Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03

உனக்கென நான் 3

“நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி இருக்கிறது’. என குழப்பிகொண்டே அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்தாள்.

 

இருந்தாலும் அவளது குணம் மனதிலும் எதிரொலித்தது. ‘ஐயோ அவள்மேல் கோபபட்டு குழந்தையை விட்டுட்டு வந்துட்டேனே’ என அந்த அழகான பிஞ்சு குழந்தையின் முகமும் நினைவில் வந்து சேர்ந்தது. வீட்டின் வாயிலை அடைந்தாள்.

 

“ஏன் மாப்பிள்ளை இத்தனை நாள் வராம அவ்வளவு பிஸியா” என தாய் பார்வதியின் குரல் கேட்டது. அதை எதேச்சையாக கேட்டுவிட்டாள் அன்பரசி‌. அடுத்தவர் விசயத்தில் ஆர்வம் காட்டும் பழக்கம் அவளுக்கு இல்லை என்றாலும் மாப்பிள்ளை என்ற வார்த்தை அவளை வாசலிலேயே நிறுத்தியது. மேலும் என்ன பேசுகிறார்கள் என கேட்க துவங்கினாள்.

 

“அதை ஏன் கேக்குறீங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் மாமா உதவி பன்னதாலதான் இப்போ இந்த அளவுகக்கு வந்துருக்கோம். அப்பா அம்மாவோட நியாபகத்தை மறைக்க பணத்துபின்னாடி ஓட ஆரம்பிச்சுட்டாரு நானும் விவரம் தெரிஞ்சதுல இருந்து அதே ஓட்டம் தான். ஆனா அம்மா கனவுல வந்து சொனாங்கலாம் அப்பாகிட்ட” என கூறும்போது அவனது குரலில் தொய்வு ஏற்பட்டது. ‘என்ன இவனுக்கு அம்மா இல்லையா ஐயோ எவ்வளவு கஷ்டபட்டு இருப்பான்’ என அன்பரசியின் மனதில் வலித்தது. அடுத்தவரின் உணர்வுகளை ஓர் கிளிப்பிள்ளை போல் உள்வாங்கிகொள்ளும் வரமோ சாபமோ பெற்றவள் அன்பரசி.

 

“சரி விடுப்பா என்ன சாப்பிடுற டீ எதுவும் போட்டு தரவா? “என பார்வதி அவனது கவலையை திசை திருப்ப முயன்றார்.

 

“இல்ல அத்தை வேணாம்…” என அமைதியானான் சந்துரு.

 

ரவை வறுக்கும் மனம் அந்த அறையை நிரப்பிகொண்டிருந்தது. பிறந்தநாள் என்றால் இங்கு கேசரி தான் பெரிய விருந்து அதற்கான் ஏற்பாடுதான் நடந்துகொண்டிருந்தது.

 

“என்ன அத்த ரெடி பன்றீங்க ” என்ற கேள்விக்கு”கேசரிப்பா இன்னைக்கு அவளுக்கு பிறந்தநாள்ள” என்றாள். “கேசரியா ஐய்யோ”

 

“ஏன் என்னப்பா ஆச்சு”

 

“கேசரின்னு பேரை கேட்டாளே என்ககு அலர்ஜி தான்”

 

“ஏன் அப்படி சொல்ற”

 

“ஒரு டீலரை சமாளிக்க ஆந்திரா போயிருந்தோம் வேலையை முடிச்சுட்டு வேகமா வரும்போது வயிற்றை கிள்ளுச்சு அந்த அளவுக்கு பசி சரின்னு ரோட்டோரமா இருந்த ரெஸ்டாரன்ட்ல வண்டிய நிறுத்தி சாப்ட்டா முதல் வாய் கேசரி தான் வச்சேன். என் குடலே வெளிய வந்துடுச்சு.”

 

“அப்பறம்”

 

“அப்பறம் என்ன பசில செத்தாலும் பரவாயில்லைடா பாயசன்ல சாககூடாதுன்னு அங்க வண்டிய எடுத்தவன்தான் சென்னைதான் அடுத்த ஸ்டாப்பிங்”

 

இதை வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அன்பரசிக்கு இவனது குழந்தைதனம் பிடித்திருந்தது.

 

“ஏன் அத்த அன்புகிட்ட ஃபோன் இல்லையா?”

 

“அவ படிக்கும்போது யூஸ்பன்னா ஆனா இப்ப வேணாம் சொல்லிட்டா அவ மனசுகுள்ள எதையோ வச்சுகிட்டு வேதனைபடுறான்னு மட்டும் தெரியுது”

 

“எனக்கும் அப்படிதான் தோனுது முன்ன இருந்த அந்த அன்பரசி இவ இல்லை” என சந்துரு கூற வெளியில் நின்ற பாவைக்கு குழப்பம் நீடித்தது. ஆனாலும் தன் தாய் தன்னை புரிந்துள்ளார் என மகிழவும் செய்தாள்.

 

“அதான் மாப்பிள்ளை உங்க மாமா சொன்னாருள்ள ”

 

“ஆமா அவ கல்யாணமே வேணாம்னு சொன்னாரு அதையா சொல்றீங்க”

 

“ஆமா, நீதான் அவ மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிச்சு சொல்லனும்” என்று பார்வதி முடிக்க.

 

“ம்ம் ட்ரைபன்றேன் அத்த ஆனா இந்த சைக்காலஜியெல்லாம என்க்கு தெரியாதே இதில் உங்க பொண்ணு என்கிட்ட் பேசவே காசு கேக்குது இதுல மனச திறந்து அப்படியே சொல்லிட்டாலும்…” என சிரித்தான்.

 

‘என்ன என்மனம் எனும் பூட்டை உடைக்க வந்திருக்கும் திருடனா நீ முடிந்தால் முயன்றுபார்’ என கோபம் பொங்க சட்டென உள்ளே நுழைந்தாள். இருவரும் அவள்செல்வதை கவனிக்காமல் இல்லை. ஆனால் அவளுக்கு தெரியாது அந்த பூட்டிற்கு சந்துரு தான் சொந்தகாரன் ஆவான் என்று.

 

“சரி அத்த நான் டவுனுக்கு போய்ட்டு வாரேன் ஒரு சின்ன வேலை”

 

“என்னப்பா வேலை ”

 

“அது சர்ப்ரைஸ்” என வெளியே செல்ல அதை தொடர்ந்து கார் இன்ஜின் சத்தம் கேட்க அவன் சென்றுவிட்டான் என உணரமுடிந்தது.

 

அவனறையான தன் அறைக்குள் சென்றாள் திருத்தபட வேண்டிய புத்தகங்களை எடுத்தாள் அவை கலைந்திருந்தன. அவனது செயல்பாடுதான் என உணரமுடிந்தது. அவற்றை எடுத்துகொண்டு வேறு ஒரு மேஜைக்கு மாற்றினாள். ஆனால் அங்கு போதிய இடவசதி இல்லாததால் சிலவற்றை அங்கேயே வைத்துவிட்டாள். அப்போது எதேர்ச்சையாக அந்த டைரி கட்டிலில் இருப்பதை பார்க்க முடிந்தது.

 

அது அவனது டைரி என்பதை உணர்ந்தாள். ஆனால் இதை எங்கேயோ பார்த்த நியாபகம் மட்டும் மனதில் இருந்தது. அதை திறந்து பார்க்க ஆவலாக இருந்தாலும் அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையிட விரும்பாமல் நகர்ந்தாள். மேஜையில் அமர்ந்து அந்த கார்பன் பென்சில் கோடுகளுக்கு நடுவில் சிகப்பு மையால் திருத்திகொண்டிருந்தாள். கைவேலை செய்ததே தவிர மூளை வேறு உலகத்தில் மிதந்தது.

 

“இப்போ முடிவா என்ன சொல்ற”

 

“எனக்கும் உனக்கும் செட் ஆகாது சரியா நீ உன் லைஃப்பை பாத்துகிட்டு போ” என கத்திகொண்டிருந்தாள் அன்பரசி.

 

“நீ தாண்டி என் லைஃப் உன்னை விட்டுட்டு எபடிடி இருக்க முடியும்”

 

“பைத்தியாமா நீ”

 

“ஆமாடி உன்னை லவ் பன்னேன்ல நான் பைத்தியம்தான்”

 

“லவ்வா?! ஆனா நான் உன்னை லவ் பன்னலையே ”

 

“என்ன லவ் பன்னலையா அப்போ என்கூட பழகுனது எல்லாம் பொய்யா”

 

“பச்ச். நான் எப்போதாவது உன்னை லவ் பன்றேன்னு சொல்லிருக்கேனா?”

 

சற்று சிந்தித்தவன் “இல்லை ” என தலைகுணிந்தான்.

 

“பின்ன ஏன் என்னை டார்ச்சர் பன்ற”

 

“நீ பழகுனது எல்லாம் பொய்யா”

 

அன்பரசியின் கண்கள் சிவந்தன “டேய் நான் உன்கூட பழகுனது ஒரு ஃபிரண்டாதான் அதுமட்டுமில்லாம எனக்கு செலவு பன்ன ஒருத்தன் தேவைபட்டான் போதுமா அதான் உன்கூட பழகுனேன்” என முடித்தாள்.

 

“ச்சீ நீ இவ்வளவு கேவலமான பொண்ணா.. காசுக்காக என்ன வேணாலும் பன்னுவியா நான் உன்னை இப்படி எதிர்பாக்கலைடி. இனி உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன். த்தூதூ” என சென்றுவிட அந்த காட்சிகள் அனபரசியின் வாழ்வில் நடந்த தருணம் அதை அவளால் எள்ளவும் மறக்க முடியாது.

 

இந்த காட்சிகள் ஓடவே இதயம் கனத்திருந்தது. தன் நிலா கண்ணங்களை அந்த மழலையின் நோட்டுகளின் மீது வைத்திருந்தாள். சோகமான பதுமையாக படுத்திருந்தாள். எவ்வளவு நேரம் யோசித்தாள் என்றே தெரியவில்லை. கடிகாரமுள் அரைபாதியை கடந்து சென்றிருந்தது.

 

புல்லட் சத்தமும் கார்சத்தமும் ஒருங்கே வரவே வீட்டில் அனைவரும் வந்துவிட்டனர். சந்துரு கையில் ஒரு பெட்டியுடன் அவளது தாயை சந்தித்தான்.

 

“என்னப்பா இது”

 

“சுடிதார் அத்த அன்பரசி பிறந்தநாளள அதான் வாங்கிட்டு வந்தேன் சீக்கிரம் எல்லாரும் ரெடி ஆகுங்கள் லெட்ஸ் செலிப்ரேட்” என அனைவரையும் அவசரபடுத்தினான்.

 

‘இவன் யாரு எனக்கு ட்ரெஸ் எடுத்து கொடுக்க இவ்வளவு உரிமை கெண்டாடுரான் ‘ என கண்கள் அனாலாக தகித்தன.

 

அதற்குள்ளாகவே அவளது தாய் பார்வதி அந்த சுடிதாரை எடுத்துகொண்டு இவளிடம் வந்தார். “பாருடி எனக்கு கூட தோனலை எவ்வளவு அழகா எடுத்து வந்திருக்கான் பாரு” என அவன் புகழை பாட துவங்கியிருந்தாள்.

 

“ப்ச்ச் அம்மா இதை எடுத்துட்டு போறியா?!” என்றுமிள்ளாமல் வார்த்தையை உதிர்த்துவிட்டாள். எவ்வளவு நாள் தான் எரிமலை அடங்கியே இருக்கும் மனதில்.

 

“என்னடி வாய் நீளுது ஒழுங்கா போய் குளிச்சுட்டு போட்டுட்டு வா ” என்ற கட்டளை குரல் ஒலித்தது.

 

தன் கோபம் எல்லைமீறியதை உணர்ந்தவள் அமைதியாக அதை வாங்கிகொண்டு குளியலறையில் புகுந்தாள்.

 

அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் அவளது கண்ணீர் துளிகள் சென்று விழுந்து கொண்டிருந்தன.

 

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: