நிலவு – (கவிதை)

Image result for நிலா

 

நிலவு

 

இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே
பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே
கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே
விண்மீன் கூட்டத்தின் தலைவனே!
ஒரு காலம் தோன்றுதலும்
ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே
உன்னைக் காண மனம் துடிக்குதடா
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா
உன் அழகைக் கண்டு வியக்கிறோம்
உன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்
தன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே
உன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக

~ஸ்ரீ!!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.