Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9

கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான்.

“அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக பார்வையை சுக்குநூறாக்க எடுத்த வாக்கியம் என சந்துரவால் உணர முடிந்தது. ஆனாலும் அவனது கவலை அன்பரசியின் கண்ணீர்தான். அன்பரசிக்காக உயிரையும் கொடுப்பேன் என சபதம் செய்திருந்தவனுக்கு அவளது கண்ணீர் கவலை அளிக்கும் விதமாக இருந்தது. உடனே வெளியே சென்று இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை  என சொல்லவேண்டியது தான் என முற்பட்டான் ஆனால் சுவற்றில் மாட்டியிருந்த தனது மாமனார் போஸின் புகைப்படம் அவனை அங்கேயே சிலையாக்கியது. பீரோவில் இருக்கும் துப்பாக்கியின் பயம் இல்லை என்று எல்லாம் சொல்ல முடியாது.

அவள் குலுங்கி அழுவது தெரிந்தது. இந்த அளவுக்கு அவன் வாழ்கையில் ஒருமுறை அழுதிருந்ததாள் அவளது வலியை உணரமுடிந்தது. சட்டென எழுந்தான் அவளருகில் சென்றான்.

“அன்பரசி அன்பரசி” அவள் இன்னும் எழவில்லை.

முதுகில் கை படாதவாறு தட்டினான். “அன்பரசி அன்பரசி ” மீண்டும் பதில் இல்லை. அவளது கைகளை பிடித்து திருப்பினான். அவள் மயங்கியிருந்தாள் இது மன அழுத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு என அவனால் அறிய முடிந்தது.

“அத்தை அத்தை சீக்கிரம் வாங்க அன்பரசி மயங்கிட்டா” என கூக்குரலிட அனைவரும் ஓடி வந்தனர் வேகமாக வந்த போஸ் அவளது முகத்தில் தண்ணீர் தெளிக்கவே கண்ணீர் துளியின் சாயல் மறைந்துவிட்டது. அவளை பின்னால் இருந்து பிடித்து உட்கார வைத்தார் பார்வதி.

“ஏன்டி மதியம் சாப்பிட்டையா?”

இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள்.

“இப்புடி சாப்பிடாம இருந்து உடம்ப கெடுத்துகிறா மாப்ள பாருங்க இன்னைக்கு மயங்கிட்டா இனிமே நீங்கதான் இவளை பத்திரமா பாத்துகனும்” என பட்டாசாக வெடிக்க சந்துருவின் இதயத்தில் அதன் சூட்டை உணர முடிந்தது.

“சரி எழுந்து வாடி வந்து எல்லாருக்கும் டீ போட்டு குடு” இது பார்வதியின் உத்தரவு.

“இல்ல அத்த அன்பு ரெஸ்ட் எடுக்கட்டும் நான் வேணா டீ பேடுறேன்” என்று கூறியவனை தன் நினைவு உலகத்திலிருந்து ராக்கெட் பிடித்து வந்து எட்டி பார்த்தாள். ஆனாலும் அது செயல்படாமல் மீண்டும் உள்ளிட்ட படவே சுவற்றில் எதையோ கூர்மையாக பாரத்துகொண்டிருந்தாள். மனதில் ஓடுவது சுவற்றில் தெரிகிறதா என்ன!

அவள் காதில் சென்றடையாத ஓசைகளாய்.

“ஏன் மாப்ள நான் பாத்துக்கிறேன்”

“நீங்க ஏன் அத்தை கஷ்டபடுறீங்க நான் டீ போடுறேன் ”

“ஏன் அத்தை அப்படி பாக்குறீங்க நான் நல்லா சமைப்பேன் தீபாவளிக்கு நம்ம வீட்டு வேலைகாரங்களுக்கு என் சமையல்தான்”

“என்ன மாப்ள சொல்றீங்க”

“கொஞ்சம் தள்ளிகோங்க நான் செஞ்சு காட்டுறேன்”

அடுத்த சில நிமிடங்களில்

“ஆமா மாப்ள நல்ல வாசனையாதான் இருக்கு”

“அதுதான் சந்துரு டீ”

“சரி எங்க போறீங்க மாப்ள”

“அன்பரசிதான் பட்டினியா இருக்கா அதான் அவளுக்கு மொத கொடுத்துட்டு வாரேன் நீங்க அப்பாவுக்கும் மாமாவுக்கும் கொடுங்க”

“அப்போ உங்களுக்கு மாப்ள”

“நான் ரீஸ்க் எடுக்க விரும்பலை” என அங்கிருந்து நகர்ந்தான்.

டீயை அன்பரசியின் அருகில் வைத்தவன் தன் பையிலிருந்து சில ரொட்டி துண்டங்களை எடுத்தான்.
“அன்பரசி அன்பரசி ” என கண்ணின் முன் பேருந்தை நிறுத்த சைகை செய்தான்.

சட்டென சுயநினைவுக்கு வந்தவள் இவனை திரும்பி பார்த்து எழுந்து கொள்ள முயன்றாள். “கொஞ்சம் இரு” என மெதுவாக கூறினான். அமைதியாக அமர்ந்தாள்.

“இந்தா இந்த டீயை குடி” என அவன் கூற மறுத்தாள். சந்துருவுக்கு எதிரில் டீ குடிக்க அஞ்சினாள் அதே சதுரங்க தயக்கம்.

“இதுல விசம் எல்லாம் வைக்கலம்மா நீ தைரியமா குடிக்கலாம்” என அவன் கூற ‘அப்படி எதாவது இருந்தா வச்சு கொடுங்க நான் நிம்மதியா செத்துடுறேன்’ என நினைத்துக்கொண்டு தேநிரை தன் கையில் மாற்றி கொண்டாள்.

“ஓ செத்துட்டா நிம்மதியா இருந்துடலாமா?” என அவன் வெளிபடுத்த இவனுக்கு எப்படி நம் மனதில் நினைத்தது தெரியும் என குழம்பினாள். அவளது பார்வையிலேயே இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரிந்தது.

“இங்க பாரு அன்பு உனக்கு காதல்தான் பிரச்சனையா அது யாருன்னு சொல்லு நான் சேர்த்து வைக்கிறேன்” என ஒரு ரொட்டிதுன்டை அவள் கையில் தினித்தான். அதை அவள் வாங்கிகொண்டதாள் இந்த டீலிங்குக்கு சம்மதம் என நினைத்துகொண்டான். ஆனாலும் மௌனம் சாதித்தாள்.

“சரி விடு உன்னை எனக்குபிடிக்கலை ஏன்னா என்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கா ” என அவன் கூறும்போதே சுவேதாவிடமிருந்து அழைப்பு வந்தது. “பாத்தியா அவதான் என்கூட பேசாம ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டா” என கைபேசியின் திரையை காட்ட அதில் ஒருபெண் கையில் பூங்கொத்துடன் டீசர்ட் ஜீன்ஸ் லூஸ் கேர் என மார்டன் மகாலட்சுமியாய் நின்றிருந்தாள். இனைப்பை துண்டித்துவிட்டவன். “இப்போ சொல்லு நான் போறதுக்கு முன்னாடி உன்னை உன் லவ்வர்கூட சேத்து வச்சிட்டு போறேன் ” என உறுதிமொழி அளித்தான்.

அமைதியாக எழுந்து சென்றவள் தனது சிறிய அறைக்குள் தன்னையே சிறைபடுத்திகொண்டாள். சந்துருவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளது கண்ணில்.

“டேய் இப்போ ஏன்டா அந்த சங்கீதா கிட்ட அப்படி சொன்ன?” கண்களும் கன்னங்களும் சிவந்திருந்தன.

“என்ன சொன்னேன்” மிஸ்டர் கூல் என பதில் சொன்னாலும் உள்ளுக்குள் ரத்தவோட்டம் அதிகமாகவே இருந்தது ராஜேஷுக்கு.

“ஏய் தெரியாமாதிரி சீன் போட்ட கன்னம் பலுத்துடும் பாத்துக்க” என குரலை உயர்த்தினாள். மொத்த கேன்டினிலிருந்த காதலர்களும் சிலரும் சிலையென இவர்களின் சண்டையை பார்த்துகொண்டிருக்க. ஈக்கு என்னடா இரும்படிக்குற எடத்துல வேலை என்பதை போல அந்த கேன்டீன் சுத்தம் செய்யும் பாட்டி. சுத்தமாக காது கேட்காது. இருவரின் இடையிலும் அந்த வண்டியை தள்ளிக்கொண்டு வந்தார். அனைவரும் சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

“ஏய் கிளவி உன்னை முதல்ல முதியோர் இல்லத்துல சேத்துவிடனும். ஏன்டா எக்ஸ்பையர் ஆன பொருள் எல்லாம் இங்க வச்சுருக்கீங்க” என திட்டினாள் ராட்சசி.

“சரி நான் கிளம்புறேன்” என வேகமாக நடந்தான் ராஜேஷ். “டேய் நில்லுடா உன்னை கொல்லாம விட மாட்டேன்” குரலில் சிறிது தொய்வு ஏற்பட்டது. ஆனால் அவன் காதுகேளாத பாட்டியாய் மாறி அங்கிருந்து தப்பித்துவிட்டான்.

சந்துருவின் கைபேசி பாலம் அமைக்க அந்த ஓசையில் நினைவை கலைத்தாள் ராட்சசி இப்போதைய அனபரசியாக. “ஹலோ என்னடி பிரச்சனை உனக்கு இப்ப”

மறுமுனையில் சுவேதா “மேரேஜ் பன்ன நீ வருவியா இல்லை நான் தற்கொலை பன்னிக்கவா” என துண்டிக்கப்பட்டது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: