Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 02

பாகம் – 2

நேரம் நள்ளிரவு தாண்டி கொண்டு இருந்தது. மழை பெய்யும் சத்தம் கேட்டு லேசாக கண் விழித்து பார்த்தான் ஆரவ். வெளியே மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில். யாரடி நீ மோகினி? பாலும் பழமும் ஊட்டி வளர்த்து இருக்கிறார்கள் போல சற்று பூசிய உடல். பார்த்து பார்த்து வளர்த்த நீண்ட கூந்தல். உறக்கத்திலும் சின்ன புன்னகை.

 

ஆரவ் இது வரை இவ்வளவு தூரம் யாரையும் ஆழ்ந்து கவனித்ததில்லை. அதற்கு நேரமும் இருக்கவில்லை. இவளிடம் ஏதோ ஒன்று தன்னை ஈர்க்கிறது. உள்ளதை சொல்லும் அவளின் கண்களா? கனவு நாயகன் என்று பெயர் பெற்ற என்னை தெரியாது என்ற அவள் அலட்சியமா? பெயரை கூட சொல்ல முடியாது என்ற திமிரா?… யோசனை செய்தபடியே தூங்கி போனான்.

 

வெளியே விடிந்தும் விடியாமலும் இருள் படர்ந்து இருந்த காலை பொழுது விடிய தொடங்கியது. இருவரும் தூங்கி எழுந்ததும் ஊர் எந்த பக்கம் என்று தேட ஆரம்பித்தார்கள். சாலையில் செல்லாமல் தோப்பு வயல் வழியில் சென்றனர். அவைகள் சற்றே அவர்களை ஒளித்து கொண்டது. வழியில் வாழை பழத்தை பறித்து தின்று கொண்டு நடந்தனர்.

காலை 6.30 என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப முடியாத படி வானம் கவிழ்ந்து கிடக்க, மழை விழவா வேண்டாமா என யோசித்து கொண்டு இருந்தது. நம்ம ஊருக்கு தான் புயல் எல்லாம் வெகேசன் ட்ரிப் மாதிரி வந்து போகுதே. இப்ப என்ன புயலோ….

 

“ஆமா, ஏழு நாளா நீங்க எப்படி பட்டினியாக இருந்தீங்க?…”

 

“முதல்ல 3 நாள் சாப்பிட கொடுத்தாங்க. நான் தப்பிக்க முயற்சி பண்ணதால சாப்பாட்ட நிறுத்திட்டு தண்ணீர் மட்டும் தந்தாங்க.”

 

“எதுக்காக உங்கள கடத்தினாங்க?”

 

“பணத்துக்காகதான்”.

 

“அப்டியா?… எவ்வளவு பணம் இருக்கு உங்ககிட்ட?”

 

“நான் பதில் சொல்றேன். நீ உன் பேர் சொல்றியா?”

 

” முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேரை சொல்ல கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க”

 

“ஹா.. ஹா.. ஹா… பாட்டி சொல்ல தட்டாத புள்ளையா நீ” அடக்கமாட்டாமல் சிரித்து, அவள் முறைப்பை பரிசாக பெற்று கொண்டான். திடீரென அங்கே ஒரு ஆட்டோ சத்தம் கேட்டது. நாலா பக்கமும் தேடி அலைந்து ஒருவழியாக ஆட்டோவை கண்டுபிடித்தனர்.

 

“எங்கள பக்கத்துல இருக்குற ஊர்க்குள்ள கூட்டிட்டு போறீங்களா?” என கேட்டார்கள். ஆரவ்வை கண்டதும் சந்தோஷமாக சரி என்றான் ஆட்டோ டிரைவர்.

 

“சார், என் பையனுக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம் சார். ஒரு ஆட்டோகிராப் போட்டு தாறீங்களா?” என்றான்.

 

ஓர கண்ணில் அவளை பார்த்து சிரித்து கொண்டே, “கண்டிப்பா போட்டு தர்ரேன். உங்ககிட்ட போன் இருந்தா லோக்கல் போலிஸிக்கு இன்பார்ம் பண்றீங்களா ப்ளீஸ்”.

 

சரி சார் என்று சொல்லி கொண்டே போனை எடுத்தபோது சர்ரென்று முன்னால் வந்து நின்றது ஒரு சுமோ.

 

ஆரவ்வும் பார்பியும் அதிர்ச்சியில் மூச்சு விட மறந்து விட்டனர். தப்பித்ததாய் நினைத்து கொண்டு வர அவர்களிடம் வசமாக சிக்கி கொண்டனர். சுமோ விலிருந்து 10 அடியாட்கள் இறங்கி வந்து ஆட்டோவை சுற்றி வளைத்திட, ஆட்டோ டிரைவருக்கு தர்ம அடி. ஆட்டோ டிரைவர் சுய நினைவிழந்து மயங்கி விழுந்தார்… பார்பி ஆரவ்வின் பின்னால் வந்து ஒளிந்து கொண்டாள்.

 

அடியாட்களில் ஒருவன் இன்னொருவனுக்கு போன் போட்டு, “அண்ணே…. பய மாட்டிகிட்டான்… கூட ஒரு பொண்ணு இருக்கு… ஆட்டோ டிரைவர் காலி…” என மகிழ்ச்சியுடன் கூறி கொண்டு இருந்தான்.

 

பின் “சரி, சரி. செஞ்சிடுவோம். நீ இந்த மலை பக்கமாக வா. வயலு, வாழதோப்பு தான்டி மாந்தோப்பு கிட்ட இருக்கோம். கிராமத்து ஆளுங்க யாரும் வர முன்னாடி சீக்கிரம் போயிடலாம் வா”.

 

‘வழி சொல்லி விட்டான், இனி எப்படி தப்பிக்க’ என ஆரவ் மனம் அமைதியாய் யோசித்து கொண்டிருந்தது.

 

ஆரவ் கைகளை நான்கு தடியர்கள் பிடித்துக்கொண்டு இருக்க இரண்டு பேர் பின்னால் நின்றனர். இரண்டு பேர் கயிற்றை எடுத்து கொண்டு வர போனார்கள். ஒருவன் பார்பியை பிடித்து இருந்தான். அவளை பிடிக்க ஒருவனே அதிகம். போன் பேசி முடித்த பின் முதலாமவன் தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

 

“இவன கயித்தகட்டி வண்டிக்குள்ள தூக்கி போடு. இன்னும் நிமிசத்தில அண்ணன் இங்க வந்திருவாரு. இந்த பொண்ண சீக்கிரமா போட சொல்றாரு அண்ணே.” என்றபடியே அவள் அருகில் வந்து நின்றான்.

 

“சும்மா தள தளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கா. என்னடா பண்ண?” என தன் சகாக்களை வன்மமாக கேட்டான். அனைவரும் ஈஈஈஈ……. என இளிக்க பார்பிக்கோ கை கால்கள் உதற ஆரம்பித்தது.

 

” வேண்டாம். அவள விட்ருங்க. நான் உங்க கூட வர்ரேன். தப்பிக்க மாட்டேன்” கதறினான் ஆரவ்.

 

” நீ என்ன சொல்றது?. டேய் இன்னுமாடா கயித்த எடுத்துகிட்டிருக்க. சீக்கிரமா இவன கட்டி தூக்கி போடுங்கடா. நேத்து உனக்கு, இன்னிக்கு எங்களுக்கு” என்றபடி பார்பியை நெருங்கினான். அவளுக்கு மூச்சே நின்று விட்டது.

 

அவள் பின்னால் இருந்தவன் கைகளை பின்னால் இருந்து பிடித்துக்கொண்டான். முதலாமவன் அவள் கன்னங்களை தடவி, “கன்னமே அல்வா மாதிரி இருக்கேடி” என்றான்.

 

“அவள விட்ரு……….” அடி வயிற்றில் இருந்து ஆக்ரோஷமாக கத்தினான் ஆரவ்.ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: