Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 12

பாகம் – 12

ஆரவ் ஊருக்குள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், காவல்துறையின் ஒரு குழுவினர் மலையில் தேட தயாராகி அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் இடத்திற்கே ஆரவ் பத்திரமாக வருவதை கண்டதாலும், உடன் வருவது ஒரு சாதாரண பெண் என்பதாலும், இனி ஆபத்தில்லை பிரச்சனை முடிந்தது என அவர்கள் அனைவரும் நினைத்த வேளையில் புல்லட் சத்தம் கேட்டது. அது பாய்ந்தது அந்த பெண்ணின் மீதெனிலும் அடுத்து ஆரவ்வும் சுடப்படலாம் என்றெண்ணி காவலர்கள் கூட்டமாக ஆரவ்வை நோக்கி ஓடிவந்தனர்.

 

ஆரவ் தன்னையே அவர்கள் இலக்கு என்று நினைத்திருந்ததான், இவ்வளவு பாதுகாப்பான இடத்திற்கு வந்த பிறகு பார்பியை சுடுவார்கள் என அவன் எதிர்பாராததால் ஒரு நொடி முற்றிலும் ஸ்தம்பித்து நின்றான். அவள் கீழே விழுந்த அடுத்தநொடியில் சுயநினைவு வந்தவனாய் இரண்டே எட்டில் ஓடி வந்து அவளருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து அவளை இழுத்து தன் மடியில் கிடத்தி, “பார்பி… பார்பி…” என்று கதறி கொண்டிருந்தான்.

 

பார்பி சிறு அசைவுமின்றி துவண்ட கோடி போல் கிடக்க, தலையிலும் கையிலும் அவளுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியபடி இருந்தது. சற்று முன் வரை பொன் வண்ண நிலவாய் கண்குளிர கண்டு ரசித்தவளை, இந்த நிலையில் கண்கொண்டு காண முடியாமல் செய்வதறியாது கண்களை மூடிக்கொண்டான்.

 

‘என்னைவிட்டு போய்விடாதே பெண்ணே… எத்தனை காதலை உன்மேல் கொண்டேனென நான் காட்ட வேண்டுமடி உனக்கு… என்னிடமிருக்கும் எல்லாமும் தருகிறேன், என் உயிரையும் சேர்த்து… கண்திறந்து என் கண்ணை ஒரு முறை பாரடி பெண்ணே…’

 

மேற்கொண்டு அங்கே வேறெந்த அசம்பாவிதமும் நடக்காத வகையில் காவலர்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து நின்றனர். நான்கு பேர் வந்து ஆரவ்வை பிடித்து தூக்கி நிறுத்த ஜடம் போல எழுந்து நின்றான். இரண்டு பேர் வந்து அவளை தூக்குகையில், அதீத வலியால் முனகலுடன் லேசாக கண் திறந்து பார்த்து “ஆரவ்” என்று சொல்லி விட்டு மீண்டும் மூர்ச்சையானாள்.

 

இத்தனை நேரம் உயிரில்லாமல் இருந்தவன் அவள் குரலை கேட்ட நொடி அனைவரையும் உதறி தள்ளிவிட்டு அவளருகில் ஓடிவந்து அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான். “நான் உன் பக்கத்திலதான் இருக்கேன், பயப்படாத பார்பி” என்று அவளுக்கும் தனக்கும் சேர்த்து தைரியம் சொல்லி கொண்டான்.

 

அதன்பின் அவன் மூளை துரிதமாக செயல்பட தொடங்கிட, “சீக்கிரமா ஏதாச்சும் வண்டி கொண்டு வாங்க, பக்கத்தில் ஹாஸ்பிடல் எங்க இருக்கு?” என்று அத்தனை பேரையும் தன் உத்தரவினால் ஆட்டுவித்தான்.

 

காவல்துறை வாகனமான பெரிய சைஸ் போலீஸ் வேன் வந்ததும், ஆரவ் கவனமாக அவளை தூக்கி சென்று அதன் இருக்கையில் கிடத்தினான். இன்ஸ்பெக்டர் கெஞ்சும் குரலில்”ஆரவ் சார் நீங்க போகக்கூடாது, ப்ளீஸ் இறங்கி வாங்க. உங்களுக்கு டைட் செக்யூரிட்டி குடுக்க சொல்லிருக்காங்க சார், அந்த பொண்ணு கூட வேற போலீஸ் போவாங்க நீங்க வாங்க சார்” என்று கத்தி கொண்டிருந்தார்.

 

ஆனால் அவன் காதுகளிலோ அவளின் மெல்லிய முனகல் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. கொஞ்சம் கூட மற்றவர்களை சட்டை செய்யாமல் அவளருகில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு “பார்பி… உனக்கு ஒண்ணும் ஆகாது… நீ தைரியமா இருடா… நான் இருக்கேன் பார்பி… உன்ன விட்டு எங்கயும் போகமாட்டேன்…” என்று உளறியபடி இருக்க, வாகனம் அருகிலிருந்த ஒரு சின்ன மருத்துவமனையினை நோக்கி விரைந்து செல்ல தொடங்கியது.

 

சுற்றிலும் அமர்ந்து இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் எல்லாம் வீண்தான், மருத்துவமனை வரும் வரை அவளருகில் மண்டியிட்டு இருந்தவன், அவளைவிட்டு இம்மியளவும் விலகுவதாக இல்லை. அவன் கண்களுக்கு அவள் மட்டுமே தெரிய மருத்துவமனை வந்ததோ, அவளை ஸ்ட்ரெக்சரில் மாற்றியதோ அவனுக்கு நினைவில் பதியவேயில்லை. டாக்டர் வந்து அவனை வெளியேற சொன்ன பிறகுதான் சுயநினைவடைந்து ஆபரேஷன் தியேட்டரை விட்டு மனமின்றி வெளியேறினான். இருந்தும் அங்கிருந்து நகராமல், கதவின் கண்ணாடி துளை வழியாக அவளை பார்த்து கொண்டே நின்றிருந்தவனை காவலர்கள் வியப்பாக பார்த்தனர்.

 

மேலிடத்தில் இருந்து வந்த ப்ரஷரின் காரணமாக அங்கிருந்து விரைவாக வெளியேற சொல்லி அந்த காவலர்கள் ஆரவ்வை வற்புறுத்தி அழைத்தார்கள். அவனோ கதவினை விட்டு நகர்ந்து சேரில் கூட அமருவானில்லை, அவர்களுக்கு எப்படி தெரியும் உள்ளே துடித்து கொண்டிருக்கும் உயிர் அவனுடையதென்று? அவளை சுற்றி சுற்றி இரண்டு டாக்டர்கள் தீவிரமாக ஏதேதோ செய்து கொண்டிருக்க அவ்வப்போது அவனது இதயமும், அவளைப்போலே வலிதாளாமல் துடித்தது.

 

அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த டாக்டர் ஆரவ்விடம், “சார், தலையில் பெரிய அளவில காயமில்ல, தையல் போட்டுகிட்டு இருக்காங்க. ஆனா புல்லட் கையில நல்லா பாஞ்சு இருக்குறதால ரத்தம் நிக்காம வந்துகிட்டே இருக்கு. இப்போ இங்க ஆபரேஷன் பண்ணி எடுத்தா ஹெவியா பிலட் லாஸ் ஆகும், அவ்ளோ ரத்தம் இங்க இப்போ ஸ்டாக் இல்ல. தவிர மூச்சுத்திணறல் வந்தா சமாளிக்க எகியூப்மென்ட்ஸ் இங்க இல்ல. அவங்க பீபி வேற லோ, ரொம்ப வீக்காவும் இருக்காங்க, நீங்க வேற எதாவது பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறது நல்லது” என்ற பதிலால் சுத்தமாக நொறுங்கி போனான்.

 

“சார் இன்னும் நாலு மணி நேரத்துக்குள்ள ஆபரேஷன் பண்ணினா கண்டிப்பா காப்பாத்திடலாம்” என்று உறுதிபட சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.

 

‘அங்கே அவள் இன்னும் என்னை நம்பிக்கொண்டு இருப்பாள்… நான் உடைந்து போக கூடாது… அவள் எனக்கு வேண்டும்… விடக்கூடாது… ஒரு நொடி கூட இனி தாமதிக்க கூடாது…’ என்று பழைய ஆரவ்வாக யோசிக்க தொடங்கினான்.

 

அருகிலிருந்த இன்ஸ்பெக்டர் மணியிடம் போனை வாங்கி தன் மேனேஜருக்கு தொடர்பு கொண்டான், ” நிதிஷ், நான் இப்ப ஸேப். பட் நான் கேக்குறத எல்லாம் அரை மணி நேரத்துக்குள் செஞ்சு குடுங்க.”

 

நிதிஷ், “சரி சார்”

 

“எனக்கு பக்கத்தில இருக்குற ஏதாவது ஒரு ஏர்போர்ட்டில இருந்து ஹெலிகாப்டர் கொண்டுவர சொல்லுங்க. என் கூட ஒரு முக்கியமான பேஷன்ட் இருக்காங்க,  அவங்களுக்கு சென்னையில் ஹெலிபேட் இருக்குற ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல இமீடியட்டா ஆபரேஷன்க்கு ரெடி பண்ணி வைங்க. ஹெலிகாப்டர் லேண்ட் ஆன அடுத்த நிமிஷமே பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டர்க்கு வந்திடனும். பேஷன்ட்டோட கரன்ட் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் நான் கொஞ்ச நேரத்தில மெயில்ல அனுப்புறேன். ஷர்மா அங்கிளும் நீங்களும் அடுத்த பிளைட்ட புடிச்சு சென்னைக்கு வந்திடுங்க.”

 

நிதிஷ், “ஓகே சார், ஹெலிகாப்டர் அரேஞ்ச் பண்ணிட்டு இதே நம்பர்ல கூப்பிடுறேன்.”

 

ஆரவ் அந்த இன்ஸ்பெக்டரிடம், “இப்போதைக்கு இந்த நியூஸ டிபார்ட்மென்ட்ட தவிர வெளியில வேறெங்கையும் போகாம பாத்துக்கங்க. நான் ப்ரஸ் மீட் வச்சு அப்புறம் சொல்லிக்கிறேன்”

 

டாக்டரிடம் தெளிவான பேஷன்ட் ரிப்போர்ட்டைம் தாங்கள் இருக்கும் இடத்தின் லேண்ட் மார்க்கையும் ஒரு மெயில் மூலம் தனக்கு அனுப்ப சொல்ல, அது அடுத்த நிமிடமே நிதிஷ் கைக்கு வந்து சேர்ந்தது. மருத்துவமனை அருகிலேயே பெரிய வெற்றிடம் இருந்ததால் நேரடியாக அங்கேயே ஹெலிகாப்டரை வரவழைத்தான் ஆரவ். அவனின் அவசரத்தால் பதினைந்து நிமிடங்களிலேயே பார்பியின் பயணத்திற்கு எல்லாம் தயாராக இருந்தது.

 

காவலர்கள் சூழ்ந்திருக்க ஹெலிகாப்டரில் ஆரவ், பார்பி அவர்களோடு துணைக்கி இன்னும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நால்வரும் ஏறினார்கள். மயக்கம் தெளியாதிருந்தவளை, ஆரவ் தன் மடியில் கிடத்தி கொண்டு அமர்ந்திருந்தான். அவள் தலையில் இரத்தம் உறைந்து போய் விட்டது, ஆனால் கையில் கட்டுகளை மீறி விடாமல் ரத்தம் கசிந்து கொண்டே இருந்ததை கண்டு காயத்தின் ஆழம் புரிய ஆரவ் கண்களில் நீர் திரள தொடங்கியது. அடுத்த அரைமணி நேரத்தில் சென்னைமேல் பறந்து கொண்டிருந்தது அந்த ஹெலிகாப்டர். அங்கே ஆரவ் சொன்னதைவிட அதிகமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் தரை இறங்கியதுமே தயாராக இருந்த மருத்துவர்கள் குழு பார்பிக்கு ஆபரேஷனை ஆரம்பிக்க, இப்போதும் ஆரவ் கதவினருகிலேயே பழியாய் கிடந்தான். அவனுக்கென்று உணவு, தண்ணீர், போன், உடை என்று அனைத்தையும் வர செய்திருந்தான் நிதிஷ், இருந்தும் எதுவுமே தொடாமல் அப்படியே கிடந்தது.

 

ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஷர்மா அங்கிளும் நிதிஷ்ம் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர். ஆரவ் இன்னும் கதவருகினில் அப்படியே நின்று கொண்டிருக்க, ஷர்மா அங்கிள் வந்தவுடன் அவனை கட்டி பிடித்து கொண்டு, “உனக்கு எதும் இல்லையே. என்ன ஆச்சு ஆரவ்? உள்ள யாரு இருக்காங்க?” என்றார்.

 

கண்ணீர் முட்ட குரல் நடுங்க, “அங்கிள் உள்ள பார்பி இருக்கா. என்னாலதான் அவளுக்கு இப்படி ஆச்சு, இன்னும் ஆபரேஷன் முடியல. எனக்கு பயம்மா இருக்கு அங்கிள், எனக்கு அவ வேணும்” என்றான்.

 

“ஒண்ணும் ஆகாதுடா நீ தைரியமா இரு”

 

சற்று நேரத்தில் வெளியே வந்த டாக்டர் “ஆபரேஷன் சக்சஸ் சார். பேஷன்ட் நார்மல் ஆனதும் அவங்கள வார்டுக்கு மாத்திடுவோம்” என்றார்.

 

ஆரவ் அவரை கட்டிபிடித்து, “தேங்க்யூ… தேங்க்யூ டாக்டர்… நான் ஒரு தடவ மட்டும் அவள பாக்கலாமா?” என்றான் மகிழ்ச்சி ததும்ப.

 

“ஷ்யூர், பட் டோன்ட் டிஸ்டர்ப் கெர்” என்றார்.

 

வேகமாக அவளை பார்க்க ஓடி வந்தவனின் கண்களுக்கு பார்பி கசங்கிய பூவாய் தெரிந்தாள். அவளை சுற்றிலும் ஏதேதோ டியூப்கள் இருக்க ஆரவ் அவளருகில் மண்டியிட்டு விரல் பிடித்து, “எனக்கு உன்ன விட்டா யாருமே இல்ல பார்பி, சீக்கிரமா வந்திடு” என்று காற்றுக்கும் நோகாமல் அவள் காதில் சொன்னான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: