வணக்கம் பிரெண்ட்ஸ்,
திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார்.
அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’, ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன, இன்றைய எழுத்தாளர்களுக்கு எப்படி அழகாகவும், தொய்வில்லாமலும் கதையைநகர்த்தி செல்வதெனச் சொல்லும் பாடமாகும்.
திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் கதைகளை அவரது சம்மதத்துடன் நமது தளத்தில் பதிவிட இருக்கிறோம். பதிவிட அனுமதித்ததற்கு நன்றி மோகன் ஸார்.
மேற்கே செல்லும் விமானம்:
நாம் மேற்குலகைப் பார்த்து கலாச்சார சீரழிவை மட்டுமே எடுத்துக் கொண்டு முன்னே செல்லும்போது, நம்மிடம் இருக்கும் பல சிறப்பான அம்சங்களை மேற்குலகினர் கற்க விரும்புதை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பது தான் இந்த படைப்பு.
அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் பலவற்றை நாம் கண்டுக் கொள்வதில்லை. ஆனால், அவர்களோ நம்மிடம் இருக்கும் கடினமான விஷயங்களை கூட, அவை நன்மை பயப்பதால் ஏற்கத் துணிகிறார்கள். இதுவே இதன் சாராம்சம்.
முதல் பதிவை படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே
அன்புடன்
தமிழ் மதுரா
Like this:
Like Loading...
Related
Nice starting!
Nice start mathura.
தமிழ் மதுரா தங்களின் முன்னுரை என் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டது. நம் விமானம் எத்திசையில் பயணித்தாலும் நம் தேவைகளும், சூழலும் மற்றும் எண்ணங்களின் போக்கைப் பொறுத்தே அந்தந்த மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக்கொள்ள விழைகிறோம். நம்மிடம் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயங்களை அறியாத ஒருவருக்கு நம்மிடம் இருக்கும் பொக்கிஷம் பற்றி அறிய முடியுமா? நாம் வளரும் பொழுதே ஆழ பதிந்த கருத்துக்களின் தாக்கம் நம்மோடு பயணிக்கும். ஆகையால் நாம் கற்பவை எவை என்பது நம்மை சார்ந்ததே… (நம் சமூகம், குடும்பம், கல்விநிலையங்கள், மதம் போன்றவை நம் எண்ணங்களை வார்த்தெடுக்கும்)
ஆசிரியர் எழுது நடை எளிமையாக இருக்கிறது. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து…
நான் வாசித்து விட்டேனே!
சொல்லவேண்டியதை வளவளவென்று இழுக்காது நச்சென்று சொல்லிவிட்டார்.
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இருக்கு .
ஹ்ம்ம் பார்ப்போமே…
நன்றி தமிழ்