Skip to content
Advertisements

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 12

விதாவைக்  கடலில் தூக்கி வீசிவிட்டு உள்ளே வந்தான் அந்த உயரமனிதன்.

சார் சுறாவுக்கு இரை போட்டாச்சுபீட்டரின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.

இவன் தன்னை பயமுறுத்த அவ்வாறு சொல்கிறான்என நினைத்திருந்த விஷ்ணுவிற்கு இந்த செய்தி இதயத்தை நிறுத்தியது போல இருந்தது.

டேய் கவிதா குழந்தை மாதிரிடா…. அவளை கொல்ல எப்படிடா மனது வந்தது உனக்குஐயோ இது தெரிந்திருந்தால் அவளை வரவிட்டிருக்க மாட்டேனேஎன அழும்போது அவள் செய்யும் குறும்புத்தனங்கள் கண்ணில் வந்து நின்றது. யார் உயிரோடு இருக்கும் போது நம்மை சிரிக்க வைக்கின்றனரோ அவர்களே இறக்கும்போது நம்மை அதிகமாக அழவும் வைக்கின்றனர். கவிதாவை குழந்தையாக எண்ணியருந்த விஷ்ணுவின் கண்களை அவனால் அணைபோட இயலவில்லை.

என்னடா இதுக்கே இப்படி அழுகிறாய்…. அவள் முதல்ல எனக்கு டார்லிங் அப்புறம்தான் உனக்கு தோழி…” என கூறிவிட்டுஉனக்கும் அவளுக்கும் ஏதாவது?!” என பீட்டர் இழுக்க..

ச்சீ வாயை மூடுடா அவளது பெயரை கூறகூட உனக்கு தகுதி இல்லை

ரொம்பதான் கோபபடுற விஷ்ணுஇன்னொரு விசயம் சொல்லவா?!”

“……” விஷ்ணு அவனை முறைததுகொண்டிருந்தான் கைகள் கட்டப்பட்ட நிலையில்.

இந்த மீரா பொண்ணு தெரியுமா

அவளை தான் கொன்றுவிட்டாயே

அந்த கதையை சொல்லட்டுமாஅவளையும் இந்த சுறாவுக்குதான் இரையாக போட்டேன்.. ஆனால் என்ன இரண்டு உயிர் போயிருச்சு அவள் வயிற்றில் இருந்த குழந்தையோடஆனா அது என் தப்பில்லை நான் அவளை முன்னாடியே கலைக்க சொன்னேன் அவள்தான் இது உன் வாரிசு பீட்டர் நான் அதை என் உயிரை கொடுத்து காப்பாத்தணும்னு சொன்னாள். கடைசியில் உயிரை கொடுத்துட்டாள்

பொண்ணுங்க தான்டா நம்ம நாட்டோட பொக்கிசம் அவங்களை கொல்ல எப்படி மனது வருகிறது உனக்கு

ஹா ஹா ஹா.. முழுசா கேளுப்பா விஷ்ணுஎன அன்று நடந்த கதையை கூற துவங்கினான்.

அன்று….

இது என்ன பீட்டர் அமெரிக்கா மாதிரி தெரியலை

நீதானே செல்லம் சொன்ன நாம் இருவரும் தனியாக ஓர் வீட்டில் இருக்கணும்னு.. அதான் இந்தத்  தீவில் உனக்கு ஒரு வீடு கட்டியிருக்கேன்என கூறும்போது கப்பலின் என்ஜின் உறுமிகொண்டு கிளம்பியது.

காதல் அதிகமானதால் அவனை கட்டியணைத்துக்  கொண்டாள். அவளது வயிற்றில் கை வைத்தவன்

நாம் இருவர் மட்டும்தான்னு சொன்ன இப்போ மூணாவது ஒரு ஆள் வர்ராங்க

வெட்கத்தில் சிரித்தாள் மீரா.

என்னடி இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்க அணையப் போற விளக்கு பிரகாசமா எரியுமே அந்த மாதிரியா

மீரா கண்கள் விரிய குழப்பமாக பார்த்தாள்.

அவளை கீழே தள்ளிவடவே நிலைதடுமாறியவள் ஒரு கம்பத்தில் போய் இடித்தாள். வயிற்றில் பலமாக அடிப்பட்டது. வயிற்றை பிடித்துக் கொண்டாள் எழுந்திருக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.

பீட்டர் என்ன ஆச்சு உனக்குஎன்னை சாக சொல்லியிருந்தா நானே செத்திருப்பேனேஏன் உன் கைய கரையாக்கிக்கிற…” என முனங்கிக் கொண்டே கூறினாள்.

நீயா செத்தா நான் நினைக்குறது எப்படி நடக்கும்சரி அதை விடு இந்த ஃபோன் உன் கடைசி நிமிடத்தை யார்கூட பேசணும்னு நினைக்குறியோ பேசிக்கோஅவளருகில் வந்த பீட்டர் அவளது தாடையில் கைவைத்து கொடுத்தான்.

நான் சாகும்போது பாக்குற கடைசிமுகம் உன்னுடையதாதான் இருக்கும் கீர்த்திஎன ஒருமுறை கீர்த்தியிடம் கூறவே

ஏன் அக்கா சாவை பத்தி பேசற

கண்களில் கண்ணீருடன்எனக்குன்னு யாரும் இல்லை உன்னைதவிர அதான் அப்படி சொன்னேன்என அவளை கட்டியணைத்த தருணம் நினைவுக்கு வந்தது.

அவளது முகத்தை பார்க்க முடியாது அவளது குரலையாவது கேட்கலாம் என கீர்த்தியின் எண்ணைப்  பதிவு செய்தால் அவளது இறுதி நிமிடங்களில்.

இனைப்பு கிடைத்துவிட்டது.

கீர்த்தனா கீர்த்தனா……”

ஆமா நான் கீர்த்தனாதான் நீங்க

“….” மறுமுனையில் அழுகுரல் மட்டுமே கேட்டது.

ஹே இது மீராஅக்கா என்ன ஆச்சு ஏன் அழறீங்க

பீட்டர் என்னை ஏமாத்திட்டான் கீர்த்தனா

என்னக்கா சொல்ற

“………கீஈஈஈஈ….ச்ச் ற்ற்ற்ற்இரைச்சல் சத்தம் கேட்க திடீரென மீராவின் அலறல் சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பீட்டர் ஃபோனை பிடுங்கியிருந்தான்.
வேறோரு எண்ணை பதிந்தவளன்.

டேய் காளி நான் பீட்டர்

சொல்லுங்க தலை

கீர்த்தனாங்கற பொண்ணு போட்டோவ வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கேன்.. அவளோட லொக்கேஷனும் அனுப்பியிருக்கேன்நல்ல லட்டு பொண்ணுதான் நீ இஷ்டபட்டதை செஞ்சிட்டு அவளை முடிச்சிடு

சரிங்க தலை

இனைப்பை துண்டித்தவன் மீராவைப்  பார்த்தான். தன் காதலன் இவ்வளவு பெரிய கொடூரமான என எண்ணும் போது அவளது அடிவயிறு வலித்தது.

பீட்டர் கீர்த்திய ஒன்னும் பண்ணிடாதடா ப்ளீஸ்அவள் சின்ன பொண்ணுடாஎன்னை வேணா கொண்ணுடு

கொல்ல தான் போறேன்என அவளது தலைமுடியை பிடித்து தூக்கினான். அவளோ அடிவயிற்றை பிடித்து கொண்டு நடந்தாள். கப்பலின் தளத்தில் மீராவின் கருப்பையில் இருந்து ரத்தம் சிந்தியது.

கப்பலின் முனைக்கு இழுத்துச் சென்று பளார் என ஒரு அறை அறைந்தான். நிலை தடுமாறி கீழே விழுந்தவளை காத்துகொண்டிருந்த சுறாக்கள் மொய்க்க, கடல் சிவப்பாக மாறியது.

கப்பலின் தளத்தில் இருந்த ரத்தத்தை பார்த்தவன்இதைக்  க்ளீன் பண்ணுங்கஎன கூற அவனது கைபேசி ஒலித்தது.

தலை நீங்க சொன்ன மாதிரியே காட்டுக்குள்ள வந்துட்டோம்…. லைவ்வா பாக்குறீங்களாஎன வீடியோ காலிங் இயக்கப்பட்டதுஅதை பார்த்த பார்த்த பீட்டர் நான் அங்கு இல்லையே என வருத்தபட்டான்.

ஆனா விஷ்ணு கீர்த்தியும் திவ்யா மாதிரி அழகுதான் வீடியோ பாக்குறியாஎன கைபேசியை நீட்ட முகத்தை திருப்பினான் விஷ்ணு.

ஏன்டா இப்படி பன்ற?!”

பின்ன கீர்த்திய நான் கொல்லாம இருந்திருந்தா இந்த திவ்யா என்னை தேடி வந்திருப்பாளா?!… இவளைப்  பிடிக்கதான் மீரா கீர்த்தி அப்படின்னு இரண்டு புழுக்களை கொண்றேன்என கொடூரமாக சிரித்தான்.

உன் உயிரை காப்பாத்துன என்கிட்டயே இப்படி பண்றியே…. உன்னையெல்லாம் அந்த ரோட்டிலையே சாகவிட்டிருக்கனும்டாஎன விஷ்ணு கத்தினான்.

மீண்டும் பலத்த சிரிப்பு வந்தது பீட்டரிடம் இருந்து. “அட பைத்தியகாரா அன்று விபத்தும் நடக்கவில்லை ஒன்றும் நடக்கவில்லைஅது எல்லாம் என் திட்டம்தான்

விஷ்ணு குழப்பமாக பார்த்தான்.

என்ன அப்படி பாக்குற உன்னை பிடிக்கதான் அந்த பொறிஆனால் உனக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சுதான் இந்த கம்பெனியே ஆரம்பிச்சேன். நீ ஒரு எலிமாதிரி வந்து மாட்டிகிட்ட

ஏன்டா இதெல்லாம் செய்யுறதிவ்யாவை விட்டுடுடாஎன்னை வேணா கொலைபன்னிரு

ஹா ஹா ஹா ஹா…. உங்க ரெண்டுபேத்துல ஒருத்தர் செத்தா கூட நான் நினைக்ககுறது நடக்காதுடாஎன் காரியம் முடியும்போது நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டீங்க

என்னடா சொல்ற

இது யார்ன்னு தெரியுதா?” என தனது கைபேசியில் இருவரின் ஓவியத்தை காட்டினான்.

அதில் ஒன்று விஷ்ணுவும் மற்றொன்று ரம்யாவும். இருவரும் குதிரையின் மீது அமர்ந்திருந்தனர் போர் உடையில்.

இவள் இந்திரபுரியின் இளவரசி இந்திராணிஇவன் குடகு சாம்ராஜ்யத்தின் அரசன் இந்திரவர்மன்என பீட்டர் கூறவே தனக்கு வந்த கனவை ஊர்ஜிதபடுத்ததினான் விஷ்ணுவாகிய இந்திரவர்மன்.

இவங்களை மாதிரியே நீங்க இரண்டு பேரும் இருக்கீங்கஅதுக்கு காரணம் இருக்குஅது பத்தாயிரம் வருடத்திற்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம்…. அதற்கு பெயர் அகோரியபோர்கப்பலின் மூலைமுடுக்கெல்லாம் அந்த கர்ஜனை பட்டு எதிரொலித்தது.

பீட்டர் மேலும் தொடர்ந்தான். “அகோரியபடை இதுவரை தோல்வி கண்டது குடகுப் படைகிட்ட மட்டும்தான். அந்த இந்திரவர்மன் சிறு குழந்தையா இருக்கும்போதே அந்த மாபெரும் படையோட மன்னரை வீழ்த்தினான். ஆனால் அவரோட மகன் அகோரியன் முழு கோபத்தோட அகத்திய முனிவர்கிட்ட சீடனாக சேர்ந்தான். அகோரியனுக்கு தேவை இந்த உலகத்தையே அடிமைபடுத்தணும் பல லட்சம் வருடத்திற்கு. அதனால் யோக கத்துகிட்டு ஒரு சக்கரத்தை மட்டும் இயக்கி பல ஆயிரம் வருடம் உயிர்வாழும் வித்தையை கத்துகிட்டார். ஆனால் அவருக்கு அது போதாதுஇறுதிவரை சாகாமல் இருக்கணும் என்பது ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற அவருக்கு கிடைத்த ஒரு சாவி பிரம்ம அட்சயம்
என பீட்டர் கூற

பிரம்ம அட்சயம் அந்த ஆறு தானே அது இப்போது அழிந்திருக்குமேஅப்படி இருந்தாலும் அது உனக்கு கிடைக்காதுஎன விஷ்ணு தெளிவாகக்  கூறினான்.

நீ என்ன உளறுகிறாய்அந்த பிரம்ம அட்சயம் இந்திரபுரியில் இருந்ததால்தான் அதன்மீது போர் தொடுத்தார் அகோரியன். போரில் அகோரியன் வென்றாலும் பிரம்ம அட்சயத்தை காண்டீபனும் நீயும் காப்பாற்றிவிட்டீர்கள். ஆனால் அது இன்று நடக்காது.‌.. இதோ அந்த பிரம்ம அட்சயம்என மயங்கியிருந்த ரம்யாவை காட்டினான்.

அன்று…..

தங்கப் பேரலை போரை முடிந்திருந்தது. போரின் நினைவாக மன்னர் மற்றும் சிலரின் தங்க உயிர் உருவங்கள் அகோரியனின் கப்பலில் ஏற்றப் பட்டது.

அகோரியனின் எண்ணம் எல்லாம் இந்திராணியின் மீதே இருந்தது. அமைச்சரின் கணிப்பு சரியாக இருந்ததால் அந்த மூவரும் குதிரையில் பறந்து செல்லுமிடம் காண்டீபன் கோட்டையான செரிபியன்தீவு.

கப்பலை இயக்குங்கள்என அகோரியனின் தமயன் செங்கோரன் முழங்க கப்பல் படையின் தளபதியாகிய அவனது குரலுக்கு கப்பல் படை வங்காளவிரிகுடா குளத்தில் சீறிபாய துவங்கியது.

கடும் சூரியனின் கதிரிலும் குளிர்ந்த காற்று வீசும் அளவிற்கு காண்டீபனின் குதிரை வானத்தில் பறக்க இந்திராணியின் தோளில் முகம் சாய்த்து அவளை அணைத்துக்  கொண்டு அமர்ந்திருந்தான் இந்திரவர்மன்.


அவனது இந்த அணைப்பு வாழ்க்கை முழுதும் வேண்டும் என எண்ணினாள் இந்திராணி. ஆனால் போரில் வீரர்கள் இந்தமாதிரி பாதியிலேயே ஓடியதாக அவள் கேள்விப்பட்டதில்லை.

தீவுகளின் அரசே போரில் வெற்றி அல்லது வீரமரணம் இதுவே போரின் நியதிஅதை விடுத்து நாம் ஏன் ஓடுகிறோம்“- இளவரசியாக மாறியிருந்தாள்.

சோகமான முகத்துடன்போர் முடிந்துவிட்டது இந்திராணிஎன்றான் இந்திரன்.


என்ன?!”

ஆம் நமது படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது…. அதுமட்டுமல்ல இந்திரபுரி அவர்கள் வசம் சென்றுவிட்டது..”

இதை கேட்ட இந்திராணிக்கு காற்றின் வேகத்தால் கண்ணில் நீர் பறந்தது. கையறு நிலையாக உணர்ந்தவள் தன்னால் உயிரை கூட விடமுடியவில்லையே என எண்ணினாள்.

என் மக்களின் நிலை?!”

என இந்திராணி கேட்க இருவரும் அமைதி காத்தனர்.

இந்திராணிக்கு கோபத்தில் முகம் சிவக்கநீதியை நிலைநாட்டும் தீவுகளின் அரசன் காண்டீபன்விதியையும் வெல்லும் வியூகங்களை அமைக்கும் குடகு மன்னன் இந்திரவர்மன் ஆகிய இருவரும் இருந்தும் தீயவர்களின் அகோரி படை வென்று விட்டதை எண்ணும்போது வெட்கமாக உள்ளது

சிறிய புன்னகை தென்படவேஅவர்கள் வெற்றியடையவில்லைநீதியும் சாகவில்லைஎன காண்டீபன் கூறினான்.

என்ன கூறிகொண்டிருக்கிறீர்கள்கோபம் அனலாய் இந்திராணி.

ஆம் பிரம்ம அட்சயத்தை அவர்கள் அடையவில்லை“- காண்டீபன்.

அப்படியென்றால்இந்திராணி குழப்பமானாள்.

அந்த பிரம்ம அட்சயமே நீ தான் என் காதலிஇந்திரன் பின்னாலிருந்து கூறினான்.

இந்திராணிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
அவளின் குழப்பத்தை பின்னால் இருந்த தன்னவன் உனர்ந்தான்.


இந்திராணி நீ கடவுளின் குழந்தைஉன் நீல கண்கள்தான் அதற்கு சாட்சி..இயற்கை உன்னை அடுத்த பரிணாமத்திற்கு உந்துகிறது. உன்னால் ஏழுசக்கரங்களையும் மாறுபட்ட வேகத்தில் இயக்கமுடியும். ஆனால் ஏழாவது சக்கரம் ஒருமித்து இயங்க சூரியபகவானின் அருள் வேண்டும். அவரின் கதிர்கள் பூமிதாயை அன்பாக தழுவும் தினம் இன்று. இரண்டு தெய்வங்களின் இணைப்பின் சாட்சியாக உன் இருமூளை பள்ளங்களில் ஓர் திரவம் சுரக்கும். அந்த தீர்த்தம் ஆகாய கங்கைபோல புனிதமானது. “

ஆகாய கங்கையா…?!” –இந்திராணி.

ஆம் அதற்கு அமிர்தம் என்று பெருளும் உண்டு என நீயும் அறிவாய்சாகா வரம் வேண்டும் என நினைக்கும் அகோரியின் எண்ணம் அதை அடைவதுதான். அதற்காகத்தான் இந்த போர் அவனது எண்ணத்தை அறிந்திருந்த தால்தான் நாங்கள் இருவரும் இந்திரபுரிக்கு வந்தோம்இந்த கட்டளை குடகு மன்னர் இந்திரனின் தந்தை இறப்பதற்கு முன் அவனுக்கு வழங்கபட்டது. இப்பொழுது சொல் இந்திராணி நீதி இறந்துவிட்டதா?!”
என காண்டீபன் முடித்தான்.


அவர்களின் மாபெரும் கப்பல்படையால் எப்படியும் நம்மை பிடித்து விடுவார்கள் இதை தடுக்கவேண்டும் ஆனால் எப்படிஎன இந்திராணி கேட்க.

அந்த சூரிய இணைவு ஏற்படும்போது உனது இதயம் இயங்காதிருந்தால் இதை தடுக்கலாம்என காண்டீபன் கூற.

அடுத்தநொடிநான் நீதியை காக்கவேண்டும் இப்பொழுதே உயிரை விடுகிறேன்என குதிரையிலிருந்து குதிக்க முயன்றாள்.

அவளை அணைத்திருந்த இந்திரனின் பிடியிலிருந்து மீளமுடியவில்லை அவளால்

என்னை விடுங்கள் நான் இறந்தால் தான் பூமியில் தர்மம் உயிரோடு இருக்கும்

ஆனால் நான் உயிரோடு இருக்கமாட்டேன் என்னவளேஉன் நீலவிழிகளையும் உன் பால்முகத்தையும் கானாமல் நான் உயிர் வாழ்வேன் என்று நினைக்கிறாயாஎன இந்திரன் சோகமாக கூறினான்.


இவனை விடுத்து எப்படி மறிக்கமுடியும் இந்த பாவையால் “……” எந்த பதிலும் இல்லாமல் இவளின் மனது மதிலமேல் பூனையாய் நிற்க, கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது.

குதிரை அமைதியாக செரிபியன் தீவை நோக்கி பறக்க இவர்களின் அன்பு இன்னும் சிலநிமிடங்கள்தான் என்பதை அறிந்த காண்டீபன் எதுவும் கூறாமல் தனது சாரதி வேலையை தொடர்ந்தான்.

வானில் பறந்த ஒற்றைகொம்பு குதிரை ஒரு இடத்தை அடைந்ததும் வட்டமிட்டது. அது ஒரு நிலப்பரப்பு.அதை சுற்றி கரிய நிற கப்பல்கள் முக்கோண சின்ன கொடியுடன் நின்றிருந்தன.

அவை அகோரிபடையின் கப்பல்கள்தான். வங்கக் குளம் என்று அவர்கள் கூறுவது மெய்படும் அளவிற்கு மிக விரைவாக வந்திருந்தனர். குதிரையும் நீண்டதூரம் பயனித்ததால் சோர்வடைய தீவின் ஓர் இடத்தில் இறங்கியது.


மன்னரின் வருகையால் செரிபியன் மக்கள் தலைகுனிந்து வரவேற்றனர். ஆயிரகணக்கான மக்கள் சூழ்ந்து நிற்க..அந்த கப்பலில் இருந்து சங்கொலி முழங்கியது.

அதிலிருந்து வீரர்கள் இறங்கிவரவே ஆக்ரோசமடைந்த செரிபியன் மக்கள் அவர்களை மூர்க்கமாக தாக்கினர்.

ஆனால் அவர்களது வித்தை அகோரியனின் உயிர் உலோகதோலின்முன் எடுபடவில்லை. அவன் நூற்றுகணக்கான செரிபியன் மக்களை கொண்று வீழ்த்தினான்.

நிலையை உணர்ந்த காண்டீபன் ஒரு கையை மேலே தூக்க மக்கள் பின்வாங்கினார். தீவினுள் அகோரியன் மட்டும் நடந்து வந்தான்.


என்ன காண்டீபா உன்னால் பிரம்ம அட்சயத்தை காப்பாற்ற முடியும் என நினைத்தாயா

“……” சினப் பார்வையை வீசினான் காண்டீபன்.

இவளின் அழகு என்னை கவர்ந்துவிட்டது ஆனாலும் என்ன செய்வதுநீ இவளை தூக்கிச் செல்லாமல் இருந்திருந்தால் அதை அனுபவித்திருப்பேன் ஆனால் இப்போது எனக்கு நேரம் இல்லையேசூரியன் கதிர்களை வீசியதும் இவளது தலையை பிளந்து அந்த அமிர்தத்தை எடுப்பேன்என அவன் கர்ஜனையிட சூரியன் தன் நிறத்தை சிவப்பாக மாறத்  துவங்கியது.

இந்திராணி நீ சாகும் நேரம் வந்துவிட்டதுஎன ஒரு வாளை எடுத்துகொண்டு அகோரியன் முன்னேறினான்.

அகோரியனின் பின்னால் நின்றிருந்த இந்திரனும் முன்னால் இருந்த காண்டீபனும் அகோரியனை நோக்கி சீறிபாய்ந்தனர்
.

அகோரியனின் இதயப் பகுதியில் வைரவாளை இறங்கவேண்டும் என்று தெரிந்திருந்த இந்திரன் அவனுக்கு பின்னால் இருக்க முதுகில் குத்துவது வீரமில்லை என நினைத்தான்.

உடனே தனது வாளை காண்டீபனை நோக்கி வீசிவிட்டு அகோரியனை பின்னாலிருந்து பிடித்து இறுக்கினான். ஆனால் அந்தவாள் காண்டீபன் கையில் சிக்காமல் நேராக இந்திராணியின் முன் போய் விழுந்தது.

தன்னை அனைத்ததிருந்த காண்டீபனையும் இந்திரவர்மனையும் பலமான தன் கைகளால் தூக்கி வீசினான் அகோரியன்.

என்ன குழந்தைபோல விளையாட்டு காட்டுகிறீர்கள்என முறைத்தது கொண்டு இந்திராணியை நோக்கி அடியெடுத்து வைக்க

இந்திரனின் சுவாசபாதையிலிருந்து ரத்தம் தரையை அடைந்தது. மாபெரும் மன்னன்  இந்திரன் தன் நண்பன் காண்டீபன் மடியில் சரிந்து விழுந்தான்.

நிலையை உணர்ந்த காண்டீபன்இந்திராணி…..” என ஓலமிட அந்த வைரவாள் இந்திராணியின் இதயத்தில் இருந்தது
.

காதலின் இணைப்பினால் இருவரது இதயமும் இணைந்திருந்ததால் இந்திராணியின் இதயகாயம் இந்திரனின் வரலாற்றை முடித்திருந்தது.

இந்திராணியோ நீதியை நிலைநாட்ட தன் உயிரையே மாய்க்கும் பொருட்டு இதயத்தில் இறக்கிய வாள் மூளையில் ரத்தம் ஓட்டத்தை பாய்ச்சி அமிர்தத்தை அசுத்தபடுத்தியது. இந்திராணியின் நீல கண்கள் ரத்தத்தால் சிவந்தன.

அமிர்தத்தை தவறவிட்டதால் அகோரியனின் கர்ஜனை தீவு முழுதும் எதிரொலித்தது ஓர் சிங்கத்தை போல

நண்பனின் இறப்பினால்  கோபத்தில் புதிய வலிமை கிடைத்த காண்டீபன் அகோரியனை தனது வலிய கால்களால் மிதித்தான்.

காண்டீபனின் கண்கள் கலங்கியிருந்தது. அந்த நேரம் அகோரியனும் காண்டீபனும் இட்ட சண்டை வராலாறு காணாததாக இருந்தது.

சில நொடியே நீடித்ததிருந்தாலும் இறுதியில் காண்டீபன் அகோரியனின் ஒரு காலை உடைத்திருந்தான். அகோரியனால் எழுந்திருக்க முடியவில்லை.

சோகமாக இந்திராணியிடம் வந்த காண்டீபன் அவள் தீவுகளின் அரசனின் அரியணையில் அமர்ந்திருந்தாள்  இதயத்தில் வாளுடன்.

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் காண்டீபன்கூறுங்கள் தாயே

இறுதியில் நீதி நிலைநாட்டபட்டுவிட்டது காண்டீபாஎன சிரித்தாள்.

“……” மௌனம் காத்தான் காண்டீபன்.

ஆனால் என் காதல்காதலன்என் மனது….” சோகமுகத்துடன் சிரித்தவள்என்னைவிட அவனை யாரும் காதலிக்க முடியாது என்று நினைத்தேன் ஆனால் ஒருத்தி இருக்கிறாள் அவள் துளசிஇவன் வருவான் என்று காத்திருப்பாள்இந்த வாளை அவளிடம் கொடுத்து அவன் வரமாட்டான் என உணர்த்திவிடுஎன்று இதயத்திலிருந்து வாளை உருகவே அவளது உடல் நிலத்தில் சரிந்து விழுந்நது. இந்திரவர்மனும் இந்திராணியும் இறந்துவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: