வார்த்தை தவறிவிட்டாய் – 9

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

இப்ப கதைக்கு வருவோம்

உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி பானு என்ன செய்வா? சண்டை பிடிப்பாளா?   வீட்டை விட்டு வெளிய போய்டுவாளா? இப்படி பல கேள்விகள்.

அம்மா வீட்டு ஆதரவு இல்லை. படிப்பு மறந்தே போயிடுச்சு. வெளிய அலைஞ்சு வேலை தேடிக்கிற தகுதியோ திறமையோ  இல்லை. இந்த தமிழ் மதுரா இப்படி ஒரு கதாநாயகியத் தந்திருக்க வேண்டாம். சரயுவோட சூட்டிகைல பாதியாவது பானுவுக்கு இருந்திருக்கலாம்னு கம்பேர் செய்து என்கிட்டே ஆதங்கப் பட்டிருந்திங்க. சரயு அம்மா அப்பா இல்லாம தானே போராடி ஒவ்வொரு படியா முன்னேறினா. அவள் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை தைரியமாக்கியது.

பானுவோ அம்மா அப்பா என்று பாதுகாப்பான கூட்டில் வளர்ந்து, தகப்பனால் பத்திரமாய் ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்கப் பட்டாள். அவளுக்கு பெரும்பாலான பெண்களைப் போல குடும்பமே  உலகம். இப்படிப்பட்ட பெண் கணவனின் துரோகத்தை எதிர்கொள்ளும் நிலைமை வந்தால்….

இந்தப் பகுதிக்கு  பலம் சேர்ப்பது   பத்மா க்ரஹாமின் கவிதைகள். ஒவ்வொரு வரியும் ரசிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கிறது. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ கதையை நான் தொடங்க நினைத்த நேரம், முகநூலில் அவரது கவிதைகள் சிலவற்றைப் படித்து அசந்துவிட்டேன். ஏனென்றால் அவை அப்படியே பானுவின் மனநிலையைப் பிரதிபலித்தது. பத்மா எனக்குக் கவிதைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்ததுடன். புதிதாகவும் சில கவிதைகளையும் உங்களுக்காக எழுதியிருக்கிறார்.  பத்மா உங்களது கவிதைகளுக்கு மிக்க நன்றி.

Mirror, Mirror on my wall
I want to be pretty, thin and tall

Mirror Mirror if I change my hair
May someone will start to care?

Mirror Mirror if I starve myself,
At least I will be beautiful, forget my health

Mirror Mirror if I cut my wrist,
Will I feel like I exist.

இது காதலில் தோல்வியுற்ற பெண் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பதைப் போன்று வரும். இந்தக் கவிதையை தமிழில் பானுவுக்காக வடித்துக் கொடுத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இந்த ஆங்கிலக் கவிதையை விட அதிகமான தாக்கத்தை பத்மாவின் கவிதை தரும்.

வார்த்தை தவறிவிட்டாய் – 9

நீங்க படிச்சுட்டு சொல்லப் போகும் கமெண்ட்ஸ் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

 

20 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 9”

 1. repplyuma says:

  நல்ல அழுத்தமான கதை தமிழ் ….கண்டிப்பா நமக்கு தெரிந்தவங்கள்ள பானு இருப்பா …

  அவ அம்மாவும் கவுரதுக்கு கழட்டி விட்டு போய்ட்டாங்க ..ஆறுதலா கூட இருந்தா அதுவே வரம் ஒரு பாதுக்காப்பு ..ஆனா எத்தனை பேர் ரெடியா இருக்காங்க ..ஆம்பள அப்படி இப்படி தான் இருப்பான் ரெண்டு பொண்ணு புள்ளைங்களை வைச்சிருக்க சூதனமா அனுசரிச்சி போ என்று கிடைக்கும் அறிவுரை தான் அதிகமா இருக்கும் ..

  சூர்யப்ரகாஷ் மாதிரி ஆண்களை என்ன சொல்வது …(ரொம்ப கோபம் வருது )

  ஓட்டுனி மாதிரி எத்தனை பூர்வஜாக்கள் (இதெல்லாம் என்ன ஜென்மமோ ) வெளியல சுத்தரான்களோ ….ஒவ்வொரு பெண்ணும் கண்மூடி தனமான நம்பிக்கைல தூங்கிடமா முழிச்சி இருக்க வேண்டிய அவசியத்தை உணறனும் ..நல்ல கதை கரு தமிழ் …ரொம்ப ரொம்ப தேவையானதும் கூட ..

  நேத்ரா, தவ்லத், சாவித்திரி நட்பு ரொம்ப பிடிச்சிருக்கு தமிழ் …

  பானு ரோஷப்பட்டு வெளியா வந்தாலும் சமுதாயம் ஈசியா வாழ விட்டுடுமா … என்ன செய்ய போறா ….கண்டிப்பா அவ பிரகாஷிற்கு சாட்டை அடி கொடுக்கணும் தமிழ் ….

  .ரொம்ப ஆர்வமா இருக்கு எப்படி கொண்டு போக போறீங்க என்று …

 2. Jayasri says:

  Today i read allupdate. The novel is very touching. Thanks .please give next update imidiately.i am waiting.

 3. Jasmine says:

  After this why should Banu live with her husband?
  Why can’t she study or work and support her children?
  Just because she doesn’t have qualifications, she doesn’t have to depend on her husband for everything.
  Why can’t she be somebody like ‘Bharathi kanda pudumai Penn’?

 4. shanthi says:

  ஹாய் தமிழ் ,
  செவந்தி இப்படி ஒரு அம்மா வரவே தேவையில்லை ……பத்மாவின் கவிதை பானுவின் நிலையை தெளிவா விலக்கியது.
  முன்னாலே அவன் பேச்சின் வித்யாசத்தை பானு கவனிக்கலை/
  பானுவின் ஒரே ஆதரவு தோழிகள் மட்டுமே …………..

 5. Siva says:

  Hi Tamil,
  Iniya Deepavali vazhthukkal.

  Indha episode – Banuvin self-analysis and her initial reactions – kobam, aatramai, avamanam, self-pity, kumural, iyalamai – all because of nambikkai dhrogam – and the injustice of it. Quite natural. Now, she needs to come out of it and accept that the fault is not hers – she has nothing to be ashamed of.

  All the shame and blame lies where it squarely should – with Prakash. Naan andha innoruthiyai patri pesave povathillai – it’s all Prakash’s fault – ivan vazhi thavaradha mana uridhiyoda irundhirundhal, whatever the temptation, innaikku Banu ippadi kumurum nilai yerpattirukkadhu.

  Savithri ma’am – her age and wisdom shows in the advice she gives and the caution she exercises in handling this. Indha madhiri soozhnilaiyil Banuvukku aval uravugal ellame poithu pogirathu – natpukkal mattume kai kodukkirargal – there is the beauty of friendship.

  Banu has the right of it – ‘Prakashaal Gunasekaranoda pennukku venna dhrogam seyya mudiyum, but he can’t bear to see his own daughters at the mercy of someone else’ endru sollumidam arumai/unmai.

  Padma Graham’s kavithaigal apt-a suit aagindrana – and quite an impact.

  Waiting to see what Banu is going to do next and how…

 6. vijivenkat says:

  பானு அம்மா இப்படி தான் நடந்து கொள்வாங்கன்னு எதிர்பார்த்ததுதான் ,இருந்தாலும் ரொம்ப மோசமான அம்மா….பத்மாவின் கவிதை அருமை……இப்போ பானு வீட்டை விட்டு போக போவதில்லை ,,,ஆனால் அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்…..என்ன பண்ண போறீங்க….பானுவோட அன்புக்கு அவன் ஏங்கணும்…

 7. malaram says:

  பானுவுக்கு தான் நன்றாக சமைக்க வருமே. catering ஆரம்பித்தல் நன்றாக போகுமே. அதை வைத்து அவள் வாழ்வை வளமாக்கி கொள்ளலாமே.

 8. Khokilaa says:

  Hi Tamil,

  Nice UD…Banu eppadi ithai kaiyala pogiral. Irandu perukum miga kadumaiyana thandanai vendum…Adutha ud innaiku unda…very very eagerly waiting…..

 9. Kothai says:

  nice update… Baanu is going to make a come back…. Sarayu va vida strong character a maara poranganu nenaikaren

 10. shubaram says:

  song super tamil. update thaguntha mathiri irunthathu. kastamana update. ithil irunthu banu yappadi recover aaga pora. waiting for next update.

 11. saji says:

  puyalai purapada aiyngal mam

 12. shanthi murugan says:

  hi mam ud is super.savithiris view is correct.banu must stay with him and teach lession.song is touching.

 13. en purushan poitar……yes there you are bhanu. lun manasai 3 vaarthaila sollitte. pona purushana pathi kavalaipadathe. avanuku vella tholum venum. adakamana voiku rusiya samaikara pondatiyum venum. |pachondhi ……padmavin Kannadi kavithai arumaii. purushan ponathukapuram oru ponnu enna seivya. adha nee sei. un kaalil nirka edhavadhu seiya mudiyuma paar. veedu unnadhu. nee yaruku adimai illai. cheer up bhanu….

 14. benzishafeek says:

  tamil intha episode padikkavae mudiyala unmaya azhukaya vanthathu .ava nilamaya nalla solli irukkinga.seekiram aduttha epi podungapa.

 15. J KRITHIKA says:

  very very nice and interesting ud

 16. suganya says:

  hi tamil..

  pattu,kavidhai,banu oda mananilai ellamey romba urukkama irukku ma..

  sevvandhy nadandhukitta vidham romba mosam..
  enga magal baarama pirandhu veetuku vandhruvalo nu dhan baya padranga… cha…

  “thambathiyam thanakku potta pichai ah ” nu banu ninachadhu rombavey kastama irukku..

  ini banu enna panna pora ?

 17. anuja says:

  Tamil
  Banu oda nilai manasukku kashtamaa irukku.
  Aval amma … Che !!! Ippadiyum aalkal irukkaangalae..
  Aanaal aval neighbors so nice.

  Banu amma ta promise pannittaa, ini enna panna poraa???

  Ellorum Sarayu mathiri irukka mudiyaathu…
  Banu oda action paarkka waiting…

  Yaen paa ungalukkae niyaayamaa irukkaa ,?
  Thiththikkum Deepavali nu sollittu engalai azha vaikkireenga ,??

  Banu oda kavithai padikkum munnaadiyae back la potta song , antha voice,etc Ellaam kaettae azhugai vanthuduchi….

 18. raj148 says:

  Hi Madhura
  Nice update. Give one chance for Banu to prove herself.

 19. இதே நிலைமை தான் என் சொந்தக்கார பெண்ணிற்கு நடந்ததுள்ளது. அப்பாவியான கிராமத்து pen, ஏழாவது மட்டும் படித்திருக்கின்றாள். தற்போது நிறைமாத கர்ப்பிணி வேறு. கணவன் இரண்டு பிள்ளைக்களுக்கு தாயான வேறு ஒரு பெண்ணுடன் வேற ஊரிற்கு சென்று விட்டான். எனக்கு நேற்று தான் தொலைபேசி வழியாக செய்தி வந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு கதையில் நடப்பதையே ஏற்க முடியவில்லை. நேரில் நடப்பதை காணும் போது அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க மக்களே.இதை இங்கே சொல்லலாமா என்று தெரியவில்லை.

 20. பாட்டு என்னை என்னவோ செய்யுது. என்னால அப்டேட் படிக்கவே முடியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.