Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 17

உனக்கென நான் 17

ராஜேஷ் மேஜையையும் அன்பரசியோ அந்த பால் குவளையையும் வெறித்துகொண்டிருக்க ஜன்னலின் வழியே “ஏய் ஒழுங்கா பேசி தொலைங்கப்பா” என ஜெனி கூறிவிட்டு நகர்ந்தாள். ஆனாக முதலில் துவங்கலாம் என நினைத்து நிமிர்ந்தான் ராஜேஷ் ஆனால் அவள் விழியில் தோற்றான் தலைகுனிந்தான். நீ வாயாடி தான இப்ப ஏன் பேசாம இருக்க என மனது அன்பரசியை தூண்டிவிடவே அவனது முகத்தை பார்த்தாள். இதழ்கள் வார்த்தைகளை சிந்த தயாராகின. அதற்குள் அவன் எழுந்துவிட்டான்.

“போறியா?!” என ஏக்கமாக கேட்டாள். குரலில் அவ்வளவு பலம் இல்லை

“என்ன?!” காதில் சரியாக விழாததால் கேட்டான்.

“என்னை விட்டு போகபோறியானு கேட்டேன்” மீண்டும் முகத்தில் வாட்டம் தெரிந்தது. அதுவரை அவளது முகத்தை அப்படி கண்டதில்லை. அவனது இதயத்தில் ஏதோ செய்யவே அவன் தன்னை அறியாமல் அமர்ந்தான். “இல்ல சொல்லு” என ராஜேஷ் கூறினான்.

“நீயே சொல்லு” முதல்முறையாக வாயாடியின் வாயிலிருந்து குறைவான வார்த்தைகள் உதிர்ந்தன. இந்த அன்பரசியை ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. பாய்மரத்தை திருப்பினான்.

“ஹேய் என்ன பேய் எதுவும் பிடிச்சுருச்சா உனக்கு நீ இப்படி எல்லாம் பேசமாட்டியே” என நக்கலாக சிரித்தான். மீண்டும் மலையேறினாள் ராட்சசி “ஆமாண்டா நீ பன்ன வேலைககு நான் உன்னை கொல்லாம்னுதான் வந்தேன் ஏதோ ஜெனி சொன்னதால நீ தப்பிச்ச” என குழந்தை முகத்தில் கோபத்தை காட்டினாள்.

“ஏய் உன்னை லவ் பன்றேன்னு சொன்னது தப்பா பிடிச்சிருந்தா பிடிச்சுருக்குனு சொல்லு பிடிக்கலைனா அமைதியாக இரு நானாவது தூரத்துல இருந்து உன்னை பாத்துக்கிட்டே வாழ்கையை ஓட்டிருவேன்ல” என மீண்டும் சிரித்தான். அவள் மீண்டும் முறைக்கவே “அப்போ என்னை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படிதானே?!” என ஊடல் தொடங்கினான்.

“ஆமா இவரு பெரிய மைசூர் மகாராஜா இவரை பிடிச்சுருக்க போகுது‌. டேய் கோபமா இருக்கேன் அப்புறம் அடிச்சுடுவேன் பாத்துக்கோ”

“அம்மா தாயே மைசூர் ராஜா எல்லாம் செத்துட்டாங்க அந்த அளவுக்கு தகுதியா நான் மட்டும்தான் இருக்கேன்.” என கூறிவிட்டு “எனக்கு ராஜா கெட்அப் போட்டா நல்லா  இருக்குமா?” என அவளை பார்த்து கேட்டான். அதற்கும் முறைத்தாள்.

“என் பட்டத்து ராணியை ஏன் இந்த கோபம்; உங்கள் இதழ்களில் புன்னகைவரவைக்க நான் என்ன செய்யவேண்டும். என் தவறு என்னவோ” என செந்தமிழ் என முயற்சி செய்து தோற்றான்.

“என்னை லவ் பன்றேன்னு என்கிட்ட சொல்லாம ஏன்டி அந்த சங்கீதா கிட்ட சொன்ன” என ஆழ்மனதை திறந்தாள். அந்த வாயாடியிடம் ரகசியங்கள் ஓட்டைபானையில் இட்ட தேநீர் போல்தான்.

“ஓ அதுதான் கோபமா. அது என் தப்பில்லையே” என தப்பிக்கநினைத்தான் “அப்போ யாரு தப்பு” என்பதைபோல் முறைத்தாள். கண்ணாலயே பேசுறாளே என நினைத்துகொண்டு “அம்மா தாயே நீ காதுல ஹெட்போனை மாட்டிகிட்டு லூசூ மாதிரி தலை ஆட்டிகிட்டு இருந்தா நான் சொல்றது எப்புடி உனக்கு கேட்கும் அதுவும் இல்லாம உன் டேபிள்க்கு அடியில் லட்டர் எழுதிவச்சா அதை டிஷ்யு பேப்பர் மாதிரி பெஞ்ச் தொடைச்சு வீசிட்ட திருப்பிகூட பாக்கலை. சரி உன் புக்ல முதல் பக்கத்துல எழுதி வச்சேன் அந்த புக்கை நீ திருப்பிகூட பாக்கலை புதுசா வச்சுருக்க ஆனா எப்புடி தான் பாஸ் ஆனியோ தெரியலை” என தலையில் கைவைத்தான்.

அன்பரசி பிடித்துக்கொண்டது ஒரே பாயின்ட்தான் “நீ அந்த சங்கீதாகிட்டதான சொன்ன என்கிட்ட சொல்லலைல உன்கூட பேசமாட்டேன் போடா” என லேசாக சிரித்தாள் அவன் கவனகக்காதவாறு.

“சரி இந்த பொண்ணு சரியா வரமாட்டா நமக்கு அந்த சங்கீதா தான் கரெக்டா இருப்பா ஓகே அன்பு பாய் ” என எழுந்தான். அடுத்த நொடி சரமாரியாக தன் மென்கரங்களால் அடித்தாள். கோபத்தையும் அன்பையும் ஒருசேர காட்ட அவளுக்கு வழி தெரியவில்லை போலும்.

“ஏய் லூசு சுத்தமா வலிக்கவே இல்லடி நல்லா குச்சி கைய வச்சுகிட்டு ஏன்டி இந்த ஸ்டன்ட்லாம் ட்ரை பன்ற ” சிரித்தான்.

“உனக்காக வெயிட் பன்னேன்ல நான் லூசுத்ன்டா. என்னைவிட்டுட்டு இன்னொருத்தி கூட போயிடுவியா இருடா உன்னை” என மேலும் வேகமாக அடித்தாள். பட்டென அவளது இரு கைகளையும் பிடித்துகொண்டு அவள் எதிரில் அமர்ந்தான். அவள் அவனது பிடிக்குள் வந்தாள்.

“விடுடா” என கையை இழுத்தாள் ஆனால் மனது ‘என்னை விட்டுடாதடா’ என கூறியது‌. அவளது கண்களை பார்த்து அதை உணர்ந்தவன். “நான் என்னைக்குமே உன்னை விடமாட்டேன்டி ராட்சசி” என அவளது கண்களுக்குள் ஊடுருவினான்‌. இருவரது கண்களும் ஒன்றை ஒன்று பறிமாறிகொண்டிருந்தன.

“டம்..டம்” என சத்தம் கேட்கவே நிஜ உலகிற்குள் வந்தனர். மேஜையிலிருந்த இரண்டு குவளைகளையும் அந்த வண்டியில் பாட்டி எடுத்துபோட்டதால் வந்த சத்தம் அது. அவர் அமைதியாக அந்த வண்டியை தள்ளிக்கொண்டே சென்றார். அன்பரசியின் கோபமோ அந்த பாட்டியின் மீது திரும்ப ராஜேஷோ சிரித்துகொண்டிருந்தான்.
அதை பார்த்ததும் இவன் பக்கம் கோபத்தை திருப்பினாள். நமது அனைத்தே உணர்வுகளையும் நமக்கு பிடித்தவர்களின்மீதுதானே காட்ட முடியும்.

“டேய் இப்ப ஏண்டா சிரிக்குற” என முறைத்தாள். “என்னடா இந்த சுதந்திரநாட்ல சிரிக்க கூட 144 போட்டுருக்கா என்ன?” என அவளை சீண்டினான். அவள் முறைத்து கொண்டே அவனை அடிக்க கை ஓ ஓங்கினாள். சுதாரித்துகொண்ட அவனோ எழுந்து ஓட அவளும் பின் தொடர்ந்தாள்.

சிறிது தூரம் ஓடியவன் சட்டென நின்றான். அங்கிருந்த மரத்தின் மீது எதையோ அவன் எடுதிருந்தான். அவன் சட்டென நிற்பான் என எதிர்பார்க்காத அன்பரசி அவன்மேல் மோதினாள்.

தன் முதுகில் மோதி கீழே விழபோனவளை சட்டென தாங்கிபிடித்தான். பின் அவள் நிற்க அவள் முன் மண்டியிட்டு அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான். அதை சிறிதும் எதிர்பார்க்காதவள் கைகளால் தன் மலர் முகத்தை வெட்கத்தாலும் ஆச்சரியத்தாலும் மறைக்க முயன்றாள். அவளது கண்கள் விரிய சுற்றிலும் இருந்த பசுமை வெளிகளில் சூரியனின் கரங்கள் பட்டு எதிரொலித்து ஊடுருவியது. காதலும் அலைகற்றையாக பூங்கொத்தின் வழியே கண்களில் இருந்து கண்களுக்குள் கடந்து சென்றன. இருவரும் செய்வதறியாது அப்படியே சிலையாக நின்றன.

“ஸ்மைல் ப்ளீஸ்” என ஒரு குரல் கேட்க கையில் ஒரு சிறிய புகைப்பானுடன் நின்றிருந்தாள் ஜெனி. அதற்குள் அன்பரசி வெட்கத்தால் விலகி நிற்க முயன்றாள். “ஏய் நடிக்காதீங்கப்பா நீங்க ஓடி வந்தது கீழ விழுந்து ரொமான்ஸ் பன்னது புரபோஸ் பன்னது எல்லாம் இதுக்குள்ள இருக்கு” என கேமிராவை காட்டினாள்.

அதை பிடுங்க அன்பரசி முயன்றாள். சுதாரித்த ஜெனி. “ஹேய் ராஜேஷ் இவளை பிடிச்சுகோ” என கூறவே அவன் இவளது கைகளை கட்டினான் தன் கைகளால். “ஜெனி வேணாம்டி அத குடுடி” என செல்லமாக கேட்டாள்.

“ஏய் நான் இதை போட்டோ எக்ஸிபிசன்ல வைக்காலாம்னு இருக்கேன்” என ஜெனி கூற “உன்னை கொன்னுடுவேன்டி” என செல்லகோபம் மீண்டும்.

“நான் சும்மா சொன்னேன்டி.. ராஜேஷ் அடுத்தவாரம் நான் இதை கழுவி கொடுத்துடுறேன் எத்தனை காபி வேனும்” என அவள் கேட்க பதிலுக்கு “ஒரு லட்சம்” என ராஜேஷ் கூற “ஏன்டா அவ்வளவு” என ஜெனி கேட்டாள்.

“என் ரூம் புல்லா இதை ஒட்டி வச்சு இந்த நொடியை நினைச்சுகிட்டே இருக்கனும் அதான்” என சிரித்தான். “சரிடா ” என ஜெனி அங்கிருந்து அகன்றாள்.

என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என அவனது கண்களை பார்த்தவள் அவனுள் கரைய அவனது தோளில் முகம் புதைத்து கொண்டாள். அந்த தருணத்தையும் தூரத்தில் இருந்த உள்வங்கினாள் அந்த புகைப்பட விரும்பி ஜெனி.

அந்த நிமிடத்தின் நினைவை தான் சந்துரு இன்று கைகளில் வைத்து பார்த்து கொண்டிருந்தான். உள்ளே அன்பரசியோ மருத்துவரின் வேதிபொருட்களின் தயவால் உறங்கிகொண்டிருந்தாள். இல்லை மயக்கநிலையில் இருந்தாள்.

“சரி சாப்பிடவாங்க ” என பார்வதி அழைக்கவே மூவரும் தங்கள் கவலைகளையும் ரகசியங்களையும் பார்வதியிடம் மறைக்க நினைத்து பட்டிமன்றத்தின் தலைப்பை மாற்றினர். “இல்லடா நாளைக்கு நிச்சயம் வச்சுகிட்டு இன்னும் யாரையும் கூப்பிடல அதான் யோசிக்குறேன்” என போஸ் கூறினார்.

“என் சைட்ல யாரும் இல்லடா” என சன்முகம் கூற “டேய் நாம் எல்லாம் ஒரே குடும்பம்டா” என தன் தோழனிடம் கூறவே.

“சரிங்க சாப்பிட்டு போய் கூப்பிட்டுகலாம் முதல்ல வந்து சாப்பிடுங்க” என கூறினார்.

“இல்ல பார்வதி சந்துருவுக்கு சாப்பாடு போடு அப்புறமா நாங்க சாப்புட்டுகிறோம். போய் ஊருக்குள்ள சொல்லிட்டு வந்துடுறேன்.” என இருவரும் கிளம்பினர்.

“ஏய் அன்பரசி மாப்பிள்ளைக்கு சாப்பாடு வைடி எங்க போனா இவ” என திட்டினாள்.

“அத்த அவளுக்கு உடம்பு சரியில்லை தூங்குறா விடுங்க” என சந்துருகூறவே தன் மகள்மீது அவன் வைத்திருக்கும் பாசம் புரிந்தது. மனதில் பார்வதிக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படவே அமைதியாக சென்று சூடான சாதத்தை எடுத்து வந்தார்.

அன்பரசியோ அமைதியாக உறங்கிகொண்டிருக்க கனவில் ராஜேஷின் முகம் வந்துசென்றது. தோழர்கள் இருவரும் நிச்சயம் பற்றி தெரிவிக்க ஊருக்குள் சென்றிருந்தனர். நாளை நடக்கபோகும் விபரீதத்தை அறியாமல்…

தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: