Skip to content
Advertisements

ஸ்ரீ கணேஷா அஷ்டகம்

வணக்கம் தோழமைகளே!

நமது தளத்திற்கு  விநாயகர் ஸ்லோகம் மற்றும் அதற்குரிய பொருளுடன் பதிவிட வந்திருக்கும் ஸ்ரீஜெயந்தி மோகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். 

ஸ்ரீஜெயந்தி ஸ்லோகம் மற்றும் நமது வழிபாட்டு முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் உன்னதமான பணியாற்றி வருகிறார். உங்களது பிஸியான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஸ்லோகங்களைப் பதிவிடுவதற்கு நன்றி ஜெய். 

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

 

அனைவருக்கும் வணக்கம்…   நான் ஜெய்…. சில சிறுகதைகள், மற்றும் நாவல்கள் எழுதியுள்ளேன்….  தமிழ் அவர்களின் தளம் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி…. அதுவும் ஆன்மீக தளம் வாயிலாக சந்திப்பதில் கூடுதல் மகிழ்ச்சி… எனக்கு தெரிந்த நான் கற்ற சம்ஸ்க்ருத மற்றும்  ஸ்லோகங்களை அர்த்தத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆவலுடன் ஆரம்பித்து இருக்கிறேன்….

 

முடிந்த வரை தமிழோ, சமஸ்க்ருதமோ எந்த மொழியாக இருந்தாலும் சரியான உச்சரிப்புடன் சொல்லுங்கள்…. முக்கியமாக லகர, ளகர, னகர, ணகர உச்சரிப்புகள்…. அதே மாதிரி எங்கெல்லாம் ஸ்லோகத்தில் : வருகிறதோ அதை ஹ, ஹிஹு என்று முந்தைய எழுத்துக்கு தக்கபடி உச்சரிக்கவும்…. முடிந்தவரை தமிழில் அதையும் இணைத்தே தருகிறேன்…  உச்சரிப்பு சரியாக இருக்க ஆங்கிலத்திலும் அதே ஸ்லோகத்தை தந்துள்ளேன்….

 

ஸ்லோகத்திலோ, இல்லை பொருளிலோ பிழை இருந்தால் தயவு செய்து கமெண்ட்டில் சொல்லுங்கள்… என்னை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்…

 

இந்த வாரம் தொடங்கும் இந்த தொடரை நல்ல முறையில் அந்த அம்பாள் தொடர வைப்பாள் என்ற நம்பிக்கையுடன் விநாயகர் துதியுடன் ஆரம்பிக்கலாம்…

 

நன்றி

ஜெய்  

 

ஸ்ரீ கணேஷா அஷ்டகம்

 

ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சன சந்நிபம்

லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்

 

ஒற்றை தந்தத்தையுடவனும், பெரிய உருவம் கொண்டவனும், பொன்னின் மேனி கொண்டவனும், பெரும் தொந்தியுடவனும், நீள கண்களை கொண்டவனுமான கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

மௌஞ்சி கிருஷ்ணா ஜினதரம் நாக யக்நோப விதீனம்

பாலேந்து விலஸன் மௌலிம் வந்தேஹம் கணநாயகம்

 

இடுப்பில் அருகம்புல் மற்றும் மான் தோலினால் ஆன அங்கவஸ்திரம் அணிந்தவனும், நாகத்தை பூணூலாக அணிந்திருப்பவனும், இளம்பிறையை தலையில் அணிந்திருப்பவனுமான  கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபீஹி பரிபாலிதம்

பக்தப்பிரியம் மதோன்மத்தம் வந்தேஹம் கணநாயகம்

 

பார்வதியின் மனதை மகிழ்விப்பவனும், தன் தாயால் காக்கப்படுபவனும், ஆர்வமும், அனுபவமிக்க பக்தர்களின் அபிமானத்துக்கு உரியவனுமான கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ர மாலா விபூஷிதம்

சித்ரரூப தரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்

 

ஆடலில் மிகச்சரியாக பதம் பிடிப்பவனும் (Perfect Pose), கழுத்தில் அழகான மாலை அணிந்திருப்பவனும், மிகவும் கவர்சிகரமான அழகுடையவனுமான  கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

கஜவக்த்ரம் ஸுரஷ்ரேட்டம் கர்ண சாமர பூஷிதம்

பாஷாங்குஷதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்

 

வேழத்தின் தலையை கொண்டவனும், விசிறியை போன்ற காதுகளில் ஆபரணங்கள் அணிந்தவனும், பாசத்தையும் குசத்தையும் கையில் வைத்திருப்பவனுமான கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

மூஷிகோத்தம மாருக்ய தேவாசுர மஹாஹவே

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தேஹம் கணநாயகம்

 

மூஞ்சூரை வாகனமாக கொண்டவனும், தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், போரில் நிகரில்லாத வீரம் கொண்டவனுமான கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

யக்ஷ கின்னர கந்தர்வ சித்த வித்யாதரைக்க சதா

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தேஹம் கணநாயகம்

 

யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்களால் பூஜிக்கப்படுபனாகிய கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

சர்வவிக்னஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்

சர்வசித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்

 

நாம் செய்யும் காரியங்களுக்கு வரும் தடைகளை அழிப்பவனும், இடர்களை நீக்குபவனும், நமக்கு அனைத்து சித்திகளும் கிடைக்க ஆசீர்வதிப்பவனுமான கணங்களின் தலைவனாக விளங்குபவனை வணங்குகிறேன்

 

கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ யஹ் படேன் நரஹ

விமுக்த சர்வ பாபேப்யோ ருத்ர லோகம் ச கச்சதி

 

மனதிற்கு பேரின்பம் தரும் இந்த கணேஷா அஷ்டகத்தை கடலளவு பக்தியுடன் சொல்பவர் தாங்கள் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விலகி ருத்ர லோகம் செல்வார்கள்.

 

 

Sri Ganesha Ashtakam

 

Eka dhantham mahaa kaayam taptha kaanchana sannibham

Lambodharam vishaalaaksham vandhe ham gana naayakam

 

Mounji krishna jinadharam naaga yagno pa vitheenam

Paalendhu vilasan moulim vandhe ham gana naayakam

 

Ambika hrudhaya nandham maaththru bhi: pari paalitham

Baktha priyam madhon maththam vandhe ham gana naayakam

 

Chithra rathna vichithragam chithra maalaa vibhushitham

chithra roopa dharam dhevam vandhe ham gana naayakam

 

Gaja vakthram surashreshttam karna chamara booshitham

Paashaangusha dharam dhevam vandhe ham gana naayakam

 

Mooshi koththama maaruhya devaasura mahaa havey

Yothu kaamam mahaa veeryam vandhe ham gana naayakam

 

Yaksha kinnara gandharva sidhdha vidhya dharay: sadhaa

Sthooya maanam mahaath maanam vandhe ham gana naayakam

 

Sarva vigna haram devam sarva vigna vivar jitham

Sarva sidhdhi pradhaa thaaram vandhe ham gana naayakam

 

Ganaashtakam idham punyam bakthitho ya: patennara:

Vimukthasarva paapebhyo ruthra lokam sa gachchathi

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: