சமாளித்தான். “இந்தா நாங்க நீந்துரோம் பாரு அதுமாதிரி கையையும் காலையும் ஆட்டு” என ஆட்டிக்கொண்டே நடுகுளத்திற்கு சென்றனர். இவன் அவர்களை பார்த்துகொண்டே நின்றான்.

தண்ணீரில் தனியாக நின்றிருந்த அவன்முகத்தில் தனிமையில் இருப்பதை போல ஒரு வருத்தம் இருக்கவே அதை பார்த்த அன்பரசிக்கு மனதில் ஏதோ தோன்ற மீண்டும் அவனை நோக்கி வந்தாள். அந்த உணர்வு டைரியின் முன் அமர்ந்திருந்த அன்பரசிக்கு அப்படியே ஏற்படவே சந்துருவின் அருகில் செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அப்போது “அம்ம…” என ஒரு குரல் பிரியாவிடம் இருந்து அன்பரசியைநோக்கி வந்தது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: