Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 15

னிக்கிழமை மாலை வருணும் தருணும் பிரபாகரன் வீட்டில் விளையாடி கொண்டு இருக்கும் போது வருணுக்கு பேக்டரியில் இருந்து போன் வந்தது.

 

     மேனேஜர் கணேசன், “சார் ஆபீஸ்ல இருந்த, நம்ம காம்ப்ளக்ஸ் லீஸ் அக்ரீமென்ட் பேப்பர்ஸ்ஸ காணும் சார். அருண் சார் வீட்டுக்கு கொண்டு போய் வச்சிருப்பாரோன்னு நினைக்கிறேன். லீஸ் ரெனீவல் நெக்ஸ்ட் வீக் வருது, உங்க வீட்ல இருக்கான்னு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நான் அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவேன்.”

 

     “சரி கணேசன், நான் இன்னும் ஒன் ஹவர்க்குள்ள வீட்ல பாத்துட்டு கால் பண்றேன்.”

 

    “ஓகே சார்”

 

     தருண் உடன் வந்தால் தொல்லை செய்வான் என்று அவனை பிரபாகரன் வீட்டிலேயே விட்டு விட்டு வருண் மட்டும் தன் வீட்டிற்கு விரைந்தான். ஹாலில் வேலைக்காரர்கள் யாரும் இல்லை, ஒரு நிமிட வேலைதானே என்று அவனும் தன் வரவை அறிவிக்க வில்லை. நேராக தன் ரூமுக்கு சென்று அண்ணன் பிரிவில் வைத்த பைல்களை எல்லாம் எடுத்து பார்த்து கொண்டிருந்தான். அப்போதுதான் இயல் சாம்பாரினால் அபிஷேகம் செய்தவளை போல உள் நுழைந்தாள். அவளை பார்த்ததுமே வந்துவிட்ட சிரிப்பினை கஷ்டப்பட்டு முழுங்கினான். அவள் பாத்ரூம் உள்ளே சென்ற சில நிமிடங்கள் கழித்து வருண் பைலை கண்டுபிடித்து எடுத்து வைத்தான். வந்த வேலை முடிந்து கிளம்ப நினைக்கையில் இயல் பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள். என்னதான் நல்லவன், நியாயஸ்தன் என்றாலும் இப்படி ஒரு நிலையில் பெண்ணை கண்டால் எந்த ஆண் மகனும் சில நொடிகளாவது மனம் தடுமாறுவது இயற்கை அல்லவா. எந்த சூழ்நிலையிலும் தடம்புறளாமல் வாழ்ந்து செல்ல கூடிய மனிதனை இதுவரை இறைவன் படைத்ததில்லை என்ற உண்மையை நாம் ஏற்று கொள்ள தான் வேண்டும். வருணும் இதற்கு விதிவிலக்கல்ல…

 

     வருண் இந்த வீட்டிலேயே இல்லை என்ற தைரியத்திலும், பொதுவாக அவனின் அறைக்கு வேறு எந்த வேலைக்காரர்கள் வருவதில்லை என்ற நம்பிக்கையிலும் இயல் டவலை மட்டும் கட்டி கொண்டு வந்திருந்தாள். கண்ணாடியில் தெரிந்த உருவத்தை முதலில் பேய் என்றே நினைத்து அரண்டவள், கூர்ந்து கவனித்த பின்னே வருண் என்று உணர்ந்தாள். பேயே நேரில் வந்திருந்தால் கூட இப்படி பயந்திருக்க மாட்டாள் போல, வருணை கண்டு அவ்வளவு நடுங்கி போனாள்.

 

  மிரட்சியுடனே, “கதவு பூட்டி இருக்கே, நீங்க எப்டி உள்ள வந்தீங்க?”

 

     “நீதான் என்னையும் சேத்து உள்ள வச்சு பூட்டின”

 

    “எனக்குத்தான் கண்ணு தெரியல, உங்களுக்கு தெரியும்ல. ‘நான் இங்க இருக்கேன்னு’ ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம்ல” என்றவள் அவன் பார்வையில் வந்திருந்த மாற்றத்தை இப்போதுதான் கவனித்தாள்.

 

      கால்கள் இரண்டும் கதகளி ஆட ஒவ்வொரு அடியாய் பின்னால் நகர்ந்தவளை வருண் இரண்டே எட்டில் வந்து அள்ளி அணைத்து கொண்டான். அவனின் கைகளுக்குள் அடங்கிட மறுத்து முன்னும் பின்னும் துள்ளி குதித்தவளை அவன் விடுதலை செய்திட, ‘பளார்…’ என்று ஒன்றை அவன் தன் கன்னத்தில் உணர்ந்தான்.

 

    “தப்பான எண்ணத்தோட எங்கிட்ட வந்தீங்கன்னா கொன்றுவேன் பாத்துக்கங்க”

 

   வாங்கிய அறையில் வருணுக்கு மனதிலிருந்த சலனமெல்லாம் மறைந்து கோபம் வந்து குடியேறி இருந்தது, “ஐயோடா, உனக்கு பெரிய உத்தமின்னு நினப்பா? தருண ஏமாத்தி நீ இந்த ரூம்க்குள்ள வந்தது, நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து போட்ட ப்ளான்னு எனக்கு எப்பவோ தெரியும். அன்னிக்கி உங்கம்மா என்ன சொல்லுச்சு? நீ அப்டி இப்டி நடந்துகிட்டா நான் பூம்பூம் மாடு மாதிரி நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவேனா?”

 

      அன்று பேசியது அவன் அத்தனையும் கேட்டு இருக்கிறான் என இயலுக்கு புரிந்தது. தவறை நம் பக்கம் வைத்து கொண்டு அவனிடம் மல்லுக்கட்ட கூடாது, விலகி செல்வதே உசிதம் என, “சரி வழிய விடுங்க, நான் இப்பவே டிரஸ் மாத்திட்டு இந்த ரூம விட்டு போயிடுறேன். இனிமே இங்க வரவே மாட்டேன்.”

 

     “அதெப்டி? சும்மா இருந்தவன சூடேத்தி விட்டுட்டு இப்ப போறேன்னா என்ன அர்த்தம்? உன்ன இங்க கூட்டிட்டு வர லச்ச ரூபா குடுத்திருக்கேன், பணத்த குடுத்தவனுக்கு நீ பரிசு குடுக்க கூடாதா?”

 

     “அது என்ன கொல்றதுக்குதான் குடுத்தீங்க, இதுக்கில்ல”

 

     “சரி, இத்தன நாளா என் வீட்டு சாப்பாட்ட சாப்ட்டு இருக்கேல, அதுக்காக கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

 

    “செத்தாலும் இனிமே உங்க சாப்பாட்ட நான் சாப்பிட மாட்டேன், வழிய விடுங்க”

 

    “எவ்ளோ வேணும்னாலும் பணம் தர்றேன்”

 

    முகம் கோவைப்பழமாய் சிவக்க, “சீ…. நல்ல குடும்பத்துல பொறந்தவன் மாதிரியா பேசுறீங்க”

 

    “என்னோட குடும்பத்துக்கு சர்டிபிகேட் குடுக்குற அளவு நீ நல்ல குடும்பத்துல பொறக்கலியே. உன்னோட அண்ணன் ஒரு மொடா குடிகாரன், உங்க அம்மா பணத்துக்கு உன்னையே எங்கிட்ட வித்துட்டு போயிட்டாங்க, இப்ப வரைக்கும் நீ இருக்கியா செத்தயான்னு கூட எட்டி பாக்கல. நீ என்னடான்னா தருண் இல்லாத டைமா பாத்து கரெக்ட்டா என் முன்னாடி இப்டி வந்து நிக்கிற. இப்ப சொல்லு உன்னோட குடும்பத்த விட என்னோட குடும்பம் எந்த வகையில குறைஞ்சு போயிடுச்சு?” என்று முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தான்.

 

    “வேணாம் கிட்ட வராதீங்க. என்ன தொட முயற்சி பண்ணீங்கன்னா…”

 

    “தொட்டா என்னடி பண்ணுவ?”

 

    சுற்றும் முற்றும் தேடி பார்த்தாள், கைக்கு எட்டும் தூரத்தில் எந்த பொருளும் இல்லை. பின்னால் நகர்ந்து நகர்ந்து போனவள் சுவரை நெருங்கியதும் சுவிட்ச் போர்டை பார்த்தாள்.

 

   “இன்னோரு அடி எடுத்து வச்சீங்கன்னா,

நான் கரன்ட்ல கைய வச்சிடுவேன்.”

 

    “எங்க வை பாக்கலாம்” என்று அடுத்த அடியை எடுத்து வைத்ததும், ‘வீல்..’ என்ற கத்தலுடன் இயல் கரன்ட் ஷாக் அடித்து சில அடி தூரத்திற்கு தூக்கி எறிய பட்டாள்.

 

     இயல் கரன்ட்டில் கை வைக்க மாட்டாள் என்பதில் நூற்றுக்கு இருநூறு சதவீதம் உறுதியாய் இருந்தவனுக்கு அவள் மூர்ச்சையாகி விழுந்து கிடப்பதை உண்மை என்று உணரவே முடியவில்லை. இதுவரையில் தன் மனதில் பணத்தாசை பிடித்தவள் என்று அவளை பற்றி கொண்டிருந்த கெட்ட எண்ணங்களை எல்லாம் இந்த ஒரு நொடியில் உடைத்து எறிந்து விட்டாள்.

 

    “இயல்.. இயல்..” என்று அழைத்து பார்த்தான், அசைவே இல்லை. மெதுவாய் கன்னத்தை தொட்டு பார்த்தான், ஜில்லிட்டு போயிருந்தது, ஆனால் மூச்சு இருந்தது. தரையிலிருந்து வேகவேகமாக தூக்கி பெட்டில் போட முயன்றதில் பாதி அவிழ்ந்திருந்த டவல் முழுவதுமாய் நழுவி விழுந்தது. ஒரு பெரிய காட்டன் பெட் ஷீட்டை எடுத்து உடல் முழுவதும் மூடிவிட்டு உள்ளங்கை பாதங்களை தேய்த்து சூடாக்கிட முயற்சித்தான். அதன் பலனாய் சில நிமிடங்கள் கழித்து கண் திறந்த இயல், அவனை அருகில் கண்டு பயத்தில் கத்த தொடங்கினாள்.

 

    அவள் வாயை கை வைத்து இறுக மூடிய வருண், “கத்துன பிச்சுடுவேன்” என்று உள்ளங்கையை இன்னும் அழுத்தி தேய்க்க, இயல் இப்போதுதான் கீழே கிடந்த டவலை கவனித்தாள்.

 

     பெட்ஷீட்டை இறுக்கி பிடித்து கொண்டு பதறி சிதறி எழ முயற்சித்து உடல் ஒத்துழைக்காமல் மீண்டும் படுக்கையில் விழுந்து கண்ணீர் முட்ட, “என்னை என்ன செஞ்சீங்க?” என்றாள்.

 

     “நீ இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆக போகுது, என்னோட ரூம்க்குள்ள வந்து ரெண்டு வாரம் ஆக போகுது. தினமும் என் கண்ணு முன்னாடி தான தூங்குற, இத்தன நாள் செய்யாதத இந்த அஞ்சு நிமிஷத்துல செய்வேன்னு நினச்சியா? இல்ல இனிமே நான் எதாவது செஞ்சாலும் உன்னால தப்பிக்க முடியுமா? எங்கிட்ட இருந்து உன்ன காப்பாத்த யாரு இருக்கா? ”

 

    “……”

 

     “இப்ப நான் உன்ன ஒண்ணும் பண்ணல, ஷாக் அடிச்சதுக்கு பர்ஸ்ட் எய்ட் மட்டும் பண்றேன். எனக்கும் ரோஷம் இருக்கு, நீ என்னயே அடிச்சிட்டல்ல, நான் இங்கதான் இருப்பேன் ஆனா உன்ன தொடவே மாட்டேன். நிம்மதியா தூங்கு புரியுதா?”

 

     அவள் புரிந்து கொண்டதாய் தலையாட்டிட, வருண் கபோர்டில் இருந்து அவளுக்கு ஆடைகளை எடுத்து கைக்கெட்டும் தூரத்தில் வைத்து விட்டு, போய் சோபாவில் படுத்து கொண்டான். இயல் காலையில் கண் விழிக்கையில் வருண் அங்கே இல்லை, போய்விட்டான் போல.

 

     இரவெல்லாம் தூக்கம் வராது தவித்தவன் விடியும் முன்பே அங்கிருந்து கிளம்பி விட்டான். வருணால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை, நேற்றிரவு நடந்த சம்பவம் அவனை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தது. எந்த நினைப்பில் அவளிடம் அத்து மீற முயன்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் செய்த செயலால் மனமும் புத்தியும் இருவேறு கருத்துக்களை முன் நிறுத்தி பட்டி மன்றம் நடத்திட, அவற்றின் வாதங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட உயிரோ நெருப்பில் நிற்பது போல் தகித்து போனது. ஒரு நிமிட மனச்சலனம் அவன் இத்தனை நாள் கொண்டிருந்த வைராக்கியத்தை கருவறுத்தது போன்ற உணர்வு.

 

    இயலிடம் திமிராய் பேசி விட்டானே தவிர, அவள் முகத்தை எதிர் கொள்ள துணிவில்லை. மற்றவர்களும் தன்னை பார்க்கும் பார்வையில் ஏதோ ஒரு குற்ற உணர்வு தொன்றிட, தனிமையை விரும்பி ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராது அதிகாலையிலேயே பேக்டரிக்கு வந்துவிட்டான். உணவோ உறக்கமோ நினைவில் இல்லாமல், குட்டி போட்ட பூனை போல் தனது ஆபீஸ் அறைக்குள் தன்னந்தனியே பல மணி நேரமாய் சுற்றி கொண்டிருந்தான். அவள் இப்போது எழுந்துவிட்டாளா இல்லையா, எப்படி இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. பலமுறை போனை கையில் எடுத்து டயல் செய்ய ஆரம்பித்து விட்டு கால் செய்யாமலே திருப்பி வைத்து சென்றான். நேரம் மதியத்தை நெருங்கிட, இறுதி முடிவாய் வீட்டிற்கு போன் போட்டான்.

 

    சாந்தி, “ஹலோ….”

 

    வருண், “நாந்தான் சாந்தி, மதியம் எனக்கு சாப்பாடு சமைக்க வேணாம், பிரன்ட்ஸ் கூட வெளியில சாப்ட்டுக்கிறேன். அத சொல்றதுக்காகத்தான் கால் பண்ணினேன்.”

 

    “சரிங்கய்யா….”

 

   “அப்புறம்… இயல் என்ன பண்றா?…” திக்கி திணறி கேட்டான்.

 

     “அந்த பொண்ணுக்கு உடம்பு அனலா கொதிக்குதுய்யா, ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டு, மெடிக்கல்ல மாத்திர மட்டும் வாங்கி தர சொல்லி அத போட்டுகிட்டு படுத்திருச்சு. பிரபாகரன் ஐயா அவள பாக்குறதுக்கு வந்திருக்காரு, இப்ப அவரு கூடத்தான் இயல் பேசிட்டு இருக்குது.”

 

     அடுத்த பத்து நிமிடத்தில் வருண் தன் வீட்டிற்குள் வேகவேகமாக நுழைந்தான். வருணுக்கு இந்த முன்கோபமே அவனின் தாய் மாமனிடமிருந்து வந்து ஒட்டிய பழக்கம் தான். சின்ன சின்ன தவறுக்கே தூக்கி போட்டு மிதிப்பவர், இப்போது தான் செய்திருப்பது தெரிந்தால் என்ன செய்வாரோ என்று பயந்து மூச்சுவாங்க ஓடிவந்து நின்றவனை கண்டு பிரபாகரன் சாந்தமாக, “வாடா வருண், சன்டே அதுவுமா எங்க போன?” என்றார்.

 

    “ஹான்.. வந்து… நம்ம ஆபீஸ்க்கு…”

 

     “ஓ… நேத்து ஒரு பைல காணும்னு சொன்னியே அதத்தான் இன்னும் தேடிட்டு இருக்கியா?”

 

    “ம்….” அவர்கள் பேச ஆரம்பிக்க, இயல் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

 

    “இயல சும்மா பாத்துட்டு போக வந்தேன். பீவர் ஜாஸ்தியா இருக்கேன்னு ஹாஸ்பிடலுக்கு கூப்ட்டா வர மாட்டிக்கிறா அந்த பொண்ணு”

 

    “நீங்க விடுங்க, நான் கூட்டிட்டு போறேன் மாமா”

 

    “ம்… சரி ஜாக்கிரதையா பாத்துக்கோ”

 

    “சரிங்க மாமா” என்று வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்து இயலை தேடினான்.

 

     ஏற்கனவே இயல் முகத்தை பார்த்து நடந்ததை கொஞ்சம் யூகித்திருந்த சாந்தி, வீடு முழுக்க தேடி திரியும் வருணிடம் வந்து, “ஐயா, அந்த பொண்ணு கார்டன் பக்கமா போச்சு” என்றாள்.

 

    கார்டனில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த இயலிடம் சென்று வருண், “மாமா எதுக்கு இங்க வந்தாரு?”

 

    “உங்க மாமா உங்க வீட்டுக்கு வந்திட்டு போறாரு, அவருகிட்ட ஏன்னு கேக்காம என்கிட்ட கேக்குறீங்க, இதுல நான் என்ன சொல்ல முடியும்?”

 

     “சரி, ஹாஸ்பிடல் போக மாட்டேன்னு ஏன் அவருகிட்ட சீன் போட்டுட்டு இருக்க?”

 

    “…..”

 

    “கேக்குறேன்ல பதில் சொல்லு”

 

     “ஏன்னா, என் கைல இருந்த காசெல்லாம் காலியாகிடுச்சு” என்றாள் தலை குனிந்து கொண்டே.

 

    “ம்ச்ச்ச்… இதெல்லாம் ஒரு ரீசனா? என்கிட்ட கேட்டா பணம் தந்திருக்க போறேன். போ, சாந்தி கூட ஹாஸ்பிடல் போயிட்டு வா” என்று தன் பர்ஸை எடுத்து பணத்தை எண்ணி கொண்டு இருக்க,

 

    “வேணாம் சார், இப்ப பணத்த குடுத்துட்டு அப்புறம் வந்து பணத்த குடுத்தவனுக்கு பரிசு குடுக்க கூடாதான்னு கேட்ருவீங்க. எப்டியும் என்னை கொல்லத்தான போறீங்க, இப்பவே நான் செத்துட்டா நேச்சுரல் டெத் ஆகிடும். உங்களுக்கும் கொல்ற வேல மிச்சம்.”

 

    இப்போது வருணுக்கு சுவிட்ச்சை தொடாமலேயே உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: