Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19

உனக்கென நான் 19

சந்துருவுடன் அந்த மனிதனின் இனைப்பு துண்டிக்கபட்டதும் சந்துருவின் மூளையோ தன் மனதில் உள்ள அனைவரையும் வரிசைப்படுத்தி பார்த்தது. ‘நமக்கு சொல்லிகிற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே ஒரு நிமிடம் இரு ஒருத்தன் இருக்கானே பூபதி ஆமா அவனாதான் இருக்க முடியும் அவனோட லவ்வ பிரிச்சதால இப்போ என்னை டார்கெட் பன்றானா. என்னை எதுவேனாலும் பன்னட்டும் ஆனா அன்பரசிக்கு எதாவது பிரட்சனை கொடுத்தா’ என நினைத்துகொண்டு தனது கைபேசியை இருக்கமாக மூடினான். அதற்குள் காரிலிருந்து சந்துருவின் பிஸினஸ் நண்பர்கள் இறங்கிவரவே அவர்களை வரவேற்றான்.

அத்தனை கார்களையும் நிறுத்த அன்பரசியின் இல்லமுற்றம் இடமளிக்கவில்லை. அதனால் அந்த தெருவை கடன் வாங்கி கொள்ள அதை பார்த்தவன் “ஏன் கோபி அண்ணா இப்புடி” என தன் அருகில் நின்ற ஆடிட்டர் கோபியை பார்த்தான்.

கோபி சிரித்துகொண்டே “சந்துரு கல்யானமாவது மண்டபத்துல வைடா இல்லைனா கார் நிறுத்த இந்த ஊரை பத்தாது” என சந்துருவின் முதுகில் தட்டிகொடுத்துவிட்டு சன்முகத்திடம் சென்றார்.

போஸும் இதற்கு சிறிதும் சளைக்கவில்லை. சிறிது நேரத்தில் பந்தல் இருக்கைகள் என வந்து சேர்ந்தன. விரிப்புகள் விரிக்கபட்டன. அன்பரசிக்கோ உள்ளே அலங்காரம் நடைபெற்றுகொண்டிருந்தது. சந்துரு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே வீடே விழாகோலம் பூண்டிருந்தது.

“சரிப்பா தட்டு பழம் எல்லாம் எடுத்து வந்து வைங்கப்பா” என அந்த ஊரின் தலைவர் கூறவே அன்பரசியின் தாய் இல்லை இல்லை சந்துருவின் அத்தை சிரித்த முகத்துடன் வந்து சில தட்டுகளை வைத்தார். “மாப்பிள்ளை வீட்டு சைடு எங்கப்பா?” என கேட்க அதையும் பார்வதியே எடுத்துவந்து வைத்தார். “என்னமா நீயே வைக்குற” என கேட்டனர். “காவேரி போனதுக்கு அப்புறம் நான்தான அவனுக்கு அம்மா” என பார்வதி கூறவே சந்துருவின் கண்களில் நீர் வர நினைத்தது ஆனால் மறைத்தான். கூடவே கோபி கொண்டுவந்த விலையுயர்ந்த வெள்ளி தட்டுகளும் பட்டுபுடவையும் என அனைத்தும் காரில் முடக்கபட்டன. “வேணாம் கோபி அன்னா எங்க அம்மா வச்சுட்டாங்க அதுவே போதும்” என குரல் ததும்ப கூறினான்.

உள்ளே “ஏன்டி இன்னைக்காவது கொஞ்சம் சிரிடி” என ஓர் செல்லகுரல் அது மலைதான் இல்லை மலர்தான்.

அன்பரசியின் முகத்தில் சிறிதும் புன்னகை இல்லை‌. “என்னடி ஆச்சு?!” என பதட்டத்துடன் கேட்டாள். அன்பரசியோ தன் தோழியின் வயிற்றில் முகம் பதித்து அழுதாள். “ஏய் லூசு ஏன்டி அழற” என கேட்டுவிட்டு அங்கிருந்த பெண்களை “நீங்க வெளியே வெயிட் பன்னுங்க நான் ரெடி பன்னி கூட்டிட்டு வாரேன்” என தனிமையை உருவாக்கினாள். தனிமைதான் பல புதிர்களுக்கு விடை அல்லவா!

“இன்னைக்காவது வாய தொறந்து சொல்லுடி என்ன உன் பிரச்சனை” என அன்பரசி யின் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டாள். விசும்பிகொண்டிருந்தவள் “என்னால அவனை மறக்க முடியலடி ஆனா சந்துரு ரொம்ப நல்லவன் என்னை அவங்க அம்மா மாதிரி நினைக்குறான் நான் அவனுக்கு என்ன பன்னேன்னு தெரியலை. அதான் உள்ள ஒன்னு வச்சுகிட்டு சந்துரு கூட நான் எப்புடி வாழுவேன் கன்டிப்பா என்னால முடியாதுடி” என தோழியிடம் மனம் திறந்தாள்.

“அடி பைத்தியகாரி உலகத்துல யாருமே பன்னாததையா நீ பன்ன போற அதுவும் இல்லாம சந்துரு மாதிரி ஒருத்தர் உனக்கு கிடைக்கவே மாட்டாரு” என மலர் பேசிக்கொண்டே கண்ணீர் வடிந்த தடயத்தில் வெண்மையை பூசிகொண்டிருந்தாள்.

“அது இல்லடி ” என அன்பு ஆரம்பிக்க இதற்குமேல் விட்டாள் இவள் சரியாக வரமாட்டாள் கடிவாளம் போடவேண்டும் என எண்ணிய மலர். “ஒழுங்க சந்துருவோட தாலிய ஏத்துகோ அப்புறம் எதுனாலும் பேசிக்கலாம் சும்மா பொளம்பிகிட்டு இருந்த கன்னம் பழுத்துடும் பாத்துக்கோ”என அன்பரசியை மிரட்டினாள்.

அதற்குள் “பொண்ண வர சொல்லுங்க” என்ற குரல் வரவே சில பெண்களும் சிறுமிகளும் வந்து அன்பரசியை அழைத்துசென்றனர். இரண்டடி கண்ணாடி முன் நின்றிருந்த மலரின் முகத்தில் கண்ணீர் துளிகள் தவழ்ந்தன‌. ‘அன்பு என்னை மன்னிச்சுடுடி இதுவரைக்கும் நான் உன் வார்த்தைய மீறுனது இல்ல உன் வாழ்கை நல்லா இருக்கனும் அதான் டி அப்படி பேசிட்டேன்.என்னை மன்னிச்சிடு’ என மனதில் நினைத்தாள். பின் கண்ணீரை துடைத்துகொண்டே “சந்துருதான்டி உனக்கு புருசன் இதுல எந்த மாற்றமும் வரவிடமாட்டேன்” என கிளம்பினாள் மலர். தன் தோழியின் வாழ்கையை பற்றி மலருக்கு நிறையவே அக்கறை இருந்தது.

அன்பரசி வெளியே வந்து தலைகுனிந்து நின்றாள். அவளை பார்ததும் அனைவரும் வாயில் கைவைக்கும் அளவிற்கு அமர்ந்திருந்தனர். “டேய் சந்துரு புடிச்சாலும் புளியங்கொம்பா பிடிச்சுருக்கடா!” என கோபி கிண்டல் செய்தார். அதற்கு அடுத்து தட்டுகள் மாற்றபடவே தேதி குறிக்கப்பட்டது. அதை வாசித்ததும் அன்பரசிக்கு இதயத்தில் ஒரு வலி ஆம் இன்னும் ஒருவாரத்தில் கல்யானம்‌. சன்முகத்திறுகும் அதிர்ச்சி அளிக்கவே தன் நண்பனை பார்த்தார்.

“ஏன்டா இவ்வளவு சீக்கிரமா?” என கேட்டார். “டேய் நான் எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்டா” என போஸ் சன்முகத்தின் வாயை அடைந்தார்.

சிறிதுநேரத்தில் சம்பிரதாயங்கள் முடிய அனைவரும் கலைந்து சென்றனர். “சரிடா நாங்களும் கிளம்புறோம்”என சன்முகம் கூற “சரிடா போய்ட்டு ஃபோன் பன்னு” என போஸ் கூறவும் சந்துரு ஆச்சரியத்துடன் பார்த்தான். “என்னப்பா அப்புடி பாக்குற” என பார்வதி சந்துருவிடம் கேட்டார்.

“இல்ல அத்த ரெண்டு அன்றைக்கு வெளியே தங்குறோம்னு சொன்னதுக்கு திட்டுனாங்களே இன்னைக்கு கிளம்புறேன்னு சொன்னதுக்கு சரின்னு சொல்லிட்டாரு” என கேட்டான்.

“ஆமா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நிச்சயத்துக்கு அப்புறம் பொண்ணு வீட்ல தங்க மாட்டாங்க இந்த ஊர் வழக்கம் அது” என பார்வதி கூறவே சந்துரவின் திட்டம் அனைத்தும் தவிடுபொடி ஆனது. சந்துருவுக்கு ஒரு ஆசை இருந்தது. (அது என்னனு அப்புறம் சொல்லுறேன்.)

சந்துரு காரின் அருகே செல்ல ரோட்டை பிளந்துகொண்டு ஓர் கார் அன்பரசியின் இல்லத்தை நோக்கி வந்தது. அதிலிரூந்து ஒரு பெண் இறங்கினாள். டீசர்ட் ஜீன்ஸ் என நவீன கிராமத்துபெண்போல இருந்தாள். இடுப்பிற்கு சற்றுமேல்வரை முடி இருந்தாலும் லூஸ் கேரில் வந்திருந்தாள். கூடவே இரண்டு ஆண்களும் மற்றோரு பெண் சேலையில் மங்கலகரமாகவும் இறங்கினார்கள். சந்துரு அவர்களை பார்த்துகொண்டிருந்தநேரம் இரண்டு ஆண்களும் சந்துருவின் அருகில் ஓடி வந்து பலமாக தாக்கினர்.

“ஏன்டா நாங்கலாம் உனக்கு நியாபகமே இல்லையா நிச்சயத்துக்கு ஒரு ஃபோன் கூட பன்ன மாட்டியா” என வயிற்றில் ஒருவன் குத்தினான்.

“டேய் மச்சி எனக்கே தெரியாதுடா திடீர்னு நடந்துருச்சுடா” என தப்பித்தான் சந்துரு.

“எனடா திடீர்னு நடந்துச்சு தாவுச்சுனு கதை விடுறியா” என மற்றொருவன் கழுத்தில் கையால் சுற்றினான்.

“யேய் சுகு நிஜமாதான்டா சொல்றேன் தெரிஞ்சிருந்தா அன்னைக்கே சொல்லிருக்கமாட்டேனா” என கத்தினான்‌. அந்தநேரம் சன்முகமும் போஸும் வெளியே வரவே சந்துரு விடுவிக்கபட்டான். “டேய் உன் மாமா முன்னாடி உன்னை அடிக்ககூடாதுனுதான் அமைதியா இருக்கேன் ” என பாலாஜி சந்துருவின் காதில் கிசுகிசுத்தான்.

அந்த இரண்டு பெண்களும் அருகில் வர அதில் ஜீன்ஸ் தேவதை சந்துருவை முறைத்து கொண்டே சன்முகத்தின் அருகில் சென்றாள். பின்னாடி வந்த புடவை பெண்ணை பார்த்து “வா மஞ்சு ஆளே மாறிட்டியே” என வரவேற்றான்.

“இப்புடி ஐஸ் வச்சு ட்ரீட் குடுக்காம தப்பிகலாம்னு பாக்காத. இரு நான் அண்ணியை பாத்துட்டு வந்துடுறேன் ” என கிளம்பினாள். “அண்ணியா?” என சந்துரு கூறவே “உன் ஒயிப்பைதான் சொல்லுறா” என பாலாஜி சந்துருவிடம் கூறியபடி முதுகில் வலிக்காமல் ஒரு அடி அடித்தான்.

அங்கே சன்முகம் “வாம்மா சுவேதா எப்புடி இருக்கீங்க ஓ மஞ்சு நீயும் வந்துருக்கியா! தீடீர்னு ஏற்பாடு ஆகிடுச்சு அதான் சொல்லமுடியல” என மன்னிப்பு கோரிகொண்டிருந்ததார்.

“இருக்கட்டும்பா அன்னிய பாக்கலாமா?!” என மஞ்சு கேளியாக கூற “அன்பு அன்பு ” என சத்தமிட்டார் போஸ். “இருக்கட்டும் அன்கில் நாங்க உள்ளே போய் பாத்துகிறோம்.”என இரண்டு பெண்களும் உள்ளே நுழைந்தனர். அங்கு தந்தை அழைத்த அவசரத்தில் எழுந்து வந்து கொண்டிருந்தாள் காதில் அரைகுறையாக கழற்றிய தோடுடன்.

“ஐயோ அன்பு இருங்க நாங்கதான் கூப்பிட்டோம் ” என சுவேதா தடுத்தாள். அன்பரசியை பார்த்த மஞ்சு அப்படயே நின்றாள். “நீங்கதான் சந்துருவுக்கு நிச்சயம் பன்ன பொண்னா?!”

“ம்ம்” என அன்பிடம் இருந்து குரல் வரவே மஞ்சுவின் மனதில் ‘கிழிஞ்சதுபோ’ என வாக்கியம் வந்துசென்றது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: