Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12

உனக்கென நான் 12

தன் நீண்டநாள் தன் தாயை பிரிந்துபடும் இதயபாரத்தை தனக்கான உயிரிடம் இறக்கி வைத்த நிம்மதியுடன் தொடர்ந்தான். “ஏய் அன்பு நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன?. நான் ஒரு மடையன் அம்மாவ பத்தி பேசிகிட்டே இருப்பேன்” என தலையில் அடித்தாகொண்டான். அவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அன்பரசி.

“கடவுள் ஒன்றை எடுத்தா இன்னொனு கொடுப்பார்னு சொல்லுவாங்க அதுவும் நடந்தது அது என்னனு தெரியுமா?” என கண்ணாடியை திருப்பினான் அவளை நோக்கி. அதில் அவள் முகம் தெரிந்தது. “என்ன நானா?” என வாய்திறந்து பேசிவிட்டாள்.

அன்று…
சந்துருவின் தாய் காவேரி இறைவனடி சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. சந்துரு தன் தாயின் புகைபடத்தை கட்டி அனைத்துகொண்டு மெத்தையில் படுத்திருந்தான். தினமும் தன் தாயை கட்டி அனைத்து உறங்கினால் தான் தூக்கம் வரும் என்ன ஒரு வித்தியாசம் அன்று சிரித்துகொண்டே தூங்குவான் இன்று கண்கள் சிரிக்கின்றன கண்ணீரால்.

அது ஒரு மாலை பொழுது “திடீரென தன் தாயின் ஓசை வீட்டின் மேல் மாடியில் இருந்த அவனுக்கு கேட்க அப்படி ஒரு ஆனந்தம் புகைபடத்தைகீழே வைத்துவிட்டு வேகமாக படியிறங்கி வந்தான் சந்துரு. ஆனால் ஏமாற்றம் அது அவன் தாய் இல்லை. மாறாக இருவர் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.ஒன்று ஒரு மீசைகாரர் மற்றொன்று தன் தாய்போன்ற ஓர் பெண். அவன் எண்ணியது சரிதான் அவள் இவனை ஓடி வந்து தூக்கி கொண்டாள். அன்று நடந்த உரையாடல்கள் இவனுக்கு புரியவில்லை இருந்தாலும் நினைவைவிட்டு அகலவில்லை.

“எப்போடா ஆச்சு” அந்த மீசைகாரர்.

“பையனை கூப்பிட ஸ்கூல்க்கு போகும்போதுடா போஸ்” என தன் தந்தை அழுதது நினனைவில் வந்தது.

“பார்டர்ல இருந்த வர லேட் ஆகிருச்சுடா ” என ஒருமாதம் தாமதமாக வந்ததுக்கு காரணம் தெரிவித்து கொண்டிருந்தார்.அந்த மிலிட்டரிகாரர்.

“இல்ல விடுடா அவளே போய்ட்டா இந்த குடி மட்டும் இல்லாம இருந்திருந்தா இன்னைக்கு அவ இருந்திருப்பாடா… எப்பவும் நான்தான் போவேன் இந்த குடியை தொட்டதுல இருந்து அவதான் போனா ஒரே அடியா போய்ட்டா” என அழுதார்.

“டேய் விதின்னு இருந்தா அப்புடி தான்டா” என தேற்றினார். “அழாதிங்க அண்ணா ” என சந்துரு வை சுமந்திருந்த பெண்மணி தேற்றினார்.

“என்னடா விதி… நான் பொறுப்பில்லாம இருந்தேன் அவள் சின்னதா ஒரு ஸ்பின்னிங்க் யூனிட் ஆரம்பிச்சா இப்போ அது மில்லா வளர்ந்து நூறுபேர் வேலை செய்றாங்க. இப்போகூட என்னால அதை காப்பாத்த முடியாம போயிடும் போல” என அழுதார்.

“ஏன்டா என்ன ஆச்சு”

“புது யூனிட்க்கு கடன் வாங்கி இருக்கா அவ செத்தும் பஞ்சு ஸ்டாக் நிறுத்திட்டாங்க என்ன பன்றதுன்னு தெரியலை. அவள் நியாபகமா இருக்குறது அந்த மில் மட்டும்தான் ” என தன் துன்பத்தை தன் தோழனிடம் இறக்கி வைத்தார்.

தன் தோழரின் கண்ணீரை போஸால் தாங்கமுடியவில்லை. இயந்திரமனிதனின் இதயத்திலும் ஈரம் இருக்கும் அல்லவா தன் தோழனுக்கு பொறுப்பு வந்ததை உணர்ந்தார். அதுவரை குடிமகனாக சூற்றியவர் முதல்முறை குடும்ப பொறுப்பாளியாக பேசிகொண்டிருப்பதை கண்டு சிறிது மகிழ்ச்சி என்றாலும் காவேரியின் மரணம் அதை உணர்த்தியிருக்கவேண்டாம்.

“டேய் அழாதடா எல்லாம் சரி ஆகிடும்டா” என போஸ் கூற “ஆமா அண்ணா அன்னி நம்ம கூடத்தான் இருக்காங்க” என பார்வதி சமாதானம் செய்தார். பார்வதியின் கையில் இருந்த சந்துருவோ எதுவும் புரியாமல் தன் தாயின் அரவனைப்பைபோல உணர்ந்து அவளது முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.

“எல்லாம் என்னாலதான்டா நான்தான் அங்க போயிருக்கனும் இந்த குடியாலதான்டா அவள் போறமாதிரி ஆகிடுச்சு. நான்தான் போயிருக்கனும் நரகத்துக்கு” என மேலும் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

“அழாதடா புது யூனிட்க்கு வாங்குன கடன் எவ்வளவுடா மீதம் இருக்கு?!” என போஸ் வினவினார். “அது பத்து லட்சம் இருக்குடா ” என மேலும் அழுதார்.

“டேய் அழாத உன் மகன் வேற இருக்கான் நீதான் தைரியமா இருக்கனும் அவன் வாழ்கையை பாக்கனும் நான் சொல்றத கேளுடா” என்ற நண்பனின் வார்த்தைக்கு கண்ணில் நீர் வடிய நிமிர்ந்துபார்த்தார் சன்முகம்.

“சரி பஞ்சு ஆர்டர் எடுக்க எவ்வளவு செலவு ஆகும்” என தீவிரமாக கேட்க “பழைய பாக்கி எல்லாம் சேர்த்து புதுசா எடுக்க மூன்று லட்சமாவது வேணும்டா அவ்வளவு பணம் என்னால முடியாதுடா நான் வாழ்ந்த வாழ்கை அப்படி” என தலையில் அடித்துகொண்டார்.

அதை அமைதியாக கவனித்த போஸ் தன் மனைவியை பார்க்க பார்வதியோ மறுவார்த்தை இல்லாமல் தன் கழுத்திலிருந்த அனைத்து நகையையும் கழற்றினார். “தங்கச்சி என்னமா பன்றா” என்று அதிர்ந்தார் சனமுகம்.

“டேய் நீ வாய மூடுடா எதுவும் பேசாத ” என கன்டிப்புடன் கூறினார் மிலிட்டரி மேன். ஆனாலும் அந்த செயல்களால் சற்று அதிரிந்துபோயிருந்தார் சன்முகம்.

“இங்க பாருடா இதை வச்சிகோ போய் பஞ்சு ஆராடர்‌ எடு இது உன் நகை சரியா…அப்புறம் இந்தா ” என ஒரு முப்பதாயிரத்தை கையில் திணித்தார். “இது ஏன்டா” என சன்முகம் வினவ. “இந்த நகை எப்படிடா பத்தும் அதான் வீட்டுலேயே தாலிய கழட்டி அடகு வச்சுருக்கேன் அந்த பணம்தான இது.”
அப்போதுதான் பார்வதியின் கழுத்தை பார்த்தார் சன்முகம் அதில் ஒரு மஞ்சள் கிழங்கு மட்டுமே தொங்கிகொண்டிருந்தது.

“டேய் இந்த பணம் வேண்டாம்டா போய் தங்கச்சியோட தாலிய திருப்பு” என கன்டிப்புடன் கூறினார் சன்முகம் தன் கண்ணீரை துடைத்துகொண்டு. “ஏய் இடியட் நான் சொல்றத மட்டும் கேளுடா” என ஆத்திரமானார் போஸ். தன் அதிகப்படியான உணர்வுகளை மனதுக்கு நெருங்கியவர்களிடம் மட்டும்தானே வெளிபடுத்தமுடியும் அது அன்பும் சரி ஆங்காரமும் சரி.

அடுத்த வார்த்தைகள் எப்படியும் தன் நண்பனின் காதில் விழாது என உணர்ந்த சன்முகம் அமைதியாய் இருக்க “மெட்டீரியல் ஆர்டர் எடு லோன் அடைச்சு தங்கச்சி பேர்ல காவேரி மில்ஸ்னு நெறைய கம்பெனி ஆரய்பிச்சு நிறையபேருக்கு வேலை கொடு அப்போதான் தங்கச்சி ஆத்மா சாந்தி அடையும் அதுதான் தங்கச்சியோட லட்சியம்” என போஸ் கூறியது சன்முகத்திற்கு வியப்பை ஏற்படுத்தியது. மனதில் ஓர் புதிய புத்துணர்வை அழிக்க தொழிலாளர்களுக்காக வாழ முடிவு செய்தார்.

“டேய் போஸ் எனக்கு இன்னொரு உதவி செய்றியா?” என சன்முகம் சோகமாக கேட்க. “டேய் உதவின்னு கேட்ட பல்லு ஒடைஞ்சுடும் பாத்துக்கோ என்ன செய்யனும்னு மட்டும் சொல்லு”

“என் பையன் அம்மா நியாபகமாவே இருக்கான். ரொம்ப தனியா ஃபீல் பன்றான்னு நினைக்குறேன் ஒரு மாதம் உன்கூட வச்சுகிறீயா. அதுக்குள்ள நான் தொழில் பிரச்சனைகளை முடிச்சுடாலாம்னு நினைக்குறேன்” என சன்முகம் கூறவே பார்வதியோ ” அண்ணா நாங்க இவனை அழைச்சிட்டு போகத்தான் வந்தோம் எங்க அம்மா இறந்தப்போ நான் எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா! இவன் என் புள்ளை அண்ணா!” என கண்ணீர் விட்டாள். அதற்குள் மடியில் தலை சாய்த்து உறங்கியிருந்தான் சந்துரு.

அதன்பின் சந்துருவுக்கு நினைவில் இருந்தவை அந்த பழைய பேருந்தின் இன்ஜின் சத்தமும் தன் தாயின் குரலும் மட்டும்தான்.

காலையில் சூரியன் மஞ்சள்மழையென கதிர்களை வீச துவங்கியிருந்தது. லேசாக கண்ணை திறந்தான். குளிர் சிறிது அதிகமாகவே இருந்தது. தன் மீது போர்த்தியிருந்த போர்வையை இருக்க மூடி கொண்டான்.

திடீரென அதை யாரோ வெடுக்கென பிடுங்கினர். அதிர்ச்சியுடன் பார்த்தவனுக்கு இது தன் வீடு இல்லை என்பது தெரிந்தது எதிரில் ஒரு பெண்.
அரைகை சட்டை கனுக்கால் வரை பாவாடை. ஒல்லிகுச்சி தேகம் நல்ல வெள்ளை நிறம். வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட சந்துருவின் வயதை ஒத்த உருவம். முறைத்துகொண்டே நின்றிருந்தாள்.கோபத்திலும் அழகாகத்தான் இருந்தது முகம் எல்லா பெண்களுக்கும் உள்ள இயல்புதான் இது பார்ப்பவரின் கண்களை பொறுத்து.

“இது என் போர்வை நீ எதுக்கு இதை எடுத்த?” என கோபத்தில் கண்களை உருட்டினாள்.

“ஏய் அரிசி அங்க என்னடி சத்தம்” இது சந்துருவின் கற்பனை(தற்போதை)தாய் பார்வதியின் குரல்..

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 9’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 9’

விமானத்தில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏன்டா இவனுடன் அமர்ந்தோம் என்று பீல் பண்ண ஆரம்பித்துவிட்டாள் காதம்பரி. அனைவரையும் சீட் பெல்ட் அணிந்துக் கொள்ள அறிவிப்பை எந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்த அந்த அழகான ஏர்ஹோஸ்டஸ் முகம் வம்சியைக் கண்டதும் சிவகாசிப் பட்டாசைக்

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது