Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 03

பாகம் – 3

“அவள விட்ரு………” ஆரவ் கண்கள் கோபக்கனலாய் மாற உடலை முறுக்கி கிட்டத்தட்ட கர்ஜித்தான் என்றே சொல்ல வேண்டும்.

 

“முடியாது. என்னடா பண்ணுவ? சும்மா கத்திக்கிட்டு இருக்க” என்றபடி அவளது துப்பட்டாவை உருவினான் அந்த அடியாள்.

 

அடுத்த மூன்று நிமிடங்களில் ஆரவ் பார்பிக்கு அருகில் இருந்தான். ஆம், நொடிப் பொழுதில் ஆறு பேரையும் கீழே சாய்த்து விட்டான். அவன் பெட் நேம் சொல்ல மறந்துவிட்டோம் இல்லையா. ‘மிஸ்டர் பிளாஸ்டர்’. ஆடுகளத்தில் நுழைந்து விட்டால் கண்டிப்பாக குறைந்தது 50 ரன்கள் எடுத்து விடுவான். அதில் பாதி சிக்சர் மீதி 2 அல்லது 3 ரன்களாக இருக்கும். அதிக பட்சத்தில் 200 ரன்கள்.

 

ஓரளவு சாப்பிட்டிருந்ததால் உடல் பழைய வலிமை மீட்டிருந்தது. மதங்கொண்ட யானையின் துதிக்கையை போல் அவன் கைகள் இரண்டும் பரபரக்க அதை உதறிகொண்டு பார்பியின் அருகில் வந்து நின்றான்.

 

ஆரவ் கைகளில் இவ்வளவு வலிமை இருக்கும் என எதிர்பாராத அடியாள், துப்பட்டாவை கீழே போட்டு விட்டு பின்வாங்க தொடங்கினான். கயிற்றை எடுக்க சென்ற மற்ற இரண்டு பேரும் சேர்ந்து வர ஆரவ் தன் கால்களின் வலிமையையும் காட்ட ஆரம்பித்தான்.

 

எங்கே அடித்தால் என்ன ஆகும் என்று தெரிந்தவனாதலால் மூன்று பேரையும் சில அடிகளிலேயே வீழ்த்தினான். கூலிக்கு அடியாள் வேலை பார்க்கும் அவர்கள் ஆரவ்வின் உரமேறிய தேக்கு மர தேகத்தை எதிர்க்க முடியவில்லை.

 

ஆரவ் துப்பட்டாவை பிடித்து இழுத்த அந்த அடியாள் அருகில் வந்து மிக மெதுவாக ஆனால் அழுத்தமாக “அவள ஏன்டா தொட்ட?” என்றான்.

 

யாரும் எதிர்பாராத சமயத்தில் ஆரவ் கீழே கிடந்த கட்டையை எடுத்து அவளை தொட்ட கையில் நங்கூரம் போல பாய்ச்சி விட்டான். அந்த அடியாள் கை நன்றாக நசுங்கி இருக்கும்.

 

வலி தாங்காமல் கத்தினான் அடியாள், “டேய்… என் கைய உடச்சுட்டீல… நாங்க மொத்தம் இரனூறு பேரு உன்ன தேடி வந்திருக்கோம். இப்போ நீ இங்கிருந்து தப்பிச்சாலும் சீக்கிரத்திலேயே கண்டிப்பா எங்க ஆளுங்க கிட்ட மாட்டுவ. அப்ப இருக்குடா உனக்கு…”என்று கத்தினான்.

 

பார்பி, “பாவம், அவன விட்டுரு ஆரவ்… நாம வேகமா இங்கிருந்து போயிடலாம்…” என்று ஆரவ்வை பின்னால் இருந்து இழுத்தாள்.

 

அவள் கண்கள் இன்னும் பயத்தில் கண்ணீர் துளிகளோடு இருக்க, கைகளும் லேசான நடுக்கத்தோடு இருப்பது புரிந்தது ஆரவ்விற்கு. ஆம், அவளுக்காக விரைந்து இங்கிருந்து செல்ல வேண்டும்.

 

அடியாட்கள் அனைவரும் எழுந்து நிற்க கூட திராணி இன்றி கிடக்க, ஆரவ் வேகமாக சென்று ஒரு சுமோவை உயிர்பித்தான். பார்பியை ஏற்றி கொண்டு திசை தெரியாத பயணத்தை தொடங்கினான்.

 

தார் சாலையும் மண் பாதையும் மாறி மாறி வர ஒரு மணி நேரம் கழித்து மலை அடிவாரத்தில் வண்டி மெதுவாக நின்று விட்டது. வண்டியில் சுத்தமாக பெட்ரோல் காலியாகி இருக்க, ஆரவ் சிறிது நேரம் யோசித்து விட்டு, “பார்பி, நாம இந்த மலையில ஏறி போவோம் வா” என்றான்.

 

“ஏன், தரை வழியாகவே ஏதாவது ஊர் இருக்கான்னு தேடி பார்ப்போம்” என்றாள்.

 

“அந்த அடியாள் சொன்னத நீயும் கேட்டேல, இப்போ நம்மள நிறைய பேர் தேடுறாங்க. காட்டு வழியில போனா அவங்க கிட்ட மாட்டாம ஒளிஞ்சுகிட்டு போகலாம். உனக்கும் அதுதான் சேப். இந்நேரம் பஸ் டிரைவரும் ஆட்டோ டிரைவரும் போலீஸிட்ட தகவல் குடுத்திருப்பாங்க. நாளைக்கே என்னை தேடி போலீஸ் ஃபோர்ஸ் கிளம்பி வந்திடும், போலீஸ் நம்மள கண்டு பிடிக்குற வரைக்கும் என்னைவிட நீ ரொம்ப பாதுகாப்பா இருக்கனும்” என்றான்.

 

“எனக்கு ஒன்னும் ஆகாது ஆரவ். நான் எங்க குல தெய்வ கோயிலில் வச்சு பூஜை பண்ண செயின் போட்டிருக்கேன் பாருங்க…” என்றபடி தன் கழுத்தில் இருந்த சின்ன பிள்ளையார் செயினை தூக்கி காட்டினாள்.

 

“சரிதான். இப்போ நான் கஷ்டப்பட்டு சண்டை போட்டுகிட்டு இருந்தேனே, அப்போவே நீ உன் இஷ்ட தெய்வத்தை சண்ட போட கூப்பிட்டு இருக்கலாம்ல. ஏற்கனவே ரெண்டு தடவை தப்பிச்சு வந்த என்னை, ரொம்ப ஈசியா அவங்க கண்டு பிடுச்சுட்டாங்க. ப்ளீஸ் அடம்புடிக்காத பார்பி…” என்றான்.

 

“நீங்க சண்ட போட்டுட்டு இருந்தீங்கள்ள, அப்போகூட நான் உங்களுக்காக சாமிய கும்பிட்டுகிட்டு தான் இருந்தேன்” என்றாள் அவள் அப்பாவியாய்.

 

அவள் கண்கள் அவள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை என்று கூற, அவன் இதற்கு மேல் தாங்காது என, “இப்போ நீயே வர்றியா இல்ல நானே உன்ன தூக்கி கொண்டு போகவா?” எனவும் அவள் மிரண்டு போய், “மாட்டேன்” என ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

 

ஆரவ் விருட்டென முன்னால் வந்து ஒரு கையால் அவள் கையை பிடித்து கொண்டு மற்றொரு கையால் குனிந்து அவள் கால்களை இரண்டையும் ஒரு சேர பிடித்து தூக்கி, அவளை தன் தோளில் போட்டு கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

 

“வேண்டா… வேண்டா… இறக்கி விடுங்க, நானே நடந்து வர்றேன்” என்று துள்ளவும் கீழே இறக்கினான்.

 

முதன் முதலாய் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆண் தன்னை நெருங்கியதில், பார்பிக்கு உச்சி முதல் பாதம் வரை கூசிப் போனது. அவன் தீண்டி சென்ற இடங்களில் எல்லாம் ஒரு வித குறுகுறுப்பு தோன்ற, அதை மறைக்க தெரியாத பேதை, தன் கயல் விழி கண்கள் மூடி மூடி திறந்தாள். தன்னிச்சையாக உதடுகள் இரண்டும் ஒட்டி கொண்டுவிட, உடல் சற்று சுருங்கி விட்டது போன்ற உணர்வு.

 

ஆரவ் இதை எல்லாம் பார்த்தும் பாராதவன் போல் நகர்ந்து ஓரமாய் இருந்த ஒரு ஒற்றையடி பாதையை தேடி கண்டு பிடித்தான்.

Advertisements

1 Comment »

  1. கில்லி படம் போல் செம Speed. Konjam logic, ethics moral ellam follow பண்ணா Innum nalla irukkum. Ur screenplay and dialogues are good. Read ur past story நான் உன் அருகினிலே. நன்றாக இருந்தாலும் Something missing to accept.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: