Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 04

பாகம் – 4

 

காதலியின் ஈரம் சொட்டும் கூந்தலாக காட்டு மரங்கள், காதலனின் கரங்களென காலை கதிர்கள், இருவரும் ஆர தழுவிட பொழுது புலர்ந்திட்டது. முதல்நாள் மழை மலையின் பாதைகளை நன்றாக குளிக்க வைத்திருந்தது.

 

ஆரவ் பார்பி இருவரையும் மலை அன்னை தன் மடியினில் வாங்கிக்கொண்டாள். ஆரவ் மிக சுலபமாக வழுக்கு பாறைகளிலும் மணல் மேடுகளிலும் தாவி ஏறி சென்றான், ஆனால் பார்பிக்கோ பாதை அடிக்கடி வழுக்கி போக்கு காட்டியது. பின்னே அவனின் இம்போர்ட்டடு ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஆயிரங்களில் இருக்கும், அது தரையை பற்றி நடந்தது. நம்ம செப்பல் லோக்கல் பஜார் கடையில் 150 ரூபாய்க்கு வாங்கியது. அதிலும் ஸ்டோன் மாடல் வேண்டும் என்று அடம்பிடித்து அழுது புரண்டு வாங்கி இருந்தாள். அது இப்போது அவள் காலை வாருகிறது.

 

ஆரவ் தயக்கமின்றி மேலும் மேலும் காட்டினுள்ளாக முன்னேறி சென்றான். பார்பிக்கோ குருவி சத்தமே கோட்டான்களின் கூவலாக மனதினை நடுநடுங்க வைத்திட, அந்த காட்டு பாதை அவளை அவ்வளவு பயமுறுத்தியது. முன்பின் தெரியாத ஒருவனை நம்பி இவ்வளவு தூரம் தனியாக வருவதும் சரியாக படவில்லை. ஒழுங்காக தரை வழியாகவே போயிருக்கலாம் என மனது கிடந்து அடித்து கொண்டது. அவளுக்கு இப்போது அவனை பின் தொடர்வதை தவிர வேறு வழியும் இல்லை.

 

மணல் பாதைகள் முடிந்துவிட, அடுத்ததாக ஒன்றரை அடி உயர பாறைகள் வர தொடங்கியது. ஆரவ் ஒரே தாவில் மேலே ஏறினான். அவள் ஏற தோதாக கை நீட்டிட, அவளுக்கோ கையை பிடிக்கலாமா வேன்டாமா என்ற குழப்பம். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தானே அவளை தூக்கி கரகம் ஆடினான், அவளுக்கு அந்த பயமே இன்னும் மனதை விட்டு மறையவில்லை பாவம்…

 

ஆரவ் புன்னகையுடன், “நானும் நல்ல குடும்பத்து பையன் தான் மா. தைரியமா வா” என்றதும் பார்பி தயங்கியபடியே அவன் கையை பிடித்து மேலே ஏறினாள்.

 

“இங்க பாரு பார்பி… நாம இங்க இருக்குற வரைக்கும் நாமதான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருந்துக்கனும். நீ என்னை ஆம்பளைன்னு நினைக்காம, உன் க்ளோஸ் பிரண்ட்ஸ்ல ஒருத்தியா  நினைச்சுக்க. அப்பத்தான் உன்னால கம்பர்டப்லா பீல் பண்ண முடியும், ஓகே…” என்றான்.

 

ஆனால் அவனுக்கு கிடைத்த பதில் என்னவோ, சுவாரஸ்யமில்லாத வெறும் “ம்…” மட்டுமே.

 

“நீ என்ன கொஞ்சமும் நம்பலன்னு நல்லா தெரியுது. ரௌடிங்ககிட்ட இருந்து உன்னை காப்பாத்தின என்னையே நீ நம்பலைல, எனக்கு நல்லா வேணும்…”

 

“அப்படி எல்லாம் இல்லங்க…”

 

” அப்டியா??? அப்புறம் ஏன் உன் பேர் கூட எனக்கு சொல்ல மாட்டிக்கிற? அட்லீஸ்ட் உன் ஊர் பேர், காலேஜ் பேர் ஏதாவது சொல்றியா? உனக்கு ஏதும் ஒன்னுனா நான் உன் பேரன்ட்ஸ்க்கு என்ன பதில் சொல்ல?” என்றான்.

 

“சும்மா என்னையே திட்டாதீங்க… நீங்க முதல்ல உங்கள பத்தி சொன்னீங்களா? உங்கள கடத்தினாங்களே அவங்க யாரு? அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

 

“என்னை பத்தி தெரிஞ்சுக்கிற ஆசைல கேக்குறயா, இல்ல என் மேல நம்பிக்கை இல்லாம கேக்குறியா?” பதிலின்றிபோக பெருமூச்சுடன் ஆரம்பித்தான்.

 

” நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை. அம்மா அப்பா தமிழ்தான். எனக்கு ஒரு தங்கச்சி இருக்குறா, அம்மா எனக்கு 7 வயசு இருக்கும் போது இறந்துட்டாங்க. அப்பா என்னோட பனிரெண்டு வயசில இறந்து போனார். கிரிக்கெட் நான் நல்லா விளையாடுவேன். என்னோட ஸ்கூல் எனக்கு நிறைய உதவி செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு மேலே வந்தேன். இன்னிக்கு என் சொத்து மதிப்பு 1000 கோடிக்கும் மேல்.”

 

“சமீபத்தில ஒரு கூல்டிரிங்ஸ் கம்பெனி விளம்பரத்தில் நடிக்க முடியாதுன்னு சொன்னேன். ப்ரஸ் மீட் ல ஏன் நடிக்கலன்னு கேட்டாங்க. உடம்புக்கு கேடுன்னு தெரிஞ்சும் எப்படி நடிக்கன்னு சொன்னேன். இந்த நியூஸ் மக்கள்கிட்ட வைரலாக பரவிடுச்சு.”

 

“மக்கள் அந்த கம்பெனி சம்பந்தப்பட்ட பொருளை எல்லாம் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. இதனால கம்பெனிக்கு பயங்கர லாஸ். அவங்க ஷேர்ஸ் எல்லாம் ரெண்டு மாசத்துல ரொம்பவும் டவுன் ஆயிடுச்சு. என்னால தான் இப்படி ஆச்சு, என்னை வச்சே ஒரு விளம்பரம் வந்தா, விட்ட மார்கெட்ட புடிச்சிரலாம்னு அவங்க நினைச்சாங்க.”

 

“முதல்ல கெஞ்சி கேட்டாங்க. அப்புறம் நிறைய பணம் தர்ரதா சொன்னாங்க. நான் ஒத்துக்கல. அதுக்கப்புறம் மிரட்டி பாத்தங்க. அதுனால கோபத்துல நான் அவங்க மேல கேஸ் போட போறேன்னு தெரிஞ்சதும் என்ன கடத்திட்டாங்க. இது தான் என் லைப் கிஸ்ட்ரி. ”

 

பார்பி, “இதுக்கெல்லாமா கடத்துவாங்க?”

 

“அவங்க பக்கம் இழப்பு அதிகம்”

 

“மக்கள் நீங்க சொன்னா எப்படி தன் விருப்பத்தை மாத்திக்குவாங்க?”

 

“மக்கள் எல்லாருமே இப்போலாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும் அவங்கள திரி தூண்டி விட ஒரு சம்பவம் தேவை. சரி இப்போ உன்னபத்தி நீ சொல்லு ”

 

அவளிடமிருந்து மௌனமே பதிலாக கிடைக்க, “ஐ டோன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரம் யு. ஐ பீல் வெரி ஷேம்” என்றபடி கோபமாக முன்னால் நடக்க ஆரம்பித்தான். ஆரவ் நில்லுங்க ப்ளீஸ் நில்லுங்க என ஓடி வந்தாள்.

 

“என்ன” என்றான் கோபமாக.

 

“எனக்கு பசிக்குது” அவள்.

 

பசி என்ற வார்த்தை அவனை சற்றே அசைத்தது. வறுமையில் பசியின் வலியை உணர்ந்தவர்கள் நிச்சயம் எதிரில் இருப்பவர்களின் பசியை தாங்க மாட்டார்கள். அவனும் அவ்வழியே..

 

ஒரு பெரிய பாறைமேல் ஏறி சுற்றிலும் பார்வையை வீசி, தேடி ஒரு மாமரத்தை கண்டுபிடித்தான். செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் அருகில் இருவரும் வந்து நின்றனர். காய்களே அதிகமாக இருக்க பழங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடியது. எட்டடி உயரத்தில் இருந்த மூன்று பழங்களை ஒரே தாவில் அவன் பறித்துவிட்டான்.

 

அவள் ஆசையாக அருகில் வரவும், “பேரை சொல்லு பழத்தை தர்றேன். இல்லனா நீயே பறிச்சுக்கோ” என்றபடி திரும்பியும் பாராமல் சென்று பாறைமேல் அமர்ந்து கொண்டான்.

 

அவள் உயரத்திற்கு கிட்டத்தட்ட இரண்டடி உயரத்தில் ஒரு பழம் இருந்தது. நான்கு காய்களுடன் சேர்த்து ஐந்தாவதாக ஆடி கொண்டிருந்தது அந்த பழம். காயோ பழமோ நிச்சயமா ஏதாச்சும் ஒண்ணு கிடைக்கும் என்று நம்பி தாவினாள், பிடிக்க முடியவில்லை.

 

“இப்பவும் சொல்றேன் மரியாதையா வந்து உன் பேரை சொல்லிட்டு பழத்தை சாப்பிடு” என்றான்.

 

“என்னாலயும் முடியும். இப்ப பாருங்க… பறிச்சு காட்டுறேன்..” என்றபடி நான்கைந்து முறை தாவினாள். அவள் ஒவ்வொரு தடவையும் குதிக்கையில் அவளின் மெல்லிய துப்பட்டா கழுத்துமேலே ஒட்டி செல்ல, அம்பர்லா சுடிதார் சிறிய குடையென விரிந்து சுருங்க, அவள் சிற்றிடை தரை இறங்கும்போது அத்தனை அழகு. அவன் கண்கள் மேலே இருந்த கனிகளை மறந்து, பதிலாக கீழிருந்த கனிகள் புறமாக மாறி மோக போதை தேட தொடங்கியது.

 

தலையை சிலுப்பி “அடச்சீ….. அவ என்ன பார்த்தா என்ன நினைப்பா. இவ என்னுடைய பொறுப்பு, நான் பத்திரமா அவங்க வீட்டுக்கு திருப்பி குடுக்கணும்” என்று வேறுபக்கமாக திரும்பி அமர்ந்தான்.

 

பார்பிக்கோ ஒரு பழம் கூட கிடைக்கவில்லை. அவன் தர மாட்டேன் என்றதனால் தானும் அவனிடம் கேட்கவே கூடாது எனும் வைராக்கியம். பின் ஓரமாய் கிடந்த ஒரு கல்லை உருட்டி கொண்டு வந்து போட்டு அதன் மேல் ஏறி தாவினாள்.

 

“நிச்சயமா இந்த தடவ பறிச்சிடுவேன் பாருங்க, ஆஆஆ………… ஆரவ். ஆரவ்…… காப்பாத்துங்க……….”

 

அவள் அலரல் சத்தம் கேட்ட அடுத்த நொடி விருட்டென்று எழுந்து, வேகமாக அவள் திசையில் ஓரடி நடந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

“ஹா…… ஹா…….. ஹா………..” நம்ம ஆரவ் தான். வயிற்றை இறுக பிடித்து அடக்கமாட்டாமல் சிரித்தான்.

 

கல் மேல் ஏறி தாவிய பார்பி ஐந்து பழங்களையும் கிளையோடு சேர்த்தே பிடித்துவிட்டாள். ஆனால் கிளைதான் அவளை விடவில்லை. பழங்களோடு பழமாக தொங்கி கொண்டிருக்கிறாள். ஏழு அடிக்கு மேல் இருந்த கிளை, அவளை குதித்து கீழே இறங்க விடாமல் செய்து பயமுறுத்தியது.

 

ஆரவ் அவள் பின்னால் வந்து நின்று, “ஹா… உனக்கு இதெல்லாம் ஹா… ஹா…. தேவையா… ஹா…… பழமும் கிடையாது…. ஹா….. பலமும் கிடையாது” அவனால் சிரிக்காமல் ஒரு வார்த்தை கூட முழுதாய் சொல்ல முடியவில்லை.

 

“ப்ளீஸ். என்னை இறக்கி விடுங்க ஆரவ். கீழ விழுந்தா அடி பட்டுரும்னு பயமா இருக்கு” திணறினாள்.

 

தன்னை சற்றே நிதானித்து, “உன் பேர் என்ன? நீ பதில் சொன்னாதான் இறக்கி வி்டுவேன்”

 

“சொல்ல மாட்டேன்…”

 

“அப்போ நீ இன்னிக்கி முழுக்க இப்டியே வவ்வால் மாதிரி தொங்க வேண்டியது தான்…”

 

அவர்களின் பேச்சு வார்த்தையை தடை செய்யும் விதமாக, அவள் பற்றி இருந்த கிளை கொஞ்சம் கொஞ்சமாக முறிய தொடங்கியது. சரட்…டென்று கிளை ஒடிய ஆஆஆஆ என கத்தியபடி இரண்டடி கீழே வந்தவள் பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள். விழவில்லை என்பதை தவிர மூளை பயத்தில் வேறு எதையும் யோசிக்கவில்லை.

 

கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கேட்ச் பிடிக்க சொல்லியா தரனும். பின்புறமிருந்தவன் மிகச்சரியாக அவள் இடையின் இடைவெளியில் கையை விட்டு, இறுக பிடித்து இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டான். இன்னும் அவள் கண்களை திறக்கவில்லை. இப்போது திணறுவது அவன் முறையானது. மனதிற்குள் மெதுவாக சொன்னான் “பார்பி…”

 

பஞ்சு பொதியலென இருக்கும் அவள் மேனியை கைகளில் வைத்துக்கொண்டு மனதை அடக்க பெரும்பாடு பட்டான். பசியோடு இருப்பவன் கைகளில் பிரியாணியை கொடுத்து சாப்பிட கூடாது என்றால் முடியுமா. அவள் வாசம் அவன் சுவாசத்தை தடுமாற செய்தது. கைகளை இருந்த இடம் மாறாமல் அவளை கீழே இறக்கி விடுவதற்குள் செத்து பிழைத்தான் என்றால் தகும்.

 

அவன் வாழ்வில் வந்து போன அழகிகள் அநேகம்பேர். ஒன்று அவனை திருமணத்திற்கு கட்டாய படுத்துவார்கள் இல்லையென்றால் படுக்கை போதும் என்பார்கள். அவனின் மனதிற்க்குள் யாரும் வர முயலவில்லை. அவனும் இதுநாள்வரை வசதிக்கு வந்ததை அனுபவித்து, வராததை விலக்கி சென்றான். வாய்ப்புகள் வரும் போதே அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது அவன் கருத்து. யாராவது, ‘இது தவறு’ என்று கருத்து சொல்ல வந்தால் அவர்கள் கதி அவ்வளவு தான்.

 

சொந்த காலில் முன்னேறியவர்களுக்கு சற்று தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்லதோ கெட்டதோ நானே சமாளிக்க முடியும். தேவையில்லாமல் நீ என் விஷயத்தில் தலையிடாதே என்பார்கள். அவனும் அப்படித்தான். அவனுடைய தேவை காதலியோ, புத்திசாலியோ, பேரழகியோ கிடையாது. தாயாக தோழியாக அவனையே உயிராய் நினைத்து, தறிகெட்டு ஓடும் மனதை வசீகரம் செய்யும் ஒருத்தி. சுருங்க சொன்னால் பார்பி போல் ஒருத்தி…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: