Skip to content
Advertisements

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’

ச்சே… இதுவும் நல்லால்ல” அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டெறிந்தான். தரையில் அனாமத்தாய் கிடந்த ஒரு டசன் சட்டைகளுக்கு நடுவில் அந்த சட்டையும் ஒளிந்துக் கொண்டது. எதற்கு இத்தனை பாடு… இன்று காதம்பரியை சந்திக்கப் போகிறான்.

 

‘டேய் அடங்குடா…. பெங்களூர்லேருந்து வந்து ரெண்டு வாரமாகப் போகுது. இன்னும் ஒரு தடவை கூட அவளை சந்திக்க முடியல. தாஜுக்கு வராதது கூட பரவால்ல ஆனா மீட்டிங்குக்கு லாஸ்ட் மினிட்ல கல்பனாவை அனுப்பிட்டு இருக்கா…. இவ இன்னைக்கு மீட்டிங் வருவான்னு நினைக்கிறது முட்டாள்தனம்’ என்ற மனதிடம்.

‘அவ வருவாளா இல்லையான்னு தெரியாது ஆனால் இன்னைக்கு காதம்பரியைப் பார்த்தே ஆகணும்’ தீர்மானமாய் சொல்லியபடி கிரீம் கலர் பிஸினெஸ் காஷுவல் கால்சராயை அணிந்தான். தின் டெனிம் ஜாக்கெட் அணிந்ததும் தனது தோற்றத்தில் ஓரளவு திருப்தி அடைந்தான்.

 

கீழே இருந்த துணிக் குவியலைக் கண்டு வெட்கத்துடன் சிரித்துக் கொண்டு கப்போர்டில் அள்ளித் திணித்தான்.

 

“செர்ரி உன்னைப் பார்க்க ஏகப்பட்ட அலப்பர பண்ணிட்டு கிளம்புறேன். என்னைக் கோபப்படுத்தாம வந்துடுடி செல்லம்” என்றவாறு காரை ஸ்டார்ட் செய்தான்.

 

மொபைலில் காதம்பரியை அழைத்தவன் காரிலிருந்த ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

 

“காதம்பரி நான் சில தகவல்கள் கேட்டிருந்தேனே அதை மறக்காம எடுத்துட்டு வந்துடு”

 

“நினைவிருக்கு வம்சி… கல்பனா அந்த டீட்டைல்ஸ் எல்லாத்தையும் இன்னைக்கு விளக்கமா சொல்வா”

 

“அப்ப நீ வரலையா…” குரலில் உஷ்ணம் தெரித்தது.

“இன்னைக்கு உங்களோட லாஞ்ச் விஷயமா பத்து மணிக்கு ஒருத்தரை சந்திக்க வேண்டியிருக்கு”

 

“அந்த மீட்டிங்கை தள்ளிப் போட்டுட்டு இங்க வா… “

 

“அது கஷ்டம் வம்சி. சென்னை லாஞ்ச் இன்சார்ஜ மீட் பண்ணனும். உங்க மார்கெட்டிங் ஹெட் கூட அதில் கலந்துக்குறார்”

 

அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. போனைக் கட் செய்தவன் தனது உதவியாளனை அழைத்தான்.

 

“இன்னைக்கு சென்னை லாஞ்ச் மீட்டிங் பத்து மணிக்கு இருக்கு. அதில் நானும் கலந்துக்குறேன். என்னோட மத்த அப்பாய்ன்மென்ட்ஸ் எல்லாத்தையும் ரெண்டு மணி நேரம் தள்ளிப் போடு. இல்லை…. நாளைக்குத் தள்ளிப் போடு”

 

இரண்டு பாதையாக பிரிந்த சாலையைக் குறிக்கும் விதமாக சாலையில் இருந்த போர்டை பார்த்தவன் ஒரு வினாடி தயங்கிவிட்டு தான் வழக்கமாக அலுவலகத்துக்கு செல்லும் பாதையைத் தவிர்த்துவிட்டு மற்றொரு பாதையில் காரை செலுத்தினான்.

 

ம்சியிடமிருந்து எட்டி நிற்பதை விட அவனை மிகவும் நாடும் தனது மனதிடமிருந்து காத்துக் கொள்வதே காதம்பரிக்குப் பெரும்பாடாய் இருந்தது. பெங்களூர் செல்வதற்கு முன் ப்யூர் பிஸினெஸ் ரிலேஷன்ஷிப்பாய் இருந்த உறவில் இப்போது பெரிதும் மாற்றம் ஏற்பட்டது தெரிந்ததே. இதனை தொடர காதம்பரிக்கு பயமாக இருந்தது. எனவே வம்படியாய் வம்சியை சந்திக்கும் வாய்ப்பினைத் தவிர்த்தாள். அவனுடனான மீட்டிங்கிற்கு கல்பனாவை அனுப்பினாள். வேண்டாம் இந்த உறவு ஒத்து வராது என்று திருப்பி திருப்பி சொல்லி முரண்டு பிடிக்கும் தன் மனதை அடக்க முயல்கிறாள்.

 

“கல்பனா… எல்லாத்தையும் எடுத்துட்டியா” அலைபேசியில் அவளிடம் உறுதி செய்துகொண்டாள்.

 

“இத்தனை இன்ஸ்ட்ரக்ஷன் சொல்றதுக்கு பதில் நீயே இங்க வந்துடலாம். அவன் வேற ஏகப்பட்ட தகவல் கேட்பான். ஒன்னுனுத்துக்கும் வாய்தா வாங்கணும்…. ”

 

“இந்த வாரம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அடுத்தவாரம்  நான் பார்த்துக்குறேன்”

 

அடுத்தவாரமாவது போவாளா… தெரியவில்லை… சென்னை லாஞ்ச்சை என்ன செய்வது? ஜானிடம் பார்த்துக் கொள்ள சொல்லலாமா… உடனே ஜானுக்கு டயல் செய்தாள். அடுத்த பத்தாவது நிமிடம் ஜான் அவளது அலுவலகத்தில் இருந்தான்.

 

“என்னாச்சு கேட்…. பெங்களூர் ட்ரிப் கூட வெற்றிகரமா முடிஞ்சதா தானே கேள்வி. இப்ப சென்னைக்கு ஏன் என்னைக் கூப்பிடுற”

 

“பெங்களூர் வெற்றிகரமா முடிச்சாச்சு. ஆனால் எல்லா இடங்களுக்கும் இதே மாதிரி ஓடிட்டு இருந்தால் மற்ற வேலைகள் கேட்டுப் போகுது. உன்னால போக  முடியுமா முடியாதா அதை சொல்லு?”

 

“எதுக்கு இவ்வளவு கோபம்… நீ பாட்டுக்கு என்கிட்டே ப்ராஜெக்டை கொடுத்தா வம்சி ஒத்துக்குவானா. அவனும் கோபத்தில் எண்ணைல போட்ட அப்பமாட்டம் குதிக்கப் போறான்”

 

“கண்டிப்பா குதிப்பான். அதனாலதான் அவன் குறை சொல்ல முடியாதமாதிரி  நான் அப்பப்ப வருவேன். முக்கியமான வேலைகளுக்கு முன்னாடி நிப்பேன். ஆனால் நீயும் கல்பனாவும் எல்லாத்தையும் பாத்துக்கோங்க. நம்ம ரெண்டுபேரும் லாபம் வரமாதிரி கேட் நிறுவனத்தின் ரூபி வேலைகளைப் பிரிச்சு உனக்கு சப்கான்ராக்ட் தரேன். ஏற்கனவே முக்கால்வாசி வேலைகள் முடிஞ்சாச்சு. இனிமே கடைசி நேரத்தில் வம்சியால் பின்வாங்க முடியாது. நான் என்ன செய்தாலும் ஒத்துகிட்டே ஆகணும்” அவள் குரலில் தீவிரம். வழக்கமா அவன் தானே கார்னர் பண்ணுவான் இந்ததடவை நான் கார்னர் பண்றேன். ஜானுக்கு சமாதனம் சொன்னாளா இல்லைத் தனக்கே சொல்லிக்கொண்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

 

ஜானுக்கு வம்சியுடன் நெருங்கியிருக்கும் சந்தர்பத்தை கேட் தவிர்பதாகப் பட்டது. எது எப்படியிருந்தாலும் கேட் அவனது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவள். என் குருவின் பெண்ணைக் கலங்க விடமாட்டேன்.

 

“சரி போறேன்…. எப்ப லாஞ்ச்”

 

தேதியை சொன்னாள்.

“இன்னும் பத்து நாளில் சென்னை லாஞ்ச்சா… “ வாயைப் பிளந்தான்.

 

“ஏன்… முடியாதா ஜான்” குரலில் கவலை.

 

“நேரம் ஒதுக்குறது கொஞ்சம் கஷ்டம்… பட் நீ கேட்டு முடியாதுன்னு சொன்னதே இல்லை”

 

அவன் மணக்கக் கேட்டும் தான் சம்மதிக்காததை அவன் கோடிட்டு காட்டுவதாகத் தோன்றியது. ஜான் கேட்டது தப்பில்லை… எனக்காக, என் நிறுவனத்துக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்.

 

“இப்ப நான் உன்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னதைக்  குத்திக் காட்டுறியா…. “

 

“ஹே இதென்ன என்ன சொன்னாலும் உன்னை சொல்றதா நினைச்சா எப்படி. உனக்கு என்னாச்சு கேட். ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸா இருக்க”

 

அவள் மூட் அவுட்டாக இருப்பது அவ்வளவு அப்பட்டமாகவா தெரிகிறது. தண்ணீரை எடுத்து ஒவ்வொரு சிப்பாகப் பருகினாள்.

 

“ஜான்… நீ ரொம்ப நல்லவன்…. பொறுமையானவன்… பண்பானவன்…. நான் உனக்கு ஏற்றவளில்லை”

 

“சரி… நீ எத்தனை கொலை பண்ணிருக்க…”

 

“விளையாடாத ஜான். கல்யாணம் பெரிய பொறுப்பு. அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரல. நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோயேன்”

 

“சரி சரி பொலம்பாதே…. இன்னும் ரெண்டு வருஷத்தில் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன். உனக்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லு. அப்பறம் என்னை மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப் படப்போற”

“காதம்பரி வருத்தப்படும் அளவுக்கு எதுவும் நடக்க விடமாட்டேன். அதுக்கு நான் கேரண்டி…. “ என்ற குரல் வந்த திசையில் இருவரும் திரும்பினர்.

 

“வம்சி… “ திகைப்போடு முணுமுணுத்தாள் காதம்பரி.

 

“சென்னை லாஞ்ச் மீட்டிங் இங்கிருந்து பக்கம்தானே… இங்கேயே நம்ம மீட்டிங்கை முடிச்சுட்டு அங்க போய்டலாம்”

 

“கல்பனாகிட்ட தந்தனுப்பின டாக்குமெண்ட்ஸ் உன்கிட்ட ஒரு காப்பி இருக்குமே… ரெடி ஆனதும் சொல்லு… நம்ம வேலையைத் தொடங்கலாம்” என்றான் கட்டளையிடும் தொனியில்.

 

எதனால் காதம்பரி ரூபி ப்ராஜெக்ட்டில் எட்டி நிற்க முயல்கிறாள் என்பது ஜானுக்கு ஓரளவு புரிவது போல இருந்தது.

 

“அப்ப…. கேட்… நான்.. “ என்று ஜான் இழுக்கவும்.

 

“வம்சி இது ஜான். இவர்தான் சென்னை லாஞ்ச் ஏற்பாடுகளை கவனிப்பார். என் சார்பா இவர்தான் எல்லாத்திலும் கலந்துப்பார்”

 

“லாஞ்ச் போது கூடவா”

“நான் முன்னே நிற்க வேண்டிய இடத்தில் கண்டிப்பா நிற்பேன். மத்தபடி உங்க ப்ராஜெக்ட்டுக்கு வேண்டிய விவரங்களை ஜானும் கல்பனாவும் பார்த்துப்பாங்க”

 

வம்சி சொல்லப் போகும் பதிலைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக் கொண்டாள். “அதுக்கு ஜான் கூடவே ஒப்பந்தம் போட்டிருப்பேனே… உன் நிறுவனம் எதுக்கு” இந்தக் கேள்வியை எதிர்பார்த்து அதற்கு பதிலும் யோசித்து வைத்திருந்தாள்.

 

“குட் ஜாப்… பாவம் நீ கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லாம இத்தனை மாசமும் வேலை பாத்திருக்க… வேற யாரையாவது உதவிக்கு வச்சுக்கோன்னு நானே சொல்ல இருந்தேன்” என்றதும் அவளுக்கு மயக்கம் வராத குறை.

 

“வம்சி….. இதென்ன இஷ்டத்துக்கு மீட்டிங் இடத்தை மாத்தினா நான் ஒருத்தி இங்கேயும் அங்கேயும் ஓடி வர முடியுமா…. “ என்று அவனைக் கடிந்து கொண்டபடியே கதவைத் திறந்து அறையினுள் வந்தாள் கல்பனா.

 

“சாரி கல்பனா… இதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். ஒருவழியா அக்ரீமென்ட்டுக்கு வந்தாச்சு. இனிமே மீட்டிங்கை என் மேனேஜர் கண்டக்ட் பண்ணுவார். நீயும் ஜானும் அங்கேயே நேரா பேசிக்கோங்க”

 

“அப்ப நீங்க…. “

“நானும் காதம்பரியும் முதல் பேஸ் முடிச்சாச்சு. எல்லாத்தையும்  டாக்குமெட் பண்ணிருக்கோம். அதை அப்படியே ரிப்ளிகேட் பண்ணுங்க”

 

“அப்ப நீங்க ரெண்டு பேரும் கேம் நேரடியா விளையாடாம எங்களை உதைச்சு விளையாடப் போறிங்களா…”

 

“எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம் ஆனால் அது எங்க நன்மைக்குத்தானே… இனிமே நாங்க இதில் தலையிடவே மாட்டோம். நீங்களே எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுட்டு என்னைக்கு மெட்ராஸ்ல வந்து நிக்க சொல்றிங்களோ அன்னைக்கு வந்து நிக்கிறோம்“ காதம்பரியின் சார்பாகவும் தானே வாக்களித்துவிட்டுக் கிளம்பினான்.

 

அவன் சென்று வெகு நேரம் கல்பனாவும், காதம்பரியும் நடந்ததை நம்ப முடியாமலேயே அமர்ந்திருந்தனர்.

 

“இவன் என்ன சொல்றான் கல்பனா…. அவன் டீமே கவனிச்சுக்குமா… இனிமே இவன் குடைசலே கொடுக்கமாட்டானாமா”

 

“இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நீயே கண்டினியூ பண்ணிருப்பேல்ல… ஆனால் இவன் ஏன் திடீருன்னு ஜகா வாங்குறான்…  எலி ஏன் இப்படி போகுதுன்னு என்னால கெஸ் பண்ணவே முடியல… ஆனா இந்தக் கள்ளன் என்னவோ திட்டம் வச்சிருக்கான்னு மட்டும் புரியுது”

 

குழப்பத்துடன் தலையாட்டினாள் காதம்பரி.

 

சிறிது நேரத்தில் அவளது பெர்சனல் எண்ணுக்கு வம்சியிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“என்ன பேபி இப்படி பண்ற… ரெண்டு வாரம் உன்னைப் பாக்காம எப்படி காஞ்சு போயிட்டேன் தெரியுமா…. “

 

கல்பனா அங்கிருக்கவும் காதம்பரியால் திரும்பவும் பதில் கூட தர முடியவில்லை.

 

“ம்ம்ம்…. “ என்றாள்

 

“இன்னைக்கு காலைல இருந்து பாத்து பாத்து ட்ரெஸ் பண்ணிட்டு நின்னா வரமாட்டேன்னு சொல்ற. எனக்குக் கடுப்பு வராது… இங்க பாரு செர்ரி…. நான் கூப்பிட்ட இடத்துக்கு நீ வரலைன்னா நீ இருக்குற இடத்துக்கு நான் வந்துட்டு போறேன்

 

இன்னும் உனக்குப் புரியுற மாதிரி சொல்லட்டுமா… ராணிதான்  ராஜா வீட்டுக்கு வரணும்னு அவசியமில்லை. ராஜா கூட ராணியைத் தேடி வரலாம்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: