வார்த்தை தவறிவிட்டாய் (Final update)


ஹாய் பிரெண்ட்ஸ்,

வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை ஒவ்வொரு பகுதியிலும் அவர் இருந்தார். முடிவு படித்துவிட்டு அவருக்கு மிகவும் திருப்தி. இந்த முறை  என் தோழிகள் சில பேரிடம் படித்து அவர்கள் எண்ணங்களை  சொல்லுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் வேலைப்பளுவுக்கு நடுவே படித்து சொன்னார்கள். எல்லாருக்கும் முடிவு மிகவும் பிடித்திருந்தது.

உங்க எல்லாருக்கும் 1000 Thanks from my heart to yours.

முன்பே சொன்ன மாதிரி இது ஒரு வித்யாசமான கதை. முடிவும் வித்யாசமாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். இதற்கு பலமாய் பத்மாவின் கவிதைகள்.அதுவும் இந்தக் கடைசி அத்தியாயத்தில் வரும் இந்தக் கவிதையைத்தான் சில மாதங்களுக்கு முன் முகநூலில் படித்தேன்.  நான் நினைத்த அதே முடிவு நாலே வரிகளில் நச்சென்று சொல்லி இருந்தார். சற்று மாற்றி கதையில் உபயோகப்படுத்திக் கொண்டேன். உணர்ச்சி ததும்பும் இந்தக் கவிதைகளை எங்களுக்குத் தந்ததுக்கு நன்றி பத்மா.

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு முன் ஒரு தோழி அவர் சொந்தக்காரப் பெண்ணுக்கு இதே போல் ஒரு சம்பவம் வாழ்க்கையில் நடந்தது என்று வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. சட்டரீதியாக பிரச்சனையை அணுகுங்கள் தோழி. அத்துடன் அந்தப் பெண்ணின் பாதுகாப்பான வாழ்வுக்கும், அவர்  சுயகாலில் நிற்கவும்  ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கான பதிலை நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதாது அந்தப் பெண்ணும் சேர்ந்து கண்டறிய  வேண்டும். கண்டிப்பாக கல்வியைத் தொடர வழி செய்யுங்கள். அவருக்கு துணிவையும் நம்பிக்கையையும் தாருங்கள்.

இப்போது கதையைப் பற்றி பார்ப்போம். பூர்வஜாவுக்கு ஏன் கடுமையான தண்டனை தரல என்று கேட்கலாம். கிட்டத்தட்ட நாப்பது வயதில் வேலை இல்லாம நிற்பதே இவளுக்கு ஒரு தண்டனைதான்.  நிஜத்தில் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் நல்லாவே இருப்பாங்க. இவங்க மேல சபலப்பட்ட ஆண்கள் தான் மனைவி, மக்கள், சொத்து,  மரியாதை எல்லாம் இழந்து கஷ்டப்படுவாங்க.  கதையின் இறுதிப் பகுதியைப்  படிங்க, படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை எழுதுங்கள். உங்களோட எண்ணத்தை அறிய ஆவலா இருக்கேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 15

இந்தக் கதையின் போது நான் சொன்ன மாதிரியே நீங்க சித்ராங்கதாவை மறந்துட்டு பானுவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது எனக்கு சந்தோஷம். இப்போது விடைபெறுகிறேன். மற்றுமொரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

85 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் (Final update)”

 1. sathya nandh kumar says:

  super story mam final super pirinchu pona kuda avanuku evola pain irukathu super

 2. Thanu .k says:

  ஹாய் மது
  உங்களின் வார்த்தை தவறி விட்டாய் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். ஷ்ஷ்ஷ்….. சற்று நேரம் என்ன சொல்வது என்று கூட தெரியல.எல்லாமே உறைஞ்சு போன மாதிரி ஒரு உணர்வு..

  முதலில் இப்படி ஒரு கதைக்கருவை எடுத்ததற்கு உங்களுக்கு மிகப்பெரிய சல்யுட்.சமகால சமுதாயத்தில் சம விகிதத்தில் கலந்து வாழும் மூன்று மாறுபட்ட குணாம்சம் கொண்ட நபர்களின் வடிவம் தான் இந்த பிரகாஷ் பானு மற்றும் பூர்வஜா.( அந்த பெயரை உச்சரிக்க கூட பிடிக்கவில்லை.)

  இந்த கதையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கரு சமகால சமுதாயத்தில் நிஜமாகவே நடக்கும் பிரச்சினையே.

  பிரகாஷ்__ இவன் என்ன படித்து என்ன ?? நாசூக்கு நாகரிகம் தெரிந்தென்ன?? தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் தவறிய இவன் என்னளவிலும் ஜீரோ
  தான். தன்னையே உலகம் என்று நம்பும் மனைவிக்கும் முத்தான இரு குழந்தைகளையும் சற்றும் எண்ணிப்பார்க்காமல் தன்னுடைய உடல் தேவையை தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இவன் எப்படி திருந்த முடியும்.என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள் திருந்துவதென்பது நடக்காத விடயம். நாயகி பானு கூட ஒரு வார்த்தை சொல்லுவாள்.

  “குடும்பம் எனும் கூட்டைத்தாண்டி முதல்படி எடுத்து வைக்க தான் தைரியம் வேண்டும்.நீங்கள் அந்த அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள்.இனி நீங்கள் எது செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது போல.அது மிகச் சரியானதே!!

  பானு_ என்னளவில் நான் இதுவரை படித்த நாவல்களின் மிகச் சிறந்த நாயகி இவள் என்பேன்.என் மனதைத் தொட்ட நாயகி.வீட்டுக்கு அடங்கிய பெண்ணாய் கணவனுக்கு அடங்கிய மனைவியாய் குழந்தைகள் மீது உயிரையே வைத்த தாயாய் ..ஆக மொத்தம் ஒரு பூவாய் இருந்தவள் எப்படி ஒரு வைரமாய் உருமாருகிறாள்.

  தன கணவன் திட்டினாலும் கோபப்பட்டாலும் அவன் அவளுடையவன் என்ற எண்ணத்தில் அனைத்தும் பொறுத்து சமாளித்து போகும் அவள் அவனின் துரோகத்தைக் கண்ட பின் மாறும் மாற்றம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.

  சராசரிப்பெண்ணாய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் மனதளவில் நொறுங்கினாலும் அதனால் வீழ்ந்துவிடாமல் அந்த வலியையே வைராக்கியமாய் கொண்டு நிமிர்ந்து நின்று காட்டும் அவளின் துணிவும் தெளிவும்… இது இந்த திடம் தான் பெண்களுக்கு வேண்டியது.

  பிரகாஷ் என்ன தான் தவறை உணர்ந்து திருந்தினான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் மன்னிக்கப்படக் கூடாதவன். என் கணவன் உத்தமன் என்ற நம்பிக்கை எப்போது உடைகிறதோ அதன் பின் அந்த நம்பிக்கை ஒருபோதும் மறுபடியும் வரப்போவதில்லை.

  கதையின் முடிவில் பானு பிரகாசை மன்னிப்பது போல் கூறியிருந்தால் நிச்சயம் என்னால் அது ஏற்கப்பட முடியாததாகவே இருந்திருக்கும்.இந்த முடிவு தான் கதைக்கு நூறு வீதம் பொருத்தமான முடிவு.

  பிரகாஷ் போன்ற ஆண்களுக்கு இதைவிட சரியான தண்டனை இருக்க முடியாது.

  நாவலாசிரியர்கள் பெரும்பாலும் எடுக்க தயங்கும் ஒரு கருவை எடுத்து அதை சரியானவிதத்தில் விவரித்து பிரச்சினையைக் கூறி அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதன் தீர்வு என்று அனைத்தையும் மிகச்சரியாக திட்டமிட்டு கதை சொன்ன பாங்கு மிக அருமை.

  வார்த்தை தவறி விட்டாய் மிகச் சரியான தலைப்பு.(அந்த வசந்தமே எனக்கு பிடிக்கல. அவன எல்லாம் வாழ்வின் வசந்தம் என்று கூற முடியாது)

  சொல்ல வேண்டியதை மிகச்சரியான சம்பவக்கோர்ப்பு வார்த்தைக் கோர்ப்பு என்று அழுத்தமாய் சொல்லிவிட்டீர்கள். அனாவசிய சம்பவங்களோ வார்த்தைகளோ எதுவும் இல்லை.சொல்ல வேண்டியதை மிகச் சரியாய் நேர்த்தியாய் சொல்லி இருக்கிறீர்கள்.சொல்லப்போனால் கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் கூட முக்கியத்துவம் வாய்ந்தவையாக தோன்றுகின்றன.அதிலும் இறுதிப்பகுதி அற்புதம்.

  ஹப்பாஆஆஆஆஆ……. விட்டால் நான் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போவேன். 🙂 🙂 இடம் போதாது.இதுவே சற்று பெரிய பின்னூட்டமாய் இருக்கும்.அதனால் முடிக்கிறேன் 🙂

  அருமை அருமை அருமை
  உங்கள் எழுத்துப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 🙂

  அன்புடன்
  தனு

 3. kumudha says:

  hai thamizh…

  super kadhai… ipa dhaan padichen… romba arumaiyaa ezhudi irukeenga… enakku romba romba pidichadhu… thanks for giving such a wonderful story…

  azhagaana nadai… arumaiyaana mudichum irukkeenga… oru chinna sarukkal vaazhkaila evlo vishaiyatha namma kitta irundhu eduthuttu poidum nu azhagaa solli irukkeenga… super… once again thanks for such a lovely story…

  ival
  kumudha

  1. Thank you very much Kumudha

 4. devi.u says:

  ஹாய் தமிழ் mam ,
  இப்போ தான் பானுவை பார்க்க வர முடிந்தது .நிறைய பெண்களின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீங்ka .

  குறையும் நிறையும் கொண்டவன் தான் மனிதன் .அதில் ஆணும் ,பெண்ணும் சரி நிகர் சமனே .ஆணின் குறைகளை பெரிது படுத்தாமல் பெண்கள் இருக்கணும் ,வாழ நினைக்கணும் .பெண்ணை அப்படி ஏற்று கொள்ள ஆணுக்கு மனது இல்லை .இப்படி பல மக்கள் இருக்கின்றனர் தாம் .

  அவள் செய்தது சரி தான் .யாருக்கு வேண்டி அவள் எல்லாமும் செய்கிறாள் ? நம்பிக்கை சிதைந்து போகையில் மனம் படும் பாடு கொடுமை.அப்படி சிதைந்து போகுமளவுக்கு ஒரு கணவன் நடக்கையில் , கணவனின் மேல் அன்பு கொண்ட மனது அதை மறுத்து ஏற்கலாம் தான் .அவள் நடப்பது தான் சரி .அந்தளவு தண்டனை கூட அவனுக்கு இல்லையெனில் அவளின் மனம் காயப்பட்டு தான் போகும் .அவள் அசடென்று .

  அருமையான பாடல் வரிகள் .அந்த முதல் பாடல் சுபெர்ப் .எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது …கண்ணே நரை எழுதும் சுய சரிதம் அதில் என்றும் அன்பே ஆனந்தம் ஆனந்தம் ……

  அருமையான கதை .பத்மா அவர்களின் கவிதை அருமை .அவர்களின் தமிழ் கவிதை மிகவும் உயிரோட்டமாக இருந்தது .நன்றி mam .thanks for the wonderful story .

  (இன்னும் நிறைய வடிக்க ஆசை தான் .கால சூழலால் முடியவில்லை) .

  1. Thank you very much Devi

 5. sindu says:

  very nice story. all the best

  1. Thank you very much Sindu

 6. murugan says:

  அருமையான முடிவு உங்கள் வார்த்தை-தவறிவிட்டாய் பானு is soooo nice

  1. Thanks Murugan

 7. Nagalakshmi says:

  Hi Tamil,
  Thanks for this nice story, I think this end is very apt and fine.
  Expecting another nice story from you.
  Nagalakshmi

  1. Thanks Nagalakshmi

 8. shanthi murugan says:

  hi TAMILMAM why there is no announcement for next story?expecting eagerly.

  1. Thank you very much for the interest Shanthi.

 9. Lak says:

  Hai Tamil,

  What a story?
  About me: I am always fascinated with love stories. Hence my inner conscious blame me for only taking soft romance novels. I was scolding my self for getting ecstatic only with pulp fiction. Today I felt much much more ecstasy, when I read this story. My conscious justifies me for my love towards this story. I am proud that, I am still a good reader.

  And about the story: What a story!!! Any one who over come such situation would have definitely done this. she is not barathi raja’s puthumai pen. But she is the nitharsanam. Thanakku valigalai mattume kodutha vaazhkaiku, uravugaluku, nyayam mattume seitha pen. The gave justice to her kids, he gave justice to herself(definitely), and she gave justice to her husband too. I love this story. I hope every one in this world reads this story. I definitely can’t forget this story. This story has a new message for every one who reads it!!!!!!

  1. Thanks very much Lak.

 10. vanitha says:

  Hi தமிழ்

  உங்கள் கதை மிகவும் நன்றாக இருந்தது. பானு ஒரு வெகுளியாகவோ அசடாகவோ எனக்கு தெரியவில்லை, இல்லத்தரசிகள் பெரும்பாலானோர் இதே போல் தான் இருக்கின்றனர் Real life layum intha மாதிரி நிறைய பெண்கள் இருக்கிறாங்க .அவங்களும் பானு மாதிரி முன்னேற முடிந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.Atleast இந்த கதையோட hero (??) தன்னுடைய தவறை உணர்ந்ததே பெரிய விஷயம், எத்தனையோ பேர் அதை கூட செய்வதில்லை.

  வனிதா

  1. Thanks very much Vanitha

 11. mahashrita says:

  ஹாய் தமிழ்,

  கதையை அருமையா முடிச்சிடிங்க .. இந்த கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது .. முடிவு ரொம்ப சூப்பர் ..இறுதிவரை பானு அவள் நிமிர்வை விட்டுக் கொடுக்க வில்லை ..கணவன் தவறு செய்துவிட்டு திருந்து விட்டேன் என்று கண்ணீர் விட்டால் பெண்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா ..பானுவுடைய முடிவு பிரகாஷ் போன்ற ஆண்களுக்கு சரியான பதிலடி ..பெண்களிடம் கட்டாயமாக இந்த நிமிர்வு இருக்க வேண்டும்.

  ஆனால் சமூகத்தில் பூர்வஜா போன்ற ஜென்மங்களும் ..பிரகாஷை போன்ற சந்தர்ப்ப வாதிகளும் இருக்க தான் செய்கிறார்கள். அவர்களை போன்றவர்களால் பாதிக்க பட்ட பெண்கள் எல்லாம் பானுவை போல தெளிவாக சிந்தித்து செயல் படுவது இல்லை..

  பானு இறுதியாக பேசும் வசனங்கள் எல்லாமே அருமை ..

  நன்றி தமிழ் இப்படி சமூக அவலத்தை சிந்திக்க தூண்டும் கதையை கொடுத்தற்கு …

  அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்.

  அனு

  1. Thanks very much Anu

 12. Kothai says:

  nice update… amaithiya epdi punishment kodukardunu lets learn from Baanu.. Sarayu va marakadikara maadhiri iruku….

  1. Thanks very much Kothai

 13. umamanoj64 says:

  சித்ராங்கதா…அப்புறம் உங்ககிட்டே ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுடிங்க தமிழ்…

  அழுத்தமான கதைக்கு ஆழமான முடிவு….

  அஹிம்ஸா முறையில் பானு வெற்றி பெற்றது மிக மிக அருமை….
  சாதரணப்பெண் கத்தி ஆர்ப்பாட்டம் செஞ்சு போராடுவாள்..பானு அப்படி அல்லாமல் அழுத்தமான முறையில் பேசி வாழ்கையின் உச்சாணிக்கு செல்வது அற்புதம்….

  திருமணப்படிகளை சொற்பொழிவாற்றியதும் அருமை…

  பூர்வஜாக்கள் எளிதில் கிடைக்கும் உலகில் எத்தனை பானுவை போன்று நிமிர்ந்து வாழ்வார்கள்????

  வாழ்வில் எதனை பூர்வஜாக்கள் இருந்தாலும் ஆண்கள் மாறப்போவதும் இல்லை..திருந்தப் போவதும் இல்லை…

  அதுவும் இரண்டு குழந்தைகளை பெற்ற தந்தைக்கு சபலம்????

  பிரகாஷ் மூன்று வருடங்கள் பானுவை பற்றி துளியும் நினைக்கவில்லை…குழந்தைகள் பற்றி அக்கறையும் இல்லை…
  ஏன் அப்போதும் பூர்வஜா சுயநலம் தானே…அந்த நேரத்தில் கண்ணனுக்கு தெரியவில்லையா???மோகம்,தீர்ந்ததும் சுயநலமும் தன்னலமும் அப்போது தான் கண்ணுக்கு தெரிந்ததா???
  அப்படி என்னில் பூர்வஜா பானுவை பற்றி பேசவில்லை என்றால் இவன் இந்த கேடுகெட்ட செயலை தொடர்ந்து இருப்பானா??????

  என்ன தான் மனம் மாறினாலும் கெட்டவன் திரும்பி பானுவின் கணவனாக மட்டும் மாறி விட முடியுமா???அது இந்த ஜென்மத்தில் அவனால் மாறமுடியாது…

  அவன் அவளுக்காக எதிர் வாழ்க்கைக்காக காத்து இருந்தாலும் பானு எப்போதும் மன்னிக்க கூடாது..மாறவும் கூடாது…

  அவனின் அந்த மூன்று வருட வெட்கங்கெட்ட வாழக்கையை விவரிக்கமால் நேராக தரங் கேட்ட செயலினை வாழ்வின் இறுதிப்பகுதிக்கு சென்று அவ்வழியாக கதை கொண்டு சென்றது அருமை…
  அதுவும் பானுவின் வழியாக கதையை நகர்த்தியதும் அருமை….

  பாராட்டுக்கள் தமிழ்…பானுவை போன்று ஏமாறப்பட்டவர்கள் இருக்கும் உலகில் இப்படிப்பட்ட செயலையும் காட்டி அதற்கு தீர்வு சொன்னதற்கும் நன்றி தமிழ்.அவர்களும் பானுவை போன்று எதிர்காலம் ஏற்றுக்கொள்ளட்டும்…..

  1. Thank you very much Uma

 14. anuja12397 says:

  Tamil
  Sariyaana Climax,.
  veenaa kaththaamal, avanai matravanga munnaadi insult pannaamal,pillaigalidam ethaiyum kaattikkaamal, kooda irunthum, vilagi iruppathu , superb Banu..

  Nee vaarthai thavari vittaai, naan Thavara maattaen nu nachunu sollittaal,
  Hats OFF Banu..

  1. Thank you very much Anuja

 15. Logavalli says:

  Sorry punctuation mistake in my previous post.replce ? With .

 16. Logavalli says:

  Wow,tamil?nice creation from you?this is really happening in the real life?banus reaction so nice?the relationship of the neighbours makes me jealous?but what Prakash did is unacceptable?even if he do wrong once is unacceptable?but though he is aware of what he is doing !he still continued it?but he has to see everyday the treasure he missed?the ending is really awesome.
  All the best for your new story.(hats off to u to made us come out off sarayu)

  1. Thank you very much Logavalli

 17. Jasmine says:

  Good ending! Nice story!

  1. Thanks Jasmine

 18. cynthia says:

  அருமையான கதை தமிழ்.. பானு நிமிர்ந்த விதம் என்னை கவர்ந்தது.. நிஜ வாழ்வில் பல பூர்வஜாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அதை எழுத்தில் பார்க்கும் பொது மனம் மிக வலிக்கிறது… கணவன் மன சலனப்படாமல் இருந்தால் ஒழிய பானு மாதிரி ஏரளமான பெண்கள் உருவாவார்கள் ….
  தேங்க்ஸ் தமிழ் உங்களின் நிறைவான முடிவுக்கு…

  நீங்க இறுதி அத்தியாத்தில் சொல்லியது போல சரயுவை மறக்கே முடியாது.. என்ன தான் பானு மனதை ஜெயத்தாலும் பட பட பட்டாம்பூச்சி சரயுக்கு யாரும் ஈடாக முடியாது..

  அடுத்த கதை எப்போ??? waiting eagerly

  1. Thank you very much Cynthia

 19. நிதா says:

  ஹாய் மது,

  எனக்கு என்ன சொல்வது என்றே தெரியலை.. அவ்வளவு அருமை.. பூர்வஜா.. பெண் என்று சொல்வதற்கே வெட்கும் ஒரு பிறவி… ஆனாலும், நிஜவுலகில் பல பூர்வஜாக்கள் வெட்கம் இன்றியே வாழ்கின்றனர்.

  அப்படி இருக்கையில் ஆண்களை மட்டுமே எப்படிக் குறை சொல்வது?

  பிரகாஷ்.. சந்தர்ப்பம் கிடைக்காதவரி மட்டுமே மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்கிற கூற்றுக்குச் சான்றாக நிற்கிறான். என்ன திருந்தி வந்தாலும், குற்ற உணர்வில் தவித்தாலும், தன் ஆசைகளை, மயக்கத்தை, வக்கிர எண்ணத்தை எல்லாம் ஆசைதீர அனுபவித்த பிறகே திருந்தி இருக்கிறான். அதன்பிறகு அவன் திருந்தி என்ன திருந்தாமல் விட்டு என்ன?

  என்னால் அவனை நல்ல அப்பா என்று கூடச் சொல்ல முடியவில்லை. நல்ல அப்பாவாக இருந்திருக்க, தன் பெண்ணுக்குக் கணவனாக வரும் ஒருவன் தன்னைப் போல் நடந்தால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனை அவனுக்குத் தானாகவே வந்திருக்குமே?

  அது வரவில்லையே.. ஒன்றுக்கு இரண்டாக பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவன் செய்த காரியங்கள்.. அவள் சபலப் படுத்தினால், நான் சபலப் பட்டேன் என்றால், என் புத்தி என்கிற ஒன்று எங்கே போனது?

  இதையே பானு செய்திருந்தால் எற்றிருப்பானா? அங்கே ஆண் புத்தி தலை தூக்கி இருக்கும்.

  அதேபோல பானுவின் முடிவு… கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும், அவளை எண்ணுகையில் மிகப் பெருமையாக எண்ணினேன்..

  அதேபோல அவளுக்கு உதவும் சுற்றங்கள்.. எத்தனை பானுக்களுக்கு கிடைக்கும்?

  முடிவு.. இது என்னைப் பொருத்தவரையில் முடிவல்ல… இதுதான் நிஜம்!

  இனிக் காலத்தின் கையில் மட்டுமே அவர்கள் வாழ்க்கை!

  மிக்க மிக்க நன்றி மது. அருமையான படைப்பைத் தந்ததற்கு.

  அடுத்த கதையுடன் விரைவாக வாருங்கள்.

  அன்புடன்,
  நிதா.

  1. Thank you very much Nidha

 20. ஹாய் தமிழ்மதுரா,
  ரொம்பவும் சரியான முடிவு.அருமையாய் உள்ளது.
  பூரணி

  1. Thanks very much Poorani

 21. viji says:

  Bhanu… As I write this, I have tears in my eyes… What a lovely story… We have always studied the love stories written by you… Chitrangada la oru aazhamana love a padicha nanga, indha nidharsanamana story nala , I am stunned… What a lovely lady bhanu is? A lot of my friends had gone through such issues… I would love to buy and gift this story to show what women is capable of… Bhanu oru gem, koncham kooda azhama, sandai podama, evavalavu matured indha situationa handle panara… Oru husband ku koodave irundhu odhukivaikara dha vida dhandana enna iruka mudiyum… Lovely.. I am unable to sympathaize with Prakash….. Irundhalum poorvajava appadiye vituiruka koodadhunu thonudhu… I am sure Bhanu will remain in our hearts forever like SARAYU..

  1. Thank you very much Viji

 22. bhanu dear…hats of di. thittina purushanai cool panna poori orulakizhangu senja bhanu va idhunu malaichu poiten. unnudaiya ovvoru adiyum nee meduva ana urudhiya eduthu vacchu oru entrepreneur ah maarite. unnudaiya davalat savithri mami nethra sadasivam mama yasim nasar Ibrahim uncle ivangolana unnoda uravu -un purushanai nee izhandalum unnai seepaduthi semmaipaduthi unnodu sernthu nadanthu uyarthil ethivachutangale. hats off to them. purushan sariyillane enna idho inda anubu ullangal unnodu payanikum varai vetri unnodu thodarnthu varum. prakashku nee kodutha thandanai 100% right. sollal kondru vitai bhanu. un nermai asatharathu bhanu. PHD/HOD idhethallam prakash kazhtapatttu padichu sambathitha pattangal. anal unnai pol avanal oru thozhilathipar aka mudiyavillai. kallai pona un kadhal manasu meendum ilakuma enpathu enaku kavalai illai. veetukule avanai oru theevakinai. kooda irundhum thalli nikka vaithai. nee imayamai uyarnthu vittai. unnai polthan ella penkalum thunbam varumbodu thunindhu vazhkaiyai edhikollanum penne. adhaku neeye oru standing example. unnai padaitha prammvana mathuravirkum sila vaarthaikal. ….Mathura. simple but strong story. hmm idhu storye illa…its still happening………some where some corner in the world. vaarthai thavariya kanavankellam bhanu kodutha punishment rombave sariyanathu. kathiyindri rathamindri vallil vadham court proceedings edhuvum illamal therrpai vazhangiya unaku ROYAL SOLUTE….SARAYUVAI NAANGAL MARAKAVILLAI MATHURA. ADHU ORU KAAVIYAM. BHANU ORU LIVING CHRACTER/. SARAYU ORU MOONRAM PIRAYI. EPODHAVATHU MIKA ARIYATHAI VANATHIL THORTRAM ALIKUM. BHANUPRIYA ORU VALARPIRAI NILLAVU MAATHIRI. THULI THULIYAI AVAL VALARCHIYAI RASITHOM,. INDRU AVAL POURNAMIYAI JOLIKIRAL.

  1. Thank you very much Sharada

 23. super climax.ithaithavirara varthaiye illai.thanks for nice story

  1. Thanks very much Sujatha

 24. shanthi murugan says:

  hi MAM end ud is super.banu’s decision is correct.but in practical life how will it possible i don’t know.banu’s answer to him is every lady’s voice.

  1. Thanks very much Shanthi

 25. AA says:

  Hi Tamil

  Wow!!!! Super writing!!!!
  Romba romba sensitive subject-tai thottu….atharkku arumaiyaana mudivu koduthu romba azhaga kaalathin kaigalil koduthu mudichiteenga!!!! Amazing!!!!
  Eppadi iruntha Bhanu ippadi maarittaa!!!!! Prakash! Enna solrathu…ivanai patri??
  Oru nalla thagappan…avvalo than !!!!
  Congrats Tamil.
  Adutha kathaiyudan seekirame vaanga 🙂
  Vanitha ku oru hi 😉

  1. Thanks very much AA

 26. malaram says:

  Hi Madura,
  முடிவு ரொம்பவுமே super. பானுவின் பதில் ரொம்பவுமே நன்றாக இருந்தது. இந்த காலத்திற்கு இப்படி தான் இருக்க வேம்டும்.

  1. Thanks very much Mala

 27. Queen says:

  அஹிம்சை வழியில் சரியான தண்டனை வார்த்தை தவறியவர்க்கு. அசடு பானு அறிவானதென்ன, அறிவு பிரகாஷ் அசடானதென்ன! முத்தான கதைக்கு நன்றி தமிழ் மதுரா! இதனை கதையாக கருத முடியாது. ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுதான். முடிவுதான் வேறு வேறு.
  Thanks once again

  1. Thanks very much Queen

 28. Bhavani. says:

  Very nice story.
  I like that climax.
  Bhavani.

  1. Thanks very much Bhavani

 29. sri says:

  hi tamil,

  kadhaiyum arumai,athan mudivum romba arumai.aanal mannipathum marapathum penngalin gunamthaan,athuvum varuda kanakil thirunthi irukum kanavanai mannikalaam,illaiyaa?

  1. Thanks very much Sri

 30. Premalatha says:

  Nice story Tamil. Different plot & the way u conveyed also nice. Banu’s decision also good and practical.

  1. Thanks very much Premalatha

 31. raj148 says:

  Hi Tamil
  Nice story. Best of luck.

  1. Thanks very much Raj

 32. Raji says:

  அருமையான கதைக்கு அற்புதமான முடிவு….👏👏👏👏
  பானு மாதிரி எத்தனையோ பெண்கள் வீட்ட மட்டும் பாத்துக்கறதாலயோ… இல்ல அவங்க புறத்தோற்றத்துல அக்கறை செலுத்தாம இருக்குறதாலேயோ,… அவங்ககிட்ட எந்த திறமையும் இல்லாத அசடாட்டம் பாக்குற உலகம் தானே இது….
  எந்த இடத்திலயும் குரலை உசத்தாம… பிள்ளைங்களுக்கு அவங்களுக்குள் பிளவு இருக்குறத சண்டை போட்டு காட்டிக்காம…. பானு…. கிரேட்… இந்த பானுவயா அசடுன்னு சொன்ன பிரகாஷ்……👊👊👊
  Thanks Madhu for such a great story…

  1. Thanks very much Raji

 33. J KRITHIKA says:

  Very nice and interesting story and update is superb

  1. Thanks very much Krithika

 34. shubaram says:

  அருமையான முடிவு Tamil. Super Update.

  1. Thanks very much Shuba

 35. Siva says:

  Hi Tamil,
  Simply Superb !! Arputhamana ending.

  BGM – aha !! and the words in the background ‘When you are not with me I miss the best moments of my life’ – rendume manasai neghizhthuthu.

  Kadavul thandha azhagiya vaazhvu thaan – anbe uruvana manaivi, gunavathi, porumaisali. Kannaana irandu kuzhandaigal. Ellathaiyum than sabala buthiyaal keduthu konda Prakash, thannaiye asattu kanavanaaga unarum idam – YESSSS !!!

  ‘Nee vaarthai thavarinalum naan thavara matten; kooda varuven vazhi thunaiyaga, aanal inimel unnai namba matten – unnidam endha edhirpaarpum illai’ endru Banu sollum idam – kathiyindri, rathamindri ranamaaki vittadhu idhayathai – enna madhiri oru virakthi irundhal indha madhiri sorkal varum.

  Padma Graham’s kavithai – nachunnu nenjil iranguthu, especially,

  ‘Venneer ootrin idayeyum
  thulirkkum thiramai enakkundu’

  Appappa – Enna powerful vaarthai prayogam inge – yeri nenjil amarndhu vittana indha varigal !!

  Mudivil thelivum, urudhiyudanum pesum Banuvidam, punnagaiyudan, ‘I will still keep trying to win you back’ endra reethiyil, ‘Vikramadhithanai’ padaiyeduppen – vidamal, endru Prakash solvathu – gives such hope. Hope (Nambikkai) thaane vaazhkkai. He absolutely and without doubt deserves what he is going thru’ now. But, that ray of hope… that is as it should be.

  I love the way you have completed this story, Tamil.

  VERY BEST WISHES !!! Waiting to see this in print !!

  Ungalin adutha arputhamana padaippukkaaga aavaludan kaathiruppen.

  Warmest wishes.

  1. Thank you very much Siva

 36. Rukmani says:

  Wow. Kalakitinga Tamil. Mudivu romba super. Banuvoda confrontation romba pidichatu.

  1. Thank you very much Rukmani

 37. suganya says:

  hi tamil…
  excellent end ma..

  banu character manasula aala padhinjirukku..

  1. Thank you very much Suganya

 38. KG says:

  superrrr tamil!!
  asathalaana story!!
  miga sariyana mudivu banu eduthadu !!
  vaathukkal!!

  1. Thank you very much Kala

 39. sujatha says:

  hi tamil
  arumayana story nice ending
  thanks for the novel

  1. Thank you very much sujatha

 40. benzishafeek says:

  hai tamil nalla mudivu aana manasukku rmba kashtama irunthathu.banu kadaisi varai thannoda pathilla uruthiya ninnathu enakku pidicchu irunthathu.

  1. Thank you very much Benzi

 41. vijivenkat says:

  very nice ….ethirpaartha mudivu…

  1. Thank you very much Viji

 42. saji says:

  arumayyana mudivu.super.

  1. Thank you very much Saji

 43. repplyuma says:

  அருமையான முடிவு தமிழ் ..எனக்கு பானு அவனுக்கு தரும் பதில்கள் ரொம்ப பிடித்தது ..இத தான் எதிர்பார்த்தேன் ..கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அமைதியாக அவனை அடிச்சி நொறுக்கிட்டா …எனக்கும் முடிவும் ரொம்ப பிடித்தது ….

  உங்க அடுத்த கதைக்கு காத்திருக்கேன் …

  1. Thank you very much Uma

 44. shanthi says:

  ஹாய் தமிழ் ,
  ரொம்ப அருமையான முடிவு …..பூர்வா முன்னால் தலைகுனிவு என்று புலம்பும் சத்யனுக்கு பானு கொடுக்கும் விளக்கமும் ,அருமை ….

  1. Thank you very much Shanthi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.