Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

திருவிளக்கு ஸ்தோத்திரம்

இன்று நாம் சொல்லப்போவது திருவிளக்கு ஸ்தோத்ரம்…. இது பல version-கள் கொண்டது….
நான் இங்கு தந்துள்ளது என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது… எங்கேனும் தவறு இருந்தால் சொல்லவும்… திருத்திக்கொள்ள உதவும்… எல்லா வெள்ளிக்கிழமையும் முடியாவிட்டாலும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஸ்தோத்திரமும், துளசி அம்மன் ஸ்தோத்திரமும் சொல்லுங்கள்… அனைத்து நலன்களும் வந்து சேரும்… வெள்ளியன்று துளசி அம்மன் ஸ்தோத்திரம் பதிவிடுகிறேன்….

திருவிளக்கு ஸ்தோத்ரம்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன் பிறப்பே
ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்கார கண்மணியே
காஞ்சி விளக்கே காமாக்ஷி தேவியாரே

பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம்போல் நெய்யை விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டுமிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி வைத்தேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க

வைத்தேன் திருவிளக்கை மாளிகையில் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாருமம்மா

பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
கொட்டகை நிறைய படுமாடுகள் தாருமம்மா
புகழ் உடம்பை தந்து எந்தன் பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லுமம்மா

சேவித்தொழுது நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரா கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூட கண்டேன்

பின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன் கோவை கனி வாயும் கண்டேன்
செந்தாமரை பூமடல் போல் செவி இரண்டும் கண்டு கொண்டேன்

செண்பக பூப்போல் திருமூக்கும் கண்டு கொண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் பாலாழி பீலி கண்டேன்
பட்டாடை தான் உடுத்தி படை இரண்டும் கண்டு கொண்டேன்

மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு கொண்டேன்
அன்பே அரும் துணையே உன்னை அடைந்த எந்தனுக்கு
வந்த வினை அகற்றி மகா பாக்கியம் தந்தருள்வாய்
தந்தை தாய் பிறவி நீயே தற்காக்கும் ரட்சகி நீயே

அந்தர்திற்கு உதவி செய்யும் ஆதாரமானவள் நீயே
உந்தனையே உறவாக உற்றாரை கை விட்டேன் தாயே
சந்ததமும் சௌபாக்கியமும் அளித்து சக்திகளும் சேவைகளும் எனக்கருள்வாய்
பக்தியுள்ள பேர்களுக்கு பரதேவி கிருபையுடன் அருள்வாய்

Thiruvilakku Stothram

Vilakke thiruvilakke vendhan udan pirappe
jyothi vilakke sridevi pennmaniye
andhi vilakke alankara kanmaniye
kanchi vilakke kamakshi deviyare

Pasumpon vilaku vaithu panchu thiri pottu
kulam pol neyyai vittu kolamudan yettri vaithaen
pottu mittaen kunkumatthal poomalai sooti vaithaen
yettrinaen nei vilakku enthan kudi vilanga

Vaithaen thiruvilakkai maaligaiyil thaan vilanga
maaligaiyil jyothi ulla mathavai kandu kondaen
mangalya pichchai madi pichchai thaarum amma
santhana pichchaiyudan dhanangalayum thaarum amma

Petti niraya bhushanangal thaarum amma
kottagai niraya pasu maadu thaarum amma
pughazh udambai thandu endhan pakkathil nillum amma
allum pagalum endhan andaiyile nillum amma

Savithozhudhu nindraen devi vadivam kandaen
vajra kiridam kandaen vaidoorya maeni kandaen
muthu kondai kandaen muzhu pachchai malai kandaen
savuri mudi kandaen thazaimadal chooda kandaen

Pinnal azhagu kandaen pirai pol netri kandaen

chanthudan netri kandaen thaayaar vadivam kandaen
kurukidum netri kandaen kovai kani vayum kandaen
senthamarai poomadal pol sevi irandum kandu kondaen

Senbhaga poopol thirumookkum kandu kondaen
maarbil pathakkam minna maalai asaya kandaen
kaalil silambhu kanden paalaazhi peeli kandaen
pattadai than uduththi padai irandum kandu kondaen

Mangala nayagiye unnai manam kulira kandu kondaen
anbe arun thunaye unnai adaintha endhanukku
vandha vinai agartri maha bhagyam thantharulvai
tanthai thai piravi neeye tharkakkum ratchagi neeye

Andharthirku udavi seyyum adharamaanaval neeye
undhanaye uravaga nambi uttrarai kai vittaen thaaye
santhanam sowbhagyam alitthu sakthikalum sevaigalum enakkarulvai
bakthi ulla pergalukke para devi krupayudan arulvai

 

— Srijayanthi

Leave a Reply

%d bloggers like this: