லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் – த்யானம்
த்யானம்
வம்தே பத்மகராம் ப்ரஸன்னவதனாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணை நாநாவிதை பூஷிதாம் |
பக்தாபீஷ்ட ஃபலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்ஸேவிதாம்
பார்ஷ்வே பங்கஜ ஶம்கபத்ம நிதிபி யுக்தாம் ஸதா ஶக்திபிஹி ||
கரங்களில் தாமரை மலர்களை வைத்திருப்பவளும், சாந்தமான முகத்தை கொண்டிருப்பவளும், நலங்களும் வரங்களும் தருபவளும், அபய முத்திரை கைகளில் கொண்டிருப்பவளும், முத்தும் மாணிக்க ஆபரணங்கள் அணிந்திருப்பவளும், பக்தர்களின் அனைத்து ஆசைகளையும், அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்பவளும், பிரம்மா, விஷ்ணு, சிவனால் வழிபடுபவளும், பக்கங்களில் தாமரை மற்றும் சங்கு வைத்திருப்பவளும், சக்தியின் வடிவமானவளுமான லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்
ஸரஸிஜ நயனே ஸரோஜஹஸ்தே தவள தராம்ஶுக கந்தமால்ய ஷோபே |
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீதமஹ்யம் ||
தடாகத்தில் இருக்கும் மலர்களைப் போல் அழகிய கண்களை உடையவளும், மணமுள்ள வெள்ளை மலர்கள் கொண்ட மாலையை அணிந்திருப்பவளும், ஹரியின் பாதியான தேவியானவளும், மூவுலகங்களையும் காப்பவளுமான, தேவியே பக்தர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அருள்வாயாக…..
Dhyaanam
vande padmakaraam prasannavadhanaam soubhaagyadhaam bhaagyadhaam
hastaabhyaam abhayapradhaam maniganaih naanaavidhaih bhooshithaam |
bhaktha abheeshta phalapradhaam harihara brahmaadibhi sevithaam
paarshve pankaja shankha padmanidhibhi yukthaam sadhaa shaktibhihi ||
sarasijanayane sarojahasthe dhavala dharaam sukhagandha maalyashobhe |
bhagavathi harivallabhe manognye thribhuvana bhoothikari praseedha mahyam ||
— திருமதி. ஸ்ரீஜெயந்தி மோகன்