Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 4

வீல்… என்று கத்தியபடி வாரி சுருட்டி கொண்டு எழுந்தவளை, அவனின் வலிய கரம் மீண்டும் இழுத்தணைத்தது.

 

      “கத்தாதடி, கீழ்வீட்டு காரங்க எல்லாம் நான் உன்ன ரேப் பண்றேன்னு நினச்சுக்க போறாங்க”

 

     “யார கேட்டு இங்க வந்து படுத்தீங்க?”

 

     “எனக்கு தரையில படுத்து பழக்கமில்லன்னு உனக்கு தெரியாதா?”

 

     “அதுக்குனு இப்டியா? என்னை எழுப்பி இருந்தா நான் போய் கீழ படுத்திருப்பேன்ல”

 

     “உனக்கு பீவர் இருக்குல, வெறும் தரையில படுத்தா ஜாஸ்தி ஆகிடும்டா”

 

     “பரவாயில்ல, எனக்கு இதெல்லாம் பழக்கமான விஷயம்தான சார்” என்று எழ முயன்றவளை மீண்டும் வருண் இறுக்கி அணைக்க, “விடுங்க.. வலிக்குது.. வலிக்குது” வென துள்ளினாள்.

 

     பதறிப்போய் “எங்க வலிக்குது?” என அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

 

    அவளிடம் பதிலின்றி போக, முகத்தினை கைகளில் ஏந்தி “என்னடா பண்ணுது? ப்ளீஸ் சொல்லும்மா” கெஞ்சி கேட்டான்.

 

    தயங்கி தயங்கி தலைகுனிந்து “இன்ஜெக்ஷன் போட்ட இடம் வலிக்குது” என்றாள்.

 

    “எங்க காமி நான் பாக்குறேன்”

 

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், லேசான வலிதான் நாளைக்கு தானா சரியா போயிடும். எனக்கு இந்த பெட்ஷீட்டை மட்டும் குடுங்க, நான் ஹாலுக்கு போறேன்”

 

    “நானே வலிய வந்து கெஞ்சுறதால உனக்கு என்ன பாத்தா இளக்காரமா இருக்குல, உனக்கெல்லாம் பழைய வருண்தான்டி சரிப்பட்டு வருவான்.” என்று சொல்லி கொண்டே ஒரு கையால் அவளை பற்றி கொண்டு மற்றோரு கையால் இடையை சுற்றி இருந்த புடவையை அவிழ்த்து விட்டான். எத்தனை முயன்றும் வருணின் வலுவான பிடியிலிருந்து இசையால் விடுபட முடியவில்லை, அவள் துள்ளல் எல்லாம் தூண்டிலில் மாட்டிய மீனைப்போல தப்பி செல்ல வழியின்றி அவன் கைகளுக்குள் சிக்கி இருந்தாள். அவனின் சூடான உள்ளங்கை அவளின் பூந்தளிர் இடையை சுற்றி ஊர்வலம் போக, மெதுவாக தடவி பார்த்து சற்றே மேடாக வீங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்தான். அத்து மீறுபவனை எதிர்த்து கத்தவும் முடியாமல், தன் வலுவிழந்த கரங்களால் அவனை தடுக்கவும் இயலாமல் தப்பிக்க வழியின்றி துவண்டு விழுந்தாள்.

 

    மனவலிமை குறைய கண்ணீரும் கம்பலையுமாய் சுய நினைவின்றி சரிந்து விழுந்தவளின் மேல் சூடான வென்னீர் பட, “அம்மா…” என அலறினாள்.

 

    “ஐஸ் கியூப்ஸ் இல்ல, அதான் வென்னீர் கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கோ, லைட்டா ஒத்தடம் கொடுத்தாத்தான் வீக்கம் குறையும்.”

 

   விளக்கு வெளிச்சத்தில் அவன் முன்னால் அப்படி இருப்பதை விரும்பாமல் புடவை தலைப்பால் தன்னுடலை மூடிக்கொண்டு, “நீங்க விடுங்க, நானே பண்ணிக்கிறேன்” என்றாள்.

 

    புடவை தலைப்பை அவள் கையிலிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி தரைப்பக்கமாய் சரிய விட்டுவிட்டு, “ஏன் நான் பாக்காததா இயல்? எனக்கு தெரியாததுன்னு எத மறைச்சு வைக்க நினைக்கிற?”

 

     ‘இதுக்கு மேல இவன்கூட பேசி மல்லுக்கட்ட முடியாது’ என கண்களையும் வாயையும் ஒருசேர மூடிக்கொண்டாள். அவள் சும்மா இருந்தாலும் அவன் விட வேண்டுமே…

 

   ஒத்தடம் செய்து கொண்டே, “என்ன இயல் எதுவுமே பேச மாட்டிக்கிற?”

 

   ” ……… “

 

    “நான் இத்தன நாளா உன்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். ரெண்டு வருஷமா கேரளால நான் உன்ன தேடாத இடமே இல்லடி… கிட்டத்தட்ட ஒரு நூறு பொண்ணுங்களயாவது நீன்னு நினைச்சு பாலோ பண்ணிட்டு பின்னாலேயே போயிருப்பேன். உனக்கு என்கிட்டத்தான கோபம், உன் அண்ணன் என்னடி செஞ்சான்? அவன்கிட்டயும் இத்தன நாளா ஒரு வார்த்த பேசாம இருந்துட்டியேடி. வாரத்துக்கு ஒரு தடவ எனக்கு போன் பண்ணி உன்ன பத்தி எதாச்சும் தகவல் கிடைச்சதான்னு கேட்ருவான் தெரியுமா. ஆனா நீ, இப்ப வரைக்கும் அவன பத்தி ஒரு வார்த்த கூட கேக்கலியேடி… நிஜமாவே நீ கல் நெஞ்சுகாரிதான்.”

 

     அவளோ விரக்தியாய் சிறு புன்னகையையும் ஒரு துளி கண்ணீரையும் சிந்திவிட்டு, “தருண் எப்டி இருக்கான்?” என்றாள்.

 

     புருவங்கள் கோப முடிச்சிட ‘நான் யார பத்தி பேசிட்டு இருக்கேன், நீ யார பத்தி விசாரிக்கிற’ என நினைத்தவனாய், “அவனுக்கென்ன ராஜாவாட்டம் ஊர சுத்திட்டு இருக்கான். முகில் கிருஷ்ணன் அங்கிளோட பொண்ணு செமஸ்டர் லீவுக்கு இங்க வந்திருக்கு, இப்ப அவ கூடத்தான் இவனும் அம்யூஸ்மென்ட் பார்க்குக்கு அவுட்டிங் போயிருக்கான்.”

 

      மெல்லிய மில்லி மீட்டர் அளவேயான புன்னகை ஒன்று அவள் முகத்தில் வந்து ஒட்டிக்கொள்ள, பொறாமையோடு வருண், “எங்கிட்ட இல்லாதது அப்டி என்னடி அவங்கிட்ட இருக்கு?” என்று சினுங்கலாய் நின்றவனது தோரணையை கண்டு அவள் தன்னை மறந்து கலகலவென சிரித்தாள். இந்த அரிய பொக்கிஷம் மீண்டும் கிடைக்குமோ என்னமோ என அவசர அவசரமாய் அவள் புன்னகை நிறைந்த முக படத்தினை தன் மனதின் பக்கங்களில் பதிவு செய்து வைத்தான்.

 

   வருண் ஒத்தடமிட கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுங்க வைத்தபின், அவளருகில் சென்று படுத்து கொள்ள முயல, அவனை கீழே தள்ளி விட்டுவிட முயன்று ஆங்காரமாய் திமிறினாள்.

 

   சட்டென்று கைகளையும் கால்களையும் அவளோடு இறுக பிண்ணி கொண்டு, “இப்ப நீ அமைதியா தூங்க போறியா, இல்ல நானே உன்ன டயர்டாக்கி தூங்க வைக்கவா?” என்றான். அவன் குரலில் எதை உணர்ந்தாளோ பயந்து சத்தமின்றி குறுகி படுத்து கொண்டாள்.

 

     வருண் பாசமாக இசையின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு, “இந்த சேரில நீ ரொம்ப அழகா இருக்கடி” என்றான் கிறக்கமாய்.

 

    “இது சித்தார்த் தந்தது. இன்னிக்கி மதியம் இந்த சேரிய கிப்ட்டா குடுத்து எங்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணான்.”

 

    “ம்ஹூம் எவ்ளோ தைரியமிருந்தா என் பொண்டாட்டிகிட்டயே லவ்வ சொல்லுவான். அவன நான் அப்புறமா கவனிச்சுக்கிறேன், அதுசரி அவனுக்கு நீ என்ன பதில் சொன்ன?”

 

    “நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்னு இத கட்டி இருக்குறத பாத்தா புரியலயா உங்களுக்கு? சித் எவ்ளோ அழகா ப்ரபோஸ் பண்ணான் தெரியுமா? எந்த பொண்ணுக்குமே அப்டி ஒரு வார்த்தைய கேட்டா மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா?” வேண்டுமென்றே அவன் மனதை வறுத்தெடுத்தாள்.

 

    “இயல் ப்ளீஸ் அவசரப்படாத,  கோபத்துல முடிவெடுத்தா அது சரியா இருக்காது. நாம இதபத்தி நாளைக்கி கொஞ்சம் பேசி முடிவெடுக்கலாமே…”

 

    “நான் அவசரப்பட்டு முடிவெடுக்கல சார், ரெண்டு வருஷமா அவன பாத்து பழகி புரிஞ்சுகிட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். அதுவுமில்லாம நான் எங்க அம்மா மாதிரிதான்னு உங்களுக்கு தெரியும்ல, அவங்க கல்யாணமாகி ரெண்டாவது நாள் வேற ஒருத்தர்கூட போனாங்க, அவங்க பொண்ணு நான் கொஞ்சம் வெய்ட் பண்ணி கல்யாணமான ரெண்டாவது வருஷம் வேற ஒருத்தன் கூட போறேன். கணக்கு சரியாத்தானங்க இருக்குது…” அவள் முடிக்கும் முன்,

 

     “இப்டி பேசாத இயல் ப்ளீஸ்டி…” என்று அடுத்து ஏதும் சொல்லிவிட முன்னால், தன் இதழ்களால் அவள் வாயை மூடி விட்டான்.  அவன் மேல் கொண்ட கோபத்தால், இசை தன்னைத்தானே அசிங்க படுத்தி கொள்ள துணிந்ததை எண்ணி அவன் இதயம் உலைக்கலம் போல கொதிக்க தொடங்கிற்று. இதயத்தின் உள்ளிருந்த ரத்தம் வெப்பம் தாங்காமல் ஆவியாகி கண்ணீர் துளியாய் வெளியேறி இசை முகத்தில் பட்டு தெறித்து விழுந்தது. அவளுக்கோ அந்த கண்ணீர் துளியெல்லாம் வெட்டு பட்ட தன் மனதிற்கு இளவேனில் மழைச்சாரலாய் மாய தோற்றம் தர, அவன் இன்னும் கொஞ்சம் அழட்டுமே என்றே இறுமாப்பு கொண்டாள்.

 

     “நான் கட்டி இருக்கிற இந்த புடவை, படுத்திருக்கிற கட்டில், மேல சுத்துற பேன், சாப்பிடுற சாப்பாடு எல்லாமே சித்தார்த் வாங்கி தந்ததுதான். ஸோ பணத்த குடுத்தவனுக்கு பதிலுக்கு நானும் பரிசு குடுக்கனும்ல, அதான் அடிக்கடி இங்க வந்து போவான்” என்று பொய்களை அழகாக அடுக்கி வைத்து கூறினாள்.

 

    வருண் விருட்டென அந்த கட்டிலிலிருந்து இறங்கி சுவற்று பக்கமாய் போய் நின்று கொண்டான், தூக்கம் தொலைத்து வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சியாய் ஜன்னலை வெறித்து நின்றதை கண்டதும் இசை நிம்மதியாக உறங்க தொடங்கினாள்.

 

    காரிருள் மேகங்களிடையில் மூன்றாம் பிறை நிலவென ஒளி கன்றிப்போய் துயில்பவளை தூங்காமல் நின்று பார்த்து கொண்டிருந்தான் வருண். தன்னை நோகடிக்கவே இசை இத்தனை கீழ்தரமாய் இட்டு கட்டி கதை சொல்வது புரிந்தாலும், அதை மறுக்க அவன் ஏதாவது சொன்னால், பொய்யை மெய்யாக்க துணிந்து விடுவாள் இந்த பாதகத்தி. வருணுக்கு கல்லாய் போன அவள் மனதை கரைக்க சிறிது அவகாசம் தேவை என்பதால், இசையை உடனே ஊருக்கு அழைத்து செல்லும் எண்ணத்தை கைவிட்டு, தற்சமயம் அந்த ஊரிலேயே சிலநாட்கள் தங்கி கொள்ள முடிவெடுத்தான். அவள் எத்தனை வருத்தினாலும் விலகாமல் இருந்து, அவளின் மன பாரங்களை தன் தோள்மேல் சிலுவையாய் ஏற்கும் சுமை தாங்கியாக தன்னை எண்ணி கொண்டான்.

 

     அடுத்தநாள் காலை கிச்சனுக்குள் ஏதோ உருளும் சத்தம் கேட்டு கண்விழித்தாள் இசை. காய்ச்சல் குறைந்தாலும் உடல் அசதி குறையாததால் மெது மெதுவாக நடந்து வந்து கிச்சனை எட்டி பார்க்க, வருண் சமையல் என்கிற பெயரில் எதையோ செய்து கொண்டிருந்தான். அவளுக்கு தெரிந்த வரையில் வருணுக்கு வென்னீர் வைக்க தெரிந்ததே மிகப்பெரிய அதிசயம், இதில் சமையல் செய்கிறான் என்றால் அதை காணும் தன் கண்களில் தான் ஏதோ பிரச்சனை, நிச்சயம் இது நேற்று வந்த காய்ச்சலின் சைடெபெக்ட்டோ என்று நினைத்தாள்.

 

     அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக கிச்சனை விட்டு வெளியேறினான் வருண். அவன் வருவதற்குள் அவள் சத்தமின்றி குளித்து முடித்து கிட்டத்தட்ட வேலைக்கு செல்ல தயாராக இருந்தாள்.

 

     உறங்குவதாய் நினைத்து எழுப்ப வந்தவன் அவளை கண்டதும் கோபமாய், “மேடம் எங்க கிளம்பிட்டீங்க?” என்றான்.

 

     “ஸ்கூலுக்குதான்…”

 

     “நீ டூ டேய்ஸ் லீவ்னு நான் ஏற்கனவே ஸ்கூலுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்.”

 

      “எனக்கு நிறைய வேலை இருக்கு, நான் போயே ஆகனும்.”

 

    “நான் ஜஸ்ட் டூ டேய்ஸ் லீவ்தான் கேட்ருக்கேன், தேவையில்லாம என்ன கோபப்படுத்தி பாத்தன்னா ரெஸிக்னேஷன் கேட்டு போன் பண்ணிடுவேன்” என்றதும் கையில் கிடைத்த தலையணையை தூக்கி அவன்மேல் எறிந்தாள்.

 

     அதை அழகாக கேச் பிடித்த வருண், இருந்த இடத்திலேயே திரும்ப வைத்து விட்டு, வலுக்கட்டாயமாக அவள் கையை பிடித்து ஹாலுக்கு இழுத்து சென்று, “வீட்ல இருந்தத வச்சு, என்னால முடிஞ்சத சமச்சிருக்கேன், வா சாப்பிடு” என இட்லியும் சட்னியையும் அவள் முன் எடுத்து வைத்தான்.

 

     “மன்னிக்கனும், என்னால தோசைய தவிர வேற எதையும் சாப்பிட முடியாது. மீறி சாப்ட்டா என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும்ல சார்” என்றதும் வருண் கைகளிலிருந்த தண்ணீர் டம்ளர் நழுவி தரையில் விழுந்து சிதறியது.

Advertisements

3 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: