Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

 

டுத்து நாம் வரிசையாக மகாலக்ஷ்மி துதிகளைப் பார்க்கலாம்… முதலில் மகாலக்ஷ்மி அஷ்டகத்துடன் ஆரம்பிக்கலாம்… அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்பது பொருள்… ஈரடிகளாக வரும்… இந்த ஸ்லோகம் இந்திரனால் மகாலக்ஷ்மியை துதித்து பத்ம புராணத்தில் பாடப்பட்டது…. கடைசி மூன்று ஸ்லோகங்கள் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறை சொல்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பது….

 

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

படைப்பின் மூல காரணமாக விளங்குபவளும், ஸ்ரீ பீடத்தில் வைத்து ஸுரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸுரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

அனைத்தையும் அறிந்தவளும், அனைத்து வரங்களை கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அழிப்பவளும், துக்கங்களை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருளுபவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே

மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

அனைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும் அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரம்ஹ ஸ்வரூபிணி

பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த பிராமணியாக விளங்குபவளும், இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும், பிரபஞ்சத்தில் அனைவரையும் தாய்க்கு தாயாக காப்பவளுமான  மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

 

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:

ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

 

யார் ஒருவர் இந்த மகாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துகளையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.

 

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஷனம்

த்விகாலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

 

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால்  அனைத்து பாவங்களும் நீங்கும், இருமுறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்…

 

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்

மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா

 

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்… தினம் இதைக் கூறி மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்….

 

Mahalakshmi Ashtakam 

 

Namasthesthu mahaamaaye  sree peethe sura poojithey

Shanka chakra gathaa hasthey Mahaalakshmi Namosthuthey

 

Namasthey Garudaa roode kolaasura bayankari

Sarvapaapa haredevi Mahaalakshmi Namosthuthey

 

Savagne sarva varadhey sarva dhusta bayamkari

Sarva dhukha hare devi Mahaalakshmi Namosthuthey

 

Sidhi budhi pradhey devi bukthi mukthi pradhaayani

Mandhra moorthey sadhaa devi Mahaalakshmi Namosthuthey

 

Aadhyantha rahithey devi aadhi shakthi Maheshwari

Yogaje yoga samboothey Mahaalakshmi Namosthuthey

 

Sthoola sookshma mahaa rowdhre mahaa shakthi mahodhare

Mahaa paapa hare devi Mahaalakshmi Namosthuthey

 

Padmaasana sthithey devi para brahma swaroopini

Parame si jagan maatha: Mahaalakshmi Namosthuthey

 

Swethaambaradhare devi naanaalankaara booshithey

Jagasthithey jagan maatha: Mahaalakshmi Namosthuthey

 

Mahaalakshmi ashtagam sthothram yah paden bakthi maan nara:

Sarva sidhi mavaapnothi sarvadhaa

 

Eka kaalam paden nithyam mahaa paapa vinaashanam

Dhvi kaalam yah paden nithyam dhana dhaanya samanvitha:

 

Thrikaalam yah paden nithyam mahaa shathru vinaashanam

Mahaalaksmi baven nithyam Prasanna varadhaa shubaa

— ஸ்ரீஜெயந்தி

1 Comment »

Leave a Reply

%d bloggers like this: