Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 10

பாகம் – 10

இரவு நேரம் தனது இருளெனும் போர்வையால் மலையை மூடிவிட்டது. மலை மேலிருந்த கடத்தல்காரர்கள் கூட்டம் அவர்கள் இருவரையும் மலை மேல் தேடி ஓய்ந்து ஆங்காங்கே இளைப்பாறியது. குகையில் மலையின் அடிவாரத்திற்கு சற்று மேலே இருந்த ஆரவ்வும் பார்பியும் சருகுகளால் தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

 

பார்பி ” ஆரவ் பசில எனக்கு தூக்கமே வரல”.

 

” நான் நல்லா பாத்துட்டேன். இங்க சாப்பிட வசதியா எதுவுமே இல்லை”.

 

” சாரி ஆரவ். என்னாலதான சாப்பாட்டுக்கு மீன தேடி வந்து நீங்க மாட்டிகிட்டீங்க. என்ன தண்ணில இருந்து காப்பாத்தினதுக்கு உங்களுக்கு தேங்க்ஸ் கூட நான் சொல்லல.”

 

” நான் இப்போ வெளியில எங்க இருந்தாலும் கண்டு புடிச்சிருப்பாங்க. இந்த இடம் தான் கரெக்ட். நான்கூட நேத்து நைட் பஸ்ல நீ குடுத்த ஸ்னாக்ஸ்க்கு தேங்க்ஸ் சொல்லல. லீவ் இட். வீ ஆர் ப்ரன்ட்ஸ். தூங்க ட்ரை பண்ணு. இன்னிக்கு ரொம்பவே நடந்து இருக்கல”

 

அதன்பிறகு அமைதியே குடிகொள்ள அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவனால் தான் தூங்க முடியவில்லை. இவ்வளவு நேரம் நினைக்காத அவளின் இன்றைய நினைவெல்லாம் ஒன்று சேர்ந்து அவனை தாக்கியது. அவளிதழ்களின் சுவை அவன் நாவில் தோன்றி இம்சித்தது. அவள் தன்னருகே தான் படுத்திருக்கிறாள். பெண்களின் உணர்வுகள் அமைதியான நீரோடை எனில் ஆண்களின் உணர்வுகள் கட்டுக்கடங்காத காட்டாறு போலல்லவா. இருந்தும் அவன் சுவாசம் கூட அவளை தீண்டவில்லை. அவன் தேவை காமமெனில் தேவையை தீர்க்க 10 நிமிடங்கள் போதுமே. ஆனால் அவன் தேவை காதலியெனில்………

 

பொழுது அழகாக புலர்ந்தது. சூரியனின் ஒளியால் இதுநேரம் வரை இருந்த இருள் விலகி வெளிச்சம் பரவ தொடங்கியது. இருவரும் தூங்கி எழுந்ததும் அவர்கள் கண்ட காட்சியை அவர்களாலே நம்ப முடியவில்லை. பூலோக சொர்க்கம் போல இருந்தது அந்த இடம். பூக்களுடன் கொடிகள், தெளிவாக தெரிந்த சிறிய நீரோடை, பட்டாம்பூச்சிகள், பறவைகளின் சத்தம், முழுவதும் பசுமை படர்ந்த குகை சுவர்கள். மனித காலடி படாத இடமதனால் இறைவன் படைப்பின் அழகு அங்கே கொட்டி கிடந்தது. ஆரவ் பார்பி இருவரும் இமை மூட மறந்து ரசித்து கொண்டே நின்றனர்.

 

ஆரவ் ,”நான் இங்க இருந்து கண்டிப்பா குளிக்காம வரமாட்டேன் பா. அப்புறம் செத்தாலும் என் ஆத்மா சாந்தி அடையாது.” என்று சட்டையை கழட்டி விட்டான். அடுத்து அவன் பெல்ட்டை கழற்ற சீ……சீ……. பேட் பாய் என்று கண்களை மூடி அவள் திரும்பி நிற்க, தொபீர்…. என்ற சத்தத்துடன் குதித்து விட்டான். ஆசை தீர மீண்டும் மீண்டும் குதித்து குளித்தான். ” நீயும் வர்ரியா ஆழமே இல்ல” என்று அவளை அழைத்தான். அவளோ வேறு வேலையில் மும்முரமாக இருந்ததால் “அப்புறமா வர்ரேன்” என்ற பதிலை மட்டும் தந்தாள்.

 

“அப்படி என்ன பண்ணிட்டு இருக்க அங்க?”

 

“வந்து பாருங்க”

 

தண்ணீரை விட்டு வெளியே வராமல் அவளிருக்கும் பக்கம் நீந்தி சென்றான். ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதனை சுற்றி இருந்த தூசி இலைகளை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

 

“இது சுயம்பு லிங்கம் தனா உருவானது. ரொம்ப சக்தி வாய்ந்த லிங்கம். என்ன கேட்டாலும் கிடைக்கும். சுத்தம் செஞ்சதும் நாம கும்பிடலாம்.” என்றாள்.

 

“எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம்” என்றபடி மீண்டும் நீருக்குள் பாய்ந்து விட்டான். அவளோ பூக்களை மாலையாக தொடுத்து, கல்லால் தரையை கீறி கோலம் போட்டு விளையாடிக்கொண்டு இருந்தாள். அவன் ஆசை தீர நீரில் ஆடி முடித்து வெளியேறினான்.

 

” திரும்பிடாத நான் டக்குன்னு டிரஸை எடுத்துகிட்டு பாறை பின்னாடி ஓடிடுறேன்.” என்றான்.

 

“திரும்பிட்டேன். இதோ திரும்பிட்டேன். அச்சச்சோ பாத்துட்டேன்” என்று கத்தி கத்தியே அவனை பதறி ஓட வைத்துவிட்டாள். ஆடைகளை அணிந்து விட்டு வந்தான், அவளும் விளையாடி முடித்திருந்தாள்.

 

ஆரவ் ” நீயும் குளிச்சு பாரு. செம்மயா இருக்கு தண்ணி. ஆழம் கூட இல்ல. ”

 

“சரி. நீங்க வெளியே இருங்க நான் சீக்கிரமா குளிச்சிட்டு வர்ரேன்” என்றாள். அவன் சென்று குகை வாயிலில் அமர்ந்து கொண்டான். அங்கிருந்து பார்த்தால் தெரியாத அளவிற்கு தள்ளி இருந்த நீருக்கு சென்றாள். மேலாடைகளை ஈரமில்லாத இடத்தில் வைத்துவிட்டு உள்ளாடைகளுடன் நீரில் இறங்கினாள். அதிக குளிரின்றி உண்மையில் குளிக்க அவ்வளவு சுகமாக இருந்தது. பூக்களை மிதக்க விட்டு அதில் தண்ணீரை தெளித்து இன்னும் என்னென்னவோ அவள் செய்து கொண்டிருக்க திடீரென தண்ணீரின் மேல் ஏதோ ஒன்று அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

 

“ஆ….. பாம்பு…. பாம்பு….. ஆரவ்….. காப்பாத்துங்க”

 

அவன் அவளை தேடி ஓடி வர, அவளோ விரைந்தெழுந்து, வழுக்கி விழுந்து, தான் இருக்கும் நிலை மறந்து தலை தெறிக்க அவனிடம் ஓடிவந்தாள். தோள்களில் தாவி ஏறி, “ரொம்ப பெரிய பாம்பு. பயமா இருக்கு. என் கிட்டத்தில வந்திடுச்சு……” என்று மீண்டும் மீண்டும் கத்தினாள். அவள் சத்தத்தால் பாம்பே பயந்து வந்த திசையிலேயே திரும்பி ஓடி சென்றுவிட்டது.

 

ஆனால் ஆரவ்விடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அனலென மூச்சுக்காற்று மட்டுமே வர நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவனும் அவள் கண்களை பார்த்தான். சட்டென நினைவு வந்தவளாய் அவன் மேலிருந்து இறங்கி தன்னுடலை தானே ஒருமுறை பார்த்தாள். அவனும் தான். அவன் பார்ப்பது அவளுக்கும் புரிய வேகமாக ஓடி சென்று பாறையின் பின்னால் ஒளிந்து கொண்டாள். இருவரும் நிலை கொள்ளாமல் தவித்தனர். எது வரை பார்த்தானோ என்று அவளும், தன் சட்டைமேல் ஈரமாக ஒட்டிக்கொண்ட அவள் உருவத்தை பார்த்து அவனும்.

 

ஆரவ் தனக்குத்தானே கன்ட்ரோல் யுவர் செல்ப், கன்ட்ரோல் யுவர் செல்ப் என்று மீண்டும் மீண்டும் கூறி தன்னை நிலைபடுத்தி கொண்டான். அவள் ஆடைகளை எடுத்து சென்று அவளிடம் தந்தான். ஆடைகளை அணிந்து வெளியே வந்தவள் அவனை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தே இருந்தாள். அழுதிருப்பாளோ என்று தோன்றியது ஆரவ்விற்கு.

 

“டோன்ட் பீல் கில்ட்டி. லைப்ல எல்லாரும் ஒரு தடவையாவது இத மாதிரி சிட்சுவேசன் பேஸ் பண்ணிருப்பாங்க பார்பி. வெளியில இருக்கும் போது டிரஸ் கிழிஞ்சிருக்கலாம், டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு உடம்பை காமிச்சிருக்கலாம், டெலிவரி அப்போ இப்படி நிறைய. நீ அங்கயே இருந்திருந்தா பாம்பு கொத்தி செத்திருப்ப. உன் மேல தப்பு இல்ல. உன் இடத்தில் யாரு இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்பாங்க.” விடாமல் பேசி பேசி அவளை யோசிக்க செய்து விட்டான்.

 

தன்மேல் தவறில்லை என்றது அவளுக்கு சற்றே ஆறுதல் தர, அவனை பார்க்காமலே, “நாம கிளம்பலாமா?” என்றாள்

 

“உன்னோட சுயம்பு லிங்கத்த மறந்துட்டயே. ஆசையா பூ எல்லாம் கட்டி வச்சுட்டு சாமி கும்பிடாம போகலாமா?” என்றான்.

 

“ஆமால்ல” வேகமாக சிவன் முன்னால் வந்தமர்ந்து ஏதோ ஸ்லோகம் எல்லாம் சொல்லி மாலையை அணிவித்தாள். மனதின் பாரங்களை சிவனிடம் இறக்கிவிட்டாள். திடீர் கல்யாணம் நின்னுபோயிரனும், வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கனும், ஆரவ் பத்திரமா வீட்டுக்கு திரும்பி போகணும். வேறென்ன கேக்கலாம்.

 

அவள் யோசிப்பதை பார்த்த ஆரவ், “கேட்டதெல்லாம் குடுப்பார்னு சொன்னல்ல. நல்லா பெருசா ஏதாச்சும் கேளு” என்றான்.

 

இந்த உலகம் முழுக்க சுத்தி பாக்கனும் என்ற தன் நீண்ட நாள் ஆசையையும் சேர்த்து வேண்டிக்கொண்டாள்.

 

” நீங்களும் சாமி கும்பிட்டுகோங்க. ஆனா வேண்டுதல யாருக்கும் சொல்லகூடாது. அப்போதான் நடக்கும்.”

 

நம்பிக்கை இல்லை என்றாலும் அவள் கேட்டதால் கைகளை கூப்பி “எனக்கு இவள மட்டும் கொடு” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: