Skip to content
Advertisements

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6

சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும் சத்தங்களை அடக்க முயன்றான். ஆனால் அதில் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

 

“அப்பா நான் ரூம்க்கு போறேன்” என எழுந்து செல்ல “நல்லா தூங்குங்க மாப்பிள்ளை எதாவது வேணும்னா அத்தை கிட்ட கேளுங்க இல்லை அன்பரசி கிட்ட கேளுங்க” என கூறிவிட்டு மீண்டும் பட்டிமன்றத்தில் உறுப்பினராக மாறினார்.

 

உள்ளே நுழையும்போது ஒரு சிறு அறையில் அமர்ந்துகொண்டு அந்த நோட்டுகளை திருத்திகொண்டிருந்ததை பார்த்தான். அவளும் அவனை கவனிக்காமல் இல்லை.

 

‘எப்படியும் ஊமையாக தான் இருக்கபோகிறாள்… ஏன் வீன் முயற்சி” என நினைத்துகொண்டு தன் அறையை நோக்கி நடந்தான்.

 

அவளும் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தால் தன் வேலையில் மும்முரமாக இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக சென்று கட்டிலில் சாய்ந்தான். கண்களில் தூக்கம் வருவது என்பது சந்துருவுக்கு சற்று அரிதான காரியம்தான். இன்று இடமும் புதுமை என்பதால் மேலும் சிரமமாக இருந்தது. ஒரு தனிமையை அவனால் உணரமுடிந்தது. அதை போக்க தன் கைபேசியை எடுத்தான்.

 

அதில் வாட்ஸ்அப் எனும் செயலி பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அதில் தனது கல்லூரி தோழர்களின் ஒரு குழுமம் இருக்க அதில் நுழைந்தான். ஒருவரை ஒருவர் தங்களின் நகைசுவை திறமையால் விரட்டிகொண்டிருக்க அவற்றை வரிசையாக வாசித்துவந்தவனுக்கு அவர்கள் அருகில் இருப்பதாய் ஒரு உணர்வு ஏற்படவே இதழில் புன்னகை சிந்தினான். இவனுது வருகையையும் சிலர் கண்டறிந்துவிட்டனர்  துப்பறிவாளர்கள் போல. அடுத்த தாக்குதல் இவனை நோக்கி இருக்கும் என இவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை‌.

 

‘சந்துரு வந்துட்டாரு’ என ஒருவன் தண்டோரா போட அடுத்ததாக வந்தவைகள்.

 

‘என்ன மாப்ள தங்கச்சிய பாத்தியா’

 

‘எப்போடா கல்யானம்’

 

‘சொல்லி அனுப்புடா’

 

‘எதாவது பேசுடா’ தன் அணியில் பலம் குறைவு என்பதை உணர்ந்தான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தன் அணியில் தான் மட்டும்தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தான். மொத்த தோழர்களும் தோழிகளும் எதிர்புறத்தில் இருந்தனர்.

 

‘டேய் அப்படி நீங்க கற்பனை பன்றமாதிரியெல்லாம் இங்க எதுவும் நடக்கலைடா அவ முன்மாதிரி இல்லை’ என பதிவேற்றினான்.

 

‘ஓஓ அப்படியா’

 

‘அச்சோடா’

 

“சோ ஷேட்’ என சில குறந்தகவல்களுக்கு பிறகு சில பொம்மைகளும் வந்து அவனை கலாய்த்தன. பின் மெதுவாக சமாளித்து வேறு ஒருவனை கோர்த்து விட்டான். ஊசியில் நூலை ஏற்றுவது போல.

 

சிரித்துகொண்டே வெளியே வர அந்த தகவலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் சொந்தக்காரி சுவேதா.

 

‘எப்படி இருக்க?’ என இருந்தது.

 

‘இவன் ம்ம்’ என அனுப்பவே உடனே இரண்டு நீல மை திருத்தங்கள் விழுந்தன.

 

‘அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு’

 

‘அது எதுக்கு உனக்கு… தேவையில்லாம எதுவும் பேசாத சரியா’ என பின்னாலயே இரண்டு கோபமுகங்களை அனுப்பினான். அடுத்த நொடி தாமதிக்காமல் சுவேதா இனையத்திலிருந்து வெளியேறியிருந்தாள். ஆனால் அவளது கண்கள் குலமாகியிருக்கும் என்பதை நினைக்கும்போது சந்துருவின் கண்களும் லேசாக கலங்கியது. பல சிந்தனைகளை மனதிற்குள் படமென ஓட்டியவன் அப்படியே உறங்கிபோனான்.

 

சிறிதுநேரத்தில் உள்ளே வந்தாள் அன்பரசி. அவள் வந்திருப்பது “யேய் போய் மாப்பிள்ளைகிட்ட இந்த போர்வையை கொடுத்துட்டு வா” என்ற கட்டளையினால்தான். ஆனால் அவள் உள்ளே வந்திருக்க அவன் உறங்கியிருந்தான் ஓர் குழந்தைபோல. அவனது காதில் ஒலி தினிப்பான் இருந்தது அதன் ஒலி இவளாலும் கேட்க முடிந்தது ஆங்கில சோகபாடல்கள். மார்பில் குழந்தையை சுமப்பது போல தனது கைபேசியை கிடத்தியிருந்தான்.

 

அவனது முகத்தை அப்போதுதான் முழுமையாக ரசித்தாள் அவள். தாய்மைகுனம் இயல்பிலேயே கொண்டவள் என்பதால் வயதுவித்தியாசம் இல்லாமல் எந்த குழந்தையானாலும் சேவைசெய்துவிடுவாள் அன்பால். இவனது நிலையும் இதுவே. காதில் இருந்த ஒலி ராட்சசன்களை அவிழ்த்தவள் கைபேசியையும் எடுத்து அருகில் இருந்து மேஜையில் வைத்தாள். பின் தான் கொண்டுவந்திருந்த போர்வையை போர்த்தி விட அவன் அதை கட்டியணைத்து கொண்டு ஒருபுறமாக திரும்பி தூங்கினான். அதை பார்த்து லேசாக புன்னகை சிந்தியவள் அங்கிருந்து செல்லும்போது அந்த டைரி மீண்டும்கண்ணில் சிக்கியது. ஆனாலும் அதை படிக்க மனம் விரும்பிவில்லை. சென்றுவிட்டாள்.

 

இருவேறு துருவங்களாய் இருந்த இருவரின் கனவுகளும் காதல் கோட்டையில் பயனித்தன அந்த நடு இரவில் கனவாக…

 

காலைகதிரவனின் பனி செவ்வனே நிறைவேற்றி கொண்டிருந்தது. அந்த வீட்டின் குளியலறையை ஆக்ககிரமித்திருந்தான் சந்துரு. ஆனால் அவன் ஆக்கிரமித்திருப்பது அன்பரசியின் நேரத்தை என்று அவன் உணரவில்லை. அவளும் தனக்கான துணிகளை எடுத்துகொண்டு காத்திருந்தாள். ஆனால் அவன் பாடல்களை பாடிகொண்டிருந்தான். மன்னிக்கவும் பாடி கொன்று கொண்டிருந்தான். எதுவும் கூறமுடியாமல் காத்திருந்தாள்.

 

ஆனால் காலம் காத்திருக்கவில்லை. வீட்டிலிருந்த அந்த கடிகாரம் அன்பரசியின் வயிற்றுக்கு அன்னமிடும் நேரம் என காட்டிகொண்டிருந்தது. முகத்தில் சிறு சளனத்துடன் நின்றிருந்தாள். அப்போது அங்கு வந்த சன்முகம்.

 

“ஏன்மா என்னா ஆச்சு”

 

“ஒன்றுமில்லை மாமா ஸ்கூல்க்கு லேட் ஆச்சு” என கூறவே அவனது செயலை உணர்ந்ததார் ஆனால் அவள் மாமா என்று கூறியது சன்முகத்திற்கு ஆனந்தம் அளித்தது.

 

“டேய் சந்துரு சீக்ககிரம் வெளியே வாடா அன்பரிசி வேலைக்கு போனும் லேட் ஆகுது பாரு” என தன் மகனை கடிந்து கொண்டார்.

 

“ஏய் கழுத அதான் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துடுறேல்ல அப்போவே குளிக்க வேண்டியதுதான..எப்பபாத்ததாலும் புத்தகத்தை பிடிச்சுகிட்டு உட்காந்துடுற” என பார்வதி தன்மகளின்மீது சீற அன்பரசியின் முகம் வாட்டம் கண்டது.

 

“ஐயோ சாரி டாட் நான் நம்ம வீட்டுல இருக்குற மாதிரி நினைச்சுட்டேன்” என சிறிது நிமிடங்களில் வெளியேறினான். அவளது கண்களை பார்த்தை “ஸாரி” என்பதை போல் சைகை செய்தான் ஆனால் அவள் அவனை பார்க்கக்கூட இல்லை.

 

பச்சைநிற சேலை அணிந்து மிக அழகாக வெளியே வந்தாள். வேகவேகமாக பின்னல் போட்டு கொண்டவள் வீட்டினுள் நுழைய அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். “நீயும் உட்காரும்மா” என தன் மருமகளிடம் கூறினார் சன்முகம்.

 

“இல்ல மாமா பஸ் வந்திடும் இப்போவே லேட் ஆகிருச்சு ” என அந்த அலுமினிய டிபனில் மூன்று இட்லிகளை நிரப்பினாள்.

 

“எனமா மூனு போதுமா இப்படி சாப்பிட்டுதான் இப்புடி ஒல்லியா இருக்க” என சன்முகம் கூற “அவ அவ்வளவுதான் சாப்பிடுவாள் அன்னே” என பார்வதி கூற அந்த டிபனை தன் கைப்பையில் வைத்தார்.

 

அவள் சாப்பிடாமல் செல்வது சன்முகத்திற்கு மனதில் உறுத்தவே”ஒரு நிமிடம் நில்லுமா” திரும்பி பார்த்தாள்.

 

“நீ உட்காரு முதல்ல சாப்பிடு ” என கூறவே “இல்ல மாமா பஸ்..” என்று மெதுவாக கூறினாள். “சந்துரு உன்னை கார்ல இறக்கிவிடுவான் நீ பொறுமையா சாப்பிட்டு போ” என சன்முகம் வற்புறுத்தினார். “அதான் மாமா சொல்றாங்கல்ல உட்காருடி” என தாயின் அதட்டல் அவளை அமரசெய்தது.

 

அதன்பின் நான்காவதாக ஒரு இட்லியை சாப்பிடவைக்க சன்முகம் பல போர் யுக்திகளை கையாளவேண்டியிருந்தது. இறுதியாக சாப்பிட்டவுடன் காரின் அருகே சென்று நின்று கொண்டான் சந்துரு.

 

அவளும் வரவே கார் தனது சக்கரங்களை சுழற்றி கொண்டு கிளம்பியது. சந்துருவின் வாயும் சுழல துவங்கியது.

 

“ஏன் அன்பரசி என்னை பார்த்தா பயமா இருக்கா?!” என்ற அவனது கேள்விக்கு தலையை குனிந்தே இருந்தாள். “கொஞ்சம் வாய் திறந்து பேசுறியா” என சளித்துகொண்டான்.

அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தாள். காரின் சக்கரம் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. அவளின் தைரியம் மீண்டும் கானாமல் போனது.

 

“ச்ச்”  என சளித்துகொணடவன். “அப்போ நாங்க உங்க வீட்டுல தங்கியிருக்குறது உனக்கு பிடிக்கலை. சரி இன்னைக்கு சாயங்காலம் நீ வரும்போது நாங்க இருக்கமாட்டோம் திருப்தியா” என வேகமாக கூறிவிட்டு ரோட்டில் கவனம் செலுத்தினான். அவள் பதறிகொண்டு அவனை பார்த்தாள்.

 

“இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்?!” என்றான். “இல்ல நீங்க வெளியே தங்குறேன்னு சொன்னீங்கல்ல.. அப்படிலாம் பன்னிடாதீங்க” என கூறிவிட்டு முகத்தை சோகமாக்கினாள்.

 

“ஏய் அன்பு நான் சும்மா சொன்னேன். இங்க பாரு நான் ஒரு ஓட்டை வாய். நான் பேசாம ஒரு பத்துநிமிடம் இருந்தால்கூட செத்துபோயிடுவேன். அதுமாதிரி மனசுகுள்ளேயும் எதுவும் வச்சுக்கமாட்டேன்… ஆனா நீ என்கூட பேசவே தயங்குற அதான் அப்படி நினைச்சேன்”

 

“இல்லைங்க நான் கொஞ்சம் சை டைப் ” என அவள் கூற சிரித்தவன் “சை டைப்பா ” அதுக்கு அர்த்தம் தெரியுமா என லேசாக சிரித்தான்.

அவள் புரியாமல் விழித்தாள்.

 

“சரி அதைவிடு உனக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி எதையோ மனசுக்குள்ள வச்சுகிட்டு கஷ்டபடுற” என கேட்டான்.

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே” என சமாளித்தாள். ஆனால் யாரும் கேட்காத கேள்வி அவளது அடிமனதை வருடியிருந்தது. தேன்கூடாய் இருந்த நினைவுகள் கலைந்து இதயத்தில் கொட்ட கண்ணில் நீர்த்துளிகள் வந்து நின்றன. சற்று குழப்பத்துடன் அவளது கண்ணீரை பார்த்தவன் அதிர்ச்சியானான்.

 

“ஏய் என்ன ஆச்சு அன்பு?” என்ற கேள்விக்கு “காதல்னா என்னனு தெரியுமா?” என்று அவளது வாயிலிருந்து வார்த்தைகள் பூவியை துளைத்து வரும் இளம் பனிபுற்கள் போல வந்துவிழும் என அவன் நினைத்திருக்கவில்லை.

 

அதிர்ச்சி தொடர கால்கள் தடைகட்டையை அழுத்த கார் இய்க்கவேகத்தை நிறுத்தியது. கண்ணீரை துடைத்துகொண்டு அந்த பாவை பள்ளியை நோக்கி நடக்கதுவங்கியிருந்தாள்.

 

-தொடரும்.

Advertisements

3 Comments »

  1. உங்க ஸ்டூடன்ட்டுக்காக கொஞ்சம் பாத்து பன்னுங்க சார். உங்கள மாதிரி ஆசிரியர் எனக்கு இப்ப கிடைச்சது மகிழ்ச்சி. நன்றிங்க

    • மூன்று சுழி ண என்று தமிழில் இருக்கு. அதை எங்க Use பண்ணனும்னு தெரிஞ்சுக்கோங்க! நிறைய தமிழ் படிங்க. ஆனந்தவிகடன் வாராவாரம் Top to bottom fulla படித்தாலே தமிழ் தானா வந்துடும்

  2. தமிழ் பரிட்சையில் தேறுவது ரொம்ப கஷ்டம் அனு மேடம். அன்பரசி பேப்பர் திருத்தினதை விட அதிகமா நாங்க திருத்த வேண்டி இருக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: