Tamil Madhura தொடர்கள் கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2

பேருந்தின் சக்கரங்கள் முன்னேற கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

ஏய் எங்க வீட்ல யாரும் இல்லடி எனக்கு ரொம்ப போர் அடிக்குது நீ வர்றியா இல்லையாஎன ஃபோனில் தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தாள் கவிதா.

ஏன்டி நான் எப்புடி இந்தநேரம் அங்க வருவேன். நீ வேணும்னா இங்க வா நீதான் ஸ்கூட்டர் வச்சுருக்கீயேஎன நக்கலாக கூற

அவளது இயல்பான பிடிவாத குணம் தலையெடுத்தது. “இருடி நான் கிளம்பி வருகிறேன்என முடிக்கும்போது இனைப்பு துண்டித்திருந்தது.

நீ வராதடி எங்க ஏரியா கொஞ்சம் மோசம்டிஎன கூறிய அவளது தோழி தான் வெறும் மொபைலில் கதைப்பதை உணர்ந்து கோபமடைந்தாள்.


மீண்டும் அவளுக்கு தொடர்பு கொண்டவளை பேசவிடாமல் கவிதாவோநீ எனக்கு சேலஞச் பன்னிருக்க நான் கண்டிப்பா வரேன். எனக்கு தைரியம் இருக்குஎன துண்டித்தவள் மறு நொடி மொபைலை அனைத்தாள்.

மீண்டும் தொடர்பு கொண்டவளுக்குகரண்ட்லி சுவிட்ச் ஆஃப்என்பதே பதிலாக கிடைத்தது.

தன் தோழிக்கு தன் ஏரியாவில் பிரச்சனை ஏற்படும் என்று பயந்தவளுக்கு ஏமாற்றமே

ஆம் கவிதாவின் வீட்டின் சிறிது தூரத்திலே அவளுக்கு அவளது வண்டி சதி செய்ய கிழே விழுந்தாள்.

என்னடி கவி இன்னைக்கு உன் டிரைவிங் சரியில்லையேஎன மனதில் திட்டியவள்பின்ன இருட்டுல இந்த பள்ளம் எப்புடி தெரியுமாம்என அரசாங்கத்தின் பக்கம் கோபத்தை திருப்பியவள் சமாதானம் அடைந்தாள்.

கீழே விழுந்ததில் ஸ்கூட்டருக்கும் அதன் மின்கலத்திற்குமான உறவு துண்டிக்கபட்டிருக்கவே அவளால் அதை இயக்க முடியவில்லை. அப்போது

என்ன செல்லம் நான் வேணா ஸ்டார்ட் பன்னட்டுமா?” என ஒரு குரல்

நிமிர்ந்தவள் அவளை சுற்றியிருந்த மூவரின் மீது ஒரு அனல்பார்வை வீசவே மற்றொருவன் அவளது கையை பிடித்தான்.

ஸ்கூட்டர் உதவிக்கரம் இல்லாமல் கீழே விழுந்தது. அவனது கையை உதறியவள் பதிலுக்கு ஒரு அறையை பரிசாக கொடுத்தாள்.

கண்ணத்தை தடவியவன்குட்டி ரொம்பதான் துள்ளுதுஎன கொடுரமாக சிரித்தான்.

மற்ற இருவரும் அவளை நெருங்க தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை உணர்ந்தாள்.

ஆனாலும் இந்த கம்பெனியில் ரொம்பதான் வேலை செய்கிறோமோ. நல்லவேளை இந்த ராஜா அன்னன் பைக் கொடுக்கலைனா இன்னைக்கு கம்பெனிலதான் தங்கியிருக்கனும் போலஎன திட்டிக்கொண்டே வந்தான் விஷ்ணு.

திடீரென ஏதோ வந்து மோத நிலைதடுமாறி கீழே விழுந்தான். கையில் இருந்த காயத்தை தடவியவனை ஏதோ தடுத்தது.
ஆம் கவிதா விஷ்ணுவின் கைகளை இறுக பிடித்துகொண்டு பின்னால் மறைந்துநின்றிருந்தாள்.

திரும்பி பார்த்தவன் அவளது ஆடைகள் கிழிந்திருப்பதை பார்த்தான்.

இதோ வந்துட்டாரு ஹீரோஎன அவளை துரத்திவந்த ஒருவன் கூற அவள் விஷ்ணுவின் கையை இறுக்கமாக பற்றினாள்.

விஷ்ணுவோ ஊர்மக்கள் அனைவரும் திருடனை துரத்தி ஓடும்போது வீட்டுக்குள் பதுங்கி கொள்ளும் தைரியசாலி.

இவர்கள் மூவரையும் பார்க்கும்போது விஷ்ணுவிற்கு அடிவயிற்றில் அட்ரீனலின் இயந்திரமே இயங்கியது.

தள்ளி நில்லுடாஎன ஒருவன் விஷ்ணுவை தள்ளிவிட கீழே விழுந்தான்.

அவர்கள் அவளை நோக்கி முன்னேறினர். அடுத்த நொடி மூவரில் ஒருவன் சரிந்து விழுந்தான்.

டேய் என்ன தைரியம் டா உனக்குஎன விஷ்ணுவை நோக்கி தனது கத்தியை எடுத்து ஓங்க விஷ்ணுவின் கட்டைவிரல் அவனது நெற்றியை அழுத்த இயக்கமில்லாமல் நின்றான்.

மூன்றாமானவனோசார் மன்னிச்சிடுங்கஎன ஓட்டமெடுத்தான்.

கவிதாவோ மீண்டும் அவனருகில் வந்து நிற்க சுயநினைவுக்கு வந்தவன்

என்னடா நடந்துச்சு இங்கஎன நினைத்தகொண்டேநீங்க எப்படி இங்க?” என கேட்டான்.

தன்னையே காத்தவன் என்பதால் தன்னவன் என்று நினைத்தாள் போல அந்த பேதை அதனால் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றாள். உடனே அவளது நிலையை உணர்ந்தவன் அவனது இருசக்கர வாகனத்தை கைத்தாங்கலாக தூக்கினான். அதிலிருந்த தனது கோட்டை எடுத்தவன் அவளிடம் கொடுக்க அணிந்து கொண்டாள்.

ஏங்க உங்க வீடு எங்க இருக்கு

“….” பதில் ஏதும் இல்லை.

உங்களதான் கேட்கிறேன்

இங்குதான் விநாயகர் கோவில் பக்கத்துல

அந்த தெருவுலதான் நானும் இருக்கிறேன். வாங்க உங்களையும் விட்டுடுறேன்

ம்ம்என ஏறி கொள்ள அந்த புதிய இருசக்கரவாகனமோ ஓர் தேவதை ஏறியதால் உடனே உயிர்பெற்ற குதிரையாய் மாறியது.

சிறிது தூரம் சென்றவுடன் அவளது ஸ்கூட்டர் கீழே கிடப்பதை பார்த்தவன் அதன் காரணத்தை உணர்ந்துஇது உங்க வண்டியா?”

நீ தான் என் இந்தநிலைக்கு காரணம் ஆனாலும் இப்படி ஒருவரை சந்திக்க வைத்ததால் உன்னை வெறுக்க எனக்கு மனமில்லைஎன நினைத்தவள்.

ஆமாம்என கூற முதல்முறையாக அவளது குரலை கேட்டான்.

வண்டியை நிறுத்தியவன் அதனருகில் சென்று ஏதோ முயற்சி செய்து பார்த்தான். தான் ஒரு இயந்திரபொறியாளன் என்ற கர்வம் எழவே சில முயற்சிகளை செய்து பார்த்தான்.

அவனது பொறியியல் திறமை வெளிப்படவே இறுதியில் அவமானபட்டதுதான் மிச்சம். அவனது செய்கையை பார்த்து லேசாக சிரித்தாள்.

அவமானத்தை மறைக்க தனது முகத்திலே தானே கரியை பூசிகொள்ளலாம் என்று எண்ணிய விஷ்ணுஏங்க பெட்ரோல் இல்லையா?”

அவளோ சிரித்தே விட்டாள்.

என்னடா விஷ்ணு இது உனக்கு வந்த சோதனைஎன நினைத்தநேரம் அவள்.

இல்லைங்க அதில் பேட்டரி வயர் கட் ஆகிடுச்சு

அப்படியாஎன கூறிவிட்டு காரணம் தெரிந்ததால் உடனே செயல்பட்டு வித்தையை காட்ட அது உறுமியது.

இப்ப ரெடிங்க நீங்க முன்னால் போங்க நானும் வருகிறேன்என அவளுக்கு காவலாக வீடு வரை சென்று விட்டு இருட்டினுள் மறைந்தான் விஷ்ணு.

தனது அறைக்கு சென்ற கவிதாவோ அவனை நினைத்துகொண்டு தூங்காமல் தவித்தாள்.

எனக்கு என்னையே திருப்பி தந்திருக்கிறான் அவனது குணமும் நன்றாக உள்ளது கண்ணியமானவன்; இந்த தெருவில்தான் இருக்கிறானா! பின் ஏன் நான் அவனை பார்த்ததே இல்லை!…… ஏன்டி கவி இப்பிடி ஆகிட்ட உன்ன மடக்க எத்தனை பசங்க காலேஜ்ல சுத்துனாங்க….. எல்லார்கிட்டையும் தப்பிச்ச நீயா இப்படிஇது நல்லதுக்கு இல்ல….’ என மனதில் எண்ணங்கள் முத்துகளாய் சிதற தன் வெண்பால்பற்கலால் நகத்தை கடித்தவள் பெண்களுக்கே உரித்தான வெட்கம் என்னும் அணிகலன் அணிந்து அவனது கோட்டை கட்டி பிடித்துகொண்டு துயில் கொண்டாள். கனவிலும் அவனை ரசித்தாள்.

அவளது எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஓட்டுநர் சக்கரத்தை நிறுத்த நடத்துனர்முன்னே போங்க சார்என கூறுவதை மதிக்காத சிலர் தானாக முன்னே வந்தனர்.

விழித்துக்கொண்ட கவிதா கீழே இறங்கி கல்லூரியை நோக்கி நடந்தாள்.

*********

உடல் முழுதும் சோர்ந்திருக்க இதற்குமேல் நீந்த முடியாது என்று நினைத்த முனுசாமி ஒரு சிதைந்த மரபலகையின் உதவியுடன் மிதந்துவர… ஏதோ தட்டியது.

சூரியனின் தாக்கத்தில் இருந்து காக்கும் விதமாக நிழல் அவன்மேல் பட்டது.

இறுதியாக இருந்த சக்தியை பயன்படுத்தி கரையை அடைந்தான். மெதுவாக நடந்து வந்து மயங்கியவன் கால்களை கடல்நீர் வருடிசென்றது. ஆனால் அவனோ செயலற்று கிடந்தான்.

வானத்தில் கழுகுகள் வட்டமிட துவங்கின. அரைகுறையாக திறந்திருந்த அவனது கண்கள் அதைப்பார்த்து தனது இறுதி நிமிடத்தை எண்ண துவங்கின.

கண்ணில் பாயும் சூரிய ஒளியின் அளவு குறைய மெதுவாக மயக்கமடைந்தான்.

அந்த நேரம் ஒரு கழுகு இறகு கன்னத்தில் விழ ஏதோ நீர்த்துளிகள் அவன்மேல் படுவதை போல இருந்தது. சட்டென விழித்துகொள்ள அவனருகில் சில பழங்களும் இளநீரும் இருக்க அதை வெறிகொண்ட வாய் உண்டு முடித்தான்.

இதை யார் இங்கு வைத்திருப்பார்கள்இந்த தீவை பார்த்தால் யாரும் இருப்பதுமாதிரி தெரியவில்லையே

என நினைத்தவன் எழுந்து நின்று சுற்றிலும் ஒரு தேடும் பார்வையை வீசினான்.

தூரத்தில் மர இடுக்குகளுக்கு நடுவில் ஒரு உருவம் நடந்து இல்லை பறந்து செல்வதை பார்த்தான். மூளையின் அனைத்து இயக்கங்களும் வேகமாவதாய் தோன்றியவன் கண்களை நன்றாக துடைத்து பார்த்தான்.

ஆம் அந்த உருவம் தற்போதும் அங்கு இருந்தது. இது கண்டிப்பாக பிரம்மை இல்லை. முழுவதும் நெருப்பில் எரிந்ததைபோல உருவம் அதற்கு கால்கள் இல்லை. அதை சுற்றிலும் கரிய நிற புகை வீச சில ரத்தகாயங்களும் தென்பட்டன. இது நிச்சயம் மனிதன் இல்லை என யூகித்தவன்கண்டிப்பாக வேறு மிருகமும் இல்லைஇது பேயா! என பயந்தவனின் சிறுமூளை இயங்கிஒருவேளை நாம் இறந்துவிட்டோமோ! அப்படியென்றால் இது நரகமா அதுதான் எமதர்மனா?! ‘ என சிந்தித்தான்.

டேய் முனியா கடல் தண்ணிய குடிக்காத அப்பறம் கெட்ட கெட்ட கனவா வரும்என அவனது தந்தை சிறுவயதில் கூறியது நினைவுக்கு வர சற்று தெளிந்தவன் தலையை உதறினான் வாயிலும் உவர்ப்பு சுவை மிகுந்திருந்தது.

மீண்டும் கண்களை துடைத்துகொண்டு பார்க்க அந்த உருவம் அங்கு இல்லை. இதயம் இயல்புநிலைக்கு திரும்பவே உள்ளே வேட்டைக்கு ஏதாவது மிருகங்கள் கிடைக்குமா என யோசித்து அந்த உருவம் நடந்த திசையை நோக்கி நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும் ஆச்சரியத்தில் அவன் கண்களின் கருவிழி பெரிதாகியது.

பெரிய தங்கசிலை அவன்முன்னே இருந்தது. அதில் ஓர் வீரன் குதிரை மீது அமர்ந்து வாள் ஏந்தி நிற்பது போல் இருந்தது.

இவ்வளவு பெரிய சிலையாடேய் முனியா உனக்கு அதிஷ்டம் தான்டாஎன தனது கையை ஒருமுறை கிள்ளிபார்த்துகொண்டான்.


*******

விஷ்ணுவின் கைகள் கணினியை துவக்கியதே தவிர அவனது மனது முழுவதிலும் அந்த மச்சமுடைய பெண்ணே நிறைந்திருந்தாள்.

அட சே இந்த கவிதா பொண்ணு வராம இருந்திருந்தா அவளது முகத்தையாவது பார்த்திருக்கலாமே….ஆனா அவள் இங்கதானே இறங்கினாள்என வெள்ளை உருவம் கொண்ட மனது கூற

அருகில் ஈட்டியுடன் உள்ள மனமோஇங்க இறங்குனா மட்டும் என்ன பன்னமுடியும் இந்த ஏரியா ரொம்ப பெரியதுஐடி கம்பெனிகள் நிறைந்த இடம்நீ உட்காந்து கிட்டு இருக்குறது ஒரு ஓட்டை கம்பெனியில் மெக்கானிகல் டிசைனரா…. இங்க ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வேலைக்கு வருவாங்கஎன எதிர்வாதம் செய்தது.

டேய் மச்சி இந்த பீட்டர் தொல்லை தாங்க முடியலடாஅடுத்த பேஜ்க்கு ஆள் எடுத்துட்டு வந்திருக்கான் டாஎன பிரவின் கூற எரிச்சலடைந்தான் விஷ்ணு.

இப்ப என்னடா அவசரம்…. இவன் எடுத்துட்டு வருவான் நாம டிரைனிங் கொடுத்து முடிச்சதும் பீட்டர் தொல்லை தாங்காமல் வேற கம்பெனிக்கு போய்டுவாங்கஎன பொரிய

காரியத்தில் கண்ணாக பிரவீனோடேய் மச்சி இந்த பேஜ்க்கே நீயே டிரைனிங் கொடுத்துடுடா நான் இரண்டு நாள் ஊருக்கு போறேன்என்று கூறியவனை எதிர்த்து பேச மனமில்லாமல்சரிடாஎன முடித்தான்.

விஷ்ணுவோ பீட்டரின் மீது கோபம்கொண்டாலும் அவனது இன்றைய சாப்பாட்டில் பீட்டரின் நட்பு உள்ளது என்பதே உண்மை.

விஷ்ணுவோ இயந்திரபொறியியல் பட்டம் பெற்று வேலைக்காக அழைந்துதிரிந்தகாலம்.
டீ குடிக்கலாமா அல்லது ரெஸ்யும் பிரின்ட் எடுக்கலாமா என சிந்திக்கும் அளவிற்கு காலம் இருந்தது. தனது மூத்த மாணவர்களின் உதவியுடன் சிறிய அறையில் தங்கி வேலை தேடினான். மென்பொருள்துறையில் வேலை கிடைத்ததும் மறுத்துவிட்டான். இதற்குமேல் எதுவும் செய்யமுடியாது என்றிருந்தநிலையில்

அங்க யாரோ அடிபட்டு விழுந்துடடாங்கஎன குரல் எழும்ப கூட்டமாக இருந்த மக்களை கடந்து சென்றான்.

அங்கு ஒரு வெள்ளையான முகமுடைய வாலிபன் கிடக்க அவனுக்கு அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருந்தது.

யோவ் தூக்குங்கையாஎன விஷ்ணு கத்த

போப்பா தம்பி இது ஆக்ஸிடென்ட் கேஸ் பெரிய பிரச்சனை ஆகிடும்என சலசலப்பு ஒலித்தது.

என்னடா நாய்க்கு அதுங்க இனத்துமேல இருக்குற அன்புகூட இந்த மனுசங்களுக்கு இல்லையேஎன நொந்து கொண்டு அவனை தூக்கினான்.

ஒரு ஆட்டோவில் அமர்த்தியவன் யாரும் உடன் வர மறுத்ததால் தானே சென்றான். இறுதியாக தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை ஆட்டோக்கு கொடுத்துவிட்டு வர சில போலிஸ் மனிதர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர்.

அவர்களிடம் ஏதோ பேசி சமாளிக்க அடிபட்டவன் முகத்தைகூட அவர்கள் பார்க்காமல்இங்க பாருப்பா தம்பி உன்னதான் சாட்சியா எழுத போறோம்என கூற தன்னைபற்றிய விபரங்களை கூறிமுடித்தான்.

எல்லாத்தையும் எழுதிமுடித்தவர்கள் அவனிடத்தில் கையொப்பம் வாங்கி கிளம்பினர். மருத்துவர்கள் வேகமாக இயங்க சில காந்திநோட்டுகள் தேவைபட்டதால் தனது அறை தோழர்களிடம் கேட்டு பெற்றான்ஏன்டா பொழைக்க வந்த இடத்தில் தேவை இல்லாத வேலைஎன அவர்கள் திட்டி சென்றனர்.

இறுதியாக தனது ரத்தத்தையும் அவனுக்கு பரிசளிக்க சற்று மயக்கம் ஏற்பட்டது விஷ்ணுவிற்கு.

அவனது சட்டையில் இருந்த மொபைலை கொண்டு அவனது வீட்டிற்கு தகவல் தொரிவிக்க அந்த அரசாங்க மருத்துவமனை பல நவீன கார்கலால் நிரம்பியது. பல பணக்காரர்களின் கூட்டமே நிரம்ப விஷ்ணு அதில் வைக்கோல் போரில் குண்டூசி போல கானாமல் போனான்.
சில நிமிடங்களில் அவன் நவீன மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபடவே கையிலிருந்த தனது பதினாறு வருட உழைப்பான ஃபைலை தூக்கிகொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சில நாட்கள் நகர்ந்தன வேலை என்பது குதிரைகொம்பாக மாறியதுஎனவே தனது நண்பர்களுக்காக வீட்டு வேலைகளை செய்ய துவங்கினான்.

டேய் விஷ்னு பாத்திரத்த கழுவி வச்சுடுஎன ஒருவர் கூற

சரிங்க அண்ணா

டேய் கரன்ட் பில் காசு டேபில்ல இருக்கு கட்டிடுமற்றுமோர் குரல்.

சரிண்ணா

தண்ணீர் பிடிச்சு வச்சுடுடா

ஓகேண்ணா

அப்பறம் அந்த டாய்லெட்ல அடைப்பு இருக்கு

நான் பாத்துகிறேன்என விஷ்ணு முடிக்க அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர்

விஷ்ணு தனியாக அமர்ந்துகொண்டு வேலைக்கான நேர்முகதேர்வுகளை செய்தித்தாளில் தேடிகொண்டிருந்தான்.

டிங் டாங் டிங் டாங்

காலிங்பெல் பலமாக ஒலித்தது…. வேகமாக சென்று கதவை திறந்தான்.

வெளியில் தலையில் கட்டுடன் ஒருவன் நிற்க அவனை அடையாளம் கண்டுகொண்டான் விஷ்ணு.

வாங்க சார் இப்ப எப்படி இருக்கு?”

இப்ப பராவாயில்லை விஷ்ணு

சரி உள்ள வாங்கஎன அழைத்து விட்டு விஷ்ணு சமையலறைக்குள் ஓடினான்.

மேஜையின் மீதிருந்த செய்தித்தாளில் இருந்த குறிப்புகளை பார்த்தவன் விஷ்ணுவின் நிலையை உணர்ந்தான்.

அருகில் கேட்பாரில்லாமல் கிடந்த அவனது ஃபைலை திருப்பியவன் விஷ்ணுவின் முழு சரித்திரத்தையும் தெரிந்துகொண்டான். அதை கீழே வைத்துவிட்டு சுற்ற்றிலும் பார்க்கும்போது விஷ்ணு கையில் ஒரு குவளையுடன் வந்தான்.

இந்தாங்க சார் பிளாக் காஃபிகொஞ்சம் மன்னிக்கனும் பால்காரன்கிட்ட பிரச்சனை அதான் இப்படிஎன குவளையை காட்ட

எனக்கு ப்ளாக் காஃபிதான் பிடிக்கும்என எடுத்து பருகியவுடன் உரையாடல் துவங்கியது.

அந்த உரையாடலில் அவன்பெயர் பீட்டர் என்பதும் தான் பல நிறுவனங்களை நடத்துவதும் சில மாதங்களுக்கு முன் விஷ்ணுவிற்கு பிடித்த மெக்கானிக்கல் டிசைன் கம்பெனி தொடங்கியிருப்பதாகவும் கூறினான்.

பல சமாதாறங்களுக்கு பிறகு விஷ்ணுவின் கையில் ஒரு கார்டை தினித்துவிட்டு அவனது ரெஸ்யூமை எடுத்துகொண்டு கிளம்பினான் பீட்டர்.

அந்த கார்டை பார்த்த விஷ்ணு வெளியே வந்து பார்க்க நான்கு வளையங்களை சின்னமாக கொண்ட கார் சீறி பாய்ந்து மறைந்தது.

அதன்பின் பீட்டரின் வற்புறுத்தலால் கவிதாவின் வீட்டின் அருகில் உள்ள தெருவில் பீட்டரின் ஒரு வீட்டில் வசிக்கிறான் விஷ்ணு.

கம்பெனியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பீட்டருக்கு இந்த சிறிய கம்பெனி ஓர் ஊறுகாய் போன்றது அதனால் அவனை அடிக்கடி பார்க்கமுடியாது‌. அவன் எப்போதும் இருப்பது பெண்கள் நிறைந்த இடத்தில்தான். நிறைய பெண்களை தன் வலையில் பணத்தால் விழசெய்வான். இது அவனுக்கு பொழுதபோக்குபோன்றது.

தனது நிறுவனங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் நேர்முக தேர்வில் அழகான பெண்கள் வந்தால்உங்க பெயர் அப்புறம் எவ்வளவு சம்பளம் எதிர்பாக்குறீங்கஎன இரண்டு கடினமான கேள்விகளிலேயே தேர்ந்தெடுத்து விடுவான்.

பெரும்பாலும் உலகம்சுற்றும் ஓர் விமானபறவை பீட்டர்.

கணினி முன் இருக்கும் விஷ்ணுவுக்கு நன்றாக தெரிந்த ஓர் விசயம்இந்தமுறை நான் செத்தேன்டாஎன்பதே

சற்று எரிச்சலுடன் அமர்ந்திருக்க கையில் ஃபைலுடன் ஓர் அழுகு தேவதை; விஷ்ணுவிற்கு நன்கு தெரிந்த முகம்; நீல கண்கள்; கன்னத்தில் மச்சம்; நீள கருங்கூந்தல்; ஊதா நிற ஆடை; அவளது கண்களை நீண்ட நேரம் பார்க்க முடியவில்லை

அந்த அழகு ராணியின் வாயிலிருந்து

மே கம் இன் சார்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11

பாகம் 11 தேனுவிற்கு ராசாத்தியின் நிலையை பார்க்க பார்க்க மனம் வெறுப்பு தட்டியது.ஒருபக்கம் சிவமூர்த்தியின் இழப்பு மற்றொரு பக்கம் தன் தோழியின் நிலை…சிவமூர்த்தியின் அம்மா நல்ல மனம் உள்ளவர் என்பதால் சிவமூர்த்தியின் கரு அவளிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டாள்.மூர்த்தி அவன் தாயிடம் அதிகம்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18

18 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   எங்க எல்லாருக்கும் எவ்ளோ பிரச்னை வந்தபோது எவ்ளோ கண்ணீர், வருத்தம் .. அப்போவும் அக்ஸா எங்ககூட இருந்தா. எங்களுக்கு ஆறுதலா இருந்தா. எங்களை அந்த பிரச்சனைல இருந்து வெளில கொண்டு வந்தா. ஆனா

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14

14 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஜெயேந்திரனின் வீட்டில் அனைவரும் பேச முதலில் பூக்கள் கண்காட்சிக்கும், காட்டேஜில்  தேவையான ஏற்பாடுகள் செய்வதாகவும், அடுத்து சம்மர் முடித்து ஜூனில் திருமணம் என கூற விக்ரம் அப்போது ப்ராஜெக்ட் என கூற பின் மீண்டும்