Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

உனக்கென நான் – 2

“அட கழுத வெளிய வா…” என செல்லமாக திட்டிய தன் தந்தை “நீ யாருன்னு தெரியலைல அதான் பயந்துபோய் நிக்குறா… இதுக்குதான்டா சொல்றது அடிக்கடி வந்துட்டு போகனும்னு” என தன் தோழரை கடிந்து கொண்டார் அன்பரசியின் தந்தை சந்திரபோஸ். ஆம் பெயருக்கு ஏற்றார் போல் சற்று தேசப்பற்று மிகுந்தவர். வீட்டில் ராணுவம் போன்ற அடக்குமுறையும் உண்டு.

 

“உன் பொண்ணு என்ன பாத்து ஒன்னும் பயந்துபோய் நிக்கலை நீ மிலிட்டரில ரூல்ஸ் போடுற மாதிரி போட்டுருப்ப அதான் உன்னை பார்த்து பயந்து போய் நிக்குறா” என தன் தோழனை விடாமல் ஈடுகொடுத்தார்.

 

அன்பரசிக்கு என்ன நடக்கிறது என்றே  புரியவில்லை. கதவின் இடுக்கில்தான் மறைந்திருந்தாள். பின்னால் இருந்து ஒரு கை தலையில் கொட்டவே திரும்பினாள்.

 

“என்னடி பராக்ககு பாத்துகிட்டு இருக்க இந்த இந்த காஃபியை போய் குடு ” என தட்டை நீட்டினாள்.

 

அன்பரசி ஓர் பார்வையை தன் தாயிடம் வீசினாள் அதில் ” என்னமா எனக்கு கல்யாணம் வேண்டாம் ” என்பது போல இருந்தது. அதை புரிந்துகொண்ட தாய். “உன்னை பொண்ணு பாக்க எல்லாம் வரலை. அவங்க இங்க ஒரு நிலத்தை வாங்க வந்துருக்காங்க ஒரு மில் கட்ட போறாங்களாம் அதான் ஒரு வாரம் நம்ம வீட்டுல தங்க போறாங்க அவ்வளவுதான்..நீயா எதுவும் கற்பனை பன்னிகாதடி போ…” என தள்ளிவிட வேறு வழியில்லாமல் அதை எடுத்துகொண்டு நடந்தாள்.

 

சென்று அனைவருக்கும் கொடுக்க அதை எடுத்துகொண்டனர். ஆனால் அந்த இளைஞன் மட்டும் தனது கைபேசியில் எதையோ தட்டிகொண்டிருந்ததான். நவீன கைபேசிகள் உலகத்தை சுருங்கிவிட்டது என்றாலும் இதயங்களையும் சேர்த்தே சுருக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் என்னவோ அந்த அழகுபதுமையை விட அந்த ஆன்ட்ராய்ட் பதுமையில் கவனம் செலுத்திகொண்டிருந்தான். அதை பருகியவர்கள். தன் வேலை முடிந்ததும் வேகமாக சென்று சமையலறையில் மறைந்தாள்.

 

சிறிது நேரம் சிரிப்பு சத்தங்களும் உரையாடல்களும் அரங்கேறவே.

 

“சரிடா போஸ் நாங்க கிளம்புறோம்” என அந்த மனிதர் கூறும் சத்தம் சமையலறையை அடைந்தது. உடனே பார்வதி வேகமாக வெளியே சென்றார்.

 

“என்னடா சன்முகம் ஒரு வாரம் வேலை இருக்குனு சொன்ன?” என போஸ் தொடர.

 

“அதில்லடா போஸ் நாங்க இங்க எதாவது ஹோட்டல் புக் பன்னிகிறோம்”  என முடித்தார்.

 

நக்கலாக சிரித்த அன்பரசியின் தந்தை “ஏன்டா இது என்ன சிட்டியா. உனக்கு காமெடி சென்ஸ் இன்னும் குறையலடா”

 

“ஆமா டாட் இங்க ரோடே ஒழுங்கா இல்லை இதுல ஹோட்டல் நோ சான்ஸ்” என அந்த இளைஞனின் குரல் ஒலித்தது.

 

“ஆமா அன்னா சந்துரு சொல்றது சரிதான் இங்கயே தங்கிகோங்க” என அன்பரசியின் தாய் உரிமையாக சண்டையிட்டார்.

 

சமையலறையில் இருந்த அன்பரசிக்கு மனதில் ஓர் சுனாமியே வந்தது.’ யார் இவங்க ஏன் இவ்வளவு அக்கறையா இருக்ககாங்க அதுவும் அப்பா இன்னைக்கு தான் மனம்விட்டு சிரிக்குறாரு’

 

“டேய் பொம்பள புள்ள இருக்குற வீட்டுல ஒரு பையன் தங்குனா என்னடா நினைப்பாங்க ” என சன்முகம் கிசுகிசுக்கும் குரல் கேட்டது.

 

கூடவே “எஸ் டாட் நாம பக்கத்துல இருக்குற எதாவது ஒரு டவுன்ல போய் தங்கிட்டு பின்ன தினமும் வந்துகளாம்” என சந்துரு வழிமொழிந்தான்.

 

“இந்த ஊர்காரன் என்ன நினைக்குறான்கிறதெல்லாம் எனக்கு முக்கியம் இல்லடா இப்ப நீ இங்க தங்கலைனா என் கூட ஜென்மத்துக்கும் பேசாதடா!” வாதம் முடிந்தது.

 

“அது இல்லடா என் பையனையாவது..” என சன்முகம் தொடர.

 

“ஏன்டா என்ன ஊர்காரன் கேட்டா என் பொண்ணு கட்டிக்க போற மாப்பிள்ளைனு சொல்லிகிறேன் போதுமா… ஏன் நீ இதுக்கு சம்மதிக்க மாட்டியா” என அக்னி ஏவுகணைகளை கொண்டு தாக்கினார்.

 

“யப்பபா சாமி சரிடா நாங்க இங்கயே தங்கிகிறோம்” என கையெடுத்து கும்பிட்டார். அனைவரின் சிரிப்பொலியும் கேட்டது‌.

 

ஆனால் ஏவப்பட்ட ஏவுகணைகள் தாக்கியது அன்பரசி யின் மனதை அவளது இதயத்தை ஊசியால் குத்துவதைபோல் உணர்ந்தாள். ‘நான் எப்படி கல்யாணம்.. என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவதில்லை என்னால் யாரும் காயபடகூடாது’ என இதயத்தை பிழிந்து கொண்டிருந்தாள்.

 

“ஏய் உன் ரூமை ஒதுங்க வைடி இவங்க தங்கட்டும்” என தாயின் குரல் இவளது நினைவுகளை வெள்ளையடித்தது. தனது அறைக்கு ஓடினாள். அங்கிருந்த துணிகளை எடுத்து வேறு இடத்திற்கு மாற்றினாள். அதற்குள்ளாகவே தோழர்கள் இருவரும் ராணுவத்தில் வழங்கப்பட்ட புல்லட்டை எடுத்துகொண்டு கிளம்பியிருந்தனர்.

 

அந்த இளைஞனோ சமையலறையில் அவளின் தாயிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தான். அந்த அறை சிறிது பெரியதுதான். அதில் ஒரு கட்டில் ஆனால் அதில் மூன்றுபேர் தூங்கலாம் எனும் அளவிற்கு இருக்கும். அன்பரசியின் கனவுகளுக்கு துனையான இடம் அதுதான். அதுமட்டுமில்லாமல் அருகில் ஓர் புத்தக மேஜை மற்றும் கனிபொறிக்கான ஓர் மூலை அருகில் ஓர் மேஜை அங்குதான் புத்தகங்களை படிப்பதும் மாணவர்களுக்கு மதிப்பிடுவதும் அரங்கேறும்.

 

புத்தகங்களை எடுத்து அடுக்கும்போது அங்கு அவன் நுழைந்தான். “ஏங்க நானும் புத்தகம் எல்லாம் படிப்பேன் இது இங்கயே இருக்கட்டும்…ஓ கம்ப்யூட்டர் எல்லாம் யூஸ் பன்னுவீங்கலா சூப்பர். ” என அவன் பேசிகொண்டிருக்கும்போதே வெளியே செல்ல முயன்றாள்.

 

“அதுசரி இங்க யாரோ என்னை பச்சை கலர் ட்ரஸ் போட வச்சுருக்காங்க போல இருக்கே” என மெதுவாக கூறினான்.

 

அப்பொழுதுதான் முகத்தில் குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். “பின்ன இந்த ரூம்ல நான் தனியா பேசிக்கிட்டு இருந்தா வேற என்ன சொல்றது” என மறுபடியும் கூற அன்பரசி சிரித்துவிட்டாள்.

 

“அப்பாடா பதினெட்டு வருசம் கழிச்சு சிரிச்சுட்ட” என அவன் மறுபடியும் கேட்டான்.

 

“என்ன ?” என்ற வார்த்தை உதிர்ந்தது அவளிடமிருந்து.

 

“அப்பாடா அப்போ உங்களுக்கு பேச்சு வருது… ” என நக்கல் அடித்தான். அவள் புரியாமல் விழித்தாள்.

 

“வாவ் செஸ் போர்ட்… நீங்க விளையாடுவீங்களா?…”என மேஜை மீதிருந்த சதுரங்க பலகையில் கவனம் செலுத்தினான்.

 

“ம்ம்” என சத்தம் மெதுவாக வெளிப்பட்டது.

 

“நீங்களும் யாரும் விளையாடுவீங்க” என மீண்டும் தொடர்ந்தான்.

 

“இல்ல நானே இரண்டு பக்கமும் விளையாடுவேன் எதாவது கண்டுபிடிச்சு ஸ்கூல்ல பசங்களுக்கு சொல்லி தருவேன்” என முடித்தாள்.

 

“நீ இன்னும் மாறவே இல்லை..சரி நான் உங்ககூட விளையாடலாமா”

 

‘என்ன நான் இன்னும் மாறவில்லையா இதற்குமுன் என்னை எப்படி இவனுக்கு தெரியும்’என குழப்பிகொண்டு “என்ன?” என கேள்வி எழுப்பினாள்.

 

அவனோ பதட்டத்தில் “ஐயோ செஸ் விளையாடலாமானு கேட்டேன் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என வேகமாக முடித்தான்.

 

‘நான் என்ன கேட்டால் இவன் என்ன சொல்கிறான்’ என நினைத்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.

 

“உங்க ஃபோன்ல என்ன சிம் போட்டுறுக்கீங்க எனக்கு டவரே கிடைக்கலா” என அவன் கூற.

 

“என்கிட்ட ஃபோன் இல்லைங்க” என முடித்தாள். அதிர்ச்சியான அவன் “ஏன்” என கேட்டான்.

 

“அது எனக்கு தேவைபடலைங்க” என சுருக்கமாக முடித்துவிட்டு வெளியே சென்றவளின் சத்தம் “அம்மா நான் மலர் வீட்டுக்கு போய்ட்டு வாரேன் ” என ஒலித்தது.

 

சரி என அந்த கட்டிலில் அமர்ந்தவன் அருகில் இருந்த மாணவர்களின் நோட்டுகளை பார்த்தான். “ம்ம் பசங்களே இந்த காலத்துல இவ்வளவு தூக்கிட்டு வரமாட்டாங்க ஆனா இவ இவ்வளவு நோட்ட தூக்கிட்டு வந்துருக்கா” என நோட்டமிட்டவன். ஒவ்வொரு நோட்டாக எடுத்து புரட்டினான்.

 

“ம்ம்… கனிபிரபு 10 மார்க் வெரிகுட்

அன்ட் ராதா 8 மார்க் அதுக்கும் வெரிகுட்டா சரி சரி அப்புறம் சஞ்சீவ் 0 மார்க் என்னடா இதுக்கும் வெரிகுட் அப்படி என்னதான் எழுதியிருக்கான்” என ஆர்வமாக நோட்டை திறந்து பார்த்தான். அதிர்ச்சியாகினான்.

 

உள்ளே ‘டீச்சர் எனக்கு ரொம்ப போர் அடிக்குது நான் தூங்கபோறன் பரிட்சை எழுதலை’. அதை வாசித்த சந்துரு குழுங்கி குழுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

 

“என்னடி அன்பு அதுக்குள்ள வந்துட்ட ?” மலர் ஆச்சரியமாக கேட்டாள்.

 

“எனடி நீ பாப்பாவ காட்டிட்டு நீபாட்டுக்கு வந்துட்ட இவ என் கண்ணுகுள்ளையே நிக்குறா தெரியுமா?” என குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கினாள்.

 

உள்ளேயிருந்து வந்த மலரின் தாய் “நீயும் கல்யாணம் பன்னிருந்தா இன்னைக்கு உன்குழந்தைய கொஞ்சிருக்கலாம்ல?!” என வழக்கமான நக்கலுடன் கூற… “அந்த ஏற்பாடுதான்மா இன்னைக்கு நடக்குது” என மலர் ஜாடையாக கூறினாள்.

 

“ஏய் சும்மா இருடி ” என மலரின் கையை கிள்ளினாள்.

 

“இங்க பாருமா இவளை பொண்ணு பாக்க வந்தாங்க அதை உன்கிட்ட சொல்லகூடாதுன்னு சொல்லி கிள்ளி வைக்குற” என வழக்குபதிவு செய்தாள்.

 

“அப்படியெல்லாம் இல்லை சித்தி அவங்க அப்பாவோட ஃபிரண்ட் வேலை விசயமாக வந்திருக்காங்க” என சமாளித்தாள்.

 

“ஒன்னா சேந்துட்டீங்கள்ள இன்னும் ரெண்டு நாளைக்கு ஊர் அழிஞ்சதுடி என்னமோ பன்னுங்க” என சித்தி குடங்களுடன் கிளம்பினார்.

 

“ஏண்டி அம்மா கிட்ட ஏன் அப்படி சொன்ன” என மலர் கேட்க…

 

“நிஜமாவே அவங்க எங்க அப்பாவோட ஃபிரண்ட் தான்டி” என குழந்தையின் கன்னத்தை கிள்ளினாள்.

 

“உங்க அப்பாவும் அவரு ஃபிரண்டும் இந்த வழியாகத்தான் தோட்டத்துக்கு போனாங்க அப்போ எங்க அம்மா அவங்களை பாத்து பேசுச்சி… உங்க அப்பாதான் சொன்னாரு உன்ன பொண்ணு பாக்க வந்திருக்காங்கனு” என முடிக்க அன்பரசியின் சிரித்த முகம் வாடியது.

 

“ஏன்டி நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா?!” என்ற அடுத்த வார்த்தை மலர் கூறுவாள் என எதிர்பார்க்காதவள் கண்ணின் ஓரம் வழிந்த நீரை துடைத்து விட்டு குழந்தையை மலரின் மடியில் அமர்த்திவிட்டு எழுந்து நடந்தாள்..

 

-தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9

அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு. பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க.. “என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன். அமைதியாக இருந்தான் இந்திரவர்மன். “இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ” முற்றிலும் பார்த்தவன்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22

22 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மூவரும் கோவிலுக்கு மகிழ்வுடன் செல்ல வண்டியில் இருந்து இறங்கி நடந்து வர ஜெயேந்திரன், தனம் அனைவரும் ஆதர்ஷ் அக்சரா குழந்தை என அவர்கள் ஒரு குடும்பமாகவே வருவதை கண்டு பூரித்து போயினர். அனைவரும் இதையே

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 02அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 02

இந்த நாடகக் கம்பெனிக்காரர்களின் வண்டி எங்கள் வீட்டுப் பக்கமாக வரும் போதெல்லாம் எனக்குக் கோபந்தான் வருவது வழக்கம். விதவிதமான பயங்கரங்களைக் காட்டிக் கொண்டு, ரக ரகமான நோட்டீசுகளைப் போட்டுக் கொண்டு மனத்தைக் கெடுத்தே விடுகிறார்கள். நெஞ்சை உருக்கும் பாடல்கள், உல்லாசமான சம்பாஷனை,