Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08

உனக்கென நான் 8

“அவனை ஏன்டா அடிச்ச” என கேள்வியுடன் கையில் பிரம்புடன் நின்றாள் அன்பரசி. “லவ்வுக்காக மிஸ்” என்றான் சிறிதும் சலனமில்லாமல். இந்த காரணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அன்பரசி புரியாமல் “என்ன?” என்றாள்.

“லவ்வு காதல் மிஸ். நீங்க பன்னதில்லியா?” என எதிர்கேள்விகேட்டான். அன்பரசிக்கோ தூக்கிவாரிப்போட்டது. ஓர் இரண்டாம் வகுப்பு சிறுவன் தமிழ் முதல் எழுத்துகளை அறிய வேண்டிய வயதில் முற்றும் துறந்தவர்களக்கும் புரியாத காரணியை பற்றி பேசுகிறானே என திகைப்பிலிருந்தது வெளியே வரவில்லை.

“லவ்வுனா உங்களுக்கு தெரியாதா?” என காலையில் தான் கேட்ட கேள்வியை திரும்பவும் கேட்டான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வள்ளுவன் கூற்றை மிக எளிதில் நிறைவேற்றிவிட்டான்.

“என்னமா என்ன சொல்றான்?” என தலைமை ஆசிரியர்வந்து பின்னால் நிற்க “இல்ல மேடம் இவன் ஓடி வரும்போது அவன் குறுக்க வந்துட்டான் அதான் கையிலிருந்த சிலேட் இடிச்சிடுச்சாம்” என சமாளித்துவிட்டாள். சஞ்சீவ் எவ்வளவு தவறு செய்தாலும் தண்டிக்க மனம் வருவதில்லை அன்பான ராட்சசிக்கு. மற்ற குழந்தைகளுடனும் இதே நிலைதான் என்றாலும் இவனுடன் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தே வந்துள்ளது. அதன் காரணத்தையும் இவள் அறியாமல் இல்லை.

சன்முகம் வந்தார். “சந்துரு அந்த பார்ட்டிகிட்ட உங்க மாமா பேசிட்டாரு எல்லாம் ஓகேதான் அந்த இருபது C மட்டும் டிரான்ஸ்ஃபர் பன்னிடு நமக்கு வேலை முடிச்சிடுச்சு” என முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கூறினார்.

அருகில் இருந்த போஸை பார்த்தான். “ரொம்ப த்தாங்கஸ் மாமா” என்றான். “நன்றி எல்லாம் ஏன் மாப்ள உங்க அப்பன் பன்னாத ஹெல்ப்பா நான் பன்னேன்” என மறுத்தாலும் சந்துருவின் மனதில் அவருக்கு ஒரு கோட்டையே கட்டியிருந்தான். பின்ன இரண்டு மாதமாக அலைபேசியின் வாயிலாகவே இழுத்துகொண்டிருந்த ஓர் பிரட்சனையை தான் வராமலேயே முடித்திருந்தார். அதிலும் ஒரு வாரம் ஆகும் என நினைத்திருந்த பட்டியலையும் தீயிட்டு எரித்துவிட்டார் அவரது மக்கள் செல்வாக்கு உணர்ந்துவிட்டது சந்துருவுக்கு.

ஆனாலும் சந்துருவுக்கு ஓர் கவலை அன்பரசி தன்னிடம் ஒரு வார்த்தைகூட மனம்விட்டு பேசவில்லை என்றுதான். ஆனாலும் ஒன்று மட்டும் சந்துருவின் மனதில் உதயமாகியது. அது ‘வேலை முடிந்துவிட்டது. கிளம்பாலாம்’ என்பதே அதற்குள் சன்முகம் “சரிடா நாங்க கிளம்புறோம் இன்னொருநாள் வாரோம்” என கூறியதும் சந்துரு தான்நினைத்தது சரி என முடிவுக்கு வந்தான்.

“டேய் மிலிட்டரில கொடுத்த கைத்துப்பாக்கி இன்னும் பிரோலதான் உறங்கிகிட்டு இருக்க இன்னொரு தடவை போறதபத்தி பேசுன அப்புறம் ஒரே அடியா அனுப்பி வச்சுடுவேன்” என சிரித்தார் போஸ்.

“உனக்கு எப்பவுமே விளையாட்டுதானாடா. அதான் வேலை முடிஞ்சுடுச்சே உங்களுக்கு ஏன் தொந்தரவு ” என சன்முகம் கூற. தன் மாமன் எப்படியும் அதற்கு அனுமதிக்க மாட்டார் என நன்கு உணர்ந்துகொண்ட சந்துரு “ஆமா மாமா அன்பு கூட நான் இருந்தா கில்டியா பீல் பன்றானு நினைக்குறேன்” என தன் பங்குக்கு இரண்டு படத்தை காட்டினான்.

“அந்த கழுத என்ன பீல் பன்னா உங்களுக்கு என்ன மாப்ள. நீங்க இங்கதான் இருக்கனும் இன்னும் ஒரு வாரத்துக்கு” என ஆணிதரமாக கூறினார்.

“ஏன் மாமா ” என சந்துரு விடையில்லாத கேள்வியை கேட்கவே அதற்கும் தகுந்த விடை அளித்தார் போஸ். “அது நாளைக்கு தெரியும் மாப்ள” என வீட்டினுள் நுழைந்தார். பின் தோழர்கள் இருவரும் ஹிட்லருக்கே சவால் விடும் அளவுக்கு போர் தந்திரங்களை பற்றி பேசிகொள்ள ஆரம்பித்தனர். சந்துருவோ சதுரங்க பலகையில் வீரர்களை அடுக்கி கொண்டிருந்தான் அதே தவறுடன்.

“என்னடி புது மொபைலா? ” என அன்பரசி யின் பையில் சாப்பாட்டுக்காக கைவிட்டபோது சிக்கியது அந்த பிறந்தநாள் பரிசு. தனது காக்கை உணவையும் மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது அன்பின் இயல்பு. “ஆமா இந்திரா” என அன்பரசி பதில் அளிக்க “ஏதுடி இது” என அடுத்தகேள்விகளை அந்த சிலிகான் மங்கையை தடவிக்கொண்டே கேட்டாள் இந்திரா.
“அது பிறந்தநாள் கிப்ட்டுடி” என அவளை எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹேய் யாருடி கொடுத்தா” என நக்கலான கேள்வி வரும் என அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த கேள்விக்கு அன்பரசியால் பதில் சொல்ல முடியவில்லை மாறாக அவள் முகத்தில் சலனம் தெரிந்தது.

“ஏன்டி வெட்கபடுற” என இந்திரா மேலும் வம்புக்கு இழுக்கவே “நான் எங்கடி வெட்கபடுறேன்” என மழலைகுரல் போல குழைந்து பேசினாள்.

“அப்போ சொல்லு இது யாரு வாங்கிகொடுத்தது.” என மீண்டும் முயற்சித்தாள். அடுத்தவரின் அந்தரங்க வாழ்வை அறிவதில் அவளுக்கு ஓர் அலாதியான இன்பம். போனமாதம் கல்யாணம் முடிந்து சென்ற மாலதி டீச்சர் இந்திராவிடம் பட்டபாடு அன்பரசி அறியாமல் இல்லை.

“காலையில என்னை ஒருத்தர் இறக்கிவிட்டாருல அவருதான்” என அன்பரசி குலைந்தாள். “ஓ அந்த அளவுக்கு வந்துருச்சா” என இந்திரா ஓர கண்ணால் பார்த்தாள்.

“ஏய் நீ நினைக்குறமாதிரிலாம் இல்லடி” என சமாளிக்க பார்த்தாள். “பின்ன எப்புடி” என கேட் போடப்பட்டது. “அவரு எங்க அப்பாவோட ஃப்ரன்ட் மகன் ” என ஒரு வழியாக கூறிவிட்டாள். ஆனாலும் புயல் ஓயவில்லை. “அவரு உனக்கு என்ன வேணும்?” இறுதியாக சிகப்பு காயின் குழியில் விழுந்துவிட்டது “அவரு என் மாமா” என அன்பரசி என்ற பெயருடன். இந்திராவுக்கு பாக்கெட்.

“ஏய் நீ கலக்குடி ” என அன்பரசியின் இடுப்பில் குத்தினாள் அவள் நெளிந்தாள். “என்னடி ஒரு வாட்ஸ்அப் கூட இல்லை” என கூறிவிட்டு அதற்கான செயலில் ஈடுபட்டார்.

“ம்ம் யாரு நம்பர் எல்லாம் இருக்கு?” என தேடிய இந்திராவுக்கு அதில் இருந்த ஒரே எண்ணான சந்துரு சிக்கினான். “யாருடி சந்துரு” என கேட்டாள் இந்திரா.

“அவருதாண்டி ” என அன்பரசி முடித்தாள். “ஓ அப்படியா ” என கூறியவள் ‘ஹாய்’ என அனுப்பினாள். மறுமுனையில் சோடாபாட்டில் மூடி சத்தம் ஒலிக்கவே தன்கையில் இருந்த டைரியை கிழே வைத்தவன் அன்பரசியின் ஹாயை பார்த்தான்.

“என்ன மேடம் கோபம் போயிருச்சா” என பதிவேற்றினான்.

“உங்க மேல எனக்கு கோபமே வராது” என அன்பரசியாக இந்திரா செயல்பட்டாள். அவளோ பேப்பர்களை திருத்த ஆரம்பித்திருந்தாள்.

“ஓ அப்போ உனக்கு நியாபகம் இருக்கா சும்மாதான் என்னை அழைய வச்சியா?” என மெஸேஜ் அனுப்பினான்.

“என்ன நியாபகம் வரனும் அதான் எதுவுமே மறக்கலையே”

“அடி பாவி அப்போ நேத்து பன்னது எல்லாம் நடிப்பா?” என்ற அவனது மெஸேஜை பாரத்தவள் “ஏய் நேத்து உன் லவ்வர்கூட என்னடி பன்ன?” என பேப்பரில் வண்ணம் தீட்டிகொண்டிருந்தவளிடம் கேட்டாள். இவள் என்ன பேசுகிறாள் என புரியாமல் விழித்தவள். அந்த கைபேசியை வாங்கி பார்த்தாள்.

“ஐயோ ஏன்டி இப்படி பன்ன?” என இந்திராவிடம் சோகமான முகத்துடன் கேட்டாள். கோபம் என்ற குனத்தை இவள் விட்டிருப்பது அனைவருக்கும் நன்மையே செய்கிறது இல்லை என்றால் இந்திரா ஆசிரியர் கொலை அன்பரசிக்கு சிறை தண்டனை என்ற தலைப்பு செய்தியாய் வந்திருக்கும்.

அதன்பின் மொபைலை அனைத்துவிட்டாள் அன்பரசி. அவனும் எவ்வளவோ முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. கால் செய்தும் கஸ்டமர் கேரிடமே பேச முடிந்தது இவனாள். சற்று குழம்பிதான் போயிருந்தான்.

குழப்பத்துடன் இருந்தவனுக்கு அவளது கவிதை புத்தகம் கையில் சிக்கியது அவளது மனதை அறிந்துகொள்ள அதை புரட்டினான் அந்த கனினி முன் அமர்ந்து. எவ்வளவு நேரம் சென்றதென்றே தெரியவில்லை. அவ்வளவு உருக்கமான கவிதைகள் அவனது காலத்தை வைத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும் அந்த ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை போல.

வெளியில் அமர்ந்திருந்த போஸ் “அன்பரசி நில்லுமா ” என்ற கம்பீர குரல்.

“என்னங்கப்பா?” இது தேன்குரல்.

“நீ ஸ்கூல்க்கு போக வேணாம்”

“நாளைக்கு லீவ் எடுக்க முடியாதுப்பா எக்ஸாம் இருக்கு”

“நாளைக்கு இல்ல இனி என்னைக்குமே போககூடாது” என்று அவன் கூறவும் தூக்கிவாரிபோட்டது சந்துருவுக்கு சட்டென எழுந்து வெளியே வர நினைத்தான். அதற்குள்ளாகவே “ஏன்பா?” என அன்பரசி சந்துரு இல்லாமலே அந்த நிலமையை கையான்டாள்.

“உனக்கும் சந்துருவுக்கும் நாளைக்கு நிச்சயம் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் இதுதான் என் முடிவு” என போஸ் ராணுவ கமென்டராக மாறியிருந்தார். அன்பரசியின் கண்கள் நீர் நிறைந்தன. முகம் சோகமாக மாறி துவங்கியிருந்தது. அதை மறைக்க ஓடிச்சென்று தன் பழைய கண்ணீர் நினைவு ஆலயத்தில் தஞ்சம் புகுந்தாள்.

அருகில் கனினி மேஜையில் அமர்ந்திருந்த சந்துருவை பார்க்காமல் கட்டிலின் மீது விழுந்து தலையணையை நனைக்க துவங்கினாள். ஆறுதல் கூற சந்துரு எழுந்தான். ஆனால் குற்றவாளியாய் எண்ணிய அவன் மனம் தயங்கியது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: