Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 05

பாகம் – 5

காலை பத்து மணிக்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில், “ஆரவ் இருக்கிற இடம் நமக்கு இப்போ தெரிஞ்சிடுச்சு. வெளியில பப்ளிக்கு தெரிய முன்னாடி நாம சீக்கிரமே அவர கண்டு பிடிக்கனும். அந்த டிஸ்ட்ரிக்ட் போலீஸ்ல இருந்து 1000 பேரை செலக்ட் பண்ணி டீம் பார்ம் பண்ணி தேட ஆரம்பிங்க. ஊருக்குள்ள டெர்ரரிஸ்ட் பதுங்கி இருக்குறதாகவும், கண்டதும் சுட உத்தரவு இருக்குனும் பொதுமக்கள் எல்லாருக்கும் இன்பர்மேசன் குடுங்க. அவருக்கு பேன்ஸ் ரொம்ப ஜாஸ்தி, மேட்டர் தெரிஞ்சா ஆரவ்வ காப்பாத்த போறோம்னு பெரிய குரூப்பே கிளம்பிடும். அப்புறம் நமக்கு கிட்னாப்பர்ஸக்கும் பேன்ஸுக்கும் வித்தியாசம் தெரியாது. பஸ் டிரைவருக்கு இத இப்பவே இன்பார்ம் பண்ணிடுங்க. இறந்து போன ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு தந்திருவாங்க. பஸ்ஸில எரிஞ்ச அந்த பொண்ணு மேட்டர சீக்கிரம் முடிங்க, நாம லேட் பண்ணா விஷயம் ப்ரஸ்க்கு போயிடும். இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில ஆரவ்வை மீட்டு வரனும்.”

 

அதே நேரம் காட்டிற்குள் தனது மொத்த குழுவுடன் காலடி எடுத்து வைத்தான் கடத்தல் கூட்ட தலைவன். “இது வரைக்கும் ஆரவ்வும் அந்த பொண்ணும் இந்த காட்டுலதான் இருக்காங்கன்னு போலீஸ்க்கு தெரியாது. வெளியதான் தேடுறாங்க. நமக்கு நேரம் ரொம்பவும் குறைவா இருக்கு. பத்து பத்து பேரா பிரிஞ்சு தேடுங்க. யாரு கைல கிடைச்சாலும், அவன டேங்கர் லாரில தூக்கி போட்டு நாம சொன்ன இடத்தில கொண்டு போய் ஒப்படச்சிடுங்க. மத்தவங்க எல்லாம் எப்படியோ வந்து சேரட்டும். நமக்கு இதுல வரப்போர அமவுன்ட் ரொம்ப பெருசு. இதுல முக்கியமா விஷயம் அவன உயிரோட ஒப்படைக்கனும், ஆனா கை கால் ஒடஞ்சா பரவாயில்லை. புரிஞ்சதா…… ம் பிரிஞ்சு போங்க”.

 

அதே நேரம் ஆரவ்வும் பார்பியும் மலைமேல் நெடுந்தூரம் நடந்து சென்றிருந்தனர். அவன் தன்னை தூக்கிய ஞாபகமே அவளுக்கு தோன்றவில்லை. நல்ல வேளை கீழ விழாம தப்பிச்சிட்டோம் என்ற மட்டிலே அவள் இருந்தாள். ஆரவ்விற்கோ கைகளில் பர பரவென்று ஏதோ ஊருவதை போன்ற உணர்வு. அவன் கைகள் அவனுக்கே புதிதாய் முளைத்தது போல் வேறாக தெரிந்தது. இதுவரை அவன் பணத்தை கொடுத்து பல பெண்களுடன் உறவாடி இருந்திருக்கிறான். ஆனால் இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது இதுவே முதல்முறை. ‘இவளிடம் அப்படி எது என்னை ஈர்க்கிறது…’ என்ற யோசனையோடு நடந்தவனை அவள் குரல் நிஜவுலகிற்கு இழுத்து வந்தது.

 

“இந்நேரம் எங்க வீட்டுல எல்லாரும் என்ன காணும்னு கவலபட்டுகிட்டு இருப்பாங்க. அப்படியே அந்த அவசர கல்யாணமும் நின்னுபோய் இருக்கனும்.”

 

“என்னது, உனக்கு கல்யாணமா?” கோபமா ஆச்சரியமா என புரியாத உணர்வு அவனுள்.

 

“ஆமாங்க நாளைக்கி காலைல, பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்றாங்க” என்றாள்.

 

” சே அவ்ளோதானா… கல்யாணம் இல்லைல. ஏன் பர்ஸ்ட் இயர் படிக்குறப்பவே உனக்கு கல்யாணம் பண்றாங்க?” மெதுவாக பேச்சு கொடுத்து அவளறியாமல் அவன் அவளையறிய முயன்றான்.

 

“ஹலோ நான் பைனல் இயர் படிக்கிறேன். அப்புறம் எங்களோட ஊர் ரொம்ப சின்ன கிராமம். அங்க எல்லாம் முன்னாடியே ஜாதகம், குடும்பம், வரதட்சணை எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டு தான் அப்பீசியலா பொண்ணு பாக்க கூப்பிடுவாங்க.” என்றாள்.

 

“உனக்கு ஓகே வா….” என்றான் சோகமாக.

 

“இல்லப்பா…” என்று இழுத்தாள்.

 

“ஏன்?”

 

“அந்த மாப்பிள்ள வெளிநாட்டுல ஒரு பெரிய கம்பெனில வேல பாத்துட்டு இருக்கானாம். எனக்கு வெளிநாடு போகவே பிடிக்கல, சொந்தகாரங்க எதாவது விசேஷம், இல்ல அவசரம்னு கூப்பிட்டா உடனே கிளம்பி வர்ற தூரத்தில வாழனும். குடும்பம் குழந்தைன்னு வெளி நாட்டுல செட்டில் ஆயிட்டா, ஆயிசுக்கும் திரும்ப இந்தியாக்கு வரவே முடியாது. வாழ்க்கைன்னா என்ன? எல்லாரும் சேர்ந்து வாழ்றதுதான. என்ன பொறுத்த வரைக்கும் சின்ன சின்ன நல்லது கெட்டது எல்லாம் குடும்பத்தோட சேர்ந்து பேஸ் பண்றதே ஒரு தனி சுகம்ப்பா. தனி தீவா வாழ்றது நம்ம குழந்தைகளுக்கு நாம கட்டி தர்ர ப்பைவ் ஸ்டார் ஜெயில்.” என்றாள்.

 

எவ்வளவு சுலபமாக என் மனதின் வலியை சொல்லி விட்டாள். ஒரு குடும்பத்துக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன். என் குழந்தைகளும் இப்படி தன்னந்தனியாக வாழ வேண்டுமா? கூடவே கூடாது… என்று தனக்கு தானே எதிர்காலத்தை வகுத்து கொண்டான்.

 

“அப்போ வீட்ல வேற மாப்பிள்ள பாக்க சொல்ல வேண்டியதுதான”

 

“அங்க தான் பிரச்சனையே. எனக்கு ஜோசியம் பாக்க போனப்ப, ஜோசியக்காரரு ஒரு பெரிய கண்டம் வருது, நான் கண்டிப்பா ஓடி போய் காதல் கல்யாணம் தான் செய்வேன்னு சொல்லிட்டாராம். அதான் குடும்ப கௌரவத்துக்காக இப்படி அவசர அவசரமா மேரேஜ் பண்ணி வைக்க ட்ரை பண்றாங்க…”

 

“இன்னுமாம்மா இதெல்லாம் நம்புறீங்க? ஒருவேள அந்த ஜோசியர் பொய் சொல்லிருந்தா?”

 

“அவர் எங்க குடும்ப ஜோசியர். அவரோட வயசு எம்பத்தஞ்சுக்கும் மேலே இருக்கும். எங்க தாத்தாவோட சின்ன வயசில இருந்து, நாங்க அவருகிட்டதான் ஜோசியம் பாக்குறோம். இது வரைக்கும் எங்க குடும்பத்துக்கு அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடந்திருக்கு.”

 

“ம்… அட, இது நல்லா இருக்கே. இப்ப என்கூட ஓடி வந்துட்ட. நெக்ஸ்ட் என்ன சொன்ன? இன்னிக்கு நாள் வேற நல்லா இருக்கு” என்றான் சிரிக்கும் கண்களுடன்.

 

“அவளோ சோகமாக என் தங்கச்சி பெர்த் டே இன்னிக்கி. கேக் ஸ்னாக்ஸ் எல்லாம் நான் சர்ப்ரைஸா வாங்கிட்டு வர்ரேனு அண்ணன் கிட்ட சொல்லிருந்தேன். நேத்து நைட் எல்லாரும் என்னை எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்திருப்பாங்க. இப்ப என்னை காணும்னு எங்கெல்லாம் தேடிட்டு இருக்காங்களோ? பொறந்த நாளதுவுமா என் தங்கச்சி என்ன பண்ணிட்டு இருக்காளோ, அது வேற தெரியல?” என்றபடி புலம்பிக்கொண்டே சென்றாள்.

 

“ஸோ உன் கூட பிறந்தவங்க ரெண்டு பேரா?”

 

“இல்லங்க நாங்க மொத்தம் ஆறுபேர்”

 

“ப்பா… உங்க அப்பா சிக்சர் அடிச்சிருக்காரு போல. இதுல நீ எத்தனையாவது டிக்கெட்”

 

“இல்ல இல்ல… தப்பா புரிஞ்சுகிட்டீங்க, நான் என் அண்ணன் தவிர மத்தவங்க எல்லாம் எங்க அத்தை, சித்தி பிள்ளைங்க.”

 

“ஓகோ… இன்னிக்கி பேர்த் டே யாருக்கு. இப்போ வயசென்ன?”

 

“கடைக்குட்டி ஜனனிக்கு பதினாறு வயசு இன்னிக்கு ஸ்டார்ட் ஆகுது. எங்க வீட்டு வாலு. யாருக்கும் பயப்பட மாட்டா. புடிக்கலன்னா தைரியமா வேண்டாம்னு எங்க தாத்தாகிட்டயே சொல்லிடுவா. அவள தெரியாதவங்க ஊருக்குள் யாருமே கிடையாது, அவ்ளோ பெரிய அறுந்த வாலு. குணத்துல எனக்கு அப்படியே ஆப்போசிட் அவ. ஆனா ஜனனி சின்ன வயசில இருந்தே, மத்தவங்களவிட என்கிட்ட மட்டும் ரொம்பவே அட்டாச்சிடா இருப்பா.”

 

“ஓ.. உன் பேரென்ன”

 

“எனக்கு எங்களோட குலதெய்வ….” வேகமாக திரும்பி அவனை பார்க்க குறும்புடன் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

 

“ஐயயோ இவ்ளோ நேரம் நான் சொன்னதெல்லாம் மறந்திருங்க. எங்க பாட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என்றாள் கெஞ்சிடும் கண்களோடு.

 

இப்போதுதான் அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் ஆரவ் மனதில் இன்னும் அழுத்தமாக பதிவாகின.

 

“உனக்கு உங்க பாட்டினா அவ்ளோ பயமா?”

 

“பயம்லாம் இல்லீங்க… தெரியாத ஆளுங்ககிட்ட ஊர், பேர், குடும்ப விஷயம் எதையும் சொல்ல கூடாதுன்னு பாட்டி எப்பவும் என்கிட்ட சொல்லுவாங்க. என்ன இருந்தாலும் பெரியவங்க நம்ம நல்லதுக்காக சொல்லி இருக்காங்க, ஸோ அவங்க வார்த்தைக்கு நான் மரியாதை குடுக்கணும்ல” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்.

 

“இப்போதான் எனக்கு எல்லாமே தெளிவா புரியுது, நான் இங்க ஒரு பொண்ணு கூட சுத்திகிட்டு இருக்குறதா நினைச்சேன். பட் யூ ஆர் டூ இன்னசன்ட், ரொம்ப சைல்டிஷ்ஷா பிகேவ் பண்ற. அதுனாலதான் உன் பாதுகாப்புக்காக உங்க பாட்டி அப்படி சொல்லிருக்காங்க. ஆனா, இப்ப இருக்குற சிட்சுவேஷன்ல, இங்க நீ இப்படி இருக்குறது ரொம்பவே டூ மச். உனக்கு எப்போ சரின்னு தோணுதோ அப்ப வந்து என்கிட்ட உன் பேரு, ஊரு எல்லாம் சொல்லு. நான் இனிமே உங்கிட்ட இதப்பத்தி கேட்கவே மாட்டேன்”

 

‘மிகச் சரியாக தன்னை கணித்து விட்டான். அதுவும் தான் பேசிய நான்கே வார்த்தைகளிலே’ என அதிர்ந்து போன பார்பியோ ஆரவ்வின் முகத்தினை “ங்ஙே……..” என பார்த்து கொண்டிருந்தாள்.

 

 

இடம்: பார்பியின் வீடு. வீட்டை சுற்றி அந்த கிராமத்து ஆட்கள் நிறம்பி இருந்தனர். வெளியே இருந்தவர்களில் ஒரு கிழவி இன்னொரு கிழவியிடம், “யாத்தே… அந்த புள்ள ரொம்ப அப்புராணியாச்சே… பாக்க கிளியாட்டமுல இருக்கும். வீட்ட விட்டு வெளிய வந்துச்சுன்னா, அது இருக்குற இடமே தெரியாதுத்தா… அம்புட்டு அடக்கமா நடந்துக்குவா… நேத்து காலேசுக்கு போயிட்டு பொழுது சாயிரப்போ வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்திருக்கு… பாவி பயலுக எவனுகளோ பஸ்ஸோட சேர்த்து அந்த புள்ளைய கொழுத்திப்புட்டானுவ. ஆஸ்பத்திரிக்கி போயி பாத்தவகல்லாம், எலும்பு கூட தேறலன்னு சொல்லிகிட்டு இருந்தாக….” என்றார்.

 

உள்ளே நடுவீட்டில் அவளது போட்டோவிற்கு மாலை போட்டு விளக்கேற்றி இருக்க, அதன் முன்னால் பொட்டலமாக ஒன்று. பார்பியின் குடும்பத்து ஆட்கள் அத்தனை பேரும் அவள் இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

 

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: