Tamil Madhura கவிதை தேய்ந்துபோன கனவுகள் – கவிதை

தேய்ந்துபோன கனவுகள் – கவிதை

Related image

 

தேய்ந்துபோன கனவுகள்

வானவில்லை ரசித்திருந்தேன்

வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு..

வயிற்றுப்பசியார விழைந்தேன்

பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..

 

நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது

கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்..

அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை

அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன் தீக்குச்சிகளை..

 

சிலேட்டைத் துடைக்க வேண்டிய கரங்கள் எனது

தண்ணீர் ஊற்றி துடைப்பதோ உணவக மேசையை..

முதுகுச்சுமையின் அனுபவம் உணர வேண்டினேன்

வந்தமர்ந்தன தலையில் பாரமாய் செங்கற்கள்..

 

புத்தகங்கள் கையில் எடுத்தேன் – படிப்பதற்கா?

தூசி தட்டி அலமாரியில் அடுக்குவதற்கு..

கணக்கில் பெருக்கல் எப்படியென்றேன்

குப்பைகளின் கூட்டல் கற்றுக் கொண்டேன்..

 

பளிங்காகும்படி துடைத்த தரையில்

என் பிம்பம் கண்டேன்

தோய்ந்து போன என் உருவில் நான் கண்டது

தேய்ந்து போன என் கனவுகளையே..

 

வறுமையின் நிறம் சிவப்பாம் – எனில்

வறுமையின் சின்னம் கண்ணீர்த்துளிகளோ?

பணத்தின் வாசனையும் அறிய முடிந்தது

துயரமும் சற்று தீர்ந்தது –

கரும்பலகையினுடனான எனது நட்பு முறிக்கப்பட்டதால்..

 

 

— சுரபி மூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா

ஏக்கங்கள் (கவிதை)ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின்

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.