Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 3

ருண், “நான் இயலிசையோட ஹஸ்பெண்ட்”

 

    முதுகுத்தண்டில் மின்சாரம் பாய தூக்கி வாரி போட்டதைப்போல சித்தார்த் வருணை அதிர்ச்சியாய் பார்த்தான். மனதில் காதல் ஆசையை வளர்த்து கொண்டதால், இசைக்கு திருமணம் ஆனதை சித்தார்த்தால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் மதியம் பழைய ஞாபகங்கள் என்று சொன்னது இவனுடனான திருமணத்தை பற்றித்தான் இருக்குமோ என தோன்றியது. நடப்பதை எல்லாம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பத்தின் உச்சியில் இருந்தான் சித்தார்த்.

 

    ஜானகி எந்த குழப்பமுமின்றி தெளிவாக இருந்தார், ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இயலிசையை பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்தார். வந்த நாளிலிருந்து இன்று வரை இசை நேரம் தவறி எழுந்ததில்லை, வீட்டிற்கு தாமதாக வந்ததில்லை, ஸ்கூலை தவிர வேறு இடத்திற்கு சென்றதில்லை, உடன் பணிபுரியும் பெண் தோழிகளை கூட வீடு வரை அழைத்து வந்ததில்லை, அந்த அப்பார்ட்மென்ட்டில் கூட இரண்டு மூன்று பெண்களை தவிர மற்றவர்களிடம் பேசியதில்லை, உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட ஜானகியின் வீட்டை தவிர மற்ற வீடுகளில் கொடுக்கல் வாங்கல் என்று எதையும் வைத்து கொள்வதில்லை, ஜானகியிடமுமே வேலை சம்பந்தப்பட்ட சேதிகளை சொல்வதோடு சரி, தன் குடும்பத்தை பற்றி எந்த தகவலும் சொல்வதில்லை,  ஜானகி பலமுறை ‘ஏன்டி இப்டி வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்குற? எங்க கூட ஷாப்பிங் வர்றியா?” என்று வருத்தி அழைத்தாலும் இயலிசை இதுவரை அவர்களுடன் வெளியில் சென்றதில்லை. தன் தேவைகளை எல்லாம் பக்கத்து கடைத்தெரு அளவிலேயே முடித்து கொள்வாள்.

 

     இந்த இரண்டு ஆண்டுகள் முழுதும் பேச்சு துணைக்கு கூட வேறு ஆளை எதிர்பாராமல் தன்னந்தனியே வாழ்வதாலும், ஒவ்வொரு விஷயத்திலும் பொறுப்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்வதாலும், இந்த சின்ன வயதிலேயே நிறைய துன்பம் அனுபவித்து இருக்கிறாள் என்று மட்டும் ஜானகி புரிந்து கொண்டார். இசையை தன் வீட்டு பெண்ணாகவே நினைப்பவள் ஜானகி, திடீரென இரண்டு பேர் வந்து உரிமை கொண்டாடினால் நம்பி விடுவாரா என்ன? இயலிசை பக்கமே ஜானகியின் நம்பிக்கை முழுவதும் இருந்தது.

 

     “இந்த மாதிரி ஒரு பிரன்ட்டும், ஒரு ஹஸ்பெண்ட்டும் இருக்குறதா அவ இது வரைக்கும் எங்கிட்ட சொன்னதே இல்லயேப்பா. சரி, நீங்க என்ன விஷயமா பாக்க வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க”

  

    “எம்பேரு சித்தார்த், இது என்னோட ஐடி. இன்னிக்கி ஸ்கூல் பங்ஷன்ல இசை உடம்பு சரியில்லாம மயங்கி விழுந்துட்டாங்க, அதான் அவங்கள பாத்துட்டு அவங்க ஹேண்ட் பேகை குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என பேகை நீட்டினான்.

 

    ‘ஆம், இது அவளுடைய பேக் தான்.’ என சித்தார்த் மேல் ஜானகிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

 

    “தம்பி நீங்க ஹஸ்பெண்ட்னு சொல்றீங்க, ஆனா அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியே” என வருணிடம் வினவ, அவனோ பதில் சொல்லாமல் நின்றான். “இவர மாதிரி ஏதாச்சும் ஆதாரம் இருந்தா காட்டுங்க, இல்லன்னா இப்டியே கிளம்பிடுங்க, சும்மா அவள பாக்கலாம் விட மாட்டேன்.”

 

     வருண், “இதுதான் ஆதாரம்” என தன் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து ஜானகி முன் காட்டினான். பூக்களை கொட்டியதைப்போல அழகாக ரத்தின கற்களால் முகப்பு வைத்து, பணத்தின் பெருமையை பறை சாற்றும் வகையில், சற்று கனமாக நீண்டு தொங்கியது அந்த தங்க தாலி.

 

      ஜானகிக்கு வருணின் வலி நிறைந்த இறுக்கமான கண்களில் பொய் இருப்பதாய் தோன்றவில்லை, எனவே வந்தவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு இயலிசையின் வீட்டிற்கு சென்றார். எப்போதும் வீட்டு விளக்கை ஒன்பது மணிக்கே அணைத்து விடுபவள், இன்று ஒன்பதரையை தாண்டியும் விளக்கை அணைக்காமல் விட்டிருந்தாள்.

 

     “இசை… இசை… முழிச்சிருக்கியா… கதவ திற”

 

    “ம்… இதோ வர்றேன் மாமி” அவள் குரலில் மாற்றம் இருப்பது மூவருக்குமே புரிந்தது.

 

     கதவை திறந்ததும் மற்ற இருவரையும் தவிர்த்து வருணின் வருகையே இசையின் உயிர் வரை சென்று ஓங்கி அடிக்க, நிலை தடுமாறி கதவினை இறுக பற்றிக்கொண்டாள். இத்தனை நேரம் வடித்திருந்த கண்ணீரை மறைக்க முயன்று, அவள் முகம் கழுவி விட்டு வந்ததற்கு அறிகுறியாக முகத்தில் லேசான ஈரமும், அழுது சிவந்திருந்த கண்களும், அவள் துயரத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொடுக்க, அவள் நிலை கண்டு வருண் முகம் வாடிப்போனான். ஜானகி வேகமாக அவளை விழாமல் பிடித்து, உள்ளே அழைத்து சென்று, படுக்கை அறைக்குள் இருந்த ஒற்றை கட்டிலில் படுக்க வைத்தார்.

 

    ஜானகி, “இவரு உன் ஹஸ்பெண்ட்னு சொல்றாரு, உண்மையாம்மா?”

 

     “இல்ல…”

 

     வருண், “அப்போ சரி, இப்பவே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணி என்ன அரெஸ்ட் பண்ண சொல்லிடு…” என்றதும்.

 

    “வேணாம்… வேணாம்… அவரு என் ஹஸ்பெண்ட்தான்” தலையை நிமிற்றாமலே சொன்னாள். ஜானகியும் சித்தார்த்தும் தனக்காக இரக்கப்படுவது இசைக்கு தெளிவாக தெரிந்தது.

 

    ஜானகி, “உடம்பு அனலா கொதிக்குதே… காய்ச்சல் அடிக்குதுன்னு  எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல கூடாது, இப்டியா தனியா வந்து படுத்துக்கிடப்ப?”

 

    இசை, “பெருசா ஒண்ணுமில்ல மாமி. லைட் பீவர்தான். ஒரு டேப்ளட் போட்டா சரி ஆகிடும்” என்றாள் குரல் கம்மிட. வருண் தன் போனை எடுத்து யாருக்கோ போன் செய்து விட்டு வந்தான். ஜானகி தன் வீட்டிலிருந்து ரசம் சாதமும், ஒரு காய்ச்சல் டேப்ளட்டும் எடுத்து வந்து வைத்தார்.

 

    இசை, “எதுக்கு மாமி சாப்பாடெல்லாம். எனக்கு வேற வாயெல்லாம் கசந்து வாமிட் வர்ற மாதிரியே இருக்குது, டேப்ளட் மட்டும் போதும்.” என்று பிடிவாதமாக உணவை மறுத்துவிட்டாள்.

 

    அவளின் பிடிவாதத்தின் ஆழம் புரிந்து வருண், “நான் ஒரு டென் மினிட்ஸ் வெளியில போயிட்டு வர்றேன்” என்று மற்றவர்கள் பதிலுக்கு காத்திராமல் ஓடினான்.

 

    வருண் போன பிறகு இசை சித்தார்த்தின் முகத்தை பார்க்க தயங்கிட, அவளின் தவிப்பினை உணர்ந்தார் போல அவன், “நீ இப்பவே எனக்கு முழு விளக்கம் குடுக்கனுன்ற எந்த அவசியமுமில்ல. நாம இன்னொரு நாள் எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து பேசலாம். இப்போதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றவனின் அனுசரணையில் அவளுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது.

 

    வருண் சொன்னதைப்போலவே பத்து நிமிடங்கள் கழித்து கை நிறைய கவர்களுடன் திரும்பி வருகையில், அவனுடன் ஒரு லேடி டாக்டரும் உள்ளே நுழைந்தார்.

 

    செக்கப் முடித்ததும் டாக்டர் “எதுனாலம்மா பீவர் வந்தது?” என்றார்.

 

   வருணை பார்த்து முறைத்து கொண்டே “பேய பாத்து பயந்துட்டேன் டாக்டர்” என்றதும் சித்தார்த் சிரித்துவிட, வருணும் அவள் முகம் பார்த்து குறுநகை பூத்தான்.

 

    “டெம்பரேச்சர் கொஞ்சம் ஹைய்யாத்தான் இருக்கு, ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன்.” என்று ஆண்களை வெளியில் அனுப்பி விட்டு ஜானகி உதவியுடன் இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு வெளியே வந்தார்.

 

     “மிஸ்டர் வருண் டூ டேய்ஸ்க்கு மட்டும் டேப்ளட் தர்றேன். நாளைக்கும் பீவர் குறையலன்னா ஹாஸ்பிடல்க்கே கூட்டிட்டு வந்திடுங்க, அட்மிட் பண்ணிடுவோம்” என வருணிடம் தேவையான விவரமெல்லாம் சொல்லிவிட்டு சென்றார்.

 

   டாக்டர் போன பிறகு இசை, “ரொம்ப நேரமாயிடுச்சு மாமி நீங்க வீட்டுக்கு போங்க, இனிமே நானே சமாளிச்சுக்கிறேன்”

 

    அவள் அவர்களிடம் ஏதோ முக்கியமான விஷயம் பேச விரும்புகிறாள் என்று புரிய ஜானகி மனமின்றி கிளம்பி போனார்.

 

    வருண், “இயல் இந்தா தோசை, கொஞ்சமாவது சாப்பிடு, அப்பத்தான் டேப்ளட் போட முடியும்”

 

    இசை, “தோசைய எங்க வாங்குனீங்க?”

 

     வருண், “ரெண்டு தெரு தள்ளி இருக்குற ஆனந்தபவன்ல, ஏன் கேக்குற?”

 

    இசை, “சித்தார்த் உங்ககிட்ட ஒரு நூறு ரூபா இருக்குதா? என்கிட்ட சேஞ்ச் இல்ல ஐநூறாத்தான் இருக்கு.” அதற்காகவே காத்திருந்தவனை போல அவள் கேட்டதுமே அவசரமாய் பணத்தை எடுத்து தந்தான்.

 

    இசை, “இந்தாங்க உங்க தோசைக்கான காசு” என்று கைகள் நடுங்கியபடி, விறைப்பாய் நின்றிருந்த வருணிடம் நீட்டினாள்.

 

    வருண், “இத குடுத்துட்ட ஓகே, இதுக்கு முன்னாடி நான் உனக்கு குடுத்தது எல்லாத்தையும் உன்னால திருப்பி கொடுக்க முடியுமா இயல்?”

 

    அவளோ விடாப்பிடியாக, “தேவையில்லாம பழசெல்லாம் பேசாதீங்க, இப்போ நீங்க இந்த பணத்த வாங்கினா நான் சாப்பிடுறேன், இல்லனா எனக்கு சாப்பாடே வேணாம்” என்றதும் அதை கிழித்து விடும் வேகத்தில் வெடுக்கென பிடுங்கி தூக்கி எறிந்தான்.

 

    இசை “சரி, ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு காலைல நானே கால் பண்றேன்.”

 

    சித்தார்த், “உடம்ப பாத்துக்கோ, நாளைக்கு ஸ்கூல்க்கு வர வேணாம், ஒருநாள் நல்லா ரெஸ்ட் எடு. எதுனாலும் உடனே கால் பண்ணு” என்று எக்கச்சக்க அறிவுரைகளை வழங்கிவிட்டு வெளியேறினான்.

 

     “உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? ம்.. கிளம்புங்க”

 

    வருணோ அவள் முறைப்பினை சற்றும் பொருட் படுத்தாமல் தான் கொண்டு வந்திருந்த கவரில் ஒன்றை எடுத்து கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். ஐந்து நிமிடம் கழித்து சாதாரண ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் வெளிவர, அவளோ அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

 

    “என்ன பண்றீங்க? எதுக்கு இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திருக்கீங்க? இங்கல்லாம் நீங்க தங்க முடியாது. தயவுசெஞ்சு கிளம்புங்க” அவள் கத்திக்கொண்டே இருக்க அவனோ ஹாலில் இருந்து ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்து கொண்டு வந்து அவள் முன் போட்டு வசதியாக அமர்ந்தான்.

 

     “இப்ப நீங்க இங்கிருந்து போகலன்னா நான் வெளியில போயிடுவேன்” என்றதும் வருண், “நீ சாப்பிடு நான் போயிடுறேன்” என்றான் அழுத்தமாக.

 

    ‘இவன்லாம் சொன்னா கேக்குற ஜென்மமா? எப்போ பாரு தான் நினைச்சதையே சாதிக்கிறது’ என வேறு வழியின்றி அவளும் ஹாலுக்கு வந்து, அவன் தந்ததை பேருக்கு உண்டாள். அவள் முடிக்கும் நேரம் இளஞ்சூடான வென்னீரும் டேப்ளட்டும் அவளருகில் வைக்கப்பட்டது. விதியே என அதையும் எடுத்து அவசரமாய் முழுங்கி விட்டு, “ம்.. போங்க” என்றாள்.

 

     “உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையாடி?”

 

     “என்ன சொல்ல வர்றீங்க?”

 

     “நீ மூக்கு முட்ட சாப்ட்டியே, நானும் சாப்பிட வேண்டாமா?” என இட்லியை எடுத்து கொண்டு, தட்டும் கையுமாக நடு ஹாலில் சேரை போட்டு அமர்ந்து கொண்டான்.

 

   அவளை பார்வையால் வருடியபடியே இட்லியை கடித்து விழுங்க, “ஏன் என் மூஞ்சியயே இப்டி பாக்குறீங்க” கோபம் கொப்பளிக்க கத்தினாள்.

 

     “இங்க என்ன டீவி இருக்கா? இல்ல சுவத்துல எதாச்சும் போட்டோ இருக்கா? அட்லீஸ்ட் எதாவது பொருள்தான் இருக்கா? சுத்திலும் மொட்டையா நாலு சுவரு, நடுவுல நீ. ஸோ நான் உன்னை தான பாக்க முடியும்.” என மீண்டும் விட்டதை தொடர்ந்தான்.

 

     ‘எல்லாம் என் தலையெழுத்து’ என தலையிலடித்து புலம்பியபடி தன் அறைக்கு சென்று அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமர்ந்திருக்க நினைத்தவள் அப்படியே சாய்ந்து உறங்கி விட்டாள். நள்ளிரவில் வித்யாசமாக ஏதோ ஒரு பாரம் தன்மேல் இருப்பதாய் தோன்றிட கண்விழித்து பார்த்தாள். வருண் இறுக்கமாக அவள் இடையை பற்றி, தன் மார்போடு அவளை அணைத்தபடி அருகே படுத்திருந்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: