Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 01

பகுதி – 1

 

செஞ்சூரியன் தன் பயணம் முடித்து அடங்கிடும் அழகிய மாலை நேரம்… பறவைகள் கீச் கீச்சென்ற ஒலியுடன் தங்களின் கூடுகளை தேடி வேகமாய் பறந்திட, இதுவரை இருந்த மெல்லிய தூரல் குணம் மாறி சிறிது சிறிதாக வலுவாக தொடங்கியது. அந்த நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் இன்றி சற்று வெறிச்சோடி கிடக்க, ஒரு டேங்கர் லாரி மத்திரம் அனைத்து தடைகளையும் தாண்டி சர்ரென்று… சென்று கொண்டிருக்கிறது.

 

அதனுள் அடைத்து வைக்க பட்டிருக்கிறான் நம் ஆட்ட நாயகன். ஆம், இந்திய மட்டை பந்து அணி தலைவன் ஆரவ் -27. ஆறடி உயரம். அளவான உடல் (தற்சமயம் சற்று மெலிந்திருந்தது). ஒரு வாரம் வளர்ந்த தாடி, அவன் கடத்த பட்டு ஒரு வாரம் ஆகி இருக்கும் என சொல்லாமல் சொல்லியது. கை கால்கள் கட்டி வைத்து கிடக்க, அவனருகில் 2 காலி வாட்டர் பாட்டில் மட்டுமே கிடக்கிறது.

 

பசி வயிற்றை கிழித்து கொண்டு வருவது போல் ஒரு உணர்வு. தப்பிக்க முயன்று தோற்று விட்டான். எதிர்பாராத விதமாக திடீரென வண்டி கவிழ தொடங்கியது. விபத்து ஏற்பட்டு உள்ளது என புரிந்து கொண்டான். யாரோ இருவர் வந்து அவனை மெதுவாக வெளியே இழுத்து போட்டார்கள்.

 

முதல் ஆள், “இனிமே இவன எப்புடியா கொண்டு போறது”.

 

இரண்டாவது ஆள், “கொஞ்சம் பொறுடா. இவன எல்லாருக்கும் தெரியும். யாருக்கும் தெரியாம சொன்ன இடத்துக்கு நாம தனியா கொண்டு போய் சேக்குரது கஷ்டம். நம்ம ஆளுக எல்லாரும் நம்ம போற பாதைல நம்மள கண்காணிக்க காத்து கிட்டு இருப்பாக. வண்டி வரலன்னா நம்மள தேடி வருவாக. இப்போதைக்கி இவன ஒதுக்கு புறமா இவன கட்டி போடுவோம். வேற யாரும் பாத்திர கூடாது.”

 

இதுக்காகவே காத்து கொண்டு இருக்கும் அவன் இந்த வாய்ப்பை விடுவானா? விடு ஜுட்… இருவரையும் தாக்கி விட்டு அடுத்த 5 நிமிடதில் தூரத்தில் ஓடி கொண்டு இருக்கிறான். யாராவது ஒருவர் தன்னை பார்த்தாலும் போதும், தப்பிக்க முடியும். அவ்வளவு பெரிய பிரபலம். ஆனால் பசி அவனை முன்னேறி செல்ல விடாமல் சோர்வடைய செய்கிறது.

 

அதே நேரத்தில் கல்லூரிக்குள் இருந்த பிள்ளையார் கோவிலில் தோழிகள் சிலர். இறுதியாக பிள்ளையார் கோயிலை பார்க்க, பிரியா விடைகளுடன் இறுதி ஆண்டு மாணவிகள் நான்கு பேர்.

 

சிறிய வட்ட முகம். 5 அடி உயரம், உயரத்தில் பாதியளவு வளர்ந்திருந்த வளமான கூந்தல். அவள் அணிந்திருந்த அந்த அடர் பச்சை வண்ண சுடிதார் அவளை இன்னும் கொஞ்சம் சிகப்பாக காட்டியது. இந்தி நடிகை ஆலியா பட் சாயலில் நம் நாயகி. தோழிகளை பிரிந்து செல்வது ஒரு கவலை என்றால் வீட்டில் அவசர அவசரமாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் இன்னொரு கவலை. ஆறு மணி வாக்கில் அனைவரும் மனமின்றி அவரவர் இல்லங்களை தேடி கலைந்து சென்றனர்.

 

“இன்னிக்குன்னு பார்த்து ஒரு பஸ்ஸ கூட காணும். எனக்கு டைம் மே சரி இல்லை” நம்ம ஆளு தான். அவளால் கன்னத்தில் கை வைத்து புலம்ப கூட முடியவில்லை. பாவம்… கை நிறைய பை நிறைய நொறுக்கு தீனி. அருமை தங்கைக்கு நாளை பிறந்த நாள். இனி இந்த பக்கமே வர முடியாது என்று தங்கைக்கு பிடித்த தின்பண்டங்களை நான்கு பை நிறைய வாங்கி குவித்து இருக்கிறாள். கல்லூரி ஊருக்கு வெளியே, வீடு நேர் எதிர் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். வீடு போய்ச்சேர குறைந்தது இரவு எட்டு மணிக்கு மேல் ஆகும்.

 

அவள், “ஹலோ அம்மா, பஸ் இன்னும் வரல… ம்… ம்… வாங்கி கொண்டு வாரேன். சரி… ம். வந்திடுவேன். ஒரு கவர்மென்ட் பஸ் வர்ர மாதிரி இருக்கு. வச்சிடுறேன்மா…” இது தான் அவள் தாயிடம்பேசிய கடைசி வார்த்தைகள்.

 

பஸ் வந்தது, உள்ளே நான்கைந்து ஆட்களே இருந்தனர். இவளுடன் இன்னும் ஒரு மாணவி ஏறியதும் ஊர்ந்து செல்ல தொடங்கியது அந்த பேருந்து. ‘இப்படி போனா ஒன்பது மணி ஆகிடும் போல…’ என்று அலுத்து கொண்டாள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் இறங்க, இப்போது மூன்று பேர் தான் இருக்கிறார்கள்.

 

கன்டக்டர் டிரைவரிடம், “அண்ணே, வண்டிய ஷெட்டில் தானே போடுவ. நான் இங்கேயே என் ஊரு பக்கமா இறங்கிகிடவா?” ன்னு கெஞ்சி கொண்டு இருந்தார். சரிடா காத்தால நேரமே வா என்ற பதிலுக்கு அங்கு அவர் இல்லை. கன்டக்டர் புதுசா கல்யாணம் ஆனவர், அவருக்கு அவரு பிரச்சனை பெரிதாய் இருந்தது. மழை வலுத்து பொழிய ஆரம்பித்தது.

 

பேருந்தில் வலது முன் புறமாக அவள் இருந்தால் பின் புறம் இருப்பவர்கள் பற்றி கவனிக்கவில்லை. 30 நிமிடங்கள் கழிந்து இருக்கும் போது ஓடி வந்து ஏறினான் ஒருவன். முழுவதும் நனையாமல் லெதர் ஜாக்கெட் ஓரளவுக்கு காப்பாற்றி இருந்தது. அவளுக்கு இடது வரிசை சீட்டில் அமர்ந்தான்.

 

மணி 6.45 இருக்கும். அவளுக்கு பசி எடுக்க, பையில் இருந்து ஒரு ஸ்வீட் பன் எடுத்து தின்ன தொடங்கினாள். ஏதோ தோன்ற அவன் புறம் திரும்பி பார்த்தாள், அவன் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

 

யாருகிட்ட… கோபமாக முறைத்து விட்டு திரும்பி தன் வேலையை பார்க்கும்போது, அவன் மிக அருகில் வந்து நின்றான்.

 

“உங்ககிட்ட சாப்பிட ஏதாவது இருக்கா. ரொம்ப பசிக்குது” என்றான் ஆரவ்.

 

“யார் நீங்க?” அவள்.

 

” என்னங்க? உண்மையிலே என்ன தெரியாதா?”

 

” தெரியாது”

 

“ஐ ஏம் ஆரவ். கேப்டன் ஆப் இன்டியன் கிரிக்கெட் டீம்.”

 

டிரைவர் “தம்பி நீங்க எப்படி இங்கே” என்றார்.

 

“வழியில ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தா நிறுத்துங்க. அப்புறமா சொல்றேன்” என்றான்.

 

“ஓ. சாரி… கிரிக்கெட் பார்த்ததில்ல. உங்கள தான எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, கேள்வி பட்டேன்.” அவள்.

 

“ஆமாங்க. என்னை கடத்திருந்தாங்க. தண்ணியாவது குடுங்க. ப்ளீஸ்” என்றவன் ஏழெட்டு தின்பண்டங்கள் தின்று முடித்ததும், சற்றே அமைதியானான்.

 

“உன் பேர் என்ன?”

 

“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேர் சொல்றதில்ல” தன்னை ஒருமையாக அழைத்தது பிடிக்க வில்லை என அவள் கண்கள் சொல்லியது.

 

அவளது பேக் கல்லூரியில் படிக்கும் பெண் என்று காட்டி கொடுக்க, ஒரு சின்ன கீ செயின் அவன் கவனத்தை ஈர்த்தது. பார்பி பொம்மை……

 

” உனக்கு பார்பி பிடிக்குமா. நான் உன்னை பார்பி ன்னு கூப்பிடவா?”

 

“நான் திரும்ப உங்களை டார்சான்னு கூப்பிடவா?” அவள் கண்கள் மனதின் கோபத்தை படம்பிடித்து காட்டியது.

 

இருவரும் சில நிமிடங்கள் வரை எதுவும் பேசி கொள்ளவில்லை. அமைதியை குலைக்க புயலென வந்தது ஒரு கூட்டம். 3 சுமோ நிறைய அடியாட்கள், பஸ் முற்றிலுமாய் சுற்றி வளைக்கபட்டது.

 

“போய் அவன மட்டும் தூக்கிட்டு வாங்கடா. மத்த யாரும் உயிரோட இருக்க கூடாது… சீக்கிரமா…” என ஒருவன் உத்தரவிட்டான்.

 

நேரம் மாலை 7.10 இருக்கும். பேருந்தை அவர்கள் சுற்றி வளைத்ததும் ஆரவ் வேகமாக செயல் பட தொடங்கினான். இப்போதைக்கு இறங்கி ஓட முடியாது, டிரைவிங்கை கையில் எடுத்து ஓட்ட தொடங்கினான். வேகமில்லை என்றாலும் யாரும் நெருங்காதபடி பஸ் சுமோக்களை இடித்து கொண்டே செல்ல தொடங்கியது. பதினைந்து நிமிடங்கள் கழித்து 1 சுமோவை எங்கோ தள்ளி விட்டிருந்தான். இன்னும் இரண்டு மீதமிருக்கிறது.

 

மழை சாரலாக உரு மாற, பஸ்ஸின் பின் புறம் நெருப்பு படரதுவங்கியது, நிச்சயமாக அந்த கடத்தல் கும்பல் வேலைதான். இப்போது இறங்கியே ஆக வேண்டும். ஆனாலும் அவனுக்கு அவர்களை சும்மா விட கூடாது என்ற எண்ணம். வெறியோடு பஸ்ஸை ஓட்ட தொடங்கினான், பஸ் அவன் இஷ்ட படி ஆட ஆரம்பித்து விட்டது. ஒரே இடத்தில் வைத்து சுழற்றி சுழற்றி சாகசம் செய்து 2 சுமோக்களை இடித்து தள்ளி விட்டு பஸ் விலகி ஓடியது.

 

ஓடும் பஸ்ஸிலிருந்து டிரைவரையும் அவளையும் இறங்கி வேறு திசையில் ஓடிவிட சொன்னான். சரி தம்பி என்று படியில் இறங்கி விட்டார் டிரைவர். அவளோ விழிகளை உருட்டி உருட்டி தன் பயத்தை சொல்லாமல் சொல்ல, தீ பேருந்தின் முன் பக்கத்தை நெருங்கியிருந்து.

 

இதற்கு மேல் இறங்கி ஓடதான் வேண்டும். அவளையும் இழுத்து கொண்டு கீழே குதித்து இறங்கவும், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சற்று தள்ளி போய் சாலையோர மரத்தில் மோதி நின்றது. பஸ் முழுவதும் தீ பரவி எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் உள்ளே யாருக்கும் தெரியாமல் போனது ஒரு உயிர்.

 

இறங்கியவர்கள் கால் போன பாதையில் ஓட தொடங்கினர். 10 நிமிடங்கள் கழித்து ஒரு சுமோ இப்போது தான் அந்த இடத்திற்கு வந்தது. தாமதத்திற்கு நன்றி.

 

ஏதாவது ஊர் கண்ணில் படும் என்று ஓடி கொண்டிருந்தனர் இருவரும். தொடக்கத்தில் வெறும் பொட்டல் காடாக இருந்த நிலம் இப்போது சில வயல் வெளியாக மாறி வருகிறது. இருபது நிமிடங்கள் கழித்து பார்த்தால் இன்னும் ஒரு வீட்டையும் காணும்.

 

அவன் கால்கள் ஓய்வை கெஞ்ச, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மோட்டார் ரூமுக்கு செல்ல முடிவெடுத்தான். முப்பது நிமிடங்கள் கழிந்த பிறகு, இதுவரை வராத சுமோக்கள் இனி தன் திசையில் வர வாய்ப்பு இல்லை என்றே முடிவு செய்தான்.

 

அவளையும் அழைத்து கொண்டு ஒரு மோட்டார் ரூமுக்கு சென்றவன், தேடி கண்டு பிடித்து லைட் சுவிட்சை போட்டான். ஏதோ கேட்க அவளை திரும்பி பார்த்த நொடி இதயம் ஸ்தம்பித்து நிற்க, வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. தன்னை பற்றி எண்ணியதில் அவளை கவனிக்க மறந்துவிட்டான்.

 

அவளின் மருண்ட விழிகள் இரண்டும் லேசாக சிவந்து இருந்தது, அழுதிருப்பாள் போல… ஒப்பனை இன்றியும் புத்தம் புது மலராக அவள் நின்றிருந்தாள். பயத்தில் ரோஜாப்பூ போல சிவந்திருந்த முகத்தில் மழை சாரல் பனித்துளியாய்!!! பச்சை வண்ண அம்பர்லா சுடிதார் உடலுடன் ஒட்டி கிடக்க, அப்பட்டமாய் வெளித்தெரிந்த வனப்பை கண்ட ஆரவ் கண்களுக்கு அவள் இந்திரலோக கன்னியாக தெரிந்தாள்.

 

சற்றே தன்னை சுதாரித்து, “என்ன ஆச்சு… அடி ஏதாவது பட்டுச்சா?” என்றான்.

 

“பயம்மா இருக்கு. வீட்டுக்கு போகனும்” என்றாள் நடுங்கி கொண்டே.

 

“காலைல போயிடலாம், கவல படாத. நீ இங்கேயே படுத்துக்கோ. நான் பக்கத்தில் இருக்குற வேற ஒரு ரூமுக்கு போய் படுத்து இருக்கிறேன்.”

 

“ப்ளீஸ், இங்கேயே இருங்க. தனியா இருக்க பயமா இருக்கு”.

 

வெளியே ஒரு முறை பார்த்து விட்டு சரி என்றான். கோணி பைகளை உதறி படுக்கை அமைத்து அவளை உறங்க சொன்னான். துப்பட்டாவை போர்வையாக்கி படுத்து கொண்டாள்.

 

தூரமாக அமர்ந்து கொண்டு ” உன் பேர் என்ன?” என்றான் மென்மையாய்.

 

“சொல்ல மாட்டேன்”

 

“அப்போ இனிமே உன்ன பார்பின்னு தான் நான் எப்பவும் கூப்பிடுவேன். குட் நைட் பார்பி” என்றான் குறும்பாக.

 

அவனுக்கு பதில் சொல்ல விருப்பமின்றி, அவள் தன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவதாக நடிக்க, அசதியில் நிஜமாகவே தூங்கி விட்டாள். தன்னையறியாமலே ஆரவ் அவளை கண்களால் மனதினுள் நிறைக்க தொடங்கினான்.

Advertisements

1 Comment »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: