Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18

உனக்கென நான் 18

அதிகாலை சேவலையும் வம்புக்கு இழுக்கும் அன்பரசியோ அமைதியாக உறங்கிகொண்டிருக்க ஆதவனோ தன் கடமையென அவளை ரசிக்க வந்துவிட்டான். எல்லாம் அந்த மாத்திரைகளின் வீரியத்தின் விளைவுதான். இன்று அவளை தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாலையிலேயே எழுந்தவன் தன் அத்தையுடன் கோலமிடுதல் என வீட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டான். “அன்பரசிக்கு கோலம்போடுற வேலை மிச்சம் மாப்ள” என்ற பாராட்டுவேறு கிடைத்தது. அதற்குமேல் சமையலறையிலும் கைவரிசையை காட்டிகொண்டிருந்தான். திடீரென அவனது முகத்தில் சோகம் ஏற்பட்டது எல்லாம் அந்த கைபேசியின் திரையை பார்த்தால்தான். அதில் இருந்த தவறிய அழைப்புகள் சுவேதாவிடம் இருந்து வந்திருந்தன‌.

“இவ தூங்கவே மாட்டாளா? எந்த இளிச்சவாயனாவது கிடைச்சா நைட்புல்லா கடலை போடுறதே வேலையா போச்சு சே. அன்பரசி எவ்வளவு அடக்கமா இருக்கா அன்பு எங்க சுவேதா எங்க”என தனக்குள் எடைபோட்டு கொண்டு மௌனமாக நின்றான்.

“என்ன சந்துரு யோசனை” என பார்வதி கேட்கவே “ஒன்னும் இல்ல அத்த அன்பரசி முன்மாதிரி இல்லையே அதான் எனக்கு வருத்தமா இருக்கு ” என அமைதியாக சென்று வெளியே சென்று அமர்ந்தான்.

சந்துருவுக்கு சிறுவயதில் இருந்த ஒரே நெருக்கமான தோழன் தனிமை மட்டுமே. அதனால்தான் என்னவோ தனிமையும் அவனும் பேசிகொள்ளாத விசயங்கள் இல்லை. ஆனால் இன்றும் நினைவில் நீங்காமல் சந்துரு என்றுமே உச்சரிக்கும் ஒரே வாக்கியம் அன்பரசி(அரிசி) என்பது மட்டுமே. ஒலிம்பிக் வீரர்களின் வெற்றிபடியில் ஏற்றவேண்டும் என்றால் சந்துருவின் மனதில் முதலில் தன் தாயையும் இரண்டாவது அன்பரசியையும் மூன்றாவது பார்வதியையும் ஏற்றிவிட்டு வான். தன் தந்தைக்கு ஆறுதல் பரிசு மட்டும்தான். முதலிடத்தை பிடிக்க அன்பரசிக்கு வெகுதூரம் இருக்கபோவதில்லை என்பதை புவியின் சுழற்ச்சி உறுதியாக கூறிவிட்டும்.

“அப்படி என்னதான் டா பான்னா அவ உன்னை” என தனிமை இவனிடம் சளைக்காமல் மீண்டும் கேட்கவே அந்த தேய்ந்த கதையை ஓட்டினான்.

அன்று

“ஏய் அரிசி வெளியே வாடி இன்னைக்கு கோனார் தோட்டத்துல மாங்காய் காய்ச்சுருக்குடி” என வெளியில் நின்று கத்திகொண்டிருந்தாள் மலை ஒரு குட்டை பாவாடை அணிந்து மேல் சட்டையுடன். அன்பரசி (மன்னிக்கவும்) அரிசியையும் மலையையும் புதிதாக பார்க்கும் நபர்கள் சகோதரிகள் என்று குழம்புவது வழக்கம்.

“அடி களவானிகளா இருங்கடி அப்பா வரட்டும் உங்க தோளை உறிக்க சொல்லுறேன்” என பார்வதி அரிசியின் கையிலிருந்த பூஸ்ட் பாட்டிலை பிடுங்கினார். திருட்டு மாங்காய் ருசியானது தான் ஆனால் அந்த விசயம் தன் பெரியம்மாவுக்கு தெரிந்தாள் கசப்பு தான். அதிலும் போஸ் பெரியப்பாவிற்கு தெரிந்ததால் முதுகு பழுத்துவிடும் என மலைக்கு தெரியும். அதனால் “இல்ல பெரியம்மா நாங்க கோனார் தோட்டத்துல பக்கத்துல விளையாடபோறோம்” என பார்வதியை குழப்பினாள்.

“ஏய் நான் கோனார் கிட்ட கேட்பேன். எதாவது புகார் வந்துச்சு தொலைச்சுபுடுவேன்” என வெளியே வந்து பார்த்தார் பார்வதி.

அவரை பார்த்து பயந்த மலை “இல்ல பெரியம்மா நாங்க விளையாடதான் போறோம். ஆமா இன்னைக்கு பூஸ்டா உங்க வீட்டுல நல்லா மனக்குது. ஆமா எப்புடி பெரியம்மா நீங்க மட்டும் நல்லா சமைக்குறீங்க எங்க ஆத்தாவுக்கு அந்த இட்லியவிட்டா எதுவுமே தெரியலை” என பார்வதியின் தலையில் பெரிய இமயமலையை தூக்கி வைத்தாள்.

அதில் உருகி போன பார்வதி “சரிடி வா காஃபி குடிச்சுட்டு போங்க” என மலையை உள்ளே அழைக்க அங்கு அவளை பார்த்ததும் அமர்ந்திருந்த சந்துரு எழுந்து நின்றான். அவனது மனதில் பயம் இன்னும் விட்டு அகலவில்லை. “அந்த கோப்பைல இருக்குடி ஊத்தி குடி ” என பார்வதி வெளியே சென்றார்.

கோப்பையில் இருந்த காஃபியை ஊற்றி கொண்டே “யாருடி இது ” என தன் தோழியிடம் விசாரித்துகொண்டிருந்தாள். “எனக்கு என்னடி தெரியும் அவன்கிட்டயே கேளு” என அன்பரசி ஒரு டம்ளரை எடுத்து வைக்க மலையின் காஃபி பகிரபட்டது.

“டேய் உன் பேரு என்னடா” கண்களில் தீவிரவாதியை விசாரிப்பது போன்ற தோரணையில் கேட்டாள் மலை. “சந்துரு” என மெதுவாக கூறினான்.

“டேய் சத்தமா பேசுடா” என தன் தோழியுடன் ரேகிங்கில் இனைந்தாள் அரிசி‌. பயந்துபோனவன் “சந்துரு ” என்று சற்று அழுத்தமாக கூறவே “என்னடா சந்து பொந்துனு பேர் வச்சுருக்க” என இரண்டு தோழிகளும் சிரிக்கவே சந்துருவுக்கு தன் தாய் மடியில் சாய்ந்து அழதோன்றியது.

“ஏய் இவனுக்கு ஒரு பேர் வைடி” என மலை கூறவே பட்டப்பெயர் புலவர் அரிசி தன் கன்னத்தில் வைத்துகொண்டு யோசிப்பதுபோல பாசாங்கு காட்டினாள். விண்வெளி ஓடத்தின் கட்டமைப்புக்கு கூட இவ்வளவு யோசித்திருக்கமாட்டார்கள்.

“ஆளு பாக்க ஒல்லியா இருக்கான். உயரமும் கம்மியா இருக்கான்.ம்ம்ம். பேசாம ஓலைபட்டாசுனு கூப்பிடலாம்” என இருவரும் சிரிக்கவே சந்துரு அவர்களை கண்கள் கலங்க பார்த்துகொண்டிருந்தான்.

“ஏய் ஏற்கனவே அந்த பேர் வச்சாச்சுடி வேற எதாவது சொல்லு” என மலை நினைவுபடுத்தினாள். “அப்போ குக்கர்னு கூப்பிடலாம் ” என மீண்டும் சிரித்தனர். இப்போது சந்துரு அழுதேவிட்டான். “ஏய் இவன் அழறான்டி இவனுக்கு பேர் எல்லாம் வேணாம் சீ லூசுபையன்” என இருவரும் பலிப்புகாட்டினர். அந்த நொடி பார்வதி உள்ளே வரவே அம்மா என கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். அவனது மனதை உணரமுடிந்த பார்வதி தனிமையால்தான் இப்படி இருக்கிறான் சிறுவர்களுடன் விளையாடினாள் சரியாகிவிடுவான் என நினைத்துகொண்டு ” ஏய் மலர் நில்லுடி சந்துருவையும் கூட்டிட்டுபோங்கடி தனியா இருந்தா அழுவான்” என கூறவே “சரி வாடா” என அன்பரசி அவனது கைகளை பிடித்து இழுத்துகொண்டு சென்றாள். அதில் இன்னைக்கு நீ செத்தடா என் பார்லீஜியையா பங்குகேக்கற என்ற தொணி இருந்தது.

முதலில் மூவரும் சந்தித்த இடம் கோணாரின் மாங்காய் தோப்பு. “டேய் ஓலைபட்டாசு அந்த மரத்துல ஏறி நான் சொல்லுற மாங்காய பிடுங்கி போடுடா” என சந்துருவுக்கு உத்தரவிட அதில் கோணார் வந்தால் சந்துருவை மாட்டிவிட்டு ஓடிவிடலாம் என்ற திட்டம் பலமாக இருந்தது.

“எனக்கு மரம் ஏற தெரியாது” என சந்துரு கூற அன்பரசி சிரித்து விட்டாள். “டேய் பெரியவங்க கிட்ட மரியாதையா பேச உங்க அம்மா சொல்லிதரலையா” என சந்துருவின் தலையில் கொட்டு வைத்துவிட்டு “அக்கானு கூப்பிடுடா” என மிரட்டினாள். அதற்குள் புகுந்து கொண்ட அன்பரசி “ஏய் நீ எத்தனாப்புடா படிக்குற” என கேட்டாள்.

“நான் தேர்ட் கிளாஸ் ” என கூற “அப்புடினா?” என மலை குறுக்கிட்டாள். “தேர்ட்னா மூனாப்புடி” என மலையும் அரிசியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அதன் பொருள் இந்ததோழிகள் சந்துருவைவிட ஒருவயது சிறியவர்கள் என்பதால்தான். ஆனாலும் சந்துருவை அண்ணா என்று கூப்பிட அவர்களுக்கு விருப்பம் இல்லை‌. அதனால் “சரிடா சந்துரு நீ என்னை மலைன்னு கூப்பிடு இவளை அரிசின்னு கூப்பிடு” என ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அதற்குள்ளாக அரிசி மரத்தின் மேல் ஏறியிருந்தாள். அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சந்தருவோ தன் கவலைகளை சிறிது மறந்திருந்தான். “ஏய் அந்த மாங்காய் வேணாம்டி ரொம்ப புளிக்கும் அங்கிட்டு இருக்குபாரு அதை பிடுங்கு” என உத்தரவிட்டாள் மலை.

“ஏய் கத்தாதடி கோணார் வந்துரபோறாரு” என வசைபாடினாள் அரிசி. “அதை நான் பாத்துகிறேன்டி நீ நல்ல மாங்காயா பாத்து புடுங்கு” என ஆறுதல் கூறினாள்.அதற்குள்ளாக மோட்டார் ரூமில் இருந்து ஒரு ஓசை.

“ஏய் யாருடா அங்க மாங்கா மரத்துகிட்ட” என கோணாரின் குரல் கேட்டது‌. அழுக்கு பனியனுடன் அழுக்கு வேட்டியுடன் கையிலிருந்த மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு கையில் ஒரு பெரிய வேப்பங்குச்சியுடன் வந்தார். “அரிசி கோணார் வந்துட்டாருடி ஓடிரு” என மரத்தில் இருந்தவளுக்கு ஓட்டபயிற்ச்சி நடத்தினாள். அரிசியோ பதறிகொண்டு நிற்க மலை குப்பையாக கொட்டபட்டிருந்த தேங்காய் குவியல்களை பயன்படுத்தி கம்பிவேலியை தாண்டினாள்.

அரிசியோ மரத்தில் இருந்து இறங்கும் அவசரத்தில் கிழே பொத்தென்று விழுந்தாள். அன்பரசி வரட்டும் என சந்துரு அங்கேயே நின்றிருந்தான். கீழே விழுந்தவளுக்கு காலில் சுளுக்கிகொண்டது. “அய்யோ அம்மா டேய் தூக்கி விடுடா” என சந்துருவை கேட்டாள். அவன் தூக்கிவிட கோணார் அங்கு வந்து சேர்ந்தார்.

“மாங்காயா களவாடுறீங்க ” என அரிசியை பிடித்தநேரம் சந்துருவை பார்த்தார். உடனே அரிசியை விட்டுவிட்டு சந்துருவின் முன் அமர்ந்தார். “உன் பெயர் என்னப்பா?” என கேட்க “சந்துரு” என்றான்.

“அப்பா பேர் ?” கேள்விக்கு “சன்முகம்” என கூறினான். “மில் வச்சுருக்காங்களே அவங்கதான?” என கேட்க “ஆமா” என உறுதிசெய்தான்.

சந்தருவின் தாய் இறந்தது கோணாருக்கு தெரியும் அதுவும் இல்லாமல் இந்த மரத்திற்கும் கேணாருக்கும் காவேரிக்கும் இருந்த தொடர்பும் கோணார் மனதில் நீங்காத ஒன்று. சிறுவயதில் பார்த்த காவேரி நினைவுக்கு வரவே சந்துருவும் அதேமாதிரி இருந்ததால் அவனை அப்படியே தூக்கிகொண்டார். அரிசியோ பதட்டத்துடன் நின்றாள். பின் மோட்டார் ரூம்க்கு இருவரையும் அழைத்து சென்று தேன் என தித்திக்கும் மாங்காய்களை கொடுத்தார்.

“தாத்தா வேணாம்” என மறுத்தான் சந்துரு. “அட பொடி பயலே இந்த மரம் உங்க அம்மாவோடதுதான் அம்மா குடுத்தா வாங்கிக்க மாட்டியா?” என கோணார் கூறியதும் அதை வாங்கிகொண்டான். பின் விடைபெற்று வெளியே இவர்கள் செல்ல கோணார் கண்ணீருடன் அவர்களை பார்த்துகொண்டு நின்றார்.

வெளியே “என்னடி கோணாரு தோளை உறிச்சுட்டடாரா?” என மலை கேட்க “அடி போடி லூசு சந்துருவும் கோணாரும் பிரண்டுபோல இந்தா மாங்காய் கொடுத்தார் பாரு” என ஒரு மாங்காயை மலையின் கையில் தினித்தாள்.

“ஏய் என்னடி சொல்லுற” என மலை வியப்பாய் கேட்க “ஆமாடி இனிமே சந்தருவும் என்னோட பிரண்டுதான்” என சத்தமாக கூறவே மலைக்கு ஆத்திரமாக வந்தது. “அப்பதான்டி தினமும் மாங்காய் கிடைக்கும்” என மலையின் காதில் ரகசியமாய் ஓதினாள் அரிசி. ஆனாலும் மலைக்கு திருப்தி இல்லை‌. சந்துருவின் மீது பொறாமையாய் இருந்தது‌. பின்ன இத்தனை வருட நட்பை கேவலம் ஒரு மாங்காய் பிரித்து விட்டதே என எண்ணி.

“சரி சந்துரு நீ என் போர்வைய வச்சுக்கோ நான் அம்மா பீரோல்ல வச்சருக்க அந்த புதுபோர்வையை எடுத்துகிறேன்” என மாங்காயை கடித்துகொண்டே சந்துருவுக்கு விட்டுகொடுத்தாள் அரிசி.

“அதான் உங்க அம்மா வெளியவே எடுக்கமாட்டாங்கனு சொன்ன?!” என மலை கேட்க. “ஆமா சரி சந்துரு நாம ஒரே போர்வை வச்சுக்கலாம்” என கூற மலை கலகலவென சிரித்தாள்.

“ஏய் ஏன்டி சிரிக்குற” என அரிசி கேட்க “அந்த பனியாரம் விக்குற பாட்டி சொன்னது நியாபகம் இல்லையா?!” என மலை மீண்டும் சிரித்தாள்.

“ஆமாடி ஒரே போர்வைகுள்ள படுத்தா குட்டி பாப்பா பிறந்துடும்ல” என அரிசி கூறவே. அது அந்த பாட்டி இளைமறைகாயாக “பாட்டி பாப்பா எப்புடி வருது” என அரிசியின் கேள்விக்கு அளித்த பதில்.

“அது தாலி இருந்தாதாண்டி குழந்தை பொறக்கும்” என தன் அறிவியல் தியரியை முன் நிறுத்தினாள் மலை. சிறிது யோசித்த அரிசி “அப்புறம் எப்புடிடி அந்த மேகலா அக்கா கிட்ட சிண்டு இருக்கான்‌. அவங்கலுக்குதான் கல்யாணமே ஆகலையே” என மலை தியரியில் குற்றம் கண்டாள் அரிசி.

“அதுவா ராமாயனத்துல ஒரு அக்கா அப்புடிதான் சூரியனை கும்பிட்டு கொழந்தை பெத்தாங்காலாம் அதுமாதிரி இருக்கலாம் எங்க தாத்தா சொன்னாரு” என மலை மீணாடும் தியரியை நிறுபித்தாள். அதை கேட்டு சந்துரு சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன்டா சிரிக்குற” என மலை கேட்க “அது ராமயனம் இல்ல மகாபாரதம் அந்த அக்கா பேரு குந்தி நான் ஒரு கார்டூன்ல பாத்துருக்கேன்” என சந்துரு கூறவே அரிசியும் சேர்ந்து சிரித்தாள். மலைக்கு ஆத்திரமாக வந்தது.

பின் மலை சோகமாக “ஆமாடி நம்மலும் அந்த அக்கா மாதிரி கொழந்தை பெத்துகலாம் கல்யாணம் பன்ன வேற ஊருக்கு அனுப்பி வச்சுடுவாங்க உன்னை எல்லாம் விட்டுட்டு நான் எப்புடிடி இருப்பேன்” என சோகமாக கூறினாள்.

“அடி போடி எங்க அம்மா கூட வேற ஊர்ல இருந்துதான் வந்தாங்கலாம். எங்க போனாலும் சரிடி அங்க ஒரு மாங்காய் மரம் இருந்தா போதும்” என இறுதியாக இருந்த மாங்கொட்டையை பற்கள் கூசும் அளவிற்கு கடித்துகொண்டிருந்தாள் அன்பரசி.

மாங்கொட்டை முழுவதும் தன் சாறை இழந்திருக்க தூக்கி எறிந்தாள். அது மூன்றுமுறை தண்ணீரால் பட்டு தாவ அதிலிருந்த தவளைகள் சிதறி ஓடின. ஒரு ஆலமரகிளை குளத்தை நோக்கி இருக்க குளிக்க ஆயத்தமாகினர். அவர்களின் பொழுதபோக்கே இங்கு குளிப்பதும் கும்மாலம் போடுவதும் தான்.

இரண்டு தோழிகளும் மரத்தில் ஏறவே “சந்துரு நீயும் ஏறுடா” என மலை கூற “அடி லூசு அவனுக்கு மரம் ஏற தெரியாதுடி” என அரிசி நினைவுபடுத்தினாள். இவர்களை பார்த்துகொண்டே கரையில் அமர்ந்திருந்தான் சந்துரு. இருவரும் ஒரு எல்லையை வகுத்துகொண்டு குதிக்க அரிசியே எப்போதும் முன்னிலை வகித்தாள். ஒரு முறை மலை முன்னிலை வரவே.

“எப்புடி குதிச்சேன் பாத்தியா?!” என மலைகூறவே “அடி போடி நான்தான் ஜெயிச்சேன்” என அரிசி வாதிட்டாள். இருவரது சண்டை தொடர முடிவில் செம்பில்லாத நாட்டாமையாக சந்துருவிடம் கேட்டனர். “டேய் யாரு ஜெயிச்சா சொல்லுடா” என கேட்க.

அவன் நெருங்கிய தோழி அன்பரசிக்கு ஆதரவு தெரிவித்தான். மலைக்கு ஆத்திரம் அதிகரிக்க அரிசியோ அடுத்த ரவுண்டுக்கு மரத்தில் ஏறி இருந்தாள். மலையோ சந்துருவை பிடித்து இழுத்து குளத்தில் தள்ளி விட்டு மேலே ஏறினாள். சந்துரு அதை எதிர்பார்க்கவில்லை. தண்ணீரில் விழுந்து தத்தளித்தான். கையையும் காலையும் மேலும் கீழுமாக ஆட்டினான். குளத்தின் மாசான நீர் அவனது வாய்க்குள் செல்ல துவங்கியிருந்தது. கண்களை மூடி மயக்கமடைந்தான். நீரில் போட்ட கடப்பாறை போல உள்ளே சென்றான்.

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” ………

என சந்துருவின் கைபேசி சினுங்க சுய உலகிற்கு வநதான். அதற்குள் அன்பரசி குளித்து ரெடியாகியிருந்தாள். அட சே அவ எந்திரிக்கும்போது பெட் காஃபி கொடுக்கலாம்னு பாத்தா எல்லாம் போச்சா என நினைக்கும்போது‌. ஊர் பெரியவர்கள் மற்றும் பலர் அன்பரசியின் வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்க நிச்சயம் துவங்கபோகிறது என உறுதியானது.

அந்த நேரம் முப்பது விலை உயர்ந்த கார்கள் வரவே அருகில் நின்றிருந்த தன் தந்தையை சந்தேகமாக பார்த்தான். “நான் ஆடிட்டர் கோபிகிட்ட மட்டும்தான்டா சொன்னேன்” என சன்முகம் மலுப்பிகொண்டே நகர்ந்தார்.

அப்போது மீண்டும் கைபேசி சினுங்க அதில் இருந்தது வெறும் மூன்று இலக்க எண் மட்டுமே.

“ஹலோ யாரு மீ சந்துரு” என கூற

“ஹாய் சந்துரு உனக்கும் அன்பரசிக்கும் கல்யானமா?!. ஹாப்பி மேரிட் லைஃப்” என எதிரில் பேசியவன் சிரித்தான்.

“நீங்க யாருங்க” என மீண்டும் கேட்க
“உன் வருங்கால மனைவியை வெள்ளை புடவை கட்ட வைக்கபோறவன். அந்த அன்பரசிக்கும் புத்தி வரனும்ல” என மீண்டும் பலமாக சிரித்துவிட்டு இனைப்பு துண்டிக்கபட்டது.

-தொடரும்.

1 thought on “ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18”

  1. Flowing good but intha spelling mistakes than speed breaker. இப்போ அதையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். எங்க அம்மாவோட சமையல் குறிப்பு நோட் படிச்சு காட்டி அவங்ககிட்டயே கிண்டல் பண்ணுவோம் அதுபோலவே உங்க கதையும் ரசிக்கிறேன். சண்முகா சரணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதிசிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதி

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் இறுதிப் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380394830 key=key-Qck9yxArLYt7SRAxIVzv mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

நிலவு ஒரு பெண்ணாகி – 18நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19   அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.   “10.04.2015