Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07

உனக்கென நான் 7

‘என்ன காதலா? காதலை பற்றி எனக்கு என்ன தெரியுமாவா?’ என மனதில் எதிரொலிகளை அலைபாய விட்டிருந்தான். அதற்குள்ளாகவே பின்னால் வந்த மணல் லாரி தன் பலத்த ஒலியால் அவனது மனதை வெளுத்தது. “ஒரு நிமிடம்” என கையால் சைகை செய்தவன் தனது மகிழுந்தை திருப்பிகொண்டு தன் பாதையை நோக்கி விரைய அந்த லாரி இடைஞ்சலான சாலைக்குள் நீந்தி சென்றது.

வீட்டிற்கு சென்று காரை நிறுத்திவிட்டு மயிலிறகைபோன்ற சாவியின் துனையை சுழற்றிகொண்டே நுழைந்தான். “என்ன மாப்ள எதாவது வாய் திறந்தாளா?” என பார்வதி கேட்டாள். “இல்லை அத்த ஆனால் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கு” என கூறிவிட்டு தன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தான்.

“அன்பு கொஞ்சம் என் கிளாஸை கவனிச்சுகிறியா?!” என இந்திரா மிஸ் உள்ளே நுழைந்தாள். ஆனால் அன்பரசியின் கண்ணீர் கைக்குட்டையால் உறிஞ்சபட்டுகொண்டிருந்தது. அதை பார்த்து திகைத்தார். ‘என்ன இவள் அழுகிறாளா?’ என்ற அதிர்ச்சி அவளுக்கு.

“அன்பு என்ன ஆச்சு” அக்கறையுடன் கேட்டார்.

“ஒன்னும் இல்லையே லேசாக தலைவலி” என கூறும்போதே கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.
இவளிடம் கேட்டாளும் கூறமாட்டாள். தன் கஷ்டத்தால் அடுத்தவர் பாதிக்கபடகூடாது என நினைக்கும் ஓர் உள்ளம் என நினைத்துகொண்டு இந்திரா மிஸ் “சரி அன்பு நீ ரெஸ்ட் எடு உன் கிளாஸையும் நான் கவனிச்சுகிறேன்” என கிளம்பினார்.

தனது மேஜையின் மீது கன்னங்களை தலையனையாய் வைத்தவளின் கண்ணீரை புவியீர்ப்பு விசை ஆக்கிரமித்தது. மேஜையும் அதை சேகரிக்க தவறவில்லை.

“உன்னால முடியாதுடி உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?” ; “போடி எனக்கா தைரியம் இல்லை இன்னைக்கு பாருடி” இது சங்கீதா மற்றும் சிந்துஜாவின் சண்டை.

சங்கீதாவை ராஜேஷிடம் காதலை கூறவைக்கும் இரண்டு மா வேலையை செய்து கொண்டிருந்தாள். அதில் மௌடிக்கு அடங்கிய பாம்பாக சங்கீதா சிக்குண்டாள். இறுதியில் சங்கீதாவின் கையில் அந்த வெள்ளை காகிதம் நீல மைகளால் சில எழுத்துகளை துப்பி ராஜேஷின் வருகைக்காக காத்திருந்தது. அவனும் வந்தான். இரண்டு தோழிகளும் காத்துகொண்டிருக்க உலகமே அழிந்தாலும் சரி என்வேலைதான் முக்கியம் என காதில் ஹெட்போன்களை அணிந்து அந்த வகுப்பில் உட்கார்ந்திருந்தாள் அன்பரசி வாயை குறைக்க அடுத்தவர் பேசுவதை கேட்காமல் இருக்கவேண்டும் என் யுக்தி அது.

“ராஜேஷ் உன்கிட்ட இவ ஏதோ போசனுமாம்” என சங்கீதாவை கேடயமாக முன்நிறுத்தினாள். அவன் சலனமே இல்லாமல் “என்னப்பா சொல்லனும் ” என சங்கிதாவை விழியிலிருந்து விழியென பார்த்தான். அவள் தயங்கினாள்.

“அடி போடி ” என சங்கீதாவின் தலையில் தட்டிய சிந்து “இவ உன்னை லவ் பன்றாளாம் இந்த லட்டர்” என அவளிடமிருந்த லட்டரை பிடுங்கி அவனிடம் கொடுத்தாள். சிரித்துகொண்டே அதை வாங்கியவன் “என்ன சங்கீதா மேடம் கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்களே. நான் ஏற்கனவை என் இதயத்தை ரிசர்வ் பன்னி வச்சுட்டேன்” என கூற இருவரும் பேயறைந்தது போல நின்றனர்.

“என்னப்பா சொல்ற” என சிந்து தொடர்ந்தாள். “யாரு” என சங்கீதா கேட்டாள். “இங்க அன்பான ராட்சசி யாரு ” என அவன் கேட்க இருவரும் ராட்சசி என்ற சொல்லை பிடித்துக்கொண்டார். அடுத்த செயலாக அன்பரசியை திரும்பிபார்க்க அவளோ தலையை நவரசத்தையும் காட்டி அசைத்துகொண்டிருந்தாள் விழிகளை மூடிகொண்டு.

“செம்ம செலக்சன் அண்ணா உங்க லைஃப் உருப்புட்ட மாதிரிதான் ” என வாழ்த்து தெரிவித்து விட்டு சிந்து அங்கிருந்து அகன்றாள். ஆனால் கோபமாக இருந்த சங்கீதா அன்பரசியின் அருகில் வந்து அவளது ஹெட்ஃபோன்களை எடுத்து தரையில் வீசினாள். அய்யோ சிங்கத்தின் பிடரியை பிடித்துவிட்டாள். என வகுப்பில் இருந்த அனைவரும் அடுத்த நிகழ்வை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அன்பரசியின் கண்களில் அனல் பறக்க எழுந்த நின்று சங்கீதாவை அறைய கையை ஓங்கினாள். அதற்குள் அவளது கையை பிடித்த சங்கீதா “ஹாப்பியா இருடி ராஜேஷ் உன்னைத்தான் லவ் பன்றானாம் கங்ராஜிலேசன்” என அங்கிருந்து ஓடினாள். அதற்குள்ளாக இரும்பு நிலைகதவில் பூதம் குகையை காப்பது போல நின்றிருந்த ராஜேஷின் மீது கோபம் திரும்பியது.

‘எப்படியும் வந்து ஒரு அறை கொடுக்க போகிறாள். இதுதான் சரியான தருணம் ஒரு அறை வாங்கினாலும் பரவாயில்லை. லவ்வ சொல்லிட வேண்டியதுதான். நிலைமை 144 ஐ மிறிருச்சுனா முத்தத்தை கொடுத்து சமாதானம் பன்னிட வேண்டியதுதான்’ என தயாராக நின்றிருந்தான். அவளும் வேகமாக எழுந்து அவனிடம் நெருங்கினாள்.

பயத்தில் தன் இருகன்னங்களின் மீதும் கைகளை வைத்துகொண்டான். ஆனால் அவளின் வேகம் குறையவில்லை. அனைவரும் ஆவலாக காத்திருந்தனர்.

“ராஜேஷ் நம்ம காலேஜ் பங்கசனுக்கு லோகோ டிசைன் பன்னனும்” என கையில் ஒரு நோட்டை வைத்துகொண்டு ராதாகிருஷ்ணன் சார் வந்து நின்றார். அன்பரசி மட்டையால் அடித்த பந்தைபோல் திரும்பவும் தன் இடத்தில் வந்து அமர்ந்தாள். ஆனால் அவளது நிம்மதியை கெடுத்தவன் தனது வகுப்பு ஆசிரியருடன் சென்றுவிட்டான். கோபத்தில் மேஜையின் மீது ஓங்கி குத்தினாள். பாவம் எந்த செயலுக்கும் எதிர்செயல் உண்டு என அறியாதவள் சிறிது நேரத்தில் கைகளை உதறிகொண்டு வாயால் காற்றை ஊதினாள். கைகள் சிவந்திருந்தன‌.

அந்த செயல் அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வகுப்பின் சார்லி சாப்ளின் ஹிட்லர் இருண்டுமே இந்த அன்பான ராட்சசிதான்.

“நீ வாடா உன்னை வச்சுகிறேன்” என சிவந்த கைகளை பார்த்து கூறியவள் “இப்ப என்னடி இங்க என்ன காமெடி படமா காட்டிகிட்டு இருக்கேன்” என்ற சத்தம் மென்மையான தொண்டையிலிருந்து வெளிபடவே அனைவரும் அணுகுண்டு வெடிக்க போவதை உணர்ந்து அமைதியாகினர்.

“டீச்சர் சஞ்சீவ் கார்த்தியோட மண்டையை உடைச்சுட்டான்” என ஒரு பொடியன் வந்து அன்பரசி யின் முன் வந்து நின்றான். உடனை கண்களை துடைத்துகொண்டே நடந்து இல்லை விரைந்து சென்றாள்.

அங்கு ஆயுதப்படை தலைவன் ஏதோ சாதித்து போல பெருமையாக நிற்க கார்த்தியின் தலையில் சிறிய வெட்டு அதில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.அது சஞ்சீவின் கைஙரும்பலகையின் முத்தம் என அன்பரசிக்கு நன்றாக தெரியும். உடற்கல்வி ஆசிரியர் வந்து கார்த்தியை அழைத்துசென்று முதலுதவி செய்தார்.

“இங்க வாடா “என சும்மா பயமுறுத்த கையில் பிரம்பை எடுத்துகொண்டு நின்றாள் அன்பரசி.

தன் அரைகால் டவுசர் பையில் கைகளைவிட்டுகொண்டு ஓர் கதாநாயகன் போல நின்றான் சஞ்சீவ்.

“ஏன்டா அவனை அடிச்ச ” என முதல்கட்ட விசாரணையை துவங்கினாள். ஆனால் அவன் அளிக்கும் பதில்தான் இந்த சம்பத்தின் முதலும் கடைசியுமான மூலகாரணம் என அன்பரசி அறிந்திருக்கவில்லை

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: