Skip to content
Advertisements

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு.

‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க என் பின்னாடி சுத்திருக்காங்க தெரியுமா… இந்த விளம்பரத் துறையில் கூட எத்தனை கிளைன்ட்ஸ் என்னை ப்ரபோஸ் பண்ணிருக்காங்க. எல்லாத்தையும் என் கம்பனிக்காக ஒதுக்கிருக்கேன். ஒரு விஷயத்தில் ஈடுபடலைன்னா அது வராதுன்னு அர்த்தமில்லை. அது எனக்குத் தேவையில்லைன்னு அர்த்தம்‘

விமானத்தை விட்டு இறங்கியதும், தங்களது தாங்கும் ஏற்பாட்டை கவனிக்கும் நிறுவனத்தை அழைத்தாள்.

“கிளைன்ட்டுக்கு ஒரு அறை புக் பண்ணியே அது இன்னைல இருந்து வேணும். ரிசீவ் பண்ண யாரு வந்திருக்கா…..

என்ன அமர்நாத்தா… ஐயோ அவனை சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுமே..

வேற ஆளை அனுப்புறியா…”

சற்று தள்ளி தன் அலைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வம்சி கண்ணில் பட்டான். ‘ஊருக்குப் போறதுக்குள்ள ஒருத்தனை உன் பின்னாடி சுத்த வை அப்ப நம்புறேன்’ என்று அவன் சொன்னது அவளது காதுக்குள் எக்கோ எபக்ட்டில் எதிரொலித்தது.

“இல்லை வேண்டாம்.. வேற யாரையும் அனுப்பாதே… அமர்நாத்தே இருக்கட்டும்”

செல்லை அணைத்தபடி வம்சியை நெருங்கினாள்.

“கிளம்பலாமா… “

“ஸுயுர்” இருவரும் வெளியே நடந்தார்கள்.

அமர்நாத்தை தேட அவளைப் பார்த்ததும் மக்கள் கூட்டத்தில் நீந்தி வந்துவிட்டான். கோதுமை மாவினால் செய்த அமர் சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே இருந்தான்.

“ஹலோ கேட் எப்படி இருக்க” என்றபடி இரு கைகளையும் நீட்டி அணைப்பதைப் போல ஓடி வந்தவனைக் கண்டு காதம்பரிக்கு உள்மனதில் திகில். வம்சிக்கு இதழ்கள் சிரிப்பில் வளைந்தன.

“இவன் என்ன ஹிந்தி பட ஷூட்டிங் நடக்குதுன்னு நினைச்சுட்டானா… ஷாருக் கஜோலைப் பாத்து ஓடி வர்ற மாதிரி சீன் போடுறான்”

“ஆளும் ஷாருக் மாதிரி தானே இருக்கான்…. ஸ்மார்ட்டா…”

“யாரு இவனா” வம்சி சொல்லி முடிப்பதற்குள் அவர்களை நெருங்கியிருந்தான் அமர். இதுதான் வாய்ப்பு என்று காதம்பரியின் தோளை அணைத்துக் கொண்டான். வம்சியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. கண்களில் கோபம் தெரிய கைகள் பெட்டியின் பிடியை முழு பலத்துடன் இறுக்கின. இது எதுவும் காதம்பரியின் கண்களில் படவில்லை.

“ஹாய் அமர்” முதன் முறையாக அவனது அணைப்பை மறுக்கவில்லை என்றாலும் அவன் மேலும் முன்னேறாதவாறு தன்னை விடுவித்துக் கொண்டாள்.

“எப்படி இருக்க அமர். இளைச்சு ட்ரிம்மா ஷாருக் மாதிரி ஆயிட்ட”

“நிஜம்மாவா… போன தடவை உனக்கு ஷாருக் பிடிக்கும்னு சொன்னியா அதுதான் இந்த வீக் ஹேர் ஸ்டைல் எல்லாம் அவர மாதிரியே மாத்திட்டு உன்னைப் பார்க்க வந்தேன். நான் மட்டும் ஷாருக்கா இருந்தேன், நீதான் என் கஜோல் ஹி.. ஹி…”

“ஆமாம் ட்ரீம் பேர்ல அவங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்க ஆனா நிஜ வாழ்க்கைல ஷாருக்-கெளரி, அஜய்-கஜோல் ஜோடிகள்தான் நல்லாருக்கும்” என்றான் வம்சி.

“இவன்… “ எரிச்சலோடு கேட்டான் அமர்.

“நோ… அமர் மரியாதையா பேசு… இவர்தான் வம்சிகிருஷ்ணா. ரூபி நெட்வொர்க் இவரோடதுதான்” அமர் கண்களில் ஒரு மரியாதை.

“வெல்கம் சார். வாங்க உங்களது அறைக்கு போகலாம். ரெப்ரெஷ் ஆயிட்டு வாங்க லஞ்ச் போகலாம்” என்று அறைக்கு அழைத்து சென்றான்.

“என் அறை தெரியும். போயிக்கிறேன்” என்று அவனைக் கத்தரித்தாள் காதம்பரி.

மதியம் உணவு உண்டு ரெஸ்ட் எடுத்தார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வம்சியிடம் விளக்கினாள் காதம்பரி.

மறுநாள் காலையிலிருந்து அனைவரும் மிகவும் பிசி. வெகு சிறப்பாக அறிமுக விழா நடந்தது. தென்னிந்தியாவின் முக்கியமான அரசியல் புள்ளிகள், முன்னணி நடிக நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவரையும் சிறப்பாக வரவேற்று திருப்தியாய் கவனித்து அனுப்பி வைப்பதற்குள் காதம்பரி களைத்து போனாள். அவ்வப்போது அமரின் தொல்லை வேறு.

“கேட்… உனக்கு இது ஜாக்பாட்தான். எப்படி இந்த ப்ராஜெக்ட்டை பிடிச்ச. எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லேன்.” என்று வயிறு காந்த பேசிய  சக துறைத் தோழிகளிடம்

“இதில் ஒரு ரகசியமும் இல்லை. எல்லா கம்பனிகளும் முயற்சி செய்தோம். எங்களோடது தேர்வானது… தட்ஸ் ஆல்”

“நாங்க நம்பமாட்டோம்ப்பா… நீ எங்ககிட்ட எதையோ மறைக்கிற” என்றவர்களிடம்

“நான் எதையும் மறைக்கல. எப்போதும் திறமையாலும், உழைப்பாலும் பெறும் வெற்றியே நிரந்தரம். குறுக்குவழி என்னைக்கும் ஆபத்துன்னு எங்க அப்பா சொல்லித் தந்திருக்கார். அதை ஒவ்வொரு நிமிஷமும் கடைபிடிக்கிறேன். எந்த காரணத்துக்காகவும் கேட்டின் விளம்பர நிறுவனம் குறுக்கு வழியில் செல்லாது” என்றாள் உறுதியான குரலில்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: