Skip to content
Advertisements

காக்கும் கடவுள் கணேசனை நினை

Happy-Ganesh-Chaturthi-Wallpapers

தோழமைகள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

‘நிலவு ஒரு பெண்ணாகி’ தொடரை எழுதும்போது திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம். அதாவது காணபத்யத்தில் முழு முதல் கடவுளா பிள்ளையாரை சொல்றாங்க சரி… ஆனால் சாக்தம், சைவம், வைஷ்ணவம் (தும்பிக்கை ஆழ்வார்), கௌமாரம் இவற்றில் கூட முதலில் கணபதியைதான் வழிபடுறாங்க. இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சேன். என் சந்தேகத்தை நீக்க தருமியா வருவார்… நானேதான் தேடணும். தேடினப்ப கிடைச்ச சுவையான சில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புகிறேன்.

கணங்களுக்கு (திசைகளுக்கு) அதிபதி என்பதால் எல்லா திசைகளிலும் இருக்கும் தீமைகளை நீக்கி நன்மை தருபவர் .

பார்வதி கணேசனை படைத்தார் என்பதற்கு இன்னொரு பொருள் இந்த அண்ட சராசரம் பல அழிவுகளையும், புதிய தொடக்கத்தையும் சந்தித்துள்ளது. அழிவுக்குப் பின் முதலில் தோன்றுபவர் வினாயகரே.

கஜானனன் தான் பொருள் உலகிற்கும் அருள் உலகிற்கும் தலைவன். மாயையை நீக்கி இறைவனை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் தும்பிக்கையான் தயவால்தான் முடியும்.

நமது உடம்பிலிருக்கும் மூலாதார சக்ரத்தின் அதிபதி கணேசன். இந்த சக்கரம்தான் யோக நிலையின் முதல் படி. இதிலிருந்துதான் மற்ற ஆறு படிகள் கடந்து, பிறப்பு இறப்பு சங்கிலியிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைய முடியும்.

சங்ககாலத்தில் விநாயகரை மூத்த பிள்ளையார் என்றும் ஆறுமுக செவ்வேலை இளைய பிள்ளையார் என்றும் அழைப்பார்களாம்.

விநாயகருக்கு யானைத் தலையை பொருத்தி அந்தகாலத்திலேயே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்தவங்க நம்மன்னு சொல்றதுக்கு முன்னாடி எதனால் யானைத்தலை என்று கொஞ்சம் யோசிக்க சொல்றார் டாக்டர் அகர்வால். அவரே விளக்கமும் சொல்கிறார். யானை அறிவும் ஆற்றலும் தீர்க்க சிந்தனையும் உடையது. யானையின் காதுகள் பெரிது. பேச்சு குறைவாகவும், கேட்பது அதிகமாகவும் இருக்கவேண்டும் என்பது அதன் உட்பொருளாம். யானையின் கண்கள் சிறிது ஆனால் அவற்றின் பார்வை கூர்மையானது. அதுபோல நமது பார்வையும் நம் குறிக்கோளை நோக்கியே இருக்கவேண்டும். யானையின் தும்பிக்கை மரத்தை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு ஆற்றல் பெற்றது. அதுபோல நாமும் கவலைகளை வேரோடு பிடுங்கி எறியும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்கிறார்.

எனவே இந்த இனிய நன்னாளிலே

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் எனும் ஒலியது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் தவழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவனருளே துணை.

என்று பணிந்து பிள்ளையாரின் அருளை பெறுவோம்.

அன்புடன்

உங்கள் தமிழ்மதுரா

Advertisements

6 Comments »

 1. dear madhura

  wow arpudamana vilakam. NOP kaga nee browse panni research panniyadan vilaivu koddiya seekiram nangellam unnai THAMIZH AMMAIYAR appadinu koopidaporem. anda alavu anmegathil muzhi muthukalai eduthirukirai. 10naal navarathiriku enna spl article ready panniruke?\

 2. அழகான விளக்கம் தமிழ்..
  நல்ல பகிர்வு…
  புதிய கோணத்தில் …கணபதியை பற்றி அறிய முடிந்ததே…
  நன்றி தமிழ்

  • நன்றி பொன்ஸ். தேவாரம் சொல்லித் தரும் ஆசிரியர் நல்லாருக்குன்னு சொன்னது எனக்கு மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: