Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 20

உனக்கென நான் 20

“சந்துரு அண்ணா நீ மட்டும் எப்புடிடா இப்புடி விளையாடுற” என எதிர்ப்புறம் பத்துமுறை தோல்விகண்டும் கஜினி முகமது போல அமர்ந்திருந்தாள் மஞ்சுளா எனும் மஞ்சு சந்துருவின் எதிர்புறத்தில்.

“என்னைவிட நீ நல்லாதான் விளையாடுற என்ன சின்னசின்ன மிஸ்டேக் பன்ற அவ்வளவுதான்.” என சந்துரு கூறிகொண்டிருந்தான்.

“நீங்க யாரு ஸ்டேட் செகன்ட் உங்களை தொடமுடியுமா அண்ணா” என மஞ்சுளா கூற “அடிக்கடி நியாபகபடுத்துமா எனக்கே மறந்துபோயிடுது” என சந்துரு சிரித்தான். இரண்டாவது வருபவர்களை நியாபகம் வைத்துகொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான்போல.

“இந்த வருசம் ஏன் அண்ணா நீங்க கலந்துக்கல?” என கேட்க சிரித்துகொண்டே “அதான் என்னோட தங்கச்சி கலந்துக்க போறாளே அது போதும் எனக்கு. நீ கோப்பைய ஜெயிச்சுட்டு எனக்கு தரமாட்டியா என்ன?!” என சிரித்தான் சந்துரு.

“என்ன அண்ணா இப்புடி சொல்லிட்டீங்க நான் ஜெயிச்சா அந்த கோப்பை கண்டிப்பா உங்களுக்குதான்” என கூறிவிட்டு காய்களை அடுக்கினாள்.

“நான் சும்மாதான்மா கேட்டேன்” என கடிகாரத்தை இயக்கினான். “ஆனா நான் சும்மா சொல்லல அண்ணா” என யானை மிதித்த காலப்ந்து போல இரண்டு கட்டங்கள் தாண்டி நின்றது அந்த சிப்பாய். சந்துருவும் சிரித்துகொண்டே “சென்டர் ஆஃப் போர்ட் உனக்கு தேவைபடுறதே இல்லையா. சரி எப்புடியோ போ அடுத்தவாரம் மதுரையில ஒரு ஓபன் சேம்பியன் லீக் நடக்குது அதுல ஜெயிச்சுட்டுவா” என குதிரையை ஊசியால் குத்த சீறிபாய்ந்தது. பின் கடிகாரத்தின் தலையில் ஒரு கொட்டு வைத்தான். அது மஞ்சுளாவை முறைதத்து பார்த்தது. சிறிதுநேரத்தில் கஜினிபடையெடுத்து வென்றதை போல இருவரும் சமநிலை அடைந்தனர்.

சில நாட்களுக்கு பிறகு.
“ஏய் தங்கச்சி என்ன ஆச்சு ” என சந்துருவின் சத்தம் கேட்கவே ஒரு மரத்தின் பின் ஓடி ஒழிந்தாள். “நான் இல்லைனு சொல்லு” என மரத்தின் அருகில் நின்றிருந்த தன் தோழி சுவேதாவுக்கு சைகை செய்தாள்.

சந்துரு அவளை தேடிக்கொண்டு வரவே சுவேதா அவன் முன்னால் நின்றாள். சற்று திமிர்தான் இருந்தாலும் அவளுக்கு அது நன்றாகவே இருந்தது. “மஞ்சுளா இங்க வந்தாளா?” என சந்துரு கேட்க கையிலிருந்த சிகரெட் நெருப்பு விரலை சுடவே கீழே போட்டாள் சுவேதா. “இல்லையே அவ இங்க வரலையே” என கூறும்போதே சிகரெட்டின் வாசம் வீசியது. “சரி வந்தா நான் போன் பன்ன சொன்னேனு சொல்லுங்க” என கூறிவிட்டு நடந்தான். அவன் சென்றுவிட்டானா என பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.

“ஏன்டி இவனை பார்த்து ஓடி ஒழியுற இவன்லாம் ஒரு ஆளா? என்ன பிரச்சனை”என சுவேதா கேட்டாள். “ஏய் அப்புடியே வாயிலேயை ஒன்னு போட்டேனா தெரியும் மரியாதை இல்லாமல் பேசற” என கோபமடைந்தாள்.

“ஓ உன் லவ்வரா” என சுவேதா மஞ்சுளாவின் தோள்மீது கைபோட்டாள். “அட ச்சீ ஒரு பையனும் பொண்ணும் பழகுனா உடனே லவ்வு இல்லைனா தப்பான விசயம்பன்றாங்கனு அர்த்தமா. அவர் நம்ம சீனியர்டி அண்ணன் மாதிரி” என மஞ்சு வாதாடினாள். “அடி போடி பைத்தியகாரி யூ மேட்; பசங்க பழகுறதே அந்த விசயத்துகாகதான்டி வேலை முடிஞ்சுதும் கழட்டி விட்டுடுவாங்க” என சுவேதா கூற “உன்கிட்ட பேசமுடியாதுடி. ஆமா சிகரெட் புடிச்சியா” என ஆத்திரமானாள் மஞ்சு. “ஆமாடி சிகரெட் புடிச்சேன் ஃபாரின் பிராண்ட் வேனுமா” என கேட்டாள்.

“ஏன்டி இப்புடி பன்ற எத்தனை தடவை சொன்னாலும் நீ கேக்கமாட்ட என்னமோ போ” என சுவேதாவின் கையை தட்டிவிட்டாள்‌. “ஏய் டியர் எனக்கு புடிச்சிருக்கு நான் பன்றேன் புடிச்சத பன்றது தப்பா?” என சுவேதா தன் பக்க நியாயத்தை விளக்கினாள்.

“ஆனா எனக்கு பிடிக்கலடி நீ இப்புடி நடந்துகிறது நீ எப்ப விடுறியோ அப்போ என்கிட்ட வந்து பேசு” கோபமாக மஞ்சு கிளம்ப அடுத்த சிகரெட்டை எடுத்து லைட்டரை ஆன்செய்தாள்.

மஞ்சுவோ கோபத்தில் வேகமாக நடக்க அங்கு நின்றிருந்த சந்துருவை கவனிக்கவில்லை. “ஏய் கத்தரிக்கா மாட்டுனியா எதுக்கு இப்ப ஓடி ஒளியுற?” என சந்துரு முன்னால் வந்து நின்றான். அவனை பார்த்து நாக்கை கடித்தாள்.

“ஏய் இத நான் பல படத்துல பாத்துட்டேன் என்ன ஆச்சுன்னு சொல்லு” என சந்துரு முற்றுலும் அடைத்தான்.

“அத ஏன் அண்ணா கேக்குற செஸ் காம்படீசன் போனேன்ல” என இழுத்தாள். “ஆமா அதுக்கு என்ன பிளைட் டிக்கெட் கூட நான்தானே ஸ்பான்சர் பன்னேன்” என சந்துரு கூறினான்.

“அங்க நிறையபேர் வந்திருந்தாங்க நானும் கடைசிவரை ஜெயிச்சுகிட்டுதான் வந்தேன்”

“அப்புறம் என்ன ஆச்சு” என ஆர்வமாக கேட்டான்.

“கடைசியா ஒருத்தி வந்தா அப்புடியே உன்னை மாதிரியே விளையாடுனா என்னால சமாளிக்கவே முடியலை. நீயா இருந்தா கன்டிப்பா ஜெயிச்சிருப்ப” என உதட்டை பிதுக்கினாள். “அப்புறம் என்ன ஆச்சு” என மீண்டும் கேட்டான்.

“அப்புறம் என்ன நானும் ஆல்டரின் கட்சில சேந்துட்டேன்” என சிரித்தாள். “அது யாரு ஆல்டரின்?!” என சந்துரு குழம்ப “அதான் ஆம்ஸ்ட்ராங்ககூட போனாரே அவருதான்” என சிரித்தாள். “அடிப்பாவி செகண்ட் வந்தத இப்புடி சொல்றியா ” என தலையில் செல்லமாக கொட்டினான்.

“ஆனா ஒன்னு அந்த பொண்ணு உன்கூட விளையாடுறத நான் பாக்கனும் நீ அவளை ஜெயிக்கனும் அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்” என சிரித்தாள்‌. “உனக்கு ஆத்மாலாம் இருக்கா ” என சிரித்துகொண்டே “ஈவ்னிங் பிராக்டீஸ் வந்துடு” என கிளம்பினான் சந்துரு.

“என்னடி ஈவ்னிங் பிராக்டீசா ” என அவளருகில் வந்து நின்றாள் சுவேதா ஒரு உருளையை முழுவதும் கொழுத்திவிட்டு‌.

அந்த சதுரங்க ராணியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் மஞ்சு உறைந்து நிற்க சுவேதாவோ “அழாக இருக்கீங்க சந்துருவ நல்லா பாத்துகோங்க” என குரல் ததும்ப கூறிகொண்டிருந்தாள் சுவேதா. கூடவே தன்னுடன் கொண்டு வந்திருந்த தங்கமோதிரமும் அன்பரசியின் கைக்கு மாறியது.

“ஐயோ இது வேணாம்” என அன்பரசி கூறவே “நீங்க சும்மா இருங்க இது உங்களுக்காக இல்லை சந்துருவுக்காக அப்புறம் அவன் ரொம்ப நல்லவன் ப்ளீஸ் எனக்காக நல்லா பாத்துக்கோங்க அவன் குழந்தைய மடியில் வச்சு கொஞ்சனும்னு ஆசைதான் ஆனா அதுவரைக்கும் நான் இருப்பேனானு தெரியலை” என அழுதிருந்தாள்.

“ஏய் சுவேதா ஏண்டி ” என மஞ்சு சமாதானம் செய்தாள். அந்த நேரம் சுகுவும் பாலாஜியும் சந்துருவை தள்ளிக்கொண்டு இல்லை தூக்கிகொண்டு அன்பரசியின் முன் வந்து நின்றனர்.

“இங்க பாருமா தங்கச்சி இவன் இத்தனை நாளா எங்களை வச்சு பாடாய் படுத்துனான் இப்போ நீ வந்துட்ட நீதான் எங்களை காப்பாத்தனும்” என பாலாஜி நக்கலடித்தான்.

“ஆமா சார் நல்லவர் மாதிரியே பில்ட்அப் பன்னுவாரு ஆனா ரொம்ப ரொம்ப நல்லவன் நான் சொல்லுறது புரிஞ்சுதா”என சுகு கூற அன்பரசியோ சிரிக்க வேண்டும் என லேசாக புன்னகை செய்தாள்.

தோழர்கள் தன் வருங்கால மனைவியிடம் தன் திருபாவையை பாட சந்துரு செய்வதறியாது நின்றான். அதற்குள் சுற்றத்தையும் நட்பையும் வழியனுப்பி விட்டு உள்ளேவந்த பார்வதி “வாங்கப்பா வாங்கமா என்ன சாப்புடுறீங்க” என கேட்டார்.

பாலாஜி சுகுமாரை காட்டி “இவன் எதுபோட்டாலும் சாப்புடுவான்மா” என கூற சுகுவும் “ஆமாமா இவனும் என் இனம்தான் அதனால நாங்க மூனுபேரும் எதுபோட்டாலும் சாப்புடுவோம்” என மற்ற இருவரையும் தன் கட்சியில் நேர்த்தியாக சேர்த்தான்‌.

“அட ஏன்பா அப்படி சொல்றீங்க ” என பார்வதி கேட்க அந்த நொடி சுவேதா மஞ்சுவின் தோளில் சாய்ந்துகொண்டு “போகலாம்டி என்னால முடியல” என அழுதாள். எனவே “இல்லை ஆண்டி நாங்க சாப்பிட்டுதான் வந்தோம் கல்யாணத்துல சாப்பிட்டுகிறோம்” என மஞ்சு கூறினாள். கூடவே பாலாஜியை பார்த்து சைகை செய்தாள். அவன் சுவேதாவை பார்க்க அவள் அழும் நிலையில் இருந்தாள். “ஆமா ஆண்டி நிறைய ஒர்க் இருக்கு நாங்க ஒரே அடியா கல்யாணத்துல சாப்பிட்டுகிறோம்” என நால்வரும் வெளியே சென்று சன்மமுகத்திடம் விடுப்பு வாங்கி காரில் பறந்தனர்.
பார்வதிக்கோ போஸிடம் “வந்தவங்களுக்கு ஒரு டீ போடகூட நேரம் இல்லையா” என திட்டு கிடைத்தது.

அடுத்த சிறிது நேரத்தில் சன்முகம் காரில் அமர சந்ததுருவோ அன்பரசியின் அருகில் வந்தான். “நான் உனக்கு போன் பன்றேன் கொஞ்சம் பேசணும் நீ சொல்லுற பதில்லதான் என்னோட அடுத்த முடிவு இருக்கு” என அன்பரசியின் கையில் அந்த டைரியை கொடுத்துவிட்டு பறந்தான் இறக்கை இல்லாத குதிரையில்.

அன்பரசியோ உடைகளை மாற்றிக்கொண்டு தன் அறையில் சென்று அமர்ந்தாள் அந்த கனனி முன். அருகில் இருந்த மொபைலை பார்த்தாள். அது சந்துருவை நினைவுபடுத்தியது. தன் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையே என்ற கவலையுடன் அன்பரசி அமர்ந்திருக்க மனதோ ஒரு முடிவை எடுக்க வலியுறுத்தியது. காலத்தால் எல்லாம் மாறவேண்டும் அல்லவா அதுதானே இயற்கையின் நியதி.

‘மனதில் ஒன்றை வைத்துகொண்டு வெளியே வேறு ஒரு வாழ்க்கை வாழ முடியாது. ஆனாலும் சந்துரு ரொம்ப நல்லவன் அவனது வாழ்க்கையையும் என்னால் கெட்டுபோககூடாது. எவ்வளவு கனவோட இருப்பான். எல்லாம் நீ இருக்குறதாலதான அனபு நடக்குது. பேசாம செத்துட்டா எல்லாம் சரி ஆகிடும். கொஞ்ச நாள்ல மறந்துடுவாங்க’ என ஒரு முடிவு செய்தவளாய் ஒரு கத்தியை எடுத்து மணிகட்டின் அருகில் கொண்டு சென்றாள்.

-தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: