காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்.

கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு சிறு விபத்தின் விளைவால் முப்பது பக்கங்களை காணாமல் போகின்றன. பதிப்பகத்தார் காணாமல் போன பக்கத்தில் விடுபட்ட பகுதியை  வாசகர்களின் கற்பனைத்திறத்தால் எழுத சொல்கின்றனர். சரியாக எழுதியவருக்குப் பரிசாக மணியுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர்.

வாசகர்களிடமிருந்து வந்த போட்டிக்க்கு வந்த  கதைகளைப் படிக்கும் மணி வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறார். ஏனென்றால் காணாமல் போன பக்கங்களிலிருந்த கதையை வார்த்தை மாறாமல் பிரதி எடுத்தாற்போல வாசுகி எனும் பெண் ஒருவர் எழுதி அனுப்புகிறாள்.

பக்கங்களை வாசுகியே திருடியிருப்பாளோ என்ற சந்தேகத்திற்கும் இடமின்றி அவளோ சென்னையில் அந்த சமயத்தில் இல்லை. ஆனால் மணியின் தீவிர வாசகி. தீவிரம் அதிகமாகி மணி எழுதியதை அவர் எழுதும் சமயத்தில் வார்த்தை மாறாமல் எழுத ஆரம்பித்து விடுகிறார். அதன் பின்…

இதற்கு மேல் நீங்களேதான் படிக்க வேண்டும். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

3 Replies to “காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்”

  1. நன்றாக இருந்தது. ஆனால் மூன்றாவது முடிவே ஏற்க கூடியதாக இருந்தது. அருணா கொலைக் காரணம் தெரியாதது சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: