Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை (Final Update)

கடவுள் அமைத்த மேடை (Final Update)

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு ஏறக்குறைய எல்லாருமே வரவேற்பளித்திருந்திங்க நன்றி நன்றி நன்றி.

‘பானுப்ரியா கணவனின் துரோகத்தை தாங்கிக் கொண்டு அவனுடன் வாழ்வதாக முடித்திருந்தீர்களே. ஷாலி என் இப்படி’ என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். பானுப்ரியா 🙂 இவள் இன்னமும் உங்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சி. பத்து வருடம் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுடன் நிறைவாக வாழ்க்கை வாழ்ந்தவள் .பூர்வஜாவைக் கணவனுடன்  பார்ப்பதற்கு முன்னர் வரை பிரகாஷின் துரோகம் அவளுக்குத் தெரியாது. அன்புக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்று இருப்பது பிரகாஷுக்கு முடியலாம். நம் பானுவின் குணத்துக்கு பிரகாஷை விட்டு வேறு ஆணை அவளால் நினைத்துக் கூட  பார்க்க முடியாது.

வைஷாலி இன்னமும் வாழ்வே ஆரம்பிக்கவில்லை. சிவாவுக்கு ஆரம்பத்திலேயே வாழ்க்கை கருகிவிட்டது. இந்தக் கதைப்படி   இருவரும் திருமணம் செய்துக் கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம். காயமுற்ற இருமனங்களும் இனியாவது  தங்களுக்கான வாழ்க்கையை வாழட்டுமே.

இந்தக் கதையின் ஆரம்பத்தில்  இருந்து முடியும் வரை என்னுடன் பயணித்து, எனக்கு கமெண்ட்ஸ் மூலமும் மெயில் வழியாகவும், முகநூலிலும், தொலைப்பேசியிலும்  ஆதரவு தந்த ரசிகர்களுக்கு என் நன்றிகள்.  நன்றி டியர்ஸ். Thanks for your support.

இறுதிப் பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 17

அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

45 thoughts on “கடவுள் அமைத்த மேடை (Final Update)”

  1. தமிழ் அருமையானா கதை ..மிக அழகான முடிவு ….எளிமையானா எழுத்து நடை …சூப்பர் …..சிவா , வைசாலி இருவரும் நல்ல கதாபாத்திரங்கள் …நல்லா இருக்கு ..

    1. நன்றி உமா. நல்லவேளை சுமனை திருத்தி அவனுடன் வைஷாலியை சேர்த்து வை என்று யாரும் ரெக்வஸ்ட் வைக்கவில்லை.

  2. hai tamil

    nice story. happy ending. karpini penu parkama marumakalai thurathidu eppa than ponnu maadiri pathiya parthavudanae paasam varuthu.magal thanai appanu kupidama uncle kupidathu eppa valichi enna payan.

  3. ஹாய. தமிழ் ,

    அருமையான கதை , அழகான முடிவு.
    சுமனை மட்டுமல்ல , நர்த்தனாவை பார்த்தாலும் என் ரியாக்சன் இதுதான் .சிவாவின் இந்த பதில் வரிகளில் முழு கதையும் அடங்கி விடுகிறது.

    காலத்தின் கோலத்தில் சிதறிய
    நமக்கான மேடை
    மீண்டும் அமைந்தது
    நமக்கே நமக்காக
    சிதறடித்த சில்வண்டுகள்
    ரீங்கரித்து மறைய
    புதியதோர் அரங்கேற்றம்
    நம் மேடையில்
    தேவதைகளின் துணையோடு

    1. நன்றி பத்மா. இந்தக் கதைக்கு உங்களது கமெண்ட்ஸ் என்னுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் இருத்திப் பகுதிக்கு முத்தாய்ப்பாய் அழகான கவிதை ஒன்று எழுதி அழகு சேர்த்ததற்கு நன்றிப்பா .

  4. Superb Finish.
    Expected the same… wish siva and shali nice life.
    Swapna great…. made suman think on his own…. Suman’s guilty feeling and Bhargavi missing grand children ar justified

    1. நன்றி சிந்து. சிவாவும் ஷாலுவும் நன்றாக வாழ்வார்கள். ஸ்வப்னா சுமனைத் தன் வழிக்குக் கொண்டு வந்து சந்தோஷமாய் வாழும் திறமை கொண்டவள். இதில் கஷ்டப்படப் போவது சோனாவும் நர்த்தனாவும்தான்.

  5. Mathura…….atlast the Jodi got on to the stage which was already theirs and have left them for a while. they got it back. ooph. what a relaxation…….I was so happy when suman could not even carry his child. oh what a contradict moment in his life. appanu koopidavendiya kuzhanthai uncle nu koopiduvathe oru periya punishment. swapnavoda kuzhanthaiyum avandun illai. . deepikavai yum thooki erinthan. indru avanuku mazhalaigalin kurumbai pakathil vaithu rasika seiya mudiyamal seithu vittan kadavul. chinanchiru pinchu ullam anbai thanidathil kottiiya sivavaithan appavaka ettru kondauthu….ethirparpillada anabai kotti kodukirathe. vaishu sivavin life il indha santhosham eppodum nirainthu irukattum. siva solrathu pol 2nd year paditha vaishuvin mel konda kathal puyalai iruvarin life iyum sutra adithu meendum karai sernthu vittadhu. sona got the punishment for her injustice she did to shalu. deva too now settled in life. all is well. that ends well. ethirkalam theriyada oru kelvikuriyodu thodangiya sivavin Mumbai rail payanam ippo arpudamana kudumbathodu ade railil santhoshama payanikiran……..well done Mathura.

    1. நன்றி ஷாரதா. உங்களது கமெண்ட்ஸ் முகநூலிலும் படித்தேன். சுமனின் காது வைஷாலியின் தர்ப்பைக் கேட்க விரும்பாமல் மூடிக் கொண்டது. அது கேட்க விரும்பிய மழலையின் குரல் கேட்க முடியவில்லை. //siva solrathu pol 2nd year paditha vaishuvin mel konda kathal puyalai iruvarin life iyum sutra adithu meendum karai sernthu vittadhu. // கடவுள் அமைத்த மேடைக்கு கடைசீல வந்துட்டாங்க.

      // Mumbai rail payanam ippo arpudamana kudumbathodu ade railil santhoshama payanikiran……..well done Mathura. // ஹா ஹா நீங்கதான் முதலில் கண்டுபிடிச்சு சொல்லிருக்கிங்க.உங்களுக்குக் கண்டிப்பா பரிசு உண்டு. வேறு வழியில்லாமல் மும்பையில் தனது முதல் பயணத்தை பயத்துடன் ஆரம்பித்த சிவா கடைசி அத்தியாயத்தில் அதே இரயிலில் சந்தோஷமாகத் தன் குடும்பத்துடன் பயணிக்கிறான். பின்னணி இசையுடன் கேட்கும்போது நீங்களும் அதையே உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

  6. ஹாய் தமிழ்,

    அருமையான பதிவு.மிகவும் எதிர் பார்த்த பதிவு.

    ஸ்வப்னா சொல்லுகிற விசயங்கள் நச் ரகம்.செய்யும் விசயமும் நச்-பிள்ளையை ஒழுங்காக வளர்க்க மாட்டார் பார்கவி என்று அம்மாவிடம் விட்டு வந்தது.

    கிட்டத்தட்ட விரக்திக்கே வந்து விட்டார் பார்கவி.இருப்பினும் பிழையை ஒத்துக்கொள்ள மாட்டார். பெரும்பான்மையான தாய்மார்கள் இவரை போலவே.

    சுமனுக்கு இப்போதேனும் குறுகுறுக்குதே.அந்த மட்டில் சந்தோசம்.

    ஸ்வப்னா,தான் வாழ வேண்டிய வாழ்க்கையை செம்மையாக வாழ வழி செய்யுகிறாள்.

    தேவாவும் ஒரு அருமையான மனிதன் தான்.என்ன அவனுக்கு வயது தான் அதிகம்.தேவா,திருமணம் என்ற விசயத்தை அடிக்கடி வலியுறுத்தியதால் அவனை தூர வைத்து பார்க்கும்படியான நிர்ப்பந்தம் சாலிக்கு.

    வைசாலி,கணவனுடன் ஒத்திசைந்து வாழ்கையில் தேவையற்ற வகையில் மனசு சங்கடப்பட வேண்டாம் என்ற தேவாவின் எண்ணம் நைஸ்.

    சாலி திகைத்தாலும்,அடுத்த நிமிடம் இயல்பாக வந்து விட்டாளே.குட்.குட்.

    சிவாவின் ஆதங்கத்திற்கு,சாலியின் பதில் சூப்பர்ப்.

    அவனை காணாது தவித்த கலங்கிய கண்களுக்கு,சிவாவின் பதில் அழகோ அழகு.

    நர்த்தனாவை பற்றிய கேள்விக்கு சிவாவின் பதில் அருமை.

    வாழ்க்கையில் கடவுள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்.பொக்கிஷத்தை தவற விடும் மனிதர்களும் இருக்கின்றனர்.இவர்களிருவரை போல பொக்கிஷத்தை திரும்ப பெற்று அழகாக வாழ்பவர்களும் இருக்கின்றனர்.

    அருமையான கதை.நன்றி.

    1. நன்றி தேவி. உங்களது கமெண்ட்ஸ் தேர்ந்த எழுத்து நடை நன்றாக இருக்கிறதுப்பா.
      ஸ்வப்னாவை ஒன்றும் குறை சொல்ல முடியாது. பத்து வருடமாய் ஆசைப்பட்ட சுமனை குறைகளுடன் ஏற்றுக் கொண்டு அவனை யோசிக்க வைத்திருக்கிறாள்.
      தேவாவுக்கு வைஷாலி மேல் இனம் தெரியாத அன்பு. அவளை பாதுகாக்க வேண்டுமென்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது போல்தான் அவன் எண்ணம் இருக்கிறது. ஒரு பார்வை கூட அவன் தப்பாகப் பார்க்க மாட்டான். கடைசி அத்தியாயத்தில் அதைக் காணலாம்.
      ஆமாம் தேவி. பொக்கிஷத்தை இப்போதுதான் பெற்று இருக்கின்றனர். சுமனுடன் வைஷாலி இருந்திருந்தாலும், நர்த்தனாவுடன் சிவா வசித்திருந்தாலும் அவர்கள் மனமொப்பி வாழ்ந்திருப்பார்கள் என்று நினைகிறீர்களா தேவி?

  7. ஹாய் தமிழ்
    சூப்பர் climax. வைஷு சுமனை பார்த்தும் சாதரணமாய் எடுத்துகொள்வதும் அதற்கு சிவாவிடம் அவள் அளிக்கும் விளக்கமும் சூப்பர். தீபி சுமனை அங்கிள் என்று அழைக்கும்போது அவன் கண்களில் தெரிந்த வலி. வலி எதற்கு. அவளுக்கு அருமையான தந்தை இருக்கிறாரே.வைஷு pregnant என்று காட்டுவதன் மூலம் அவளுடைய சிவாவுடனான வழக்கை மிக இனிமையாய் இருக்கு என்று சொல்லிட்டீங்க. சிவா wonderful character. ரொம்ப தெளிவான, அருமையான மனிதன். நர்த்தனா சிவாவை miss செய்து விட்டாள் என்று வருந்தும் போது சிவா சொல்லும் கடவுள் அமைத்த மேடை ரொம்ப சரி. இனி அவர்கள் வாழ்க்கையில் சுமனும், நத்தனாவும் மூன்றாம் மனிதர்களே.
    நன்றிகள் பல ஒரு அருமையான, இயல்பான கதையை கொடுத்தற்கு.

    1. நன்றி ஸ்ரீ. // பி சுமனை அங்கிள் என்று அழைக்கும்போது அவன் கண்களில் தெரிந்த வலி. வலி எதற்கு. // – ஒரு பொருள் நம்மிடம் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. ஆனால் கை நழுவிய பொருளின் மதிப்பு இருமடங்காய் தெரியும். அப்படித்தான் சுமனுக்கும் தெரிந்ததோ? இல்லை தான் மிகவும் நேசித்த தங்கையின் உருவத்திலேயே பிறந்த தன் முதல் மகள் அவனை அங்கிள் ஆக்கி வேறொருத்தனை தகப்பனாக்கிய வலியாய் இருக்குமோ?

  8. hi tamil..
    superbbb story ma..

    manasuku thirupthi aana ending !!!

    siva,vaishali palasa ellam othukittu niraivana vazhkai vazhranga..
    deepika suman ah uncle nu kooptadhu , deepika va vaishali oda ponnu nu therinju suman,parkavi shock aagi ninadhu ellamey nice..

    suman,narthana ellarum moonavadhu manusanga dhan..
    avangluku namma vazhkai la idam illa nu siva sonnadhu very nice..

    1. நன்றி சுகன்யா. என் மனதுக்கும் முடிவு திருப்தியாய் இருந்தது. இனி சிவா ஷாலு வாழ்வில் சுமனுக்கும் நர்த்தனாவுக்கும் என்ன வேலை?

  9. hai tamil,
    first of all thank u for gave a good story,
    pothuva enaku happy ending story than pidikum. of course ithuvum happy ending than,but shivavum shalium entha thapum panama romba kastapatutanga,story sekaram mudincha mathiri irundhathu,but unga style of writing romba pidikuthu, pona kadhai banu, intha kadha shiva shali mansula irukanga,…..
    real life la nadakaratha neenga eduthu sonathu ok, but indha kadhaila avanga kastapadarathaiye patha mathiri iruku,mudincha oru epilogue podunga….
    so plz plz ennai mathiri fanskaga ennoru sarayu,ammu,nandhu va kondu vanga…..
    all the best,
    keep rocking
    waiting for ur next innovation…

    1. நன்றி சௌமி. கடந்த இரண்டு கதைகளும் நிஜ சம்பவங்களை பேஸ் செய்து எழுதினது. பானு, பிரகாஷ், சிவா, ஷாலு எல்லாரும் நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் சந்திதிருப்பீர்கள். வார்த்தை தவறிவிட்டாய் படித்துவிட்டு பாதிக்கப்பட்ட சிலர் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் தன்னம்பிக்கைக்கு இது சிறு தூண்டுகோலாய் இருந்தது சௌமி. அதனால் எழுதினேன்.
      உங்கள் அனைவரது ஆசைப்படி அடுத்த கதை காதல் கதைதான். சந்தோஷமா.

    1. நன்றி உமா. எதார்த்தமா இருக்கணும்னு யோசிச்சு எழுதினேன்டா. ஒரே நாள்ல வைஷாலியை புரட்சி பெண்ணாவோ ஒரே பாட்டில் அவளை சுமனை விடப் பணக்காரியாவோ காமிச்சா ஃபேன்டசி ஆயிருக்கும்.

  10. ஹாய் தமிழ் ,
    அருமையான முடிவு .ஸ்வப்னா தன் காதலை விடாம சுமனுக்கு யோசிக்க சொல்லி கொடுத்து ,பிள்ளையையும் அவன் அம்மாவிடம் வளர்க்க விடலை சூப்பர் ………..சுமன் காலம் கடந்த யோசனையின் பயன் மாமா என்ற அழைப்பு ………..சிவா ,சாலி ungal kalyaanamdai arumai ………

    1. நன்றி சாந்தி. சுமன் – குழந்தையை மதிக்காத தகப்பனை தீபிகாவும் மதிக்கல. சரிதானேப்பா

  11. Hi Tamil,
    Arumai !!

    Azhagana, arumaiyana, niraivana ending.

    What impressed me about this story is the sheer practicality and simplicity of it, and realistic characterisation. Rombave iyalba, yetharthama, endha vidha dramatics-um illama,, thavaru senchavangalukku ellam udane edho thandanai kidaichu avanga kashtapadara madhiri cinematic-a illaama, romba iyalbana nadaiyila, practical-a ezhuthi irukkeenga.

    Yes, Deepi kutti oru moonam manushana ‘uncle’ endru, oru totally common title-oda Suman-ai niruthiyadhu – idhai vida oru thandanai veru enna vendum avanukku? Kaalam poora indha vedhanai avan manathai arikkum… enna thaan kadhal manaivi, kuzhandhai endru vazhndhalum, izhandha indha kuzhandhai, Shali meethu thavarillamale avalai thaan rombave mosama nadathi vittom ennum ennam – idhu rendum avan manasodaiye, avan uyir ulla varai irukkum – arukkum.

    Narthana – who cares? As Siva himself says neither Narthana nor Suman are relevant to Siva & Shali anymore. Avanga yaaro, evaro…

    Practical life-la eppadi nadakkumo, appadi ezhuthi irukkeenga. Romba nalla vandhirukku, Tamil. Yes, enge eppadi thadam marinaalum, Kadavul yaaroda, yaarai inaichirukkano, avangaloda amaiyum relationship thaan nilaikkum.

    Eppavo onnu sernthirukka vendiya iruvarum, vevveru pathaiyil konja naal payanithaalum, kadaisila, onna inainchittanga – very happy that both of them are now together.

    Viraivil Print-il paarka, ulamarndha vaazhthukkal, Tamil !!! CONGRATULATIONS and BEST WISHES !!!

    P.S. Oru pudhiya full-length novel-il aduthu ungalai sandhikka, to get caught in the magical web you weave with your beautiful words, waiting with much anticipation !!!

    1. நன்றி சிவா. இந்தக் கதை இன்னமும் எங்கேயோ நடந்துட்டு தான் இருக்கு. இந்தக் கதை யாராவது ஒருத்தருக்காவது சின்ன தன்னம்பிக்கை தந்தால் அதுவே மகிழ்ச்சி.

      கடவுள் அமைத்த மேடையின் ஒவ்வொரு பகுதியும் அனுபவிச்சுப் படிச்சு அலசிட்டிங்க. அதை தவறாம பகிர்ந்தது என் மனதுக்கும் நிறைவா இருக்கு. ஒவ்வொரு எழுத்தாளர்களும் எவ்வளவோ உழைப்பும் நேரமும் எழுத செலவழிக்கிறோம். படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்கள் ஒரு வார்த்தை எழுதினால் அது மட்டுமே எங்களுக்கான உற்சாக டானிக். உங்கள் கருத்து எந்த மாதிரி கதை எங்க எழுத்து நடைக்கு சூட் ஆகும்னு கணிக்க உதவும்.

  12. Tamil

    Climax superb…

    Suman ai paarthathum ,vaishu casual aa nadanthukolvathum, deepi kutti avanai uncle nu solvathum nice,… Atharkku vaishu , Siva ta sonna vilakkam nice,

    Siva nallaa thelivaa irukkaan,.. Kadantha kaalam enbathu mudinthathu, Ippo ulla life thaan Nijam enbathai unarnthu irukkaan…

    Sona ku kidaiththathu Nalla punishment thaan…

    Deva nallaa settle aagittaan,..
    Aahaa ! Vaishu pregnant aa???

    Suman ku avan wife , Geetha patri puriya vachittaa, Ippo ivanukku kutra unarvu vanthu ethukku, waste…

    Tamil ungaloda stories la intha mathiri oru kathaikkaru eduththukkittu solrathu nice….
    Oru aano! Penno! Paathikkappattaal , appadiyae adjust pannikkittu last varai vaazhanum nu Naan ninaikkalai, Marriage enbathu punithamaanathu thaan, aanaal etharkkum oru limit irukku, kaalamellaam kashtappattuttu vaazha vaendiya avasiyamillai,..

    Intha storyil

    Vaishu poruthavarai Suman thaan avalai vittu pirinthaan, avalidam vilakkam kaetkkalai, avan pillai patri ninaichi paarkkalai.veru marriage um pannikkittaan.

    Siva vishayathilum aval thaan pirinthu, divorce um vaanginaal…

    So… Ivangalai thappu solla mudiyaathu…

    1. நன்றி அனுஜா. தவிர்க்க முடியாத காரணங்களால் பதில் தாமதமாகி விட்டது. சுமனுக்கும் வைஷாலிக்கும் இடையே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் குட்டி தீபிகா ஒரு தவறும் செய்யவில்லை. அவள் விஷயத்தில் நடந்து கொண்ட முறைக்காகவே சுமனுக்கு இந்த தண்டனை. // Vaishu poruthavarai Suman thaan avalai vittu pirinthaan, avalidam vilakkam kaetkkalai, avan pillai patri ninaichi paarkkalai.veru marriage um pannikkittaan. // பல சமயங்களில் தப்பே செய்யாமல் சூழ்நிலையால் கஷ்டப்படுறாங்க. அதில் இருவர் தான் சிவாவும் ஷாலுவும்.

  13. They lived happily ever after!!
    In one word Deepika gave an apt punishment for Suman.
    Amazing character Siva. Vaisu deserves happiness.
    Thanks Tamil for the weekend treat!!

  14. HI tamil
    superb storypa….nice yaaruku yaar enbathu theivam potta mudichu…..sila per suyanalama edukira mudivugal aduthavarkalai rombave bathikuthu….atharku siva,vaishu nalla examples….but avangalai jodi serthu life fullfilla aana mathiri mudivu koduthathu arumai…..

  15. hai tamil nalla mudivupa.kadaisi kulanthai sumana appanu unclenu sollurathu super.unmaya ithai vida vaera thandanai kidayathu.shaalu siva super jodipa.seekiram aduttha kathaiyoda vaangapa.
    unga last rendu stryyum knjm chinnatha irunthathupa,enakku chitraankatha athukku munthaya stry maathiri knjm paeriya stryya vaenumpa.ithuvum nalla irukku aana athu innum niraya padikkalaamae athu thaanma.

Leave a Reply to J KRITHIKA Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால்

உள்ளம் குழையுதடி கிளியே – 28உள்ளம் குழையுதடி கிளியே – 28

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உள்ளம் குழையுதடி கிளியே – 28 அன்புடன், தமிழ் மதுரா.

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07

எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச் சென்ற கணபதி சாஸ்திரிகள் – என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்து